PDA

View Full Version : அசர வைத்த நடிகர்கள்



rajeshkrv
07-01-2005, 04:30 AM
முத்திரை பதித்த நடிகைகளில் ஜி.சமுந்தலா பற்றி எழுதும்போது நடிகர் திலகம் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா உடனே என் கனவில் அவர் வந்து மடையா ஏனடா இந்த பாரபட்சம் . முத்திரை பதித்தவர்கள் நடிகைகள் தானா நடிர்கள் இல்லையா என சவால் விட மன்னியுங்கள் நாளைக்கே எழுதிவிடுகிறேன் என்று அவரை சமாதானம் செய்து அனுப்பினேன்..

ஆக இதோ அவர்களைப்பற்றியும் ஒரு புதுத் தொடர்..
முத்திரை - பெண்களுக்கு நன்றாக பொருந்தும் என்பதால் அந்த தலைப்பு

ஆற்றல் மிக்க நடிகர்கள் என தலைப்பு கொடுக்கலாம் என நினைத்தேன்

ஆனால் அது சரியாக வரவில்லை அதனால் அசர வைத்த நடிகர்கள் என்ற தலைப்பை முடிவு செய்தேன்

அப்படி முடிவு செய்தபின் யாரிலிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி .. 1950'க்கு பின் தான் நாம் அலசப்போவது.

அந்த வகையில் என்றும் என் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும்
திரு.எஸ்.வி.ரங்காராவ் அவர்களிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைத்தேன்.

1. எஸ்.வி.ரங்காராவ்

மனிதர் எந்த பாத்திரம் செய்யவில்லை என்று கேட்டால் தான் கஷ்டம்.
அத்தனை வேடங்கள் அத்தனையிலும் அசர வைத்தார் நம்மை..

மிஸ்ஸியம்மா - இதில் அந்த பள்ளிக்கூடத்திற்கு வேலைக்கு வரும் சாவித்திரியை தன் மகளாக பாவித்து
ஜெமினியை என்ன மாப்ள சாப்டீங்களா, சவுகரியமா இருக்கா என்று கேள்வி கேட்டு அசத்துவாரே அருமை.

இடைவிடாமால் பேசுவது இவரது இயல்பில்லை ஆனாலும் சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி அதையும் ஒரு வெகுளித்தனமாக சொல்வாரே சபாஷ்

எங்க வீட்டுப்பிள்ளையில் சரோஜாதேவியின் அப்பாவாக வருவார். இருவரும் சேர்ந்து அடிக்கும் கூத்து அற்புதம்

படிக்காத மேதை - சிவாஜியை தன் சொந்த பிள்ளையாக பாவித்து நடத்துவார். பிள்ளைகள் எல்லாம் அவரை உதறிவிட சிவாஜி அவருக்கு ஆறுதல் சொல்லுவார் - சீர்காழியின் குரலில் எங்கிருந்தோ வந்தான் ஒலிக்க இவர் முகத்தில் அந்த சோகம் அதே சமயம் நான் என்னடா செஞ்சிட்டேன் நீ இவ்வளவு அன்பா இருக்கே என்ற அந்த பார்வையும் முகத்தில் வருமே அடேயப்பா ..


நானும் ஒரு பெண் - இதில் மருமகள் கருப்பு என்று முதலில் ஒதுக்கினாலும் நேரில் கோபித்துக்கொண்டு, மறைமுகமாக அவளை பாராட்டும் அந்த பாங்கில் இவரை மிஞ்ச ஆளில்லை.

கற்பகம் - இதில் மகளின் மேல் பாசமாக அதே சமயம் மருமகனுக்கு நல்ல வாழ்வு வழங்கவேண்டும் என்ற துடிப்பும் சேர நடித்திருப்பாரே அப்பப்பா ...

பாதாள பைரவியில் மாயாவியாக மாலதியை கடத்திக்கொண்டு போய் நம்மை பயத்தில் ஆழ்த்துவாரே ..
வில்லன் வேடத்தில் பிரமாதம்


கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் - பாடலை மறக்க முடியுமா மாயபஜாரில் இவர் செய்த கடோத்கஜன் வேடம் இன்றும் நம் நினைவில் நிற்கிறது என்றால் அதற்கு காரணம் இவரது அந்த நடிப்பே..

அன்னையின் ஆணையில் வில்லன் வேடம் .. இவரை சிவாஜி வீட்டில் அடைத்து துன்புறுத்துவாரே அப்பொழுது தான் செய்த தவறை எண்ணி வருந்தும் இடம் அருமை.

பக்தபிரகலாதாவிலும் பிள்ளை நாராயணன் நாமத்தை சொல்வதை கேட்கவும் முடியாமல், அதே சமயம்
அறியாப்பிள்ளை என்று எண்ணும்போதும் நல்ல நேர்த்தியான நடிப்பு..

என்றும் நம்மனிதில் நீங்கா இடம்பெற்றிருப்பார் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை


ராஜ்

aren
07-01-2005, 08:46 AM
ஆஹா அருமையான தலைப்பு, அருமையான ஆரம்பம். எடுத்தவுடனேயே மிகப்பெரிய நடிகரைப்பற்றிய வரிகள். அருமையிலும் அருமை.

நீங்கள் சொல்வது சரிதான். ரங்காராவ் அவர்கள் நடிக்காத வேடமே இல்லை என்றுமளவு கிடைத்த வேடங்கள் அனைத்திலும் அருமையாக சோபித்தார். இவர் நம் தமிழ்த்திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.

கற்பகம் படத்தில் இவர் நடிப்பு நன்றாக இருக்கும். அதுபோல் வாழ்க்கைபடகு படத்தில் ஜெமினி அவர்களுக்கு அப்பாவாக இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும்.

அண்ணை படத்திலும் இவருடைய நடிப்பு அபாரம்.

பரஞ்சோதி
09-01-2005, 03:28 AM
நண்பர் ராஜேஷின் அடுத்த அற்புதமான தலைப்பு.

பல அரிய செய்திகள் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

நடிகர் ரங்காராவ் அவர்கள் நடிப்பை பார்க்கும் போது நமக்கு இப்படி ஒரு அப்பா, மாமனார் கிடைக்க மாட்டாரா என்று நினைக்கும் அளவிற்கு அற்புதமாக நடிப்பார். அவரது உயரம், குரல், மற்றும் தோரணைக்கு ஈடு இணை வேறு இல்லை.

பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போதும் தன்னுடைய தனித்திறமையை நிருபித்தவர்.

rajeshkrv
25-01-2005, 07:18 AM
2. சித்தூர் வி. நாகய்யா

நாகய்யா இந்த பெயரைக் கேட்டாலே பக்தி நமக்கு கூடும் காரணம் கடவுள் பக்தி கொண்ட வேடங்களே இவர் நிறைய நடித்தார்.

இவரைப்பற்றி பேசும் போது என்னவென்று பேசுவது. நடிகராகவா, இசையமைப்பாளராகவா,பாடகராகவா இல்லை தயாரிப்பாளராகவா. எத்தனை பரிமாணங்கள் இவருக்கு.

தென் இந்தியாவிலிருந்து பத்மஸ்ரீ பட்டம் பெற்ற முதல் கலைஞர் இவர். இந்த பெருமை ஒன்று போதுமே..

எம்.எஸ் அவர்களின் கணவராக வருவாரே மீரா படத்தில் .. அந்த பெருமை பெற்றவரும் இவரே.


1928, மார்ச் 24'ல் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோகுனூர் என்ற கிராமத்தில் பிறந்தார். சிறிய வயதிலேயெ நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பின் பி.என்.ரெட்டி( நாகிரெட்டி) இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்.
கிருஹலக்ஷ்மி, வந்தேமாரம் போன்ற தெலுங்கு படங்கள் வெற்றி பெற்றன. இவரது அந்தஸ்தும் உயர்ந்தது.
அன்றைய நாளில் 1 லட்சம் சம்பளம் பெற்றவர் இவர்.
பின் சொந்தமாக பட கம்பெனி ஆரம்பித்து படங்கள் தயாரிக்கலானார்.

இவர் நடித்த சில படங்கள் இதோ..

மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் - இதில் அஞ்சலிதேவியின் அப்பாவாக வருவார்

அழகு நிலா ( இதில் இவருக்கு பீ.பி.ஸ்ரீனிவாஸ் பாடியிருப்பார் சின்ன சின்ன ரோஜா)

செல்வம் - இதில் ஜோசியத்தின் மீது நம்பிக்கையற்றவராக வருவாரே மறக்க முடியுமா

கற்பகம் - சாவித்திரியின் தந்தை வேடம்

லவகுசா - சீதை தஞ்சம் புகும் ஆசிரமத்தின் குரு. லவகுச சகோதரர்களுக்கு ராமர் கதை சொல்லி வளர்ப்பது இவரே


அம்பிகாபதி - சிவாஜியின் தந்தை வேடம்

எதிர்பாராதது - ஸ்ரீதரின் இந்த படத்தில் மகன் விரும்பும் பெண்ணை மணந்து கொள்ளும் வேடம்

நடிகராக , பாடகராக, இசையமைப்பாளராக இவரது பணி அளப்பறியது.

தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல மொழியிலும் நடித்து புகழ்பெற்றவர்

இவரது நடிப்பு நம்மை அசத்தியது உண்மையே

இணைத்திருக்கும் படங்கள் நன்றி தெலுங்குசினிமா.காம்
ராஜ்

pradeepkt
25-01-2005, 09:06 AM
அடடா.. இவர் பெயர் நாகய்யாவா? இத்தனை நாள் தெரியாமல் போயிற்றே.
எத்தனையோ படங்களில் இவரது அற்புதமான நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். கண்ணியமான் பெரியவர் பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துவார்.

நன்றி ராஜேஷ்.

அன்புடன்,
பிரதீப்

முத்து
28-01-2005, 04:16 PM
நன்றி ராஜேஷ் அவர்களே,
சரஸ்வதி சபதத்தில்கூட சிவாஜிக்கு அப்பாக இவர்தான் வருவார் ..
அருமையான நடிகர்.

பாரதி
28-01-2005, 05:00 PM
அருமையான தொகுப்பு ராஜேஷ்.. பாராட்டுக்கள்.

rajeshkrv
01-02-2005, 07:16 AM
3. எஸ்.வி.சுப்பைய்யா

இவர் மிகச்சிறந்த நடிகர்.. அடேயப்பா எத்தனை வேடங்கள்

<span style='color:red'>அரங்கேற்றம் பார்த்தவர்களுக்கு அந்த ஏழை பிரமாணன் ஞாபகம் வந்தால் அதற்கு காரணம் இவர்.

சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் ரிட்டையர் ஆனவுடனும் அலுவலகம் செல்லும் அந்த மூன்று சகோதரிகளின் தந்தை ஞாபகம் வந்தால் அதற்கு காரணம் இவரது நடிப்பாற்றல்.

நானும் ஒரு பெண் படத்தில் விஜயகுமாரியை ரங்காராவ் வெறுக்கும் போதெல்லாம் இவர் வருத்தப்படுவாரே அந்த வேலைக்கார வேடம் ஞாபகம் வருகிறதா..

இதையெல்லாம் விட கப்பலோட்டிய தமிழனில் பாரதியாராக தோன்றி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தினாரே அவரே தான்.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று நீங்கள் பாடுவது என் காதுகளில் கேட்கிறது.

ஆம் அவர் தான் எஸ்.வி.சுப்பைய்யா.
எத்தனை கதாப்பாத்திரங்கள் அத்தனையிலும் ஜொலித்தவர் இவர்.

இவர் நடித்த சில படங்கள் இங்கே

பாகப்பிரிவிணை - சிவாஜியின் தந்தை வேடம்

பார்திபன் கனவு - பார்த்திபனை காப்பாற்றும் வேலைக்கார வேடம்

கலைக்கோயில் - இதில் வீணை வித்வான் வேடம் - சிறந்த வேடம்

பருவ காலம் - ரோஜாரமணியின் தந்தை வேடம்

பழனி - சிவாஜி சகோதரர்களில் மூத்தவர் - நடிப்பு அபாரம்

இதைத்தவிர மேலே சொன்ன அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன்,
நானும் ஒரு பெண், பாவமன்னிப்பு -பாதிரியார் வேடம் என அனைத்திலும்
இவரது நடிப்பு சொல்லில் அடங்காதது.

இவரது புகைப்படம் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் இங்கே இணையுங்கள்

ராஜ்</span>

மன்மதன்
01-02-2005, 08:03 AM
ராஜேஷிடமிருந்து அடுத்த அருமையான பதிவு.. பாராட்டுக்கள்
அன்புடன்
மன்மதன்

aren
01-02-2005, 10:14 AM
Originally posted by pradeepkt@Jan 25 2005, 06:06 PM
அடடா.. இவர் பெயர் நாகய்யாவா? இத்தனை நாள் தெரியாமல் போயிற்றே.
எத்தனையோ படங்களில் இவரது அற்புதமான நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். கண்ணியமான் பெரியவர் பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துவார்.

நன்றி ராஜேஷ்.

அன்புடன்,
பிரதீப்


பிரதீப் அவர்களே,

என்னங்க நீங்க. நம்ம நாகய்யாவை தெரியவில்லை என்று சொல்லிவிட்டீர்கள். என்ன அருமையாக நடிப்பார். எவ்வளவு நிதானம்.

இன்றும் நம் மனதில் நிற்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

aren
01-02-2005, 10:20 AM
எஸ்.வி. சுப்பையா அருமையான நடிகர்.

பாரதியார் இன்னும் மனதில் நிற்கிறார்.

சமீபததில் இவரைப்பற்றிய ஒரு செய்தி சன் டிவியில் கூறினார்கள். ஏ.வி. மெய்யப்ப செட்டியார் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு நேரமாகிக்கொண்டேயிருந்தது. ஏவிஎம் அவர்கள் அன்றைய காட்சிகளை முடித்துவிடலாம் எவ்வளவு நேரமானலும் என்று விருப்பப்பட்டார். அதை மெதுவாக எஸ்.வி. சுப்பையாவிடம் கூறினார்கள். அப்பொழுது எஸ்.வி.சுப்பையா அவர்களே, ஏவிஎம் அவர்கள் நான் கொண்டுவந்திருக்கும் உணவை என்னுடன் உண்டால் நான் எவ்வளவு நேரமானலும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இன்றைய காட்சிகளை முடிக்க ஒத்துக் கொள்கிறேன் என்றாராம். ஏவிஎம் அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டு எஸ்விஎஸ் அவர்களுடன் உணவு உட்கொண்டாராம்.

அவர்கள் சாப்பிட்ட உணவு - கேழ்வரகு கூழ்.

எளிமைக்கு பெயர் போன்றவர்களில் எஸ்விஸ் அவர்கள் முதன்மையானவர். நடிகர் என்ற பந்தா என்றும் காட்டியதில்லை அவர்.

மிகவும் சிறந்த நடிகர். தமிழ்த்திரையுலகிற்கு கிடைக்த பொக்கிஷங்களுள் இவரும் ஒருவர்.

pradeepkt
01-02-2005, 01:14 PM
ஆரென் எனக்கு நாகய்யாவை ரொம்ப நல்லாத் தெரியும்... அவரு பேருதான் தெரியலை... அவரு நடிப்புல மயங்கி பேர மறந்துட்டேன்.

gragavan
02-02-2005, 05:54 AM
Originally posted by aren@Feb 1 2005, 04:20 PM
அவர்கள் சாப்பிட்ட உணவு - கேழ்வரகு கூழ்.

எளிமைக்கு பெயர் போன்றவர்களில் எஸ்விஸ் அவர்கள் முதன்மையானவர். நடிகர் என்ற பந்தா என்றும் காட்டியதில்லை அவர்.

மிகவும் சிறந்த நடிகர். தமிழ்த்திரையுலகிற்கு கிடைக்த பொக்கிஷங்களுள் இவரும் ஒருவர்.

ஆரென். சுப்பையா அவர்களின் எளிமையைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன். அவர்தம் துணைவியாரும் அப்படித்தானாம். அவரது வீடும் எளிமையாக இருக்குமாம். வீட்டிலேயே ஒரு காய்கறி மற்றும் கீரைத்தோட்டம். அதிலிருந்து கிடைக்கும் காய்கறிகளைத்தான் பயன்படுத்துவாராம். உள்ளூர் படப்பிடிப்புகளில் குழுவினர் அருந்தும் உணவை இவர் அருந்துவதில்லை என்றும் கேள்வி. மேலும் இவர் தாடி மீசை ஒட்டிக் கொண்டு நடிக்க மாட்டாராம். கப்பலோட்டிய தமிழனும் தேவி தரிசனமும் எனக்குத் தெரிந்த விதிவிலக்குகள்.

வெள்ளி ரதம் படத்தில் ஒரு காட்சி. வாழ்ந்து கெட்ட குடும்பம் அவருடையது. அவர் மகள் கே.ஆர்.விசயாவைப் பெண் பார்க்க, அவரால் வாழ்வு பெற்ற குடும்பத்தினர் வந்திருப்பார்கள். அவரிடம் எம்.என்.ராசம் "எப்படி இருக்கின்றீர்கள்?" என்று கேட்பார். அவருடைய தோளில் ஒரு பட்டுத் துண்டு இருக்கும். அதன் சரிகையைக் காட்டி, "பழைய சரிகைதான். கொஞ்சம் கிழிஞ்சிருக்கு. ஆனால் இன்னமும் பளபளப்பு போகலை" என்று விட்டுக் கொடுக்காமல் சொல்வார். சிறந்த நடிப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

sujataa37
24-03-2005, 06:28 AM
நாகையாவின் மறக்க முடியாத பல பாத்திரங்களில் எனக்கு நினைவுக்கு வந்தது ஒன்று -

தெய்வ மகன் படத்தில் முரட்டு சிவாஜி வளரும் ஆசிரமத்தின் தலைவராக வருவார். சிவாஜிக்கு சித்தார் வாசிக்கக் கற்றுக்கொடுப்பார். அவர் இறந்தபின்தான் சிவாஜி ஜெயலலிதா/சுந்தரராஜன் வீட்டிற்கு செல்வார்.

"கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா" பாடலை படத்தில் இவர்தான் முதலில் பாடுவார்.

சாந்தமான முகத்துக்கு இவரைவிட சிறப்பாகப் பொருந்துபவர் யாரும் இல்லை என்றுகூட சொல்லலாம்.