PDA

View Full Version : மருத்துவம்: அனைவரும் அறிக! (பகுதி 1)thiruarul
16-11-2004, 05:24 PM
அறிமுகம்

சுகாதாரம் சுகவாழ்விற்கு இன்றியமையாதது. இதை ஒவ்வொருவரும், ஒவ்வொரு சமுதாயத்தவரும் அநுபவிக்க வேண்டிய உமையாகக் கருதலாம். நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன. அதே நேரத்தில் மனிதனும் இவற்றைத் தடுப்பதற்கு வழிவகுக்கிறான்.

இலங்கை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 85 வீதமான நோய்கள் தடுக்கக்கூடியவை. இவை தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் பெருந்தொல்லையைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக வயிற்றோட்டம், சின்னமுத்து, குக்கல், மலோயா, மூளைக்காய்ச்சல், போஷாக்கின்மை, விசர்நாய்க்கடி ஆகியன இன்னும் பல சமுதாயத்தவரைத் தாக்கிய வண்ணமே இருக்கின்றன.

வளர்ச்சியடைந்த நாடுகள் தமது முயற்சிகளினால் அநேகமான நோய்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. தொண்டைக்கரப்பான், இளம்பிள்ளைவாதம், ஏற்புவலி, வயிற்றோட்டம் போன்ற பல நோய்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. விசர்நாய்க்கடி பித்தானியாவில் அவர்களின் முயற்சியால் இல்லாமலே போய்விட்டது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீவிர உழைப்பினால் கொடிநோயான பொயம்மை உலகிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

நாமும் எமது முயற்சியால் அநேகமான நோய்களைக் கட்டுப்படுத்தலாம். முடியுமானால் அகற்றவேண்டும், இதற்கான அடிப்படை முறைகளே ஆரம்ப சுகாதார பராமாப்பு முறைகளாகும். இப்படியான யோசனையில் உருவானது. ~~ அல்மா ஆற்றா சாற்றுதல் (Alma Ata Declaration) 1978 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்களில் சோவியத் ரஷ்யாவில் அல்மா ஆற்றா என்ற நகரத்தில் உலக நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினதும் (WHO) யுனிசெனதும் (UNICEF) ஆதரவில் கூட்டாக எடுத்த நடவடிக்கையின் பலனே இதுவாகும்.

மேற்படி விடயங்களை மனதில் இருத்தி வரையப்பட்ட இக் கட்டுரையின் உதவியினால் யாவரும் ஆரம்பச் சுகாதார பராமாப்பில் ஈடுபடலாம் என்பது எனது நம்பிக்கை. இதில் தேவையான புத்திமதிகள், நோய்களைப் பற்றிய உரைகள், அவற்றைப் பராமாக்கும் முறைகளும் விவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் எப்படிப்பட்ட நோயாளரைச் சுகாதார நிலையத்திற்கு அல்லது மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுவான நோய்கள்
(COMMON ILLNESSES)

இவற்றில் முக்கியமானவை:-

(1) காய்ச்சல் (Fever)

உடலில் சூடு 98`F அல்லது 37`C க்குக் கூடவாக இருந்தால் காய்ச்சல் எனப்படும்.

இதைப் பதிவு செய்வதற்கு வெப்பமானியை வாய்க்குள் (நாவிற்கு கீழே) அல்லது அக்குளில் அல்லது மல வாயில் 1 - 2 நிமிடத்திற்கு வைத்துப் பார்க்கலாம்.

அக்குளில் 2 நிமிடத்திற்காவது வைக்கவேண்டும். அத்துடன் அக்குளில் வெப்பமானி காட்டும் சூடு உடலின் சூட்டில் 1-2 `C அல்லது 1`F குறைவாகத் தான் காட்டும்.

நோயாளிகளுக்கான வெப்பமானி (Clinical Thermometer) பாவிப்பதற்கு முன் இதைக் குளிர்நீல் கழுவித் துடைத்து உடலின் இயல்பான வெப்பநிலைக்கு கீழ் பாதரசம் (Mercury) இருக்கின்றதா என அவதானிக்கவேண்டும். இல்லாவிடில் வெப்பமானியைக் குலுக்கி அதனைக் குறைக்கவேண்டும். பாவித்த பின்னரும் வெப்பமானியைக் குலுக்கி அதனைக் குறைக்கவேண்டும். பாவித்த பின்னரும் வெப்பமானியைக் குளிர்நீல் நன்கு கழுவவேண்டும்.

காய்ச்சல் 38`C அல்லது 100`F அதிகமாக இருந்தால் உடனே ~பரசிற்ற மோல் (Paracetamol Panadol Cetapyrin , Calpol Setamol) கொடுக்கவேண்டும்.

குளிகை (Tablet) அல்லது பாணியாகக் (Syrup) கொடுக்கலாம். 1 தேக்கரண்டி (teaspoon) பாணி அரைக் குளிசைக்குச் சமம்.

இரண்டு வயதிற்கு உட்பட்டால் 1 தேக்கரண்டி பரசிற்றமோல் பாணி ( 4 மணித்தியாலத்திற்கு ஒரு முறை) கொடுக்கவும்.

2 - 5 வயதுவரை 2 தேக்கரண்டி அல்லது அரைக் குளிகை பரசிற்றமோல், 5 வயதிற்குக் கூடினால் 1 குளிகை பரசிற்றமோல், 10 12 திற்கு மேற்பட்டோருக்கு 2 குளிகை வீதம் கொடுக்கலாம்.

இம்மருந்து தேவைப்படின் 4 மணித்தியாலத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.

அத்துடன் இவர்களுக்கு குடிப்பதற்கு மேலதிகமாக நீராகரங்கள் கொடுக்கவேண்டும். இவற்றில் பால்வகைகள், தேநீர், தேசிக்காய்த் தண்ணீர், இளநீர், வடிசாறு (சூப்), கஞ்சி ஆகியவை குடிப்பது நல்லது.

நீனால் உடலைத் தேய்த்து துடைப்பதனாலும் நல்ல முறையில் காய்ச்சலைக் குறைக்கலாம்.

இதற்கு முக்கியமாக நகச் சூடான நீர் தேவை. ஓரு பழைய துவாயை இதில் நனைத்து பிழிந்து உடம்பைத் தேய்த்துத் துடைக்கவேண்டும்.

குளிர்நீரால் துடைத்தால் தோல் குளிருமே தவிர உடல் சூடு குறையாது.

ஆனால் பொலித்தீன் பைகளில் கட்டி முக்கிய பொய குருதிக்குழாய்கள் மீது வைத்தால் இரத்தோட்டம் குளிர்ந்து உடம்பு சூடு குறையும். இம் முக்கிய குருதிக் குழாய்களானவை கழுத்தின் பக்கங்களில் கரோட் (Carotid) , அக்குளில் (Brachial), மேல்தொடையில் ( Femoral) இருக்கின்றன.

தலையிலும், அதிக குருதிக்குழாய்கள் இருப்பதனால் இவ் இரத்தோட்டத்தையும் பனிநீர்ப்பையினால் (Ice Bag) குளிர்ச்சியாக்கலாம்.

காய்ச்சல் தொடர்ந்து 3 நாட்களுக்குமேல் இருக்குமானால் அல்லது காய்ச்சலுடன் மற்றும் நோய்க்குறிகள் தென்படுமானால் சுகாதார நிலையத்திற்கு அல்லது மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும்.

காய்ச்சலுடன் தென்படக்கூடிய சில முக்கிய நோய் அறிகுறிகளாவன:-
வாந்தி, இருமல், தலையிடி, நடுக்கம், வலிப்பு, பருக்கள் (Rash) , சலக்கடுப்பு, வயிற்றோட்டம், கைகால் நோவு.

(2) தடிமன் (Coryza Common Cold)

இது ஒரு வைரசுக் கிருமியால் உண்டாகும் மேல் சுவாசத்தொகுதி (Upper respiratory tract ) நோய்.

இதில் காய்ச்சலுடன் மூக்கும் வடியும். அத்துடன் பசியின்மை, சினந்து கொள்ளல், உடலில் ஆற்றலற்ற நிலையும் ஏற்படும்

இது தானாகவே குணமடையும் நோய் என்பதை மனங்கொள்ளவேண்டும். ஆகவே நோய் அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்து தேவையாகும்.

காய்ச்சலைக் குறைக்க பரசிற்றமோலும், மூக்குவடிதலுக்கு கொதிநீராவியும், உடலாற்றலற்ற நிலைக்குச் சூடான பானங்களும் சூப், பால், தேநீர், மல்லி நீருடன் சீனி சேர்த்துக் கொடுக்கலாம்.

மூச்சடைப்பு ஏற்பட்டால் எபெட்ன் (1% Ephedrine) மூக்குத் துளிகள் (Nasal drops) ஒரு நாளைக்கு 3- 4 முறை போடலாம்.

தடிமனுடன் சில சிக்கல்கள் (complications) ஏற்படலாம். அவையாவன

(அ) காதுக்குத்து:


குழந்தைகளுக்குக் காதுகுத்தைப் பற்றிச் சொல்லத் தொயாது. ஆனால் தொடர்ச்சியாக அழுவர். சிலவேளைகளில் காதைக் காட்டி அழுவார்கள்.

இது காதிற்கும், தொண்டைக்கும் இடையில் ஊத்தேங்கியாவின் குழாய் (Eustachian Tube) அடைப்பினால் ஏற்படுகிறது.

இவ்வடைப்பை எடுப்பதற்கு 1% எபெட்ன் மூக்குத்துளிகள் 3- 4 முறை 2 - 3 நாட்களுக்கு கட்டாயமாகப் பாவிக்கவேண்டும்.

இல்லாவிடில் காதிலிருந்து சில வேளைகளில் சீழ் வடிய நோடும். இது மிகச் சிக்கலானது. சிகிச்சை அளிப்பதும் சிரமம். இதனால் காது கேட்பதும் குறையலாம்.

(ஆ) இருமலும் சத்தியும்

தடிமலுடன் முக்கியமாக குழந்தைகளுக்கு இருமலும் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக அல்லது அதிகமாக இருமினால் சத்தியும் ஏற்படும்.

இதற்கு கொதிநீராவி, சூடான பானங்கள், ( சூப், தேநீர், பால் ) உதவும்.

அத்துடன் புரோமெத்தசீன் (Promethazine Phenergan) அல்லது குளோபெனரமீன் ( Chlor pheniramine Piriton ) அரை தேக்கரண்டி பாணியைக் குழந்தைகளுக்கு 4 - 6 மணித்தியாலத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.

(3) காய்ச்சலுடன்; கூடிய தொண்டை நோ

இவ்வியாதி அநேகமாக வைரசு (Virus) கிருமிகளால் எற்படுகிறது. ஆனால் தொண்டையில் இருக்கும் அடிநாச்சதையை (Tonsils) கிருமிகள் தாக்குவது ஆபத்தானதாகலாம்.

சில சமயத்தில் கிருமிகளை இனங்காணமுடியாது.

கட்டாயமாக வைத்திய ஆலோசனை பெற்று, பென்சலின் (Penicilline) மருந்து ஒரு கிழமைக்கு எடுத்துக் கொடுக்கவேண்டும்.

இதனால் கீல்வாதக்காய்ச்சல் (Rheumatic Fever) என்னும் கொடிய நோயைத் தடுக்கலாம். பென்சலினுக்கு ஒத்துவராமல் உடலின் எதிர்விளைவாக வீக்கம் ஏற்படின் எத்திரோமைசீன் (Erythromycin) அல்லது சல்பா ( Sulpha Drugs) கொடுக்கலாம்.

இதைவிடக் காய்ச்சலுக்கு பரசிற்றமோல் , சூடான பானங்கள் ஆகியவற்றையும் கொடுக்கவேண்டும்.

முக்கியமாக தடிமன் இருமலுடன் கூடிய காய்ச்சலுக்கு வழமையான உணவுகளைக் கொடுக்கவேண்டும். பட்டினி போட்டு வதைக்கக்கூடாது. இதனால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.

(4) தலையிடி (Headache)

பல காரணங்களுக்காக தலையிடி ஏற்படலாம். சொல்லத் தொயாது சிறுவர் தலையைத் தொட்டுக் காட்டி அழுவர். பல்வியாதி, காதுக்குத்து, கண்பார்வை குறைவு, கபாலக்குத்து (Migraine) ஆகியவை முக்கிய காரணங்களாகும். தலையிடி வாந்தியுடன் சேர்ந்து இருந்தால் இப்படியாக இருக்கவேண்டும் என்று யோசிக்கவேண்டும்.

இதைக் குணப்படுத்த 1 2 பரசிற்றமோல் குளிசை போதுமானது. ஆனால் இது தொடர்ந்து இருக்குமானால் சுகாதார நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலைக்கோ அனுப்பப்படவேண்டும்.


(5)வயிற்றுவலி (Abdominal Pain)

இதுவும் பல காரணங்களுக்காக ஏற்படலாம். குழந்தைகள் அழுதால் சில தாய்மார்கள் உடனே வயிற்றுவலியினால் தான் அழுகிறதென முடிவுகட்டிவிடுவர். பிள்ளைகள் அழுவதற்கு வயிற்றுவலி ஒரு காரணம் தான்.

சிலர் (வைத்தியர்கள்உட்பட) வயிற்றுவலி என்றதும் வயிற்றில் பூச்சி, புழுக்கள் உள்ளன என்று கூறி பூச்சி மருந்தைக் கொடுப்பார்கள். புழுக்களால் வயிற்றுவலி ஏற்படுவது ஓர் அய காரணமாகும். குடலில் புழுக்களின் எண்ணிக்கை கூடவாக இருந்தால் இவை குடலை அடைந்து நோவை உண்டாக்கலாம்.

வயிற்றுளைவு, சிறுநீர் தொகுதியல் ஏற்படும் தொற்றுகள், குடல்முளைஅழற்சி (Appendicitis), குடல் அடைப்பு(Obstruction),செங்கமா (Hepatitis), கணைய அழற்சி, (Pancreatitisitis) விதைவீக்கம் (Orchitis) ஆகியவைகளும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வயிற்றுவலி ஏற்படலாம்.

வயிற்று வலி அதிகாத்தால் அல்லது தொடருமானால் சுகாதார நிலையத்திலோ, வைத்தியசாலையிலோ நோயாளி சோதிக்கப்பட வேண்டும்.

பிள்ளைகள் உடல் சார்ந்த காரணங்களால் (Physical Illnesses) அன்றி மனநிலை காரணங்களுக்கும் (Psychological Reasons) வயிற்றுவலி என்பர்.

பாடசாலையில் (School) பிரச்சினைகள், உணவுகளில் விருப்பக் குறைவு என்பன சில காரணங்களாகின்றன. இவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும்.

6. கால் உழைவு ( கால் நோவு )

கால் நோவு பல காரணங்களினால் ஏற்படலாம். மூட்டுக்களில் நோவு, வீக்கம், ஏற்பட்டால் இது கவனிக்கவேண்டியது.

கீல்வாதக் காய்ச்சல் , காலில் அல்லது மூட்டுக்களில் கிருமி தொற்றல் (Infections) ஆகியவைகளும் கால் நோவை ஏற்படுத்தும்.

இதே வேளையில் அநேக பிள்ளைகள் தமக்கு கால் நோவு, உழைவு என்று இடையிடையே கூறுவர். இப்படியான நோவு தசையிலேயே ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டுபவர்கள் அநேகமாக இரவில் தான் இது பற்றி சொல்வார்கள்.

எதற்கும் ஒரு முறையாவது சோதித்து அச்சந் தெளிவிப்பது நல்லது. தேவையெனில் இரத்தச் சோதனை செய்ய வேண்டிவரும்.

பொதுவான நோய்கள் முற்றிற்று

gragavan
17-11-2004, 03:47 AM
திருவருள், உண்மையிலேயே மிகவும் பயனுள்ள தகவல். இந்தப் பொதுவான நோய்களைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக நீங்கள் குழந்தைகள் எந்தவிதமான சைகைகளைக் காட்டும் என்று எடுத்துக்காட்டியிருப்பது மிகவும் பயனுள்ள குறிப்புகள். வளர்க உங்கள் பணி.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
17-11-2004, 07:37 AM
அடடா... என்னை மாதிரி வீட்டை விட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தொகுப்பு.
டாக்டர் திருவருள் அவர்களுக்கு நன்றிகள் கோடி.

அன்புடன்,
பிரதீப்

இளசு
22-12-2004, 10:10 PM
அன்பின் திருவருள்..

தாமதாய் இப்பதிவைக் கண்டமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

1) செயற்கரிய பணி இது. மிக்க பயனுள்ளதும் கூட. தொடருங்கள்.

2) மருத்துவக்குறிப்புகளுடன், தமிழும் கொஞ்சி விளையாடி இருவித மகிழ்ச்சி இதைப்படிக்கையிலே....
பாராட்டுகள் திருவருள்..

3) மல்லிநீருடன் சீனி.. படிக்கவே சுவை. தேசிக்காய் தண்ணீர் என்றால் என்ன?

thiruarul
23-12-2004, 05:38 AM
Originally posted by இளசு@Dec 23 2004, 05:10 AM
அன்பின் திருவருள்..

தாமதாய் இப்பதிவைக் கண்டமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

3) மல்லிநீருடன் சீனி.. படிக்கவே சுவை. தேசிக்காய் தண்ணீர் என்றால் என்ன?

93621


மதிப்பிற்குரிய இளங்கரிகாலன் அவர்கட்கு,

தாங்கள் மன்னிப்புக்கேட்கவேண்டியதேயில்லை. காரணம் தங்கள் பணிப்பளுவை அடியேன் அறிவேன்.தங்கள் பாராட்டுதல்கட்குச் சிரம் தாழ்த்தி நன்றிசொல்கிறேன்.

தேசிக்காய்த் தண்ணீர் என்பது எலுமிச்சைப்பழச்சாறு (எலுமிச்சைப்பழச்சாறு = தேசிக்காயத் தண்ணீர் =Lemon juice)

என்றும் அன்புடன்
திருவருள்

பாரதி
23-12-2004, 03:49 PM
மிகவும் அவசியமான பலருக்கும் பயன்படக்கூடிய பகுதி.. மிக்க நன்றி திருவருள்.
பொதுவான நோய்கள் முற்றிற்று என்று சொல்லி இருக்கிறீர்களே...??
நோய்களை முற்ற விடலாமா திருவருள்.. :D [நகைச்சுவைக்காக சொன்னது..]
நேரம் கிடைக்கும் போது தொடர வேண்டுகிறேன்.