PDA

View Full Version : குப்பை அஞ்சல்களைத் தவிர்ப்பது எப்படி?.பாரதி
22-12-2004, 03:59 PM
குப்பை அஞ்சல்களைத் தவிர்ப்பது எப்படி?

அநேகமாக மின்னஞ்சல் உபயோகிப்பவர்கள் அனைவருமே அடிக்கடி குப்பை அஞ்சல்களால் (Spam) பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறோம். பல இணையத்தளங்களுக்கும் செல்கிறோம். பெரும்பாலான தளங்களில் மின்னஞ்சல் முகவரியை தர வேண்டியிருக்கிறது. சிலர் வலைப்பூக்களை அமைத்து பராமரித்து வருகிறோம். அங்கும் நம் முகவரிகளைக் கொடுத்திருப்போம். குப்பை அஞ்சல்களை அனுப்பும் பல தளங்களும் நாம் அவ்விதம் தரும் முகவரிகளை திரட்டித்தான் நமக்கு மின்னஞ்சல்களை அனுப்புகின்றன.

இதை தவிர்க்க சில வழிகள்:

1. உதாரணமாக நமது மின்னஞ்சல் முகவரி abc@yahoo.com என்று இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே தருவதற்கு பதிலாக abc.at.yahoo..com என்று தரலாம். அதாவது @ என்கிற குறிக்கு பதிலாக at என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம். இது சில இடங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடியது.

2. மின்னஞ்சல் முகவரியை படமாக மாற்றி விடுவது. அதாவது paint போன்ற ஒரு கிராஃபிக்ஸ் அப்ளிகேசனை திறந்து மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்து அதை GIF அல்லது JPEG கோப்பாக சேமித்து அதை உபயோகிக்கலாம்.

3. இணையப்பக்கங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரி HTML-ல் அப்படியே இருக்கும். அதை குப்பை மின்னஞ்சல் அனுப்புபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு பதிலாக www.hivewire.com/enkoder_form.php (http://www.hivewire.com/enkoder_form.php) என்கிற தளத்தில் இலவசமாக என்கோடிங் சர்வீஸ் உள்ளது. எந்த மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்க வேண்டுமோ அதை கொடுத்து என்கோடிங் பொத்தானை அழுத்தினால் ஒரு ஜாவா ஸ்கிர்ப்ட் கிடைக்கும். அதை தளத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளவும். 'கிளிக்' செய்யக்கூடிய தொடுப்பு இணையத்தின் பக்கங்களில் தெரியும்.

நன்றி: தமிழ்கம்ப்யூட்டர்

....

இளசு
22-12-2004, 11:24 PM
வந்தபின் வடிகட்டும் யுக்தி என எண்ணி வந்து பார்த்தால்
வருமுன் காக்கும் புத்திசாலித்தன வழிமுறைகள்..தமிழ் கம்ப்யூட்டருக்கும் தம்பிக்கும் நன்றிகள்..

aren
23-12-2004, 07:22 AM
இது ஒரு சிறந்த ஐடியாதான். இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

aren
23-12-2004, 07:25 AM
www.hivewire.com/enkoder_form.php (http://www.hivewire.com/enkoder_form.php) முயற்சி செய்தேன், ஆனால் திறக்க மாட்டேன் என்கிறது. என்னவென்று தெரியவில்லை. தளத்தின் பெயரை தவறாக கொடுத்திருக்கிறீர்களா என்று கொஞ்சம் கவனியுங்கள்.

mythili
10-01-2005, 11:06 AM
நானும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன். :-)

மன்மதன்
10-01-2005, 12:58 PM
Originally posted by mythili@Jan 10 2005, 04:06 PM
நானும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன். :-)
94345


கண்டிப்பா.. முயற்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்..சீ செய்து பார்த்துட்டு சொல்லு மைதிலி :rolleyes: :rolleyes: :D :D :D

அன்புடன்
மன்மதன்

பாரதி
10-01-2005, 01:35 PM
அன்பு ஆரென்...
உங்களுக்கு ஏற்பட்ட தொல்லைக்கு வருந்துகிறேன்.
அதே முகவரியைக் கொடுத்து கூகிளில் தேடிய போது கீழ்க்கண்ட முகவரி கிட்டியது.
முயற்சி செய்து பார்க்கவும். நன்றி.
http://automaticlabs.com/products/enkoder/

mania
11-01-2005, 05:22 AM
:rolleyes: :rolleyes: நானும் இந்த குப்பை க்கு குட் பை சொல்லனும்னு பாக்கிறேன்...... :rolleyes: :rolleyes: ஆனா என்ன பண்னனும்னு தெளிவா புரியலையே......:rolleyes: :D
அன்புடன்
மணியா.....:huh:

poo
11-01-2005, 08:59 AM
தலை.. ஒரு ஈஸியான வழி.. அறிஞர்தான் அத்தனை மெயில் வைச்சிருக்கிறாரே.. அவருக்கு எல்லாத்தையும் ·பார்வார்டு பண்னிட்டா என்ன?!!
(யப்பா./.. இந்த மைதிலி பொண்ணு வந்தாலும் வந்துச்சு.. எங்க இருந்துதான் அறிவு வருதோ எனக்கு!!!?)

mania
11-01-2005, 09:08 AM
Originally posted by poo@Jan 11 2005, 01:59 PM
தலை.. ஒரு ஈஸியான வழி.. அறிஞர்தான் அத்தனை மெயில் வைச்சிருக்கிறாரே.. அவருக்கு எல்லாத்தையும் ·பார்வார்டு பண்னிட்டா என்ன?!!
(யப்பா./.. இந்த மைதிலி பொண்ணு வந்தாலும் வந்துச்சு.. எங்க இருந்துதான் அறிவு வருதோ எனக்கு!!!?)

:D :D :D ஆமாங்க ....அது என்னமோ கோவில் சுண்டல் மாதிரி இதுல 2...அதிலே 3 ன்னு வைச்சிருக்கார். அது சரி பொழுது போலேன்னா அவரே அவருக்கு மாத்தி மாத்தி மெயில் கொடுத்து பதிலும் கொடுத்தக்கலாம்....... .
இரண்டாவது சொல்லியிருக்கிறது......வந்து....வந்து........எல்லாம் "இரு கோடுகள்" தத்துவம் தானே பூ......
அன்புடன்
மணியா.....

poo
11-01-2005, 09:17 AM
தலை... உங்களுக்கு இரு கோடுகள் போடனுமா என்ன?!!
(ரோடுன்னாலே ரோலரான்னு கேக்கற உங்களுக்கு மைதிலியை மறக்கறது சுலபமா என்ன?!! அய்யோ தலை சம்பந்தமில்லாம உளர்றேனா?!! பரவாயில்லை.. மைதிலியை நினைச்சு என்னை மன்னிச்சிடுங்க..)

மன்மதன்
11-01-2005, 10:00 AM
சும்மா புல்டோசர் கணக்கா மைதிலியை அமுக்குறது நல்லா இல்லை சொல்லிபுட்டேன்.. :D:Dஅவ என் ·ப்ரெண்டு.. :D
அன்புடன்
மன்மதன்

mania
11-01-2005, 10:24 AM
Originally posted by மன்மதன்@Jan 11 2005, 03:00 PM
சும்மா புல் டோசர் கணக்கா மைதிலியை அமுக்குறது நல்லா இல்லை சொல்லிபுட்டேன்.. அவ என் ·ப்ரெண்டு..
அன்புடன்
மன்மதன்
:D :D :D இங்கே புல் (grass) டோசர் (மேய்பவர்) என்று மரியாதையாக குறிப்பிடுவது மைதிலியை தானே...... :D:D......சரி சரி உன் ·ப்ரெண்ட் தானே.......:D
பன்மொழி புலவர்
மணியா....... :D :D

poo
11-01-2005, 11:33 AM
தலை இந்த புல்டோசர் பதிவுபற்றி விமர்சனம் பண்ண எதிரணியின் ·புல் டோசர் வருவார்!!
(·புல் டோசர் = அ(ளவுக்க)திகமாக கொடுப்பவர்.. !!)
பன்மொழிப்புலவரின் சிஷ்யன்
பூ...

மன்மதன்
11-01-2005, 11:44 AM
மைதிலி ·புல் டவுசர் போட்ட மாடர்ன் பொண்ணு.. தப்பாக ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா..:D:D
(·புல் டவுசர் : முழு பேண்ட் )
பன் மொழிப்புலவரின் சிஷ்ய கேடி..:D:D
மன்மதன்

poo
11-01-2005, 11:49 AM
மன்மதன் போறபோக்குல மைதிலி ·புல்டேஷ் போட்டு கோடிட்ட இடத்தை நிரப்புகன்னு திட்டப் போறாங்க...

mania
11-01-2005, 11:54 AM
Originally posted by மன்மதன்@Jan 11 2005, 04:44 PM
மைதிலி ·புல் டவுசர் போட்ட மாடர்ன் பொண்ணு..:D :D தப்பாக ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா.. :D:D
(·புல் டவுசர் : முழு பேண்ட் )
பன் மொழிப்புலவரின் சிஷ்ய கேடி
மன்மதன்
:D :D :D புலவர்கள் பூ....மன்மத்ன் இருவரின் நா வன்மையை கண்டு மெய் சிலிர்க்கிறேன்.......:D :D அடடா.....என்ன ஒரு சொல் நயம்....:D :D :D :Dவளர்க உங்கள் புலமை..... :D :D
அன்புடன்
மணியா........ :D

மன்மதன்
11-01-2005, 12:47 PM
Originally posted by mania+Jan 11 2005, 04:54 PM
மைதிலி ·புல் டவுசர் போட்ட மாடர்ன் பொண்ணு.. தப்பாக ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா..
(·புல் டவுசர் : முழு பேண்ட் )
பன் மொழிப்புலவரின் சிஷ்ய கேடி
மன்மதன்


:D :D :D புலவர்கள் பூ....மன்மத்ன் இருவரின் நா வன்மையை கண்டு மெய் சிலிர்க்கிறேன்.......:D:D :D அடடா..... :D :Dஎன்ன ஒரு சொல் நயம்.......:D வளர்க உங்கள் புலமை.....
அன்புடன்
மணியா........
ஏதோ வசிஷ்டர் வாயால் --- என்று சொல்வார்களே..:D :D :D அது மாதிரி இருக்கு தலை..
அன்புடன்
மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
11-01-2005, 07:25 PM
நல்ல தகவல் முயன்று பார்த்து சொல்கிறேன். அடடா இங்கேயும் ஐவர் அணியின் அமர்க்களம். தொடருங்கள்

சுபன்
03-03-2006, 02:33 AM
deleted