PDA

View Full Version : தமிழகத்தில் கடல் கொந்தளிப்பு



தமிழ்குமரன்
26-12-2004, 08:37 AM
சென்னையில் கடல் கொந்தளிப்பு. சுமார் 500 பேர் மரணம்.

இயற்கையின் கோர விளையாட்டு.

இராசகுமாரன்
26-12-2004, 02:39 PM
500 இப்போது 2500-க்கு மேல் போய் கொண்டிருக்கிறது.

ஆசை பார்த்து நான் கட்டிய என்னுடைய சொந்த வீட்டினுள்
இப்போது கடல் குடியிருக்கிறது. நல்லவேளை உயிர்கள் ஏதும் சேதமில்லை.

இயற்கையின் சீற்றம் யாராலும் அளவிடமுடியாது.
தென் கிழக்கு ஆசியாவே இன்று இந்த அழிவால் சீர்குலைந்து நிற்கிறது.

அறிஞர்
27-12-2004, 01:33 AM
இன்று செய்தியை படித்தவுடன்...... சோகம் கவ்வியது....

இறந்தவர்கள்.... எண்ணிக்கை... 5000த்தை தாண்டும் என்கிறார்கள்..

நண்பர் இராசகுமாரன்.. வீட்டில் தண்ணீர் வந்தது குறித்து வருத்தம்... ஆனால் உயிர்சேதம் இல்லை என்ற செய்தி.... சந்தோஷம்.......

இயற்கையின் சீற்றங்களை.... எண்ணி கவலை வருகிறது

manitha
27-12-2004, 02:26 AM
மனதை கனமாக்கி சென்றது, பூகம்பம்.
5000க்கும் மேல் உயிரிழந்த நமது முகம் தெரியாத உறவுகள்.
எவராலும் காணசகிக்காத அவலம் இது.
இயற்கை அன்னையின் கோரத்தாண்டவம்.
நமது தமிழ் மன்றத்தின் சார்பில் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கின்றேன்.

Iniyan
27-12-2004, 02:56 AM
Originally posted by இராசகுமாரன்@Dec 26 2004, 08:39 PM
500 இப்போது 2500-க்கு மேல் போய் கொண்டிருக்கிறது.

ஆசை பார்த்து நான் கட்டிய என்னுடைய சொந்த வீட்டினுள்
இப்போது கடல் குடியிருக்கிறது. நல்லவேளை உயிர்கள் ஏதும் சேதமில்லை.

இயற்கையின் சீற்றம் யாராலும் அளவிடமுடியாது.
தென் கிழக்கு ஆசியாவே இன்று இந்த அழிவால் சீர்குலைந்து நிற்கிறது.

93762



பொருட்சேதமும் ஒன்றும் பெரிய அளவில் இல்லை தானே தலைவா?

pradeepkt
27-12-2004, 02:59 AM
பாதிக்கப் பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், அஞ்சலிகளும்..

கண்ணீருடன்,
பிரதீப்

மன்மதன்
27-12-2004, 03:44 AM
தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது நண்பர் இராசகுமாரன் ?? தண்ணீர் வடிந்து விட்டதா? பொருட்சேதம் ஏதும் இல்லையே.. ??

அன்புடன்
மன்மதன்

gankrish
27-12-2004, 04:55 AM
சென்னை காரானாகிய என்னை உலுக்கி எடுத்த நிகழ்ச்சி. நான் முன்பு வேலை செய்த அலுவலகம் நீலாங்கரையில் கடற்க்கரையை ஓட்டி இருக்கிறது. அதில் சுமார் 150 பேர் ஆபிஸ் quartersல் தங்கி உள்ளார்கள். அவர்களின் நிலை என்ன தெரியாது? நேற்று போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை and No Response.

இயற்க்கையின் சீற்றம் தாங்க முடியவில்லை

gragavan
27-12-2004, 06:52 AM
சென்னையில் எங்கள் வீட்டுப் பகுதியில் (கோட்டூர்புரம்) தண்ணீர் வரவில்லை. ஆனால் நிலநடுக்கம் உணரப்பட்டு எனது குடும்பத்தினர் வீட்டை விட்டுவிட்டு உடனடியாக வெளியே வந்து விட்டனராம். அவர்கள் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. பட்டவர்களுக்குத்தானே தெரியும் வேதனை. கோட்டூர்புரத்திற்கும் அடையாற்றிற்கும் இடையில் ஓடும் சாக்கடைக் கால்வாயில் நீர்வரட்த்து பெருகியிருக்கிறதாம். அளவு கூடிக்கொண்டே இருப்பதாக நேற்று கூறினார்கள்.

ஆனாலும் எத்தனையோ வேதனைக்குறிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். தாங்கவில்லை.

வேதனையுடன்,
கோ.இராகவன்

இராசகுமாரன்
27-12-2004, 07:40 AM
Originally posted by மன்மதன்@Dec 27 2004, 08:44 AM
தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது நண்பர் இராசகுமாரன் ?? தண்ணீர் வடிந்து விட்டதா? பொருட்சேதம் ஏதும் இல்லையே.. ??
அன்புடன்
மன்மதன்

93781


இன்னும் முழு கிராமமும் கடல் வெள்ளத்தில் தான் மூழ்கியிருக்கிறது.
ஊரில் உள்ளவர்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளார்கள்,
நாளை மாலை தான் நிலவரம் சரியாகுமாம்,
அப்போது தான் பொருட்களின் கதி என்னவென தெரியும்.

rajeshkrv
27-12-2004, 09:10 AM
இயற்கையின் சீற்றத்திற்கு பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி