PDA

View Full Version : தங்கைபிரியன்
16-12-2004, 11:49 AM
தங்கை

எ‎ங்கள் வாழ்வின்
‏இனிய வசந்தம் நீ ,,,,,
ஆளுக்கொரு பெயர்சொல்ல
நா‎ன் அழைத்த பெயரை ஏற்று
எ‎ன் முதல் வெற்றி தந்தவள்,,,,

கைகளில் ஏந்தி,
தலைமுடி வருடி ,
விரலை தொடுகையில்.
லேசாய் நீ சிரிக்க
பாப்பாக்கு எ‎ன்னை தெரியுதுப்பா
என மகிழ வைத்தவள்...

உ‎ன்னோடு தரையில் படுத்துகொண்டு
கதைகள் சொல்லி கடைசியில்
கன்னம் கிள்ளுவே‎ன் -
நிறம் கூடிய ரோஜாவாகிடுவாய்

உனக்கு தலைசீவி,
மையிட்டு,புருவம் இ‏டையே
சந்திர பொட்டு வைத்து
சி‎ன்ன கொலுசணிவித்தே‎ன்...
மயில்தோகையாய்
பட்டு பாவாடை பிடித்து
ஆட கண்டது
இறைவனாலும் பெறமுடியாத
அற்புத வரம் ...,,,,

வாயாடி பெண்ணானாய்...
சீண்டி சீண்டி தேனாய்
ருசித்தோம்...,,

‏இன்னும் இன்னும் எத்தனை
‏எத்தனை இனிய நினைவுகள் .,,
நினைத்து நினைத்து உள்ளம் பூரிக்கிறே‎ன்

தினம் பெயர் சொல்லி கூப்பிட்டு
சண்டை போட முடியாமல் -
இன்று தொலைவில்...

வருந்தாமல் பிரிந்திருக்க பழகி
கொள்கிறே‎ன் - அதற்காய்த்தானே
இந்த பாலைக்கு வந்தே‎ன்

manitha
17-12-2004, 12:53 AM
தங்கைக்கோர்
தாலாட்டு
மிகவும் அருமை.

காதலியை மட்டுமே
நினைத்து வாழும்
இன்றைய
இளைஞர்கள் மத்தியில்
தங்கையின்
மழலை
மொழி
மறவாத அண்ணனின் உளறல்கள்........

வாழ்த்துக்கள் ப்ரியன்.

பிரியன்
17-12-2004, 11:00 AM
Originally posted by manitha@Dec 17 2004, 05:53 AM
தங்கைக்கோர்
தாலாட்டு
மிகவும் அருமை.

காதலியை மட்டுமே
நினைத்து வாழும்
இன்றைய
இளைஞர்கள் மத்தியில்
தங்கையின்
மழலை
மொழி
மறவாத அண்ணனின் உளறல்கள்........

வாழ்த்துக்கள் ப்ரியன்.

93401நம்ம மனசுக்குள்ள இதுமாதிரி எத்தனையோ நினைவுகள் இருக்கும்.திரும்பி பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்..இதுமாதிரி கவிதைகள் எழுதி என்னை மகிழ்வித்து கொள்கிறேன் ...

நன்றி மனிதா

இளசு
20-12-2004, 09:47 PM
இனிய நினைவுகளைக் கோர்த்து அழகு பார்க்கும் அண்ணன்
கொடுத்துவைத்த தங்கை..

வாழ்த்துகள் இருவருக்கும்..

பிரியன்
21-12-2004, 05:19 PM
Originally posted by இளசு@Dec 21 2004, 02:47 AM
இனிய நினைவுகளைக் கோர்த்து அழகு பார்க்கும் அண்ணன்
கொடுத்துவைத்த தங்கை..

வாழ்த்துகள் இருவருக்கும்..வாழ்த்துகளுக்கு இருவரின் சார்பாக நன்றிகள் ....
தங்கைக்கும் ,அப்பாவிற்கும் வாசித்து காண்பித்தேன் ...
இரு வேறு விதமான மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த கவிதை இது .........

பாரதி
22-12-2004, 03:47 PM
நன்றாக இருக்கிறது பிரியன். எனக்கு சிறு வயதிலிருந்தே நிறைவேறாத ஒரு ஆசை.. எனக்கு ஒரு தங்கை இல்லை என்பதுதான்... உங்கள் பிரியம் நன்றாகவே தெரிகிறது. பாராட்டுக்கள்.

பிரியன்
22-12-2004, 04:34 PM
Originally posted by பாரதி@Dec 22 2004, 08:47 PM
நன்றாக இருக்கிறது பிரியன். எனக்கு சிறு வயதிலிருந்தே நிறைவேறாத ஒரு ஆசை.. எனக்கு ஒரு தங்கை இல்லை என்பதுதான்... உங்கள் பிரியம் நன்றாகவே தெரிகிறது. பாராட்டுக்கள்.
நன்றி பாரதி.....
உறவுகளை கவிதையாக தொகுப்பாக சொல்ல வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் கனவு....
தமிழ்மன்றத்தில் அதற்கான விதையை விதைத்துள்ளேன்.......

ஓவியன்
01-10-2007, 06:37 PM
பாரதி அண்ணா போலவே எனக்கும் நிறைவேறா ஆசையாகி போன ஓர் விடயம் இங்கே கவி வரிகளாக.....
என்னுடன் கூடப் படித்தவர்களெல்லாம் தங்கைகளுக்காக பார்த்து பார்த்து பொருட்கள் வாங்கிச் சென்று அவர் தம் தங்கைகளின் மனதைக் குளிர்விக்கையில் என் மனம் ஏங்கும், அடடா வாழ்விலே நான் தொலைத்து விட்ட சந்தோசம் இதுவல்லவா என்று....

ஆனால் இன்று மன்றத்தின் துணையில் பல தங்கைகள், ஒவ்வொருவரும் அண்ணா, அண்ணா எனும் போது இனம் புரியா ஒரு மகிழ்ச்சி உச்சந்தலையிலிருந்து உள்ளம் கால் வரை ஓடுகிறது. அவர்களை காலம் இந்த மன்றத்தினூடாக எனக்குப் பரிசளித்துள்ளது.


வருந்தாமல் பிரிந்திருக்க பழகி
கொள்கிறே‎ன் - அதற்காய்த்தானே
இந்த பாலைக்கு வந்தே‎ன்

எதிர்காலத்தில் தங்கையைப் பிரிந்திருக்க, இன்றே பழக பாலை வந்தேன் என்ற வரிகள் உணர்ச்சிக் குவியல்.....

அசத்தல் வரிகள் பிரியன், மீள உங்கள் உணர்ச்சி வரிகள் இந்த மன்றத்திலே உலா வர வேண்டுமென்பது என் ஆவல்...

என் ஆவல் நிறைவேறுமா......????

பூமகள்
01-10-2007, 06:52 PM
என் மனம் கனக்க கண்கள் பனிக்க பதிவிடுகிறேன்...ப்ரியன் அண்ணாவின் கவி படித்ததும். எனது பழைய நினைவுகளை தட்டி எழுப்பி அண்ணாவுக்காய் ஏங்க வைத்தது. அனைத்து வரிகளும் ஆழமாய்ச் சென்று பொருந்தி நிற்கிறது நிதர்சனத்திலும் எனக்கு..!!

அண்ணாவென்று அழைத்தும் கேட்கா தூரம்
அலைபேசியில் அழைப்பு வழி கேட்கிறது
இன்று பாசத்தின் வலி...!!
தவித்து வாடும் தங்கைக்காய்
மன்றம் தந்த பாச அண்ணாக்கள்..!!

தங்கையென்று செல்லமாய் குட்டும் அண்ணன்
செல்லுலாய்டு உலகில் எனினும் - என்
செல்கள் எல்லாம் சிலிர்ப்பூட்டும்
மன்றம் தந்த சொந்தத்தாலே...!!

ஏங்கவைத்து விம்ம வைத்து அழவைத்த நல்ல கவி...!!

மீண்டும் பிறக்க வரம் வேண்டும். மன்றத்து பாசமிகு அண்ணாக்கள் அனைவருக்கும் தங்கையாய் பிறக்க வேண்டும்.
பாராட்டுக்கள் ப்ரியன் அண்ணா.
இந்தக் கவியை வைரச்சுரங்கத்தில் துலாவி மேல் கொண்டு வந்த பாசச்செம்மல் ஓவியன் அண்ணாவுக்கு இந்த தங்கை நன்றிகளோடு தலை வணங்குகிறாள்.:icon_03:

கண்ணீருடன்,

ஓவியன்
01-10-2007, 07:04 PM
அண்ணாவென்று அழைத்தும் கேட்கா தூரம்
அலைபேசியில் அழைப்பு வழி கேட்கிறது
இன்று பாசத்தின் வலி...!!
தவித்து வாடும் தங்கைக்காய்
மன்றம் தந்த பாச அண்ணாக்கள்..!!

தங்கையென்று செல்லமாய் குட்டும் அண்ணன்
செல்லுலாய்டு உலகில் எனினும் - என்
செல்கள் எல்லாம் சிலிர்ப்பூட்டும்
மன்றம் தந்த சொந்தத்தாலே...!!


இரசித்தேன், வியந்தேன், பூரித்தேன்....
அர்த்தமிகு அழகு வரிகளுக்கு நன்றிகள் பல தங்கையே....

பூமகள்
01-10-2007, 07:11 PM
மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா.
மனத்தில் பட்டதை அப்படியே கொட்டிவிட்டேன்.. தாங்கள் ரசித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

சிவா.ஜி
03-10-2007, 06:08 AM
பிரியனின் பாச உணர்வுடன் கூடிய கவிதை கண்நிறைத்துவிட்டது.தங்கை என்ற உறவு எத்தனை அழகானது என்பதை அனுபவித்தவருக்கு தெரியும்.அதனைப் பிரிந்து வந்ததால் ஏற்பட்ட துயரம் வரிகளில் தெரிகிறது.
ஓவியன் சொன்னதைப்போல தங்கையில்லாத எங்களுக்கு இந்த மன்றம் தந்த பாசத்தங்கைகளை..வராது வந்த வரமாய்க் கருதுகிறோம்.
தங்கை பூமகளின் வரிகள் அசத்தி, மனதை அசைத்துவிட்டது.பாராட்டுக்கள் தங்கையே.