PDA

View Full Version : இசைப்பேரரசி எம்.எஸ். அம்மா அவர்கள்



இளசு
12-12-2004, 05:25 AM
இசைப்பேரரசி எம்.எஸ். அம்மா அவர்கள்


பாரதரத்னா, இசைப்பேரரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள்
நேற்று (டிசம்பர் 11) இரவு 11.40 மணி அளவில் சென்னையில்
உட; நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

1916 செப்டம்பர் 16ல் மதுரையில் பிறந்து ஐநா -அகில உலகம் எல்லாம் இசையால் வசப்படுத்திய அம்மா நினைவுகளில் கண்கள் பனிக்கின்றன.

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா

பாரதி
12-12-2004, 06:12 AM
மறைந்த இசைக்குயில் திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

thiruarul
12-12-2004, 07:09 AM
பிறப்பெடுக்கும் எல்லா உயிர்க்கும் பொது விதி மரணம் ஆயினும் சிலரது மறைவு ஈடுசெய்யவியலா வெற்றிடத்தை உருவாக்கிவிடும்.அவ்வகையில் தமிழ் இசையுலகில் ஏற்பட்ட இவ்வெற்றிடத்தை நிரப்பவல்லார் யாருமிலர்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைவதாக!

பரஞ்சோதி
12-12-2004, 07:59 AM
அன்னை சுப்புலட்சுமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இசை உலகில் ஒரு சகாப்தம் முடிவு பெற்றுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

rajeshkrv
13-12-2004, 07:23 AM
இசைப்பேரரசி - திருமதி எம்.எஸ் அம்மாவின் மறைவு இசைக்கு பேரிழப்பு
அவர் மறைந்தாலும் இசையுலகிற்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிடமுடியாதது.

அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்

அவரது பாடலான எங்கும் நிறைந்த - மீரா திரைப்படத்தில் ஒலித்த பாடலை கேட்டு மகிழுங்கள்

http://us.f1f.yahoofs.com/bc/4576891b/bc/M...fbRVvBBOKHynQUq (http://us.f1f.yahoofs.com/bc/4576891b/bc/My+Folder/09-Meera-EngumNiraindhaaye.rm?bfbRVvBBOKHynQUq)

தஞ்சை தமிழன்
14-12-2004, 04:29 AM
உலகம் உறக்கத்திலிருந்து எழும் ஒவ்வொரு நாளும் ஒருசில வீடுகளிளாவது இவரது குரல் ஒலிக்கும்

அவரது இசை வல்லமைக்கு கிடைத்த பரிசு அது.

அவரது இழப்பு இசை உலகம் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவருக்கும் வருத்தமளிக்க கூடியது.

அவருக்கு எனது அஞ்சலி.

Mano.G.
14-12-2004, 04:53 AM
ஈடுகட்ட முடியாத இழப்பு
தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு, ஆசியர்களுக்கு, உலகுக்கு
இசை உலகுக்கு.


அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய தொலைகாட்சியில்
அவர்களின் இசைகச்சேரியை ஒளிபரப்பினார்கள்.

அதில் எம்.எஸ். அம்மாவின் திறமையை ஆற்றலை அந்த வயதிலும் காணமுடிந்தது.

மனோ.ஜி

manitha
14-12-2004, 06:06 AM
எம் எஸ் சுப்புலட்சுமி அம்மா அவர்கள்
நம்மை விட்டு பிரிந்தாலும்
அவரின் இசை
இன்றும்
என்றும்
காலையில் நம்மை
துயிலெலுப்பும் என்பதில் சிறிதும்
ஐயமில்லை.

gankrish
16-12-2004, 06:14 AM
இசை உலகுக்கு இது ஒரு பேரிழப்பு. தஞ்சை கூறியது போல் ஒவ்வொரு நாளும் இவர் குரல் ஒலிக்காத வீடுகளே இருக்காது.

நம் ஜனாதிபதி வந்து அஞ்சலி செலுத்தியது நிச்சயம் பாராட்டுக்குறியது. அதை விட அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது அவரின் புகழுக்கு ஒரு அஞ்சலி.

விகடன்
10-06-2008, 05:37 PM
"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா"

என்ற பாடலை பாடியவர் எம்.எஸ். அம்மா அவர்களா?
பாடலை மிகவும் இரசிப்பேன். கேற்கையிலேயே குறைகள் எல்லாம் கழைந்து விடக்கூடிய வரிகளும் இராகமும்.

இஅயற்கை எய்தி மூன்றரை வருடங்கள் ஆகப்போகின்றன. இன்றுதான் அந்தப் பாடலிற்கான சொந்தக்காரியை அறிந்தேன்.

அவரின் ஆத்ம சந்திக்காக பிரார்த்திப்போமாக..

சிவா.ஜி
10-06-2008, 05:42 PM
"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா"

என்ற பாடலை பாடியவர் எம்.எஸ். அம்மா அவர்களா?
பாடலை மிகவும் இரசிப்பேன். கேற்கையிலேயே குறைகள் எல்லாம் கழைந்து விடக்கூடிய வரிகளும் இராகமும்.

இஅயற்கை எய்தி மூன்றரை வருடங்கள் ஆகப்போகின்றன. இன்றுதான் அந்தப் பாடலிற்கான சொந்தக்காரியை அறிந்தேன்.

அவரின் ஆத்ம சந்திக்காக பிரார்த்திப்போமாக..

குறை ஒன்றா விராடரே........................????