PDA

View Full Version : 1965 சனவரி 26-ல் நடந்ததென்ன?



tamilan
23-11-2004, 12:46 AM
2.4 மாணவர் போராட்டம்: சனவரி 26

சிதம்பரம் நகரிளுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக (Annamalai University) மாணவர்கள் 1965 சனவரி 26-ம் நாளில் இந்தி திணிப்பையெதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். இந்தியெதிர்ப்பு முழக்கங்கள் எழுதப்பட்ட பெரிய அட்டைகளும், கொடிகளும் ஏந்தி, இந்தியெதிர்ப்பு முழக்கங்களை ஒலித்தபடி மாணவர்கள் பல்கலைக்கழக விளாகத்திலிருந்து ஊர்வலம் தொடங்கினர். தாரை தப்பட்டைகள் முழக்கினர். சங்கூதினர். ஊர்வலம் எந்தவொரு வன்முறையுமின்றித் தொடங்கியது. ஆனால், காவல்துறையினர் (police) ஊர்வலம் சிதம்பரம் நகருக்குள் போகலாகாதென்று கூறி ஊர்வலத்தைத் தடுத்தனர். மாணவர்கள் அதற்கிணங்காமல் தொடர்ந்து அமைதியாக முன்னேறினர். காவலர்கள் (police) ஊர்வலத்தைக் கலைக்குமாற்றான் துமுக்கியால் (துப்பாக்கியால்) ஊர்வலத்தை நோக்கிச் சுட்டார்கள். காவலர்கள் கண்ணீர்ப் புகை வீசி ஊர்வலத்தைக் கலைக்க முயன்றிருக்கலாம். அல்லது இழுவைத் தோட்டாகளைப் பயன்படுத்திச் சுட்டிருக்கலாம். அது யாரையும் கொன்றிருக்காது. (இழுவைத் தோட்டா = இரப்பர் தோட்டா = rubber bullet) ஆனால் மேலதிகாரிகளிடமிருந்து வந்த ஆணைப்படி எக்குத் தோட்டக்களைப் (steel bullets) பயன்படுத்தினார்கள். இராசேந்திரன் என்ற மாணவர் துமுக்கிச் சூடு பட்டு இறந்தார். நெடுமாறன் என்ற மாணவர் படுகாயமடைந்தார்.

karikaalan
26-11-2004, 08:19 AM
இதனைக் கிளறுவதால் என்ன பயன்?

aren
03-12-2004, 07:37 AM
கரிகாலன் அவர்கள் கூறியபடி இந்த விஷயங்கள் இங்கே எதற்கு என்று தெரியவில்லை. இதற்கு ஏதாவது ஆதரவோ அல்லது எதிர்போ வரும் என்று தமிழன் அவர்கள் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது.