PDA

View Full Version : ஏழிசை வேந்தர் டி.எம்.எஸ் கவுரவிக்கப்பட்டĬ



rajeshkrv
24-12-2004, 07:45 AM
ஏழிசை வேந்தர் டி.எம்.எஸ் கவுரவிக்கப்பட்டார்


ஏழிசை வேந்தர் , பத்மஸ்ரீ திரு.டி.எம்.செளந்தரராஜன் டிசம்பர் 12'ம் தேதி
அகில இந்திய மேடை கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கவுரவிக்கப்பட்டார்

இந்த பாட்டுக்கு ஒரு தலைவனுக்கு இவர்கள் செய்த மரியாதை இதோ இங்கே

http://www.lakshmansruthi.com/tmsgallery01.htm
http://www.lakshmansruthi.com/tmsgallery02.htm
http://www.lakshmansruthi.com/tmsgallery03.htm
நன்றி லக்ஷ்மன் ஸ்ருதி

gragavan
24-12-2004, 10:16 AM
தமிழ்த் திரையுலகில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்திய பாடகர்களில் திரு சௌந்தரரான் அவர்கள் முதன்மையானர். அவர் தொடங்கி வைத்ததை மற்றவர்கள் பின்பற்றினார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

பாடல்களில் பாவங்களை அவர் கொண்டு வரும் பாங்கு இசையமைப்பாளர்கள் மனதில் நினைத்தது போலவே இருக்குமாம். அவரை புகழேணியில் ஏற்றிய பெருமை மெல்லிசை மன்னருக்கு உண்டு. எத்தனை பாடல்கள். ஏதாவது பரிசோதனை முயற்சி என்றால் விசுவநாதன் டி.எம்.எ`&த்தான் பயன்படுத்துவாராம். அவ்வளவு நம்பிக்கை.

இளையரா திரையுலகில் நுழைந்ததும் ஆரம்பகாலங்களில் இவரையே நிறைய பயன்படுத்தினார். பிறகு பலகாரணங்களால் இந்தக் கூட்டணி தொடர முடியாமல் போனது. இருந்தாலும் இளையரா சௌந்தரரான் மேல் மதிப்பு வைத்திருப்பதும் அதை வெளிப்படையாக பேட்டியில் சொன்னதும் சௌந்தரரானின் இசைத்திறமைக்கும், இளையராவின் திறமையை மதிக்கும் பண்புக்கும் எடுத்துக்காட்டு.

அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை. மற்ற கலைஞர்கள் செய்த மரியாதை அவர் திறமைக்கு. அதில் எள்ளளவும் ஐயமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

aren
25-12-2004, 03:53 AM
செளந்திரராஜன் அவர்கள் யாருக்காக இந்த பாடலை பாடுகிறோம் என்று முதலில் தெரிந்துகொண்டு அதன்படி தன்னுடைய குரலை மாற்றிக்கொள்வார். அதனால் அவர் புரட்சித்தலைவர் அவர்களுக்கும் நடிகர்திலகம் அவர்களுக்கும் பாடும்பொழுது அவர்களே பாடுவதுபோல் தோற்றமளிக்கும். அந்த அளவு திறமை படைத்தவர். எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைப்பது குறைந்தவுடன் இவருடைய பாடல்களும் குறையத்தொடங்கின. இளையராஜா அவர்களின் வளர்ச்சி டி.எம்.எஸ் அவர்களுக்கு ஒரு வீழ்ச்சியே, ஏனெனில் இளையராஜா அவர்கள் மற்ற பாடகர்களையும் புதியவர்களையும் நிறைய தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். குறிப்பானவர்கள் மனோ, மலோசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி போன்றவர்கள்.

தமிழ்த்திரையுலகம் உள்ளவரைக்கும் டி.எம்.எஸ் அவர்களின் குரல் எங்கேயாவது ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

தமிழை அழகாக உச்சரிக்கும் டி.எம்.எஸ் அவர்களின் தாய்மொழி "கொங்கினி" என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மன்மதன்
25-12-2004, 09:24 AM
Originally posted by aren@Dec 25 2004, 09:53 AM
தமிழை அழகாக உச்சரிக்கும் டி.எம்.எஸ் அவர்களின் தாய்மொழி "கொங்கினி" என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
93706


நான் சென்னை சென்ற போது ஊர் முழுக்க அனைத்து கம்பெனிகளும் போஸ்டர்கள் அடித்து கௌரவித்தார்கள்.. டி.எம்.எஸ் அவர்களின் தாய் மொழி கொங்கனி என்பது ஆச்சரியமான விசயம்..
அன்புடன்
மன்மதன்

gragavan
27-12-2004, 06:10 AM
Originally posted by மன்மதன்+Dec 25 2004, 03:24 PM--><div class='quotetop'>QUOTE(மன்மதன் @ Dec 25 2004, 03:24 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-aren@Dec 25 2004, 09:53 AM
தமிழை அழகாக உச்சரிக்கும் டி.எம்.எஸ் அவர்களின் தாய்மொழி "கொங்கினி" என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
93706


நான் சென்னை சென்ற போது ஊர் முழுக்க அனைத்து கம்பெனிகளும் போஸ்டர்கள் அடித்து கௌரவித்தார்கள்.. டி.எம்.எஸ் அவர்களின் தாய் மொழி கொங்கனி என்பது ஆச்சரியமான விசயம்..
அன்புடன்
மன்மதன்
93719
[/b][/quote]அவருடைய தாய்மொழி சௌராட்டிரம் என்று கேள்வி. மதுரையில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தரராசன். மதுரையில் சௌராட்டிரம் பேசுவோர் நிறைய உண்டு. சௌராட்டிரம் தாய்மொழியாக இருப்பினும் தன் மகனுக்கு செல்வகுமார் என்று பெயர் வைத்தார் அவர்.

அன்புடன்,
கோ.இராகவன்