PDA

View Full Version : அடுத்த தலைமுறைக்கு.....



rambal
14-04-2003, 06:01 PM
அடுத்த தலைமுறைக்கு,
அதாவது நம்ம குழந்தைகளுக்கு, நம்ம பேரன் பேத்திகளுக்கு,
என்ன கொடுக்கப்போகிறோம்?

* கார்பன் மோனாக்ஸைடு
கலக்காத காற்று...

* சக உயிர் துடிப்பதைக் கண்டு
கண்ணீர் விடும் மனசு...

* கரன்சி வாசத்துக்காக
சிரிக்காத மனிதன்...

* ஓட்டை இல்லா
ஓஸோன்...

* மனிதனை மனிதனாக
பார்க்கும் பார்வை...

* எரிவாயுக்காக அடித்துக்
கொள்ளாத நாடுகள்...

* ரத்தக் குளியல்
இல்லா பூமி...

* பிச்சைக்காரர்கள்
இல்லா தேசம்...

* ஊழல் இல்லா
இடம்...

* வறுமை, வன்முறை
இல்லா சமூகம்..

* மனசாட்சிக்கு மட்டுமே
பயந்து வாழும் வாழ்க்கை...

* பூட்டுக்களும், கதவுகளும்
இல்லா வீடு...

* இவற்றில் எவற்றைக் கொடுக்கப்போகிறோம்
அடுத்த தலைமுறைக்கு?

இளசு
14-04-2003, 09:28 PM
உன் கவலை நியாயமானது கவியே
கால ஓட்டம் போகும் பாதை இது...

இன்றைய அப்பாக்களுக்கு என் கையேடு
நாளைய மகனுக்கு வழிகாட்ட:

கான்வெண்ட்டில் படித்தாலும்
காலையில் கொஞ்சம் சுப்ரபாதம்

பிரிட்னி ஸ்பியர்ஸ் போரடித்தால்
இடையிடையில் ஏ.ஆர். ரகுமான்

பீருக்கு தொட்டுக்க அய்யங்கார் அப்பளம்
வயிறு எரியாமலிருக்க நம்மூரு தயிர்ச்சோறு

ஏ.சி.போட்ட காரால புகையில் இருந்து விடுதலை
ஆக்ஸிஜன் பார்லர், மாஸ்க்ன்னு கூடுதாலா கவனம் வை

ஹார்வர்ட் டிகிரி வாங்கி ஹ¥ஸ்டனில் வேலை வாங்கு
பாபநாசம் மாமா பொண்ணு காத்திருக்கா; லீவு வாங்கு

ஹைபிரிட் வாழ்க்கை முறை உங்க தலைமுறை
கூச்சமில்லாம கொடுத்தது எங்க தலைமுறை

karikaalan
15-04-2003, 12:18 PM
நியாயமான ஆசைகளே!
பேராசைகளாகத் தோன்றுவது ஏன்?
அவ்வளவா இயலாமை?

===கரிகாலன்

poo
15-04-2003, 01:25 PM
ராமின் கேள்விக்கு விடையே இல்லை...

அண்ணனின் தீர்வை சிறிது ஏற்கலாம்...

-பாராட்டுக்கள் இருவருக்கும்!!!

Narathar
18-04-2003, 05:26 AM
கண்காணிப்பாளர்களது கனவுகள் நனவாக நாமும் கனவு காண்போம்.............