PDA

View Full Version : வார்த்தைகள்..



rambal
14-04-2003, 06:04 PM
* மலை முகடுகளுக்கு
முக்காடு போட்ட மேகமாய்
உன் தாவணி...

* இப்படி நான் உன் தாவணி பற்றி
சிலாகித்து சொன்னபொழுது
நீ சொன்ன வார்த்தைகள்
"ச்சீ பொறுக்கி"

* நீ ஒரு குறுந்தொகை...
ஆனால்,
உன் தங்கையோ
ரெட்டை ஜடை ஆசிரிய விருத்தம்
என உன் தங்கை அழகை புகழ்கையில்
நீ சொன்ன வார்த்தைகள்
"நாயே அடி வாங்குவே"

* நீ என்ன complan girl ஆ?
என்று
சிக்கான ஒரு உடையில் நீ வந்த பொழுது
நான் கேட்டதற்கு
நீ சொன்ன வார்த்தைகள்
"நீ ரொம்ப மோசம்டா"

* இப்படி எவ்வளவோ
வார்த்தைகள்
இருக்கையில்
என்னால் இன்றும்
ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகள்
" நீயாவது நல்லா இரு"

இளசு
14-04-2003, 09:41 PM
நல்ல கவிதை ராம்
இதன் தொடர்ச்சியா ஒரு புலம்பல் :
"நீயாவது நல்லா இரு..."..
ஏன், அவள் நல்லா இருக்கப் போவதில்லையாமா...????
தெரிந்தே தவறான துணையிடம் போகிறாளா...???
உன்னிடம் மட்டுமே கிடைத்திருக்கக்கூடிய சிறப்பான வாழ்வை இழக்கிறேனே
என்ற கழிவிரக்கமா...????
என்னை விடவும் நல்ல துணை கிடைக்கட்டும் என்ற ஆதங்கம் கலந்த
ஆசிர்வாதமா..???
நான் எக்கேடோ கெட்டுப்போறேன்; நீயாவது நல்லாயிரு என்று
உன் குற்ற உணர்வைத் தூண்டி உன் எதிர்கால மகிழ்சிக்கு இப்போதே
அவள் வைத்த வெடிகுண்டா....???

அடடா.. முக்கியமான நேரத்தில் வெறும் மூன்று வார்த்தைகள் மட்டும்
சொல்லிவிட்டு அவளுக போக,
முப்பது வருஷம் முக்கி முக்கி யோசித்து நம்ம மண்டை காய....

என்னங்கடா ... இந்த காதல் தரும் வேதனை..!!!!!!

gankrish
15-04-2003, 05:36 AM
ராம் / இளசு அப்படி போடுங்க அருவாள....

kavitha
31-03-2004, 02:47 AM
என்ன ராம்பால் சார், திட்டின போது ஏற்றுக்கொள்ள முடிந்தது. வாழ்த்தும்போது ஏற்றுக்கொள்ள முடியலையா?
இளசு அண்ணாவின் ஆதங்கம் படு ஜோர்!

மற்றவர்களும் படித்து ரசிக்கட்டுமே!

மூர்த்தி
31-03-2004, 04:13 AM
ராம்பால் அவர்களின் கற்பனையா சொந்த அனுபவமா?சூப்பர் சார்.