PDA

View Full Version : யாரைப் பாராட்ட வேண்டும்?



இளசு
14-12-2004, 07:28 PM
யாரைப் பாராட்ட வேண்டும்?

கவிஞர் அழ.வள்ளியப்பா கவிதையில் மட்டுமல்ல-கதை சொல்வதிலும் வல்லவர்.

அவர் கவிதையிலும் கதை வரும். ஒரு பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வழங்கிவிட்டுச் சொன்ன கதை?

யாரைப் பாராட்ட வேண்டும்?

பரிசு பெற்றவர்களையா?

போட்டியில் பங்கு கொண்டவர்களையா?

யாரை?

அவர் சொன்ன இந்தக் கதையில் தெரியும்.

ஒரு திருடன் தெருவில் ஒரு கழைக்கூத்தாடியைப் பார்க்கிறான். ஒரு சிறுவன் சிறிய சிறிய வளையங்களிலெல்லாம் புகுந்து வருகிறான்.

மேலும் பல நிகழ்ச்சிகள்-

முடிவில் கழைக் கூத்தாடிக்கு கிடைப்பது ஒரு சில ரூபாய்களே. திருடன் கழைக்கூத்தாடியிடம் பேரம் பேசுகிறான். பையனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போக ஒரு பொருந்தொகை கொடுக்கிறான்.

பையனுக்குச் சுகவாசம்... பலமான சாப்பாடு.. தூக்கம்... ஒரு நாள் திருடன் பையனைத் தன்னுடன் அழைக்கிறான். பின்னிரவு... ஒரே இருட்டு ஒரு பணக்கார வீடு... திருடன் கன்னக்கோல் வைத்து சுவரில் ஓட்டை போடுகிறான். பையனை ஓட்டை வழியாக உள்ளே போய்க் கதவைத் திறந்துவிடச் சொல்லுகிறான்.

பையன் தயங்குகிறான்

"ஓட்டையைப் பெரிதாகப் போடட்டுமா?'

"வேண்டாம்'

"பிறகு என்னதான் வேண்டும்?'

"கொட்ட ஒரு மேளம்... கைதட்டிச் சீட்டியடிக்க பத்து சிறுவர்கள்...'

"ஐயய்யோ! அதெல்லாம் முடியாது, ஆபத்து'

பையனே கையைத் தட்டி, விசிலடித்து, டும் டும் டும் என்று கத்தி உய் என்ற இரைச்சலுடன் வீட்டுள்ளே குதித்தான்.

விளைவு?

போட்டியில் பரிசு பெற்றவர், பங்கு பெற்றவர் மட்டுமல்ல பார்த்து உற்சாகம் ஊட்டியவர்களும் பாராட்டுக்குரியவர்களே என்றார் கவிஞர்.

நன்றி - திசைகள் இதழில் ஆர்.பி.சாரதி அவர்கள்

பாரதி
15-12-2004, 08:30 AM
இவ்வளவு சிறப்பான செய்தியை உள்ளடக்கிய கதையை நாங்களும் அறியத்தந்த அண்ணனுக்கு நன்றி.

Iniyan
17-12-2004, 06:00 PM
எல்லோரிடத்தும் நல்லது கண்டு பாராட்டும் சீராண்மை உண்மையிலேயே பேராண்மை.

அறிஞர்
25-01-2005, 08:10 AM
நல்ல உபயோகமாக தகவல்...

நம் மன்றத்தில் படைப்பாளிகளுடன்... பாராட்டுபவர்களும்.. மதிப்பிற்குரியவர்களே

babu4780
25-01-2005, 01:18 PM
உண்மையில் , 'cheer louders' கும் வெற்றியில் பங்கு உள்ளதை நல்ல கதை மூலம் விளக்கினீர்கள்..

மிக்க நன்றி
-பெரி.

karikaalan
29-01-2005, 09:35 AM
அதனாலதானோ, கதாகாலட்சேபம் செய்பவர் சொல்கிறார்: "இந்தப் புராணத்தைக் கேட்டவர்கள், கேட்க வைத்தவர்கள், சொன்னவர், அனைவருக்கும் புண்ணியம்".

===கரிகாலன்

pgk53
12-03-2005, 12:47 AM
சிந்தனையைத் தூண்டும் அருமையான நிகழ்ச்சி....அருமையான கதை.
நன்றி இளசு அவர்களே....

mythili
21-03-2005, 04:52 AM
வித்தியாசமான கதை. நன்றாக இருந்தது.

நன்றி இளசு அண்ணா

அன்புடன்,
மைத்து

puppy
07-04-2005, 06:30 AM
உண்மை தான்...அதனால் தான் மேலை நாடுகளில் "cheer leaders" என்று ஒரு தனி குழுவே வைத்து கொள்கிறார்க்ள்.....

இங்கு இந்த கதையை சொன்ன இளசும் பாராட்ட பட வேண்டியவரே......

kavitha
11-04-2005, 02:44 AM
நல்ல கதை சொன்ன அண்ணாவிற்கு நன்றிகள். அண்ணாவைப்பற்றி ஏதும் தகவல் தெரிந்ததா பப்பி? எப்போது மன்றம் வருவார்கள்?