PDA

View Full Version : செல்லமே செல்லம்



kavitha
25-12-2004, 11:57 AM
செல்லமே செல்லம்
--------------------
பத்து திங்கள் பார்த்திருந்து
பாங்காய் வந்த பசுங்கிளியே!

சிரிக்கும் பொன் பூவோ..
சிவந்த குளிர் தீயோ...

எங்கள் சிங்காரச் சிட்டே!
ஆழியில் ஊறிய முத்தே!
நான் தானடி உனது அத்தே!

கொத்து கொத்தாய் ஆசை வச்சேன்
உன்னை நானும் காண்பதெப்போ?

முத்து முத்தாய் சொல் தொடுத்து
முனைப்பாய் நானும் பாட்டெடுப்பேன்

தெள்ளு தமிழ் சொல்லெடுத்து
என்னை நீயும் விளிப்பதெப்போ?

உன்னைப்பெற்றெடுத்த சொந்தங்களுக்கோ
பத்து திங்கள் பரவசம்...

பார்க்காத இச்சொந்தங்களுக்கோ
பார்க்கும் வரை பரவசம்..

தத்தி தத்தி நடந்து வந்து
அத்தை அத்தை என்னும்
அந்த நாளுக்காக காத்திருக்கேன்..
அஞ்சுகமே ஓடி வா...

பிரியன்
25-12-2004, 04:46 PM
கவிதைத் தளத்தில் மறு நுழைவுக்கு வாழ்த்து.......

அருமையான உணர்வுபூர்வமான கவிதை....

தங்களோடு என் வாழ்த்துகளையும் சக்திக்கு இணைத்து கொள்கிறேன்...........

mythili
14-01-2005, 07:37 AM
நல்ல கவிதை கவி.

இதைப் படித்த உடன்..."கல்கி" படத்தில் வரும்..'முத்து முத்து மகளே....." என்ற பாடல் வரிகள் நியாபகம் வருதுடா.

அன்புடன்,
மைத்து

thamarai
14-01-2005, 07:53 AM
உன்னைப்பெற்றெடுத்த சொந்தங்களுக்கோ
பத்து திங்கள் பரவசம்...

பார்க்காத இச்சொந்தங்களுக்கோ
பார்க்கும் வரை பரவசம்..
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள்...

பரஞ்சோதி
15-01-2005, 03:23 AM
இன்று தான் இந்த கவிதையைப் பார்த்தேன்.

சக்தி கருவில் இருக்கும் போதே கவிதை வடித்த அத்தை, மீண்டும் இப்படி ஒரு அருமையான உணர்ச்சிக் கவிதையைக் கொடுத்தமைக்கு நன்றி.

பரஞ்சோதி
15-01-2005, 03:26 AM
Originally posted by priyan @ Dec 25 2004, 08:46 PM
கவிதை தளத்தில் மறு நுழைவுக்கு வாழ்த்து.......

அருமையான உணர்வுபூர்வமான கவிதை....

தங்களோடு என் வாழ்த்துகளையும் சக்திக்கு இணைத்து கொள்கிறேன்...........


கவிதா அத்தை போன்றே, கருவில் இருக்கும் போதே கவிதை வடித்து என்னை பரவசப்படுத்திய பிரியன் சித்தப்பாவுக்கு எனது அன்பு முத்தங்கள்.

-சக்தி