PDA

View Full Version : சரியா தப்பா.......!!!!!



mania
23-11-2004, 05:16 AM
அறிஞர் ஒரு முக்கியமான தேர்வுக்கு செல்கிறார். மொத்தம் 150 கேள்விகள்....சரியா தவறா என்று சொன்னால் போதும்.....தேர்வு ஆரம்பம் ஆகிறது......

எல்லா கேள்விகளுக்கும் இரண்டுமே பொருந்துகிற மாதிரி இருக்கிறது அறிஞருக்கு.... :Nixe_nixe02b:
தலை சுற்ற ஆரம்பித்தது....... :icon_wacko:
மற்ரவர்களெல்லாம் மட மடவென்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..... :food-smiley-022: நேரமோ ஆகிக்கொண்டிருந்தது...... :icon_hmm::icon_hmm::icon_hmm: பார்த்தார் அறிஞர்........ :spudnikbackflip: .பையிலிருந்து ஒரு காசை எடுத்தார் மட மடவெண்ரு சுண்டினார்...... :food-smiley-002: ஆமாம் தலையென்றால் சரி....பூவென்றால் தவறு...... 30 நிமிடத்தில் எல்லாம் முடித்துவிட்டார். :thumbsup: மீதி பேர் எல்லாம் இன்னும் எழுதிக்கொண்டிருந்ததால் ஒருவருக்கும் சந்தேகம் வரக்கூடதென்று பொறுமையாக அமர்ந்திருந்தார்.
முடியும் சமயம் பார்த்தால் எல்லோரும் எழுதியதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக்கொண்டிருந்தனர்.....
பார்த்தார் அறிஞர்...... மீண்டும் அந்த காசை எடுத்து வேகமாக சுண்ட ஆரம்பித்து விட்டார். :icon_rollout::icon_rollout::icon_rollout: அதிகாரி பார்த்துவிட்டார். "என்னப்பா பண்ணுகிறாய் இங்கே... :icon_hmm::innocent0002: "..என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். அறிஞர் "எல்லாம் எழுதிவிட்டேன் சார்...... சரியாயிருக்கா என்று ரிவைஸ் பண்ணிக்கொண்டிருக்கிறேன் "என்று சொன்னாரே பார்க்கலாம்..... :medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002: .

அன்புடன்
மணியா.....

மன்மதன்
23-11-2004, 05:36 AM
ஆஹா.. கிளம்பிட்டாரய்யா.. பேப்பரை திருத்தும் போது கூட சுண்டி பார்த்துதான் திருத்தணும் போல.. :D:D:D
அன்புடன்
மன்மதன்

gragavan
23-11-2004, 05:40 AM
மணியா! பிரமாதம் போங்கள். இப்பிடிப் போட்டுத் தாக்குறீங்க. அறிஞர நினைச்சா பாவமா இருக்கு.

அன்புடன்,
கோ.இராகவன்

விதியின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

habib
23-11-2004, 07:13 AM
இதுக்காக தான் நிறைய பேறு எப்பவும் பாக்கெட்டுல சில்லரை காசு வச்சுருக்காங்க போல இருக்கு.

அறிஞர்
25-11-2004, 02:23 AM
ஹி ஹி.. சோக்கு நல்லாதான் இருக்கு..........

இதுக்குதான்.. சில்லறையை.... வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை

அமரன்
02-10-2007, 02:00 PM
அட படிக்கும்போது இந்த ஐடியா வரலையே..
சரி விடுங்க அதற்கும் அற்வு வேணுமில்லையா.

ஜெயாஸ்தா
02-10-2007, 02:07 PM
ஐயோ... நான் தேர்வு எழுதும் போது இது மாதிரி ஐடியா வராமல் போச்சே...! 2004-லியே மன்றத்தில் சேர்ந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கலாம். ஆமாம் மணியா அறிஞர் மேல் என் கோபம் உங்களுக்கு? ஏதேனும் 'ப்ளாஷ்பேக்' இருந்தால் சொல்லுங்கள்...!

அன்புரசிகன்
02-10-2007, 02:21 PM
இதெல்லாம் ஓல்டு பஷன். நம்ம ஓவியர் பரீட்ச்சைக்கு கொஞ்ச எறும்புகள் எடுத்துச்செல்வாராம். (எறும்பு நிற்கும் இடத்தில் உள்ளது தான் விடையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்) :D

அமரன்
02-10-2007, 02:24 PM
இதெல்லாம் ஓல்டு பஷன். நம்ம ஓவியர் பரீட்ச்சைக்கு கொஞ்ச எறும்புகள் எடுத்துச்செல்வாராம். (எறும்பு நிற்கும் இடத்தில் உள்ளது தான் விடையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்) :D

அப்போ பக்கத்தில இருந்து எறும்பு பிரேக் அடிக்க சக்கரை தூவியது யாருங்க?:lachen001:

ஜெயாஸ்தா
02-10-2007, 02:25 PM
இதெல்லாம் ஓல்டு பஷன். நம்ம ஓவியர் பரீட்ச்சைக்கு கொஞ்ச எறும்புகள் எடுத்துச்செல்வாராம். (எறும்பு நிற்கும் இடத்தில் உள்ளது தான் விடையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்) :D

ஆஹா.. இது அதைவிட சூப்பர் ஐடியாக இருக்கே.... பேசாமல் இது மாதிரி ஐடியாக்களுக்காக தனியாக ஒரு திரி ஆரம்பித்துவிடலாமே...! (இதிலிருந்து இன்னொன்றையும் தெரிந்து கொண்டேன் மன்றத்தார் யாரும் படித்து பாஸ் ஆன மாதிரி தெரியவில்லை.)

அமரன்
02-10-2007, 02:27 PM
(இதிலிருந்து இன்னொன்றையும் தெரிந்து கொண்டேன் மன்றத்தார் யாரும் படித்து பாஸ் ஆன மாதிரி தெரியவில்லை.)
பாஸ் ஆவதற்கு அடிக்கத்தெரிந்தால் போதும்

மனோஜ்
06-10-2007, 07:27 PM
ஓ அறிஞர் இவ்வளவு ஞானியா சூப்பர் மணியா அண்ணா

aren
07-10-2007, 02:19 AM
எல்லாம் நல்லா விவரமாகத்தான் இருக்கிறீர்கள்.

ஓவியர் இப்படி செஞ்சுதான் பாஸ் செய்தாரா?

ஓவியன்
07-10-2007, 03:00 AM
ஆமாம் மணியா அறிஞர் மேல் என் கோபம் உங்களுக்கு? ஏதேனும் 'ப்ளாஷ்பேக்' இருந்தால் சொல்லுங்கள்...!

ஹா,ஹா!!!

ஏனில்லாமல் நேரம் கிடைக்கும் போது இந்த திரியைக் கிளறிப் பாருங்கள்....!!! :)

ஐய்வரணி அட்டகாசம்-அரட்டை கச்சேரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6796)

ஓவியன்
07-10-2007, 03:04 AM
இதெல்லாம் ஓல்டு பஷன். நம்ம ஓவியர் பரீட்ச்சைக்கு கொஞ்ச எறும்புகள் எடுத்துச்செல்வாராம். (எறும்பு நிற்கும் இடத்தில் உள்ளது தான் விடையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்) :D

ஹீ,ஹீ!!!

நம்ம அன்புக்கு தலையிலே ஏன் முடி இல்லே தெரியுமா...???
பல் தெரிவு வினாக்கள் பரிட்சையில் வந்தால் தலையில் கைவைத்து முடியை இழுப்பார்,
அதில் ஒரு முடி வந்தால் முதலாவது விடை....:D
இரண்டு முடிவந்தால் இரண்டாவது விடை....:D
மூன்று வந்தால் மூன்றாவது விடை.....:D
நான்கு முடிவந்தால் நான்காவது விடை.... :D

முடிவராவிட்டால் விடை எழுவே மாட்டாராம்...........!!!! :lachen001:

ஓவியன்
07-10-2007, 03:09 AM
ஆமாம் தலையென்றால் சரி....பூவென்றால் தவறு...... 30 நிமிடத்தில் எல்லாம் ....

ஹீ,ஹீ!!!!

அதென்ன தலை என்றால் சரி...!
பூ என்றால் தப்பு...........???

மணியா அண்ணா இது சரியில்லை, பூ அண்ணா மீண்டும் மன்றத்துக்கு வரட்டும் நான் அவருடன் சேர்ந்து இதுக்கு நியாயம் கேட்பேன்...........!!! :)

ஓவியன்
07-10-2007, 03:10 AM
எல்லாம் நல்லா விவரமாகத்தான் இருக்கிறீர்கள்.

ஓவியர் இப்படி செஞ்சுதான் பாஸ் செய்தாரா?

ஆமா, நீங்க எப்படி பாஸ் செய்தீங்க.........???? :)

aren
07-10-2007, 03:13 AM
ஆமா, நீங்க எப்படி பாஸ் செய்தீங்க.........???? :)

நாமெல்லாம் ஆல் பாஸ் போட்டதால் பாஸான அப்பாவிகள்.

ஓவியன்
07-10-2007, 03:35 AM
நாமெல்லாம் ஆல் பாஸ் போட்டதால் பாஸான அப்பாவிகள்.

உங்க வகுப்புக்கு ஆல் பாஸ் போட்டாங்களா........??, இல்லை பக்கத்து வகுப்புக்கு.............??? :lachen001:

rajaji
07-10-2007, 01:42 PM
நண்பர் மானியாவின் நகைச்சுவைத் துணுக்கு பிரமாதம்....

அத்தோடு நண்பர்களின் கடி பதில்களும் சூப்பர்...
(ஓவியரே எப்படி இப்படி வாருகிறீர்கள்)