PDA

View Full Version : கேட்டதும், கேட்பதும்



gans5001
08-12-2004, 01:58 PM
அவளிடம்
அன்று கேட்டேன்
இளமையின் துடிப்பில்
அவள் மடி..!

இன்று கேட்கிறேன்
என் சொந்த சோகங்களில்
சாய்ந்து கொள்ள
அவள் தோள்கள்..!

நாளையும் கேட்பேன்
என் கல்லறைக்கு
ஒரு சின்ன ரோஜாவும் ஒரு சொட்டு கண்ணீரும்...!

பிரியன்
08-12-2004, 03:08 PM
அழகான ஆனால் ஆழமான வரிகள்...

தாய் தாரம் காதலி முப்பரிமாணம் பெண்ணுக்கு ...

அதை அழகாய் உணர்த்திய விதம் கவிதையின் தரத்தை உயர்த்தி செல்கிறது ....

அன்புடன்
பிரியன்

gans5001
08-12-2004, 10:53 PM
நன்றி ப்ரியன்.. நண்பர் இளசுவைப் போல நீங்களும் கவிதையின் உட்பொருளை உடனே படித்து விடுகிறீர்கள் (இளசுவின் விமர்சனத்தில் சிறிது குறும்பும் தெரியும்)

இளசு
11-12-2004, 04:20 PM
ப்ரியனின் விமர்சனம் நச்சென நல்லா இருக்கு.

கன்ஸ்..
முப்பரிமாண - முக்கால கவிதையைப் படித்து உடன் விமர்சனம் எழுத வந்தால்
விமர்சகன் பற்றிய உன் விமர்சனம் படித்து
குப்பென முகம் சிவந்து போய்விட்டேன்.....

எழுத முடியா அளவுக்கு கூச்சத்தில்...இப்போது நான்.

manitha
13-12-2004, 02:26 AM
மிகவும் அருமை......
ஆழமான கருத்துக்கள்.....
மீண்டும் இதே போல் தொடர எமது வாழ்த்துக்கள்.

gans5001
13-12-2004, 11:52 PM
விமர்சகன் பற்றிய உன் விமர்சனம் படித்து
குப்பென முகம் சிவந்து போய்விட்டேன்.....

நமக்கே தெரியாமல் நம்மிடையே ஒரு ரசாயனம் இருக்கிறது நண்பரே

அக்னி
30-05-2007, 09:32 PM
எளிமையான வரிகளில் ஆழமான பெண்ணின் மூன்று நிலைகள்...


நமக்கே தெரியாமல் நம்மிடையே ஒரு ரசாயனம் இருக்கிறது நண்பரே
இதுவும் ஒரு கவிதைபோல்தான் இருக்கிறது...

விகடன்
07-06-2007, 08:43 PM
நெஞ்சை உருக்கும் வரிகள்.
ஏமாற்றப்பட்டும் எதிர்பார்ப்புக்களிற்கு குறைவில்லை.