PDA

View Full Version : முதல் பேச்சு - சிறுகதைமன்மதன்
01-12-2004, 07:33 AM
முதல் பேச்சு - சிறுகதை

பரசுராமன் மனைவி கீதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கொல்லைப்புறத்தில் அடுத்த வீட்டுக்காரரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.. பேப்பரில் மூழ்கியிருந்த பரசுராமன் காதில் அவள் கத்தியது விழுந்தது.

'எப்படிய்யா அதுவா கிணத்திலே விழும்.. உங்க வீட்டு கொல்லைக்கு தவறுதலா வந்தா, எங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே. இல்லேன்னா எடுத்து இங்கே வீசிடவேண்டியதுதானே. கிணத்திலே போட்டு சாகடிச்சிட்டிங்களே..'

பரசுராமன் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டுத்தெரிந்து கொண்டான். அவர்கள் வளர்ந்த கோழிகளில் ஒன்று சுவரை தாண்டி பக்கத்து வீட்டில் போனதால் கொன்று விட்டார்களாம். மனைவியின் கோபத்தில் பரசுராமனுக்கு நாடி புடைத்தது.. இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் . இன்று இரவு அவர்கள் கோழிப்பண்ணையை நாசம் பண்ணிட வேண்டியதுதான்..

இரவு பரசுராமன் வீட்டிற்கு வெளியே ஜீப் ஹாரன் கேட்டது. பரசுராமனின் கோஷ்டிகள் வந்தாச்சு..அவசரமாக கிளம்பிய பரசுராமனின் காலுக்கடியில் இரண்டு கோழிக்குஞ்சுகள் பயந்த படி ஒதுங்கின.

அவன் மனைவி வந்து 'அதுவா.. பக்கத்து வீட்டுக்காரங்க கொடுத்தது. நம்ம கோழி தவறுதலாதான் செத்து விட்டதாம். அவங்க மேல எந்த குத்தமும் இல்லையாம். இருந்தாலும் அவங்க இந்த கோழிக்குஞ்சுகளை நம்மிடம் பதிலுக்கு கொடுத்தாங்க.. ரொம்ப நல்லவங்க இல்லீங்க...'

அடிப்பாவி , உன் பேச்சை கேட்டு பெரிய பாவம் பண்ண இருந்தேனே.. இனி மனைவியின் முதல் பேச்சை காது கொடுத்து கேட்கவே கூடாது என்று மனதுக்குள் சொல்லியபடி ஜீப்பை திருப்பி அனுப்பினான்..
-
மன்மதன்

இளசு
01-12-2004, 10:21 PM
ம்ம்ம்ம்..
எது சொன்னாலும் நம்பிடறதும் தப்பு..
எதையுமே நம்பமாட்டேன்னு நின்னாலும் தப்பு..

அந்தந்த சமயத்துக்கு நிதானிச்சு ஆராய்ஞ்சி செய்யணும்னு பரஸ்ஸக்கிட்ட சொல்லுங்க மன்மதன்..


(ஊருக்குப் போகும் முன் ஒரு பக்கக்கதைகள் ஒன்றுக்கு இரண்டாக தந்தமைக்கு நன்றியும் பாராட்டும் மன்மதன்..

பயணம் இனிமையாகவும், நோக்கம் வெற்றியாகவும் அமைய
அண்ணனின் வாழ்த்துகள்)

gragavan
02-12-2004, 03:46 AM
மம்முதா! நல்லாருக்கு இது. இன்னும் இன்னும்.

அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
02-12-2004, 06:42 AM
நச்சென்று முடிந்த கதை. கலக்கு நண்பா.

manitha
02-12-2004, 08:00 AM
வடிவேலு சொல்வது போல்....
என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு....
அவ ஏதோ சொன்னாளாம் இவரு ஏதோ கிளம்பிட்டாராம்....

கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை நண்பரே,,,,,,,,

pradeepkt
02-12-2004, 10:19 AM
சின்னஞ்சிறு கதையின் இலக்கணம் தழுவி ஒரு நல்முயற்சி.
தொடருங்க... மம்முதரே!

அன்புடன்,
பிரதீப்

அமரன்
24-05-2008, 02:35 PM
கிராமப் புறங்களின் சகச நிகழ்வு. சாகச நிகழ்வென்றும் சொல்லலாம்..

எங்க உறவினர் ஒருவரின் மனைவி, அவுங்க அயல்வீட்டுக்காரருடன் அடிக்கடி பேச்சுப்படுவாங்க. உறவினரோ, மனைவியை ஆதரித்தோ எதிர்த்தோ எதுவுமே பேசமாட்டார். யாரோ இருவர் பேச்சுச் சண்டையில் எனக்கென்ன வேலை என்பது போல அமைதியாக இருப்பார். கேட்டால், இப்போ சண்டை போடுறாங்க.. அடுத்த நிமிஷம் சமரசமாகிடுவாங்க. என் எனர்ஜியை ஏன் வீணாக்கனும்பாரு.

சில வீடுகளில் தலைகீழ் நிலைமை.. கணவன் சண்டை போடுவார்.. இந்தாளுக்கு வேற வேலை கிடையாதுன்னு மனைவி ஒதுங்கி இருப்பார்..

சில சர்ச்சரவுகளில் தலையிடாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். நல்ல கதைக்கு நன்றி மன்மதரே.

Keelai Naadaan
24-05-2008, 05:41 PM
இரண்டு மூன்று வரியாக, ஆறே ஆறு பத்தி. அதுக்குள்ளயே சொல்ல வேண்டியதை, சொல்ல நினைத்ததை சொல்லிட்டிங்க.
நன்றிகள்