PDA

View Full Version : ஸ்ட்ரோக் இட் - இலவச மென்பொருள்



பாரதி
14-12-2004, 04:53 PM
அன்பு நண்பர்களே...

ஸ்ட்ரோக் இட் (StokeIt) என்கிற இந்த இலவச மென்பொருளின் மூலம் mouse-ஐ கொண்டே சில குறிகளை வரைவதன் மூலம் 80 வகையான கட்டளைகளை நாம் பிறப்பிக்கலாம். அதன் மூலம் எக்ஸ்புளோரர், விண் ஜிப் போன்றவற்றை இயக்கலாம். உபயோகிக்க மிக எளிதாக உள்ளது.

தேவைப்படுபவர்கள் http://www.tcbmi.com/strokeit/downloads.shtml என்கிற சுட்டியில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். இந்த மென்பொருள் தனி நபர் பயன்பாட்டுக்கு மட்டுமே இலவசம் என்பதை அறியவும். உதவிக்கு சில படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பெரிதாக்கி காண படங்களை "கிளிக்" செய்யவும்.

aren
17-12-2004, 01:05 AM
செய்திக்கு நன்றி பாரதி அவர்களே. நம் மன்ற உறுப்பினர்களுக்கு நிச்சயம் இது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மன்மதன்
02-01-2005, 08:26 AM
முயற்சி செய்து பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன் பாரதி..
அன்புடன்
மன்மதன்