PDA

View Full Version : என்னை கவர்ந்த பிரதமர் - திரு.பி.வி. நரசிம்மர&rajeshkrv
24-12-2004, 03:07 AM
என்னை கவர்ந்த பிரதமர் - திரு.பி.வி. நரசிம்மராவ்
என்னை கவர்ந்த பிரதமர் இவர்.


இந்திய பொருளாதாரத்தில் இன்று வீரு நடை போடுகிறது என்றால்
அது இந்த மனிதர் தைரியமாக எடுத்த முடிவினால் தான்
இவரது அமைச்சரவையில் இருந்த அன்றைய நிதியமைச்சர்
திரு. மன்மோகன் சிங் செய்த பொருளாதார மாற்றம் இன்று நம் நாட்டிற்கு பல வகையில் உதவியிருக்கிறது

எப்பொழுதும் பேசாமல் எப்பொழுது பேச வேண்டுமோ எங்கு பேச வேண்டுமோ அங்கு நன்றாக பேசக்கூடியவர்.

இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.இவருக்கு சுமார் 12 மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தென்னிந்தியாவிலிருந்து வந்த முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்றவர்.

இவரது இழப்பு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு ..

ஆனந்த விகடனில் மதனிடம் உங்களை கவர்ந்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பி.வி. நரசிம்மராவ் என்று பதில் கூறியிருந்தார்.. அதிகம் பேசாமல் காரியம் சாதிக்கும் மனிதர் இவர்.

மற்ற கட்சியினரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடதக்கது..

இவரை பற்றிய கட்டுரை இங்கே

இவரது பேட்டி இங்கே
<http://www.dayafterindia.com/interview/1.html>

aren
24-12-2004, 05:41 AM
இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை என்று இவரை அழைக்கலாம். இவர் கொண்டுவந்த சீர்திருத்தத்தின் பலனாக இந்திய கடந்த 14 ஆண்டுகளில் நன்றாகவே முன்னேறியிருக்கிறது. நரசிம்மராவ் அவர்கள் ஆட்சியில் அமரும்பொழுது இந்தியாவின் அன்னிய செலவாணியின் இருப்பு ஒரு சில வாரங்களுக்கே இந்தியாவால் இறக்குமதி செய்ய முடியும். அந்த நிலைமைக்கு முந்திய சந்திரசேகரின் அரசு இந்தியாவை கொண்டுவந்து விட்டது. அதனால் சீர்திருத்தம் அவசியம் என்று நினைத்து திறமையான மன்மோகன்சிங் அவர்களை நிதியமைச்சராக்கி அவருக்கு முழு சுதந்திரமும் கொடுத்து இந்தியாவை தலை நிமிர வைத்தவர்.

காங்கிரஸ் கட்சியிடத்திலும் நேருவின் குடும்பத்தினரிடமும் அதிகமாக பாசம் வைத்திருந்தார். இந்திராகாந்தி அவர்கள் இறந்தவுடன், நரசிம்மராவ் அவர்கள்தான் பிரதம மந்திரியாவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பதவியை பொருட்படுத்தாமல், ராஜீவ்காந்தியை பிரதமராக்க உதவினார். அந்த நல்ல மனிதம் இன்று நம்முடம் இல்லை.

அவர் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை பிரார்த்திப்போம்.

gragavan
24-12-2004, 07:15 AM
இந்தியாவில் சிறந்த பிரதமர்கள் இரண்டு மூன்று பேர்கள்தான். அவர்களில் ஒருவர் நரசிம்மராவ். அவரது அரசியல் துறவறமும் மறைவும் இந்தியாவிற்கு இழப்புதான். அவர்தம் குடும்பத்தாருக்கு மனமார்ந்த வருத்தங்கள்.

வருத்தத்துடன்,
கோ.இராகவன்

pradeepkt
24-12-2004, 12:52 PM
நரசிம்மராவ் அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் அவரது அசுர வேக வளர்ச்சி மற்றும் அசுர வேகத் தாழ்ச்சி. அவரது கடைசி காலம் ஒரு roller coaster போலத்தான் இருந்தது.

நிரம்பப் படித்தவர், மாறுதல்களை வரவேற்பவர், அமைதியானவர், முடிவெடுக்கத் தெரியாதவர், தென்னவர், லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர், நிலையான ஆட்சிக்கு எதையும் செய்யும் வித்தகர் என இவருக்குப் பல முகங்கள்.

அவரது சமீப walk the talk -இல் கூடத் தன்னைப் பற்றி அவர் எதுவுமே புகழவில்லை. என்னமோ மன்மோகன் சிங்கிற்கு ஒரு அரசியல் பின்புலம் கொடுத்து அவரது நிதிச் சீர்திருத்தங்களை ஆதரித்ததாக மட்டுமே கூறினார். அவரது அடக்கம் என்னைச் சிலிர்க்க வைத்தது.

எது எப்படியாயினும் இந்தியாவில் எவரையாவது புகழ வேண்டுமென்றால் அவர் புகழுடம்பு எய்தி இருக்க வேண்டும்.
அடுத்து நரசிம்மராவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என இதே சோனியா காந்தி பரிந்துரைத்தாலும் ஆச்சரியமில்லை.

அன்புடன்,
பிரதீப்

தஞ்சை தமிழன்
25-12-2004, 01:56 PM
எனக்கு பிடித்த பிரதமராக நான் நினைப்பது இவரைத்தான்.

பலரும் பலரை கூறினாலும் அவர் எவரையும் விட இந்தியாவை தலைனிமிரச்செய்தவர்.
அவர் இருந்தவரை அமேரிக்காவின் பொருளாதார அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தைரியமாக முடிவெடுத்தவர்.

இந்தியாவை ஆள நேரு குடும்பம் அல்லாத எவருக்கும் ஆகும் என நிருபித்தவர். அவர்களை விட நன்றாகவே ஆட்சியும் செய்தார்.( அதனால்தான் அவரை சோனியாவுக்கு பிடிக்காமல் போய்விட்டது என நினைக்கிறேன்)