PDA

View Full Version : சங்கராச்சாரியர் கைது !தமிழ்குமரன்
12-11-2004, 02:17 PM
கொலை வழக்கில் சங்கராச்சாரியர் கைது !
நாடு எங்கே போகின்றது.

Nanban
12-11-2004, 03:30 PM
இந்தச் செய்தியை நேற்று இரவே அறிந்தேன். ஆனால் அது குறித்து பதிவு செய்ய விருப்பமின்றி இருந்தேன். காஞ்சிப் பெரியவர் எழுதிய 'தெய்வத்தின் குரல்' விரும்பிப் படித்திருக்கிறேன் - இன்று அதே மடத்தில் இருந்த வந்த செய்திகளைப் படித்து அதிர்ச்சி, திகைப்பு, வேதனை என அனைத்து உணர்ச்சிகளும் தாக்க, என்ன சொல்வது என்று அறியாது நிற்கின்றேன். அதை விடவும், இந்த கைதின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் வரும் நாட்களில் என்ற பதைபதைப்பும் இருக்கின்றது. இந்த கைதை அரசியல் ஆதாயத்திற்காக தவறான வழியில் திருப்பிக் கொண்டு போய்விடக் கூடாது என்ற பதைபதைப்பும் உண்டு.

இந்த சந்தர்ப்பத்தில், நக்கீரன் பத்திரிக்கைக்கு, அவர் கொடுத்த பேட்டி மிக தவறான பதில்களைக் கொண்டுள்ளது. 'என் மீது பக்தி கொண்டுள்ள என் அன்பர்கள் சிலர் அந்தக் கொலையைச் செய்திருக்கலாம்' என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு அவர் காதிற்கு விஷயம் எட்டியிருக்கும் பொழுது, அவர் அந்த பக்தர்களை இனம் கண்டு, காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து, தயவு தாட்சண்யமின்றி களை எடுத்திருக்க வேண்டும். யாரோ சிலரைக் காப்பாற்ற எத்தனித்து, கடைசியில் அந்தப் பழியைத் தானே ஏற்க நேர்ந்தது வருத்தம் அளிக்கிறது. இப்பொழுதும் கூட அவர் காவல்துறையுடன் ஒத்துழைத்து, தன் மடத்திலுள்ள களைகளைக் களைந்து வெளிவர வேண்டும் என்றே விரும்புகிறேன்......

anbu
15-11-2004, 03:31 AM
மதமும் மதத்தை பின்பற்றும் மக்களும் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தனி ஒரு மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த சம்பவம் மிக தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறது.

எந்த கடவுளுக்கும் தேவைகள் என்பது இந்த உலகத்தில் இல்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மனம் திருப்தி படாத அளவுக்கு தேவைகள் என்பது இந்த உலகத்தில் கொட்டிக்கிடக்கிறது. அப்படிப்பட்ட ஆசைகள் நிறைந்த மனிதர்களை கடவுளுக்கு சமமாக நினைக்கும் காலம் இருக்கும் வரை இப்படிப்பட்ட தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

Peruyir
15-11-2004, 09:53 AM
சுவாமிகள் பற்றி கண்ட படி எண்ணுவதோ சொல்லுவதோ கூடாது
பத்திரிகைகள் எழுதுவதெல்லாம் உண்மையா?

___________________
எண்ணம்,சொல்,செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்

gragavan
16-11-2004, 04:01 AM
இந்த வழக்கில் ஜெயேந்திரர் எந்த அளவிற்கு சம்பந்தப்பட்டிருப்பார் என்று தெரியவில்லை. முழுவிசாரணை நடந்ததும் தெரியவரும். மேலும் தக்க ஆதாரங்கள் இன்றி ஒரு அரசு இப்படிப்பட்ட மடாதிபதியை கைது செய்ய விரும்பும் என்று நினைக்கவில்லை. காரணம் சின்ன தவறு நேர்ந்தாலும் அரசின் பெயர் கெட்டுவிடும். ஆக அனைத்து விவரங்களையும் வைத்தே அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைய சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கையில் கைது நடவடிக்கை சரியென்றே தோன்றுகிறது. ஆனாலும் வழக்கு முடியக் காத்திருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதே நேரம் யாரும் இந்த விஷயத்தை மதக் கண்ணோடத்தோடு அணுகாமல் இருக்க வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

புள்ளிமான் பெற்ற வள்ளிமானைத் திருடிய திருடன் யார்?
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=92173#92173 (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=92173#92173)

pradeepkt
16-11-2004, 06:15 AM
ஒரு மடாதிபதியை, நிறைய பக்தர்கள் மத்தியில் பிரபலமான ஒருவரைக் கைது செய்வதற்கு முன் அரசு எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்கும் என்று நாம் யோசிக்கும் வேளையில், அவர் கைது செய்யப்பட்டு இத்தனை நாள் ஆகியும் அனைத்து விவரங்களும் வெளிவராமல் இருப்பதே இத்தகைய யூகங்களுக்குக் காரணம். நீதிமன்ற விடுமுறைகள் எல்லாம் இதற்கு ஒரு காரணமாகக் காட்ட முடியாது.

ஆனால் மற்ற வழக்குகள் போல் இதனையும் மக்கள் நினைவில் இருந்து அகலும் வரை காத்திருக்க வைக்கக் கூடாது. காஞ்சி மடமும் இதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதில் இருந்து குற்றமற்று ஜெயேந்திரர் வெளிவருவாராயின் அது அவரைப் புடம் போட்ட தங்கமாகத்தானே அனைவருக்கும் காட்டும்? நாமும் அவ்வாறே நம்புவோம்.

இதற்கு மதச் சாயம் மட்டுமல்லாது அரசியல் சாயமும் பூசுவதற்கென்றே சிலர் (உங்கள் அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன்) காத்திருக்கிறார்கள். அரசு பாரபட்சமற்ற நடவடிக்கையில் இறங்கும் என்றே அனைவரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
பிரதீப்

rajeshkrv
16-11-2004, 09:40 AM
கைது இவ்வளவு அவசரமாகவும், கேவலமாகவும் நடந்திருக்க வேண்டியதில்லை

பிரியன்
16-11-2004, 05:30 PM
சட்டத்தின் முன் அனைவரும் சமம் . இது கொலை வழக்கு .கொலை செய்யப்பட்டவரும் இந்து மதத்தவரே .அதனால் இந்த கைது இந்து மதத்தின் மேலான தாக்குதல் என்று சொல்லுவதுதான் அரசியல் . மதத்தை கலக்காமல் சட்டத்தின் அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்சனை இது. இன்று இந்த பிரச்சனையில் அக்கறை காட்டுபவர்கள் சங்கரராமன் குடும்பத்தை மட்டும் வசதியாக மறந்தது ஏனோ? பல மர்மங்கள் நிறைந்த வழக்கு இது. இறைவன்தான் உண்மைகள் வெளி வர உதவ வேண்டும் .

சங்கராச்சாரியார் தன் தூய்மையை கட்டாயம் நிரூபிக்க வேண்டும் .
அதுதான் காஞ்சி மடத்திற்கு அவர் செய்யும் அழகு ....இதற்கு மதச் சாயம் மட்டுமல்லாது அரசியல் சாயமும் பூசுவதற்கென்றே சிலர் (உங்கள் அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன்) காத்திருக்கிறார்கள். அரசு பாரபட்சமற்ற நடவடிக்கையில் இறங்கும் என்றே அனைவரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
பிரதீப்

எனக்கு காவிதான் தெரிகிறது ....சரியா பிரதீப் .....?

Peruyir
17-11-2004, 08:35 AM
எண்ணம் என்பதே இதயத்தில்,உள்ளே எழுவது தான்
வார்த்தை உதட்டால் வருவது,வெளியே அறிவிப்பது
செய்கை உடலால் செய்வது, தானே தெரிவது
எண்ணத்தை எல்லோராலும் அறிய முடியாது,வார்த்தைகளை
செவிச் செல்வம் உள்ளவர்களால் அறிய முடியும்,செய்கைகளை
பார்வை உள்ளவர்க்ளால் அறிய முடியும்.மூன்றும் ஒன்றானால்
அனைவரும் அறிவர்.

பிரியன்
17-11-2004, 08:49 AM
நீங்கள் அறிந்ததை சொல்லி விட்டுதான் போங்களேன் .

தமிழ்குமரன்
17-11-2004, 02:29 PM
சங்கராச்சாரியார் மீது மிக கடுமையான குற்றசாட்டுக்கள்
நீதிமன்றத்தில் அரசு கூறுவது, மடத்தின் மீது சாதரண மனிதனுக்கு கூட சந்தேகம் வருகின்றதே?

Nanban
17-11-2004, 04:17 PM
.... அவர் கைது செய்யப்பட்டு இத்தனை நாள் ஆகியும் அனைத்து விவரங்களும் வெளிவராமல் இருப்பதே இத்தகைய யூகங்களுக்குக் காரணம். நீதிமன்ற விடுமுறைகள் எல்லாம் இதற்கு ஒரு காரணமாகக் காட்ட முடியாது.

எல்லா தகவல்களையும் வெளியே சொல்லக் கூடாது. அது சாட்சிகளைக் கலைக்கவும், வக்கில்களால் திசை திருப்பவும் முடியும். அதனால் நீதிமன்றத்தில் மட்டுமே, தனது சான்றுகளை காவல்துறை வெளியிட இயலும். அதனால், அவசரப்பட்டு, ஆதாரங்களைத் தர மறுக்கிறது காவல்துறை என எண்ணுவது சரியல்ல.

என்றாலும், பத்திரிக்கைகள் தங்கள் தொடர்புகளால் அறிந்தவையாக வெளியிடும் பல தகவல்கள் திகைக்க வைக்கின்றன. கைபேசி மூலம் தொடர்புகள், பாங்க் கணக்கிலிருந்து பணம் சென்றதற்கான ஆதாரங்கள் என பல தகவல்கள் வருகின்றன. பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் ஆராயமல் எழுதுவதில்லை. காஞ்சி மடாதிபதி பத்திரிக்கைப் பேட்டியைப் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தனர். அதில் அவரே குறிப்பிட்டது, தன் மடத்தைச் சார்ந்தவர்கள், தன் மீது அக்கறை கொண்டவர்கள், தன் மீதுள்ள பக்தியால் கொலை செய்திருக்கக் கூடும் என்றே குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயமாக மறுக்கவில்லை - எந்த விதத்திலும் காஞ்சி மடத்திலிருந்து எவரேனும் கொலை செய்திருப்பார்கள் என்பதை. தன் முன்னாள் ஊழியர் ஒருவர், தன் மூத்தோரின் பணியாள் ஒருவர், கோயில் வளாகத்தினுள் படுபயங்கரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதைப் பற்றி வருத்தமோ, அல்லது அந்த கொலையாளிகளை இனம் காண வேண்டும் என்ற ஆதங்கமோ இல்லாது அமைந்த அந்த பேட்டியில், மற்றும் பல விஷயங்களை கோடி காட்டியிருக்கிறார் - குறிப்பாக, இளைய மடாதிபதியின் சகோதரரைப் பற்றியது. அவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, 'பெண் சபலம் உடையவர் தானே தவிர, கொலை செய்யும் அளவிற்கு செல்ல மாட்டார்' என சான்றிதழ் தருகிறார். பெண்களுக்கு எதிராக நிக்ழ்த்தப்படும் கொடுஞ்செயல்கள் சரி என கருதுகிறாரா? சட்டத்தினால் தண்டிக்கப்படாத அளவிற்கு, பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் செய்தாலும் கூட, மடத்தின் புனித தன்மையைக் கருதி, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமோ?


........ஆனால் மற்ற வழக்குகள் போல் இதனையும் மக்கள் நினைவில் இருந்து அகலும் வரை காத்திருக்க வைக்கக் கூடாது. காஞ்சி மடமும் இதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதில் இருந்து குற்றமற்று ஜெயேந்திரர் வெளிவருவாராயின் அது அவரைப் புடம் போட்ட தங்கமாகத்தானே அனைவருக்கும் காட்டும்? நாமும் அவ்வாறே நம்புவோம்.

இது தான் சரியான அணுகுமுறை. முறைப்படியாக வழக்குகளைச் சந்தித்து, குற்றமற்றவர் என்று நிருபணம் செய்து வெளிவர வேண்டும் தான். ஆனால், அதற்குள், விஷ்வ ஹிந்து பரீஷத், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் போராட்டங்களில் இறங்குவது சரியல்ல. அவர்கள் போராட்டத்தில் இறங்குவதோடு மட்டும் அல்ல, நீதியை அச்சுறுத்தும் வகையில் தங்கள் போராட்டத்தை வழி நடத்துவது தான் கவலை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்தினுள் வக்கீல்கள் மீது தாக்குதல் என்பது தேவையற்றது. அதுபோல ஹைதரபாத் நகரில் போராடியவர்கள் சில அரசியல் பிரமுகர்களின் உருவ பொம்மையை எரித்தது போன்ற தவறான செயல்கள் எந்த விதத்திலும் நீதியை நிலை நாட்டும் செயல் அல்ல.
........இதற்கு மதச் சாயம் மட்டுமல்லாது அரசியல் சாயமும் பூசுவதற்கென்றே சிலர் (உங்கள் அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன்) காத்திருக்கிறார்கள். அரசு பாரபட்சமற்ற நடவடிக்கையில் இறங்கும் என்றே அனைவரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

இருக்கலாம் - இந்துத்வா அமைப்புகளால் இருக்கலாம். மற்ற எல்லோருமே அதிர்ச்சியால் அதிர்ந்து போய் இருக்க, இந்துத்வா அமைப்புகள் மட்டுமே, மத, அரசியல் வர்ணங்களை எல்லோர் மீதும் அள்ளித் தெளிக்க முயற்சிக்கிறது.

எவருமே, காஞ்சி சுவாமிகள் கொலை செய்திருக்க மாட்டார் என்று போராட்டத்தில் இறங்கவில்லை. ஆனால், அவரைக் கைது செய்தது தான் தவறு என்று கூறுகிறார்கள். கொலை செய்திருப்பார் என்று ஆணித்தரமாக மறுக்க விரும்பாதவர்கள், கைது செய்யக் கூடாது என்று போராடுவது சரியல்ல. மேலும், சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு - கொலை. இது அரசியல் ரீதியான வழக்குகள் அல்ல. பொருளாதார குற்றங்களினால் விளைந்த வழக்கு அல்ல. சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஏற்ப, நடவடிக்கை எடுப்பது என்பது தான் முறை. இதில் மத, அரசியல் உள் நோக்கங்கள் கிடையாது.

ஆனால், இந்துத்வா அமைப்புகளின் தலைவர்களின் பேச்சில் மற்ற மதத் தலைவர்களை இது மாதிரியாக ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஒப்பீடு தவறுதலானது மட்டுமல்ல, மற்ற மதத்தினரையும் வம்பிற்கு இழுப்பது போன்றவையாகும். மேலும், எல்லார் ஆத்திரமும் கருணாநிதியின் மீது திரும்பியுள்ளது. ஏன்? கைது செய்தது, மடத்தின் ஆஸ்தான சீடர்களில் ஒருவரான ஜெயலலிதா ஜெயராமன். காஞ்சி சுவாமிகளின் பக்தை. ஹிந்து ஆசாரங்களில் மிகவும் நம்பிக்கையும், சோதிடம், யாகங்கள் என்று ஹிந்து தர்மத்தின் அனைத்தையும் வழிபட்டு நிற்பவர். (பலர் அடைந்த அதிர்ச்சிகளில் ஒன்று - ஜெயலலிதாவா சுவாமிகளைக் கைது செய்தது என்று?) அவரை விட்டுவிட்டு, கருணாநிதியின் மீது பாய்வது என்பது தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டியது என்று சொல்வது போல் தான். இத்தனைக்கும், ஜெயலலிதாவை தலை மேல் வைத்து கொண்டாடியவர்கள் தான் இவர்கள். இந்தியாவில் இந்துத்வாவை காப்பதற்கு, மோடி, ஜெயலலிதா இவர்கள் தான் தேவை - வாஜ்பாயோ, அதவானியோ அல்ல என்று சொல்லுமளவிற்கு அவரது புகழ் பாடியவர்கள், இன்று அவர் செய்த செயலுக்கு, அடுத்தவர் மீது பாய்கின்றனர்.

கருணாநிதி கொடுத்த அழுத்தம் தான் காரணம் - காஞ்சி சுவாமிகள் கைது செய்யப்படுவதற்கு என்பது ஏற்க முடியாத வாதம். 'சங்கரராமன் கொலையில், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக வெளியே திரிகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படவேண்டும். அதற்காகப் போராட்டத்தில் இறங்குவோம்' என்று அறிவிக்கிறார். இது தவறா? குற்றவாளிகளைக் கைது செய் என்று அரசிடம் முறையிடுவது தவறா? அதாவது, இந்துத்வா ஆதரவாளர்களின், முறையீடு என்னவென்றால், கருணாநிதி சும்மா இருந்திருந்தால், அம்மாவும் சும்மா இருந்திருப்பார் என்று இருக்கிறது. ஜெயேந்திரர் கொலை செய்தாரா, அல்லவா என்பதெல்லாம் அவர்கள் கவலை இல்லை. ஆனால் தங்கள் மதத்தின் புனித அமைப்பின் அஸ்திவாரத்தை அசைத்து விட்டார்களே என்று ஆதங்கப் படுவதில் அர்த்தமில்லை.

இந்த விவகாரத்தை, அரசியலாக்குவதோ, மதமாக்குவதோ இந்து அமைப்புகளின் கையில் தான் இருக்கிறதே தவிர, மற்றவர்கள் கையில் இல்லை.

பலமுனைகளிலும் தோல்வியைச் சந்தித்து வந்த ஜெயலலிதா, தன் சரிவை சரிக்கட்ட முனைதிருக்கும் வேளையில் காஞ்சி சுவாமிகளின் மீது எந்த ஆதாரமுமில்லாமல், கை வைத்து, மேலும் தனக்கு அவப்பெயர் தேடிக்கொள்ள முனைய மாட்டார். ஆக, வலுவான ஆதாரங்கள் அவரிடம் இருக்கத் தான் செய்யும். இனி எத்தனை சிரத்தையாக இந்த வழக்கைக் கொண்டு செல்கிறார் என்பது தான் மற்ற விஷயங்களைத் தீர்மானிக்கும்.

எது எப்படியோ, சங்கரராமன் தன் கல்லறையில் நிம்மதியின்றி உழன்று கொண்டிருப்பார் - இந்த வழக்கு முடியும் வரையிலும்.....

gragavan
18-11-2004, 03:58 AM
நண்பர் கூறுவதும் உண்மைதான். ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கையில் எல்லா விவரங்களையும் வெளியே சொல்வது நன்றன்று. அது அந்தச் சாட்சியங்களைக் கலைக்க உதவும். இந்துத்துவா அமைப்புகள் இந்த விஷயத்தில் மதச்சாயம் பூசக்கூடாது. வேறு எந்த மதத்தினர் செய்திருந்தாலும் இது போன்ற நடவடிக்கை சரியாகத்தான் இருக்கும். இது மத விஷயமல்ல. சட்டம் ஒழுங்கு தொடர்பானது. ஆகவே மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய விஷயம்.

ஒரு நடவடிக்கை எடுக்கும் முன்னம் ஜெயலலிதா பலமுறை சிந்தித்திருப்பார் என்றே கருதுகிறேன். வழக்கு நியாயமாகச் செல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. மேலும் நேற்றைய ஜெயலலிதாவின் சட்டமன்றப் பேச்சும் (அவைக்குறிப்பில் இடம்பெற்றது) அதிர்ச்சியைத் தருகிறது. மற்றொரு கொலைக்கும் திட்டம் தீட்டப்பட்டது என்று கூறியிருக்கிறார். எதை நம்புவதென்றே தெரியவில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பது ஜெயலலிதாவிற்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியும் சில அரசியல்வாதிகளின் பேட்டியும் நாகரீகமாக இல்லை என்பதும் வருத்தத்திற்குரியது.

அன்புடன்,
கோ.இராகவன்

அரைமூடித் தேங்காய்ச் சாமியாருக்கு மாரப்பன் முக்தி கொடுத்தது எப்படி? இதோ இப்படி!
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=92224#92224 (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=92224#92224)

Peruyir
19-11-2004, 04:44 PM
இப்பொழுது சூரியபகவானைக் கூட கைது செய்ய
யோசிக்கிறார்களாம், கன்னிப் பெண்ணனான குந்தி தேவிக்கு
குழந்தை [கர்ணன்] கொடுத்தற்காக. அதனால் தான்
மேகங்களின் பின்னால் ஒளிந்து திரிகிறாறாம்.

mythili
20-11-2004, 05:57 AM
சங்கராசாரியார் ஸ்ரீ ஜெயேந்திரர அவர்களை போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் உத்தரவு என்று நேற்று இரவு செய்திகளில் அறிந்தேன்.

உண்மை முழுவதுமாக வெளியாகும் வரை ஒருவரையும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை :(

அன்புடன்,
மைதிலி

தஞ்சை தமிழன்
20-11-2004, 07:00 AM
ஜெயலலிதாவின் அரசியல் சரித்திரத்தை அறிந்த யாரும் அவரது இந்த நடவடிக்கையினால் எந்த சலனமோ அல்லது ஆச்சர்யமோ அடைந்திருக்க மாட்டார்கள். இந்த விஷயம் முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக போடப்பட்டதாக தெரிகிறது.

பல்வேறு தோல்விகளுக்கு பின்னால் தான் முக்கியத்துவன் அற்று வருகிறோம் எனபதால் தன்னை பற்றி தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்ப வைக்க அவருக்கு கிடைத்த வழி இதுதான்.

சில வேளை இந்த வழக்கில் அவர் கூறிய அனைத்தும் பொய் என நிருபணமானாலும் அவரது தைரியம் அனைவராலும் பேசப்படும். அது வே அவருக்கு வெற்றிதான். அதுதான் அவர் இதன் மூலம் எதிர்பார்ப்பதும்.

ஜெயலலிதா அவர்கள் எந்த விஷயத்தையும் சாத்விகமான முறையுல் அணுகியதே கிடையாது. எதிலும் ஒரு போர்க்குணம்தான். அதேதான் இங்கும். இந்திய அரசியலில் உள்ள திருமணமாகாத பெண்கள் ( ஜெயா, மாயா, உமா & மமதா) அனைவருமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

கருணாநிதி தனது மகனை ( அழகிரி) தா.கிருஷ்ணண் கொலையில் சம்பத்தப்படுத்திய போதும் இதைப்போல வீரம் காட்டியிருந்தால் அவரது உண்மைதன்மையை நாம் பாராட்டியிருக்கலாம்.

இங்கு தமிழன் முட்டாளாக இருப்பதால்தான் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள்.

Peruyir
20-11-2004, 11:47 AM
தஞ்சை தமிழரே உங்கள் உண்மை உணர்ந்த் உணர்வுக்கும்,
உரைத்த தைரியத்திற்கும் என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.

__________________________
எண்ணம், சொல், செய்ல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

Nanban
20-11-2004, 01:03 PM
ஜெயலலிதாவின் அரசியல் சரித்திரத்தை அறிந்த யாரும் அவரது இந்த நடவடிக்கையினால் எந்த சலனமோ அல்லது ஆச்சர்யமோ அடைந்திருக்க மாட்டார்கள்...................
.....................ஜெயலலிதா அவர்கள் எந்த விஷயத்தையும் சாத்விகமான முறையுல் அணுகியதே கிடையாது. எதிலும் ஒரு போர்க்குணம்தான்.

உண்மை தான். அவர் எவரையுமே, இரவிலே தான் கைது செய்வார். எல்லோருமே ஏதோ கொடுங்குற்றவாளிகள் போலத் தான் நடத்துவார். கருணாநிதியின் கைது, அரசு ஊழியர் போராட்ட பங்கேற்பாளர்கள்... இப்பொழுது சங்கராச்சாரியார். இது ஜெஜெ-யின் பாணி.
இந்த விஷயம் முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக போடப்பட்டதாக தெரிகிறது.........
...............சில வேளை இந்த வழக்கில் அவர் கூறிய அனைத்தும் பொய் என நிருபணமானாலும் அவரது தைரியம் அனைவராலும் பேசப்படும். அதுவே அவருக்கு வெற்றிதான். அதுதான் அவர் இதன் மூலம் எதிர்பார்ப்பதும்.அப்படி ஒரு எண்ணம் ஜெஜெவிற்கு இருக்கும் என்று எண்ணத் தோன்றவில்லை. இந்த வழக்கு, பொய்த்துப் போகும் என்றால், அதற்கு ஜெஜெ கொடுக்க வேண்டிய விலை மிக மிக அதிகம்.

பொய்யாக இந்த வழக்குப் போகும் பட்சத்தில், ஜெஜெவின் மீது வெறுப்பு ஹிந்துத்வா அமைப்புகளிடமிருந்து மட்டும் வருவதில்லை. எல்லா மூலை முடுக்குகளிலும் இருந்து எழுந்து வரும். நல்லவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ள பாமர மக்களிடமிருந்தும், நடுநிலை விமர்சகர்களிடமிருந்தும் வரும். சங்கராச்சார்யாருக்கே 'harassment' கொடுக்க இந்த அரசு துணிந்தால், சாதாரண மக்களுக்கு எந்த கதி என்ற பயம் மக்கள் மத்தியில் எழத்தான் செய்யும்.

ஜெஜெ ஆணவம் மிக்கவர் என்றாலும், திடுதிப்பென்று தன் நிலையை மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி படைத்தவர் தான். ஆனால், அரசியல் சதுரங்க களத்திலே அந்த உத்தி பயன்படக்கூடும். ஒரு தனி மனிதனையும், மடத்தையும் அது போலவே சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, பின்னர் நிலை மாறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஒருவேளை சங்கராச்சாரியர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டாலும், இந்த பிரச்னை ஓயப் போவதில்லை. விடுதலை ஆகிவிட்டால், ஜெஜெ எப்படி அந்த சூழ்நிலையை அணுகுவார்? இப்படியாகத் தான் இருக்கும்:

[size=12]காஞ்சி சுவாமிகளைக் கைது செய்ததே, அவரைக் காப்பாற்றாத் தான் என்று கூறிவிடுவார். பல பத்திரிக்கைகளும் செய்திகளைத் தங்கள் இஷ்டம் போல திரித்து கூறிக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு போராட்டத்தில் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தன. காஞ்சி நகரில், தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடினால், அதனால், காஞ்சி மடத்திற்கே கூட ஆபத்து ஏற்பட்டிருக்கும். இத்தகைய இன்னல்களிலிருந்து மடத்தைக் காப்பாற்றவே சங்கராச்சரியாரைக் கைது செய்து சிறையில் வைத்தேன். அவர் பாதுகாப்பும் பொருட்டும், மடத்தின் பாதுகாப்பு பொருட்டும் அவ்வாறு செய்தேன்

இவ்வாறாக நிலைமையை தனக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ளலாம். ஆனால், அது இந்த வழக்குத் தோற்கும் பொழுது தான்.
அவ்வாறாகத் தோற்கும் பொழுது, ஜெஜெவிற்கு, இந்த சால்ஜாப்பு மட்டும் போதாது. உட்னே எதிர்க்கட்சிகள் அடுத்த கட்ட போராட்டத்தை ஆரம்பிக்கும். கோயிலுக்குள் நடந்த சங்கரராமனின் படுகொலையை நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி. வெறும் கூலிப் படை ஆட்களைக் காட்டி, சங்கரராமனின் கொலையை மூடி மறைத்து விட முடியாது. கூலிப்படைகளின் எஜமானன் யார் என்பதை நிச்சயம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

இந்த சிக்கல்களையெல்லாம், ஜெஜெ நிச்சயம் சிந்தித்திருப்பார். இவ்வளவு இன்னல்களை அனுபவித்து தன் முக்கியத்துவத்தை அதிகரிக்க, காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ய நிச்சயமாக துணிந்திருக்க மாட்டார். தன்னால், இந்த வழக்கை வெற்றியடைய முடியும் என்ற நிச்சயமான அணுகுமுறையினால் மட்டுமே அவர் இந்த காரியத்திற்கு துணிந்திருக்க முடியும்.
பல்வேறு தோல்விகளுக்கு பின்னால் தன் முக்கியத்துவம் அற்று வருகிறோம் எனபதால் தன்னை பற்றி தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்ப வைக்க அவருக்கு கிடைத்த வழி இதுதான்.

[size=18]இதற்கு முன்னால் மடத்து ஊழியர் ஒருவரை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது - அந்த கூலிப்படையும் இதே கூலிப்படையினர் தான் என்பதும் விசாரணையில் இருக்கிறது. மற்றொரு தகவலாக, இன்னொரு ஊழியரும் கொலைப்பட்டியலில் இருந்திருக்கிறார் என்றும் தகவல் சொல்லியிருக்கிறார். சங்கராச்சாரியார் கைது மட்டுமே பரபரப்புக்குப் போதுமென்னும் பொழுது, முன்பின் நடக்க இருக்கும் கொலைகளைப் பற்றி பேச வேண்டிய தேவையில்லையே?அதேதான் இங்கும். இந்திய அரசியலில் உள்ள திருமணமாகாத பெண்கள் ( ஜெயா, மாயா, உமா & மமதா) அனைவருமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.


பெண்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என்று விளங்கவில்லை. முதலில் அவர்களைப் பெண் என்று ஏன் பார்க்கிறீர்கள். அவர்கள் அரசியல்வாதிகள். பல ஆண்கள் நிற்கும் அரசியல் களத்திலே அவர்களும் நிற்கிறார்கள். அங்கு விளையாடப்படுவது அரசியல் ஆட்டம். அந்த ஆட்டத்தின் விதிகள் தான் அங்கு நிகழும் விளைவுகளை சித்தரிக்கின்றனவே தவிர, ஆண், பெண் என்ற பாகுபாட்டினாலில்லை. மிக மிக கடினமான போட்டிகள் நிறைந்த அரசியல் உலகில், அவர்கள் தங்கள் (பெண்கள் என்ற )பலவீனங்களைக் காட்டிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் அரசியல்வாதிகளாக நடந்து கொள்கிறார்கள். இதற்கு ஆண் பெண் என்ற பால் மூலம் பூசுவது தேவையில்லை. பெண் விடுதலையைப் பற்றி விழிப்புணர்வுககள் கூடிக் கொண்டே போகும் இக்காலத்தில், பெண்ணை இன்னமும் தன் அடிமையாகப் பார்ப்பது தேவையற்றதாகும்.கருணாநிதி தனது மகனை ( அழகிரி) தா.கிருஷ்ணண் கொலையில் சம்பத்தப்படுத்திய போதும் இதைப்போல வீரம் காட்டியிருந்தால் அவரது உண்மைத் தன்மையை நாம் பாராட்டியிருக்கலாம்.


கருணாநிதியின் மகன் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட்டுவிட்டார் - கொலைக்குற்றத்திற்காக. ஆனால், சங்கரராமனின் கொலை வழக்கில் கைது ஒன்றரை மாதத்திற்கும் மேலாக நிக்ழவில்லை. இப்பொழுது கருணாநிதி மட்டுமல்ல - எல்லோருமே சந்தேகக் கண் கொண்டு தான் பார்ப்பார்கள். தேவையில்லாமல், இதை இந்துத்வா - திராவிடம் என்ற பாதையில் திருப்பி விட முயற்சிகள் நடக்கின்றன. அரசியல் சூழல்களில் கொலைகள் எப்பவுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அதனால் பெரிய அளவில் அதிர்ச்சியடையப் போவதில்லை. இன்னமும் சொல்லப்போனால், அவர்கள் தங்களை மாவீரகள் என்று கூறிக் கொள்வார்கள். (குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி.) ஆனால், மடாதிபதிகள், ஆன்மீகவாதிகள் தங்களை அப்படி கூறிக் கொள்ள முடியாது. சந்தேகம் என்ற நிலையில் கூட அவர்கள் தங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்ள கூடிய சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். இப்படி இருக்கும் பொழுது, உங்களுடைய மேற்கண்ட வாதத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? கருணாநிதியைப் பழிப்பது என்பது மட்டுமே சாத்தியம். அதனால், காஞ்சி சங்கராச்சாரியாரின் தூய்மை நிரூபணம் ஆகிவிடாது. இனி அவருக்கு இருக்கும் ஒரே வழி - நீதி மன்றத்தில் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிப்பது தான். அவ்வாறு நிரூபித்தால் மட்டும் போதாது - தன் முன்னால் ஊழியரின் கொலையாளிகளையும் - அவர்கள் மடத்தினுள் இருக்கும் பட்சத்தில், இனம் கண்டு, நீதித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், அவர் விடுவிக்கப்பட்டாலும், மக்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும் - மடத்தின் மீது. மடத்திலிருந்து விலகியவர்கள், விலக்கப்பட்டவர்கள் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாவதும், கொலையாவதும் ஒன்றும் சாதாரண செயல் அல்ல.இங்கு தமிழன் முட்டாளாக இருப்பதால்தான் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள்.

ஆமாம் - ஆர்யம் என்ற மாயையை விலக்கி சிந்திக்க முடியாதவனாகக் கிடந்தான். பின்னர் - திராவிடம் என்ற நம்பிக்கையில் கனவு கண்டு கிடந்தான். இவற்றிலிருந்தெல்லாம் என்று விடுபட்டு, '[u][b]நான் தமிழன் மட்டுமே. என் இனம், மொழி இவைகளைக் காத்து வாழச் செய்த பின்னரே, நான் பிறவற்றைப் பற்றி எண்ண இயலும்' என்று சுய உணர்வு கொள்கிறானோ, அன்று தான் விடிவு காலம் வரும் என்றே சொல்லத் தோன்றுகிறது. கருணாநிதி, ஜெஜெ என்பவர் போன்ற சக்கரவர்த்திகளும், மகாராணிகளும் அன்று காணாமல் போய்விடுவர். அந்த விழிப்புக் காலத்தில், முதல்வர் கூட நம் தோழராக இருக்கக் கூடும்......

[b][u]இந்த விடிவுகாலத்திற்கான சேவல்கள் இன்று தமிழ்கத்தில் கூவத்தொடங்கி விட்டன என்றே தோன்றுகிறது இன்று பலரும் அதைக் கேட்கின்றனர். பலருக்கு அது உற்சாகத்தைத் தருகிறது. சிலருக்கு நடுக்கத்தைத் தருகிறது. ஆனாலும் வெகுசீக்கிரமே, தமிழ் எழுச்சியின் அடுத்த கட்ட பயணம் வேகம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் சிறிது காலத்தில், திராவிட கட்சிகள் நொடித்துப் போகும். தலைமையற்றுப் போகும். அப்பொழுது மக்கள் இந்த தமிழ் விழிப்புணர்ச்சியின் மீது முழுகவனமும் தருவார்கள்.

அன்று தமிழ் வெல்லும்.....

suma
21-11-2004, 04:07 PM
இப்பொழுது சூரியபகவானைக் கூட கைது செய்ய
யோசிக்கிறார்களாம், கன்னிப் பெண்ணனான குந்தி தேவிக்கு
குழந்தை [கர்ணன்] கொடுத்தற்காக. அதனால் தான்
மேகங்களின் பின்னால் ஒளிந்து திரிகிறாறாம்.

:lol: :lol: :lol:

gragavan
22-11-2004, 04:40 AM
ஜெயலலிதா அவர்கள் எந்த விஷயத்தையும் சாத்விகமான முறையுல் அணுகியதே கிடையாது. எதிலும் ஒரு போர்க்குணம்தான். அதேதான் இங்கும். இந்திய அரசியலில் உள்ள திருமணமாகாத பெண்கள் ( ஜெயா, மாயா, உமா & மமதா) அனைவருமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.
வணக்கம் தஞ்சைத் தமிழன்! திருமணமாகாத பெண்களைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டாம். அது பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. பொதுவாகவே அரசியலில் எல்லாருமே அசிங்கம்தான் செய்கிறார்கள். பெண்கள் குறைவான அளவில் இருப்பதால் அது தெளிவாகத் தெரிகிறது. எல்லா அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகளே! என்ன நினைத்து ஜெயலலிதா இந்தக் கைதைச் செய்தாரோ! நமக்குத் தெரியாது. அரசியல் லாபமாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனாலும் நடப்பவைகளை வைத்துப் பார்க்கையில் கைது நடவடிக்கை சரியென்றே தோன்றுகிறது. ஜெயலலிதா செய்வதால் கைது நடவடிக்கை தவறாகி விடாது. எனக்கும் ஜெயலலிதாவின் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு சரி அல்லது தவறு என்றே விவாதிக்க வேண்டும். அதை விடுத்து இந்தக் கைதை செயல்படுத்த ஜெயலலிதாவிற்கு என்ன அருகதை உண்டு என்று விவாதிப்பது முறையாகாது.

நண்பர் சொன்னது போல, ஆரிய, திராவிட மாயைகள் எல்லாம் நீங்கி, மதங்களையும் தாண்டி தமிழ் உணர்வு பரவ வேண்டும். இன்றைக்கு அது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் அதற்காக ஆசைப்படுவது நன்றே.

அன்புடன்,
கோ.இராகவன்

தஞ்சை தமிழன்
23-11-2004, 07:33 AM
நண்பண் மற்றும் கோ.ரா அவர்களுக்கு,

எனக்கு பெண்களை பற்றிய எந்தவிதமான வெறுப்பும் கிடையாது. பெண்களை மேலானவர்களாகவும், அன்புடையவர்களாகவும், கருணையுள்ளவர்களாகவும் நினைப்பதால்தான் அவர்களில் சிலரது செயல்கள் நம்மை இப்படி யோசிக்க வைக்கிறது.

ஆடு, கோழி பலியிடலாம்,
கூடாது.

மதம் மாறக்கூடாது.
மாறலாம்.

அரசு ஊழியர்களை சிறையில் அடைத்து பழிவாங்குதல்.
அவர்களுக்கு தடாலடியாக சலுகைகள்.

இப்படி எந்தவித ஜனநாயக உணர்வில்லாத நடவடிக்கைகளை எப்படி நாம் புரிந்து கொள்வது.

மேலே சொன்னதெல்லாம் இந்த தலைப்புக்கு தேவையற்றது.

இப்படி ஒரு மததலைவரை கைது செய்ய வேறுவழிகளை பயன்படுத்தியிருக்கலாம்.

கைது வாரண்ட்டை பெற்று அவரை கைது செய்ய போயிருந்தால், அவர் தனது பதவியை விட்டு விலக சமயம் கொடுத்திருக்கலாம். இதன் மூலம் ஒரு சமயத் தலைவர் கைது என்பதிலிருந்து ஒரு தனி மனிதன் கைது என்பதாக மாற்றியிருக்கலாம்.

அவர் வேறு நாட்டுக்கு தப்பி ஓடிவிடுவார் என கூறுவதெல்லாம் கற்பனைதான் என்பதாக நான் நினைக்கிறேன்.

rajeshkrv
23-11-2004, 10:55 AM
z பிரிவு பாதுகாப்பு உள்ளவர் தப்பி ஓடுவர் என்று கூறுவது அபத்தம்

pradeepkt
23-11-2004, 11:51 AM
உண்மைதான் ராஜேஷ். Z பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்கள் பாத்ரூம் போவதென்றாலும் பாதுகாவலர்களிடம் அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும். அதனால்தான் சங்கராச்சாரியாரின் கைது முறையிலும் நேரத்திலும் தவறெனக் கூறி பல அமைப்புகளும் போராடுகின்றன.
இதன் இன்னொரு முகத்தையும் பார்ப்போம்.
தமிழ் நாட்டை விட்டுவிடுவோம், மக்கள் இங்கே மிகவும் சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள். பாபர் மசூதி இடிப்பின் போது நாடே கொந்தளித்துக் கிடந்த போதும் தமிழகத்தில் பாதிப்புகள் மிக மிகக் குறைவு. (அதற்கு அன்றைய ஜெயலலிதா அரசின் கண்டிப்பையும் கூறத்தான் வேண்டும்)
ஏன் நாடு முழுவதும் இதற்கான எதிர்ப்பை மக்கள் காட்டவில்லை என்பதும் ஒரு நியாயமான கேள்விதான். இதற்கு சகிப்புத்தன்மை, மடாதிபதிகளின் மீது நம்பிக்கையின்மை என்று பல காரணங்கள் இருக்கலாம். மத அமைப்புகளின் மீதே மக்களின் நம்பிக்கைகள் குறைந்து கொண்டு வருகின்றன.
தஞ்சைத்தமிழன் சொல்வதைப்போல் கைது முறை சரியாயில்லாததால் இதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு அவல் கிடைத்தது போலாகிவிட்டது. சில பத்திரிகைகளில் சின்ன சாமியார் விஜயேந்திரரையும் பற்றி ஏடாகூடமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
மக்கள் எல்லாவற்றையும் பார்த்தார்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பார்க்கப் போகிறார்கள்!

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
23-11-2004, 05:55 PM
காத்திருப்போம் சந்தேக மேகங்கள் கலையும்வரை

Peruyir
24-11-2004, 07:40 AM
மகா பெரியவர் வாழ்ந்த இடத்தில் மாசு படியுமா? அவர் படியத்தான்
விடுவாறா? அக்கினியிலே அழுக்குப் படியுமா? ஆடிட்டரை அடித்த
வழக்காம் 2ம் தடவையும் சுவாமிகளைக் கைது செய்துள்ளார்களாம்.
கூத்துக்கொட்டகையில் ஒரே கூத்துத் தான். வேறு என்ன சொல்வ்து?

பிரியன்
24-11-2004, 05:32 PM
அதை நிருபிக்கத்தான் வேண்டும் அவர் .....
ஏன் சீதைக்கும் அதுதானே நிகழ்ந்தது ,,,,
சுவாமிகளும் சட்டத்திற்கு உட்பட்டவரே.....
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை ....தயக்கம் இருக்க கூடாது.....

Nanban
28-11-2004, 01:34 PM
மகா பெரியவர் வாழ்ந்த இடத்தில் மாசு படியுமா? அவர் படியத்தான்
விடுவாறா? அக்கினியிலே அழுக்குப் படியுமா? ஆடிட்டரை அடித்த
வழக்காம் 2ம் தடவையும் சுவாமிகளைக் கைது செய்துள்ளார்களாம்.
கூத்துக்கொட்டகையில் ஒரே கூத்துத் தான். வேறு என்ன சொல்வ்து?

STAR TVக்குப் பேட்டி கொடுத்தாரா, சங்கராச்சாரியார்? அதைப் பற்றி பத்திரிக்கைச் செய்திகள் வந்துள்ளன - தான் அந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று. உண்மையா என்பதை பார்த்தவர்கள் தெரியப்படுத்த வேண்டும்....

அதுபோல, தமிழக முதல்வருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறாராம் - ஒரு பத்து நிமிட மயக்கத்தில் - தான் அந்த மாதிரியான காரியம் செய்துவிட்டதாக தனி செய்தி அனுப்பி இருக்கிறாராம். இதெல்லாம் வெளிவந்த செய்திகள். மேலும் தொடர்ந்து, குமுதத்தில் வந்த கட்டுரையும் சங்கராச்சாரியாரின் மிக மோசமான ஒரு பக்கத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.

இதுபோக, கடந்த காலத்தில் மடத்தில் நடந்த இரு சமஸ்கிருத மாணவர்களின் கொலையைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அந்த மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். The Week பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், அந்த மாணவர்களின் தலையிலும், மர்ம ஸ்தானங்களிலும் காயங்கள் இருந்ததாக பிணத்தைப் பார்த்தவர்கள் கூறினார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமாகத் தான் அந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காவல் துறையில் பதியப்படவில்லை. பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. மடத்தின் மீதுள்ள அசாதாரண நம்பிக்கையில் அப்பொழுது மக்கள் சந்தேகிக்கவில்லை.

நண்பர் பேருயிரே, இப்பொழுது உங்கள் பதிவிற்கு தெளிவு கிடைத்திருக்கும் - அக்கினியிலும் அடர்ந்த புகை எழும் - சாம்பிராணிக்குப் பதிலாக டயர்களை எரித்தால். பெரியவர்கள் மீதும் மாசு படியும். பதவியின் தன்மையால் பெரியவராவதற்கும், உண்மையான பெரியவர் ஆவதற்கும்....

(ஜெயலலிதாவிற்கு எழுதப்பட்ட தனிக்கடிதம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டிருக்கும் ஒரு சமரச ஏற்பாடு என்றே கருதுகிறேன். மருத்துவமனை விவகாரத்தில் ஏடாகூடமாக மோதிவிட்டேன் - பேரம் நடந்த அந்த பத்து நிமிடத்தில் - இனி சமரசம் செய்து கொள்ளலாம் - வழக்கை எப்படியாவது முடித்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் தான் அந்த தனி செய்தியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஜெ எந்த வகையில் எடுத்துக் கொள்வார் என்பதைப் பொறுத்துத் தான் இந்த வழக்கு எந்த வழியில் போகும் என்பதை அறிய முடியும். ஜெ ஒரு மிக சிறந்த பேரம் பேசுபவர் - தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள. இத்தகைய அரசியல்வாதிகளை என்று தான் மக்கள் புறக்கணிக்கப் போகிறார்களோ....?)

pradeepkt
03-12-2004, 07:28 AM
வழக்கில் இன்னொரு மைல் கல்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அப்பு பிடிபட்டான்.
--ஆ.வி./NDTV

அப்புவுக்கு டெல்லியில் வைத்து ஆப்பு வைத்தது தமிழ்நாடு சிறப்புக் காவல்படை. இனி அப்பு சொல்லும் வாக்குமூலத்தை வைத்துதான் ஜெயேந்திரரின் வாழ்வை நிர்ணயிக்க முடியும். இதற்கிடையில் நண்பன் சொல்வது போல் ஜெ.யிடம் பேரம் சுமூகமாக முடிந்தால் அவருக்கு நல்ல காலம் பிறக்கும். ஆனால் வெறும் ஒரு மருத்துவமனை விவகாரம் அவரது கைதுக்கு வழிவகுத்திருக்கும் என்று நான் எண்ணவில்லை.

என்னமோ நடந்திருக்கு என்னாயிது அதிசயம்?
உள்ளதான் ஒளிஞ்சிருக்கு சங்கராச்சாரியார் சமுசயம்!

தமிழகக் காவல்துறையின் மின்னல் வேகச் செயல்பாட்டைப் பாராட்டும் அதே நேரத்தில் மற்ற வழக்குகளையும் அவர்கள் இதே போல் துப்பு துலக்கினால் எப்படி இருக்கும் என்றெண்ணி ஆதங்கப் படாமல் இருக்கவில்லை.

அன்புடன்,
பிரதீப்

aren
03-12-2004, 10:20 AM
சங்கராச்சாரியார் விஷயம் நிச்சயம் ஒரு அரசியல் நெருக்கடியில்தான் நடந்திருக்கிறது என்பது அவர் மீது மேலும் பல கேஸ்களை அமுக்குவதிலிருந்தே தெரிகிறது. ஜெ அவர்களுக்கும், சுவாமிகள் அவர்களுக்கும் ஏதோ நடந்திருக்கிறது, அதனால்தான் இவ்வளவும் நடக்கிறது.

சுஷ்மா சுவராஜ் நேற்று சங்கராச்சாரியாரை சந்தித்து பேசிய பொழுது, அவர் தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

இவ்வளவு பிரசித்தமானவரை ஜாமீனில்கூட விடக்கூடாது என்று தமிழக அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதைக் காணும்பொழுது என்னுடைய சந்தேகம் இன்னும் வலுவாகிறது.

அப்புவோ அல்லது கதிரவனோ, அரசாங்கத்தின் ஆட்களாக ஏன் இருக்ககூடாது. அரசாங்கமே இந்த கேஸை சங்கராச்சாரியார் மேல் தினித்திருக்கலாம்.

தமிழக போலீஸ் ஒட்டுமொத்தமாக சுவாமிகள் மேல் பாய்வதால், மேலிடத்திலிருந்து பயங்கரமான ஆரடர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இது எங்கே போய் முடியப்போகிறது என்று பொருத்திருந்து பார்க்கவேண்டும்.

பிரியன்
03-12-2004, 05:04 PM
அவரது பலம் காரணமாகத்தான் பிணைக்கு எதிர்ப்பு காட்டப்படுகிறது.. சாட்சியங்கள் கலைக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்.

அரசியல் பிரச்சனையின் காரணமாகத்தான் இந்த வழக்கு முடுக்கபடுகிறது..அதனாலேயே அடிப்படை இல்லை என்று சொல்ல முடியாது..

தன் களங்கம் நீங்கிதான் அவர் சிறைச்சாலையை விட்டு வரவேண்டும் ..அதுதான் அவருக்கும் அவரின் நிலைக்கும் உகந்தது..

எல்லாரையும் போல அவரும் பிணை ஏன் கேட்கிறார்....

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும்

நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் விஜயேந்தரின் தம்பி சபலம் உடையவர்தான் என்றாலும் கொலை செய்யும் அளவுக்கு போகமாட்டார் என்றாரே...மடத்தின் சார்பில் ரகுவின் மீது என்ன
நடவடிக்கை எடுக்கபட்டது..தவறு செய்தவர்களை வைத்து கொண்டு தர்மம் பேசினால் நம்ப கடினமாகதான் இருக்கிறது...

அவர்தான் இந்து மதத்தின் அடையாளம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை...
ஆண்டவினிடம் உண்மையாய் இருக்கும் அனைவருக்கும் அந்த தகுதி இருக்கிறது

இறைவனே தலைவன்....

பிரியன்
03-12-2004, 05:04 PM
குழப்பங்கள் தீர்க்கும் வல்லமை கொண்ட
ஆண்டவா சீக்கிரம் உண்மையை
கொண்டுவா !!!!!!!!

thiruarul
04-12-2004, 04:30 AM
இந்த விவகாரம் குறித்த அனைத்துச் செய்திகளையும் வாசித்துவருகிறேன்.பத்திரிகைகள் வழமைபோல தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து செய்திகளைத்தருகின்றனவே தவிர நடுநிலை அல்லது உண்மை என்ன என்று எவரும் ஆராய்வதாகத் தெரியவில்லை.

உதாரணமாகத் தினகரன் பத்திரிகை 'சங்கராச்சாரியார் தவறுசெய்திருப்பார்' என்ற எண்ண நிலையிலிருந்துகொண்டு செய்திதருவதுபோற்படும் அதேவேளை தினமலர் 'சங்கராச்சாரியார் அப்பழுக்கற்றவர்' என்ற நிலையெடுத்துச் செய்திகளைப் பிரசுரிக்கின்றது.


இது மக்களைக் குழப்பத்தில் வைப்பதோடு தனி ஒரு பத்திரிகையை மட்டும் வாசிக்கும் வாசகன் அப்பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியபீடம் தீர்மானிக்கும் செய்தியை மட்டுமே அறிய நிர்ப்பந்திக்கப்படுகிறான்.

எடுத்துக்காட்டாகத் தினகரனில் அனுராதா இரமணன் அவர்களது அறிக்கை விலாவாரியாக இடம்பெற்ற அதேவேளை அதேதினம் பிரசுரமான தினமலரின் இணையப்பதிப்பில் அதுகுறித்து ஒருவரிகூட நான் பார்த்தளவில் காணப்படவில்லை.

இவை தவிர புலனாய்வுப் பத்திரிகைகள் அல்லது இதழ்கள் என்று சொல்லப்படுபவை வாசகனுக்குப் பரபரப்பினைக் கொடுப்பதே குறிக்கோள் எனச் செயற்படுவதால் பல்வேறு வதந்திகளையும் தலைப்பிட்டுச் செய்திகளாக்கிவிடுகின்றன.பிற்பாடு அவை வதந்திகளே என உறுதிப்படுத்தப்பட்டால் அதனை அவை வாசகனுக்குத் தெரிவிப்பதில்லை. வாசகன் இருட்டில் விடப்படுகிறான்.

ஒரு சமய பீடம் குறித்து அதன் தலைவர் குறித்து எவரும் விமரிசனம் செய்யலாம். அது தனிமனித சுதந்திரம். ஆனால் மக்களிடையே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் பத்திரிகைகள் சமூகப் பொறுப்புடன் எழுதவேண்டும். அவர்களுடைய பணி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமே தவிர சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் அல்ல.

தற்போதைய பத்திரிகைகளை தினமும் வாசித்து வரும் ஒருவாசகன் மனதில் 'சாமியார்கள்,மதத் தலைவர்கள் என்றாலே பாதகர்கள்' என்ற மனப்படிவம் வரும்படியான செய்திகள்தான் வருகின்றன. அதேவேளை பல மதத் தலைவர்கள் செய்யும் நல்லகாரியங்கள், சமூக நலன் கருதிய செய்கைகள் வாசகனுக்கு இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

இது தமிழகத்தில் மட்டுமல்ல பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொதுவான ஒரு நோய். சர்வதேச அளவில் இராக்கில் அணுஆயுதம், இராசயன ஆயுதம் என இவர்கள் காட்டிய பூச்சாண்டி சொல்லும்தரமன்று.

'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பதுபோல இராக் இதுகுறித்து என்ன சொல்கிறது என அன்று யாரும் கவலைப்படவில்லை.

இந்த ஒருபக்கச் சார்பான பத்திரிகாதருமம் என்று இல்லாதொழிகிறதோ அன்றுதான் உலகமக்கள் சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பார்கள்."................................
தமிழகக் காவல்துறையின் மின்னல் வேகச் செயல்பாட்டைப் பாராட்டும் அதே நேரத்தில் மற்ற வழக்குகளையும் அவர்கள் இதே போல் துப்பு துலக்கினால் எப்படி இருக்கும் என்றெண்ணி ஆதங்கப் படாமல் இருக்கவில்லை.

அன்புடன்,
பிரதீப்

நிற்க, தமிழகக் காவல்துறையினரது கைகள் கட்டப்படாது கண்கள் மூடப்படாது சுதந்திரமாக அவர்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டால் அவர்களால் எதையும் சாதிக்கமுடியும் என்பதையே இது காட்டுகிறது என நான் கருதுகிறேன். கையையும் காலையும் கட்டிப்போட்டுவிட்டு ஒருவன் சரியாக நீந்தவில்லையே என்று யாரும் குற்றம்சாட்டமுடியாது. சுதந்திரம் வழங்கப்படின் ஏனைய சகலவழக்குகளும் உடனடியாகவே துப்புத் துலக்கப்பட்டுவிடும்.

pradeepkt
08-12-2004, 08:29 AM
நாளுக்கு நாள் திருப்பங்கள் மேல் திருப்பங்கள்.

கடைசியாக நடிகை சொர்ணமால்யாவிடம் போலீசார் சங்கர மடம் மற்றும் அதன் மடாதிபதிகளிடம் தொடர்பு குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்தோடு சுகன்யாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்
- செய்தி.

எப்போது சாமியார்கள் குற்றம் சாட்டப் பட்டாலும் அத்தோடு ஒரு பாலியல் குற்றச்சாட்டும் கொடுக்கப் படுகிறது என்பது பற்றி இந்த வார இந்தியா டுடே (தமிழ்)-இல் ஞாநி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எனக்கு அந்தக் கருத்துகளில் இயைபு உள்ளது. அதை நேரம் கிடைக்கும் போது மன்ற மக்களுக்குத் தருகிறேன்.

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
08-12-2004, 03:28 PM
அதுதானே அவர்களை பிறழ செய்கிறது .....
சராசரி மனிதனை போல உணர்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் ஒருவித திருப்தி இழிவின் எல்லைக்கே அவர்களை கொண்டு சென்று விடுகிறது....

அனுராதா ரமணன் பேட்டியில் சங்கராச்சாரியாரை ஒரு சராசரி ஆண்மகன் என்று சொல்லி இருக்கிறார்...

தவ வாழ்க்கை மிகவும் உயர்வானது ...
அதை கேவல படுத்தாமலாவது இருக்கலாம்...செய்வார்களா ம(ட்)டாதிபதிகள்...இளையவரை பற்றி இன்னும் மோசமான தகவல்கள் என்று அவுட்லுக் பத்திரிக்கை பல செய்திகளை வெளியிட்டுள்ளது....
அது உண்மையாக இருந்தால் இவர்களை நடுவீதியிலே தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.....

gankrish
16-12-2004, 06:08 AM
எல்லோரும் இங்கு சங்கராசாரியரின் கைது விஷயத்தை அக்கு வேரு ஆணி வேறாக அலசியாகி விட்டீர்கள். ஆனால் வழக்கு கொலை குற்றம் தவிர பாலியல் ரீதியாக செல்கிறது. (உத. நேற்று மடத்தின் தங்கும் விடுதிகளின் ரெய்ட்) . இதில் பல விஷயங்கள் குழப்பமாக உள்ளது.

நான் கேட்கிறேன். நமது சேஷன், வெங்கட்ராமன் போன்ற செலவாக்கு மிக்க உள்ளவர்களால் (இவர்களுக்கும் மடத்துக்கு நெருங்கிய தொடர்ப்பு உண்டு பல ஆண்டுகளாக) அவரை வெளியில் கொண்டு வந்து இருக்க முடியாதா அல்லது அதற்க்கு முயற்ச்சி கூட செய்ய முடியாதா. பெரியவர் கைது ஆன பிறகு இது வரைக்கும் இவர்களை பற்றி ஒரு விஷயமும் இல்லை. பதுங்கி விட்டார்களா. ஏன் நம் அப்துல் கலாம் கூட இதை பற்றி பேசுவதில்லை.

எனக்கு தோன்றுகிறது இதில் இவர் நிஜமாகவே குற்றவாளியாக இருப்பாரோ என்று. இத்தனை அறிவு கொண்ட நம் போலிஸால்..அப்பு மற்றும் 2வது நபர் (பெயர் தெரியவில்லை) பிடிக்க முடியாதா. அவர்களை பிடித்தால் வழக்கு வேறு திசைகளெல்லாம் செல்லலாம். அதனால் இந்த கண் துடைப்பு வேலைகள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

சகுனி
16-12-2004, 08:35 PM
Originally posted by rajeshkrv@Nov 16 2004, 03:40 PM
கைது இவ்வளவு அவசரமாகவும், கேவலமாகவும் நடந்திருக்க வேண்டியதில்லை

92181

ஆமாம். இது காலம் கடந்து எடுத்த முடிவாகவே தோன்றுகிறது. என்று கடவுள் ஒருவன் மற்றுமே என முடிவு செய்து வழிபடுகிறார்களோ அன்றுவரை இதுபோன்ற செயல்க்ளுக்கு ஆதரவு இருக்கத்தான் செய்யும். படிப்பது பகவத்கீதை இடிப்பது கிருஷ்ணன் கோயில் கதையாகத்தான் இருக்கிறது இதுபோன்ற பெரியவாள் (?) நடவடிக்கைகள். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கு பிரேமானந்தா, சதுர்வேதி, ஜெயேந்திரர் வரிசையில் இன்னும் எத்தனையோபேர் வாழ்கிறார்கள்..வாழ்வார்கள் இது நம் நாட்டின் சாபக்கேடு. பசிக்கு ஏங்குபவனுக்கு உணவளிக்காமல் சாமியார்களின் காலடியில் தங்கமும் வைரமும் கொட்டும் பாமரர்கள் உண்டியலிடுமளவாவது திருந்தினால் முன்னேற்றமே! ஆறறிவுள்ளவள்களிடம் ஆயிரமாயிரமாய் வாங்கி ஐந்தறிவைவிட கேவலமாய் பெண்களிடம் நடந்துகொள்ளும் இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் எப்போதோ...

Iniyan
17-12-2004, 06:02 PM
எது உண்மை எது பொய்யென கலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Peruyir
18-12-2004, 05:15 PM
நன்பர்களே அன்பர்களே அமைதி! அமைதி!! அமைதி!!! நமது இந்து மதப்பெரியோர்க்கு சோதனைகள் ஒன்றும் புதியவை அல்லவே, நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்களால் ஆலமரத்தை அசைக்க முடியுமோ! பலே! அனுராதா அதிரடி, சொர்னவல்லி சோடிப்பு எல்லாம் பிரம்மாதமாக் நடக்கட்டும். உலமென்னும் நாடக மேடையிலே நடக்கும் நாடகமல்லவா! எல்லாம் நன்மைக்கே. விவாதங்கள் வாதத்தில் முடித்து வீழ்த்தி விடும். படைத்தவரே எல்லாம் பார்த்துக் கொள்வார்.
***************************
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்,

பிரியன்
19-12-2004, 03:15 PM
Originally posted by Peruyir@Dec 18 2004, 10:15 PM
நன்பர்களே அன்பர்களே அமைதி! அமைதி!! அமைதி!!! நமது இந்து மதப்பெரியோர்க்கு சோதனைகள் ஒன்றும் புதியவை அல்லவே, நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்களால் ஆலமரத்தை அசைக்க முடியுமோ! பலே! அனுராதா அதிரடி, சொர்னவல்லி சோடிப்பு எல்லாம் பிரம்மாதமாக் நடக்கட்டும். உலமென்னும் நாடக மேடையிலே நடக்கும் நாடகமல்லவா! எல்லாம் நன்மைக்கே. விவாதங்கள் வாதத்தில் முடித்து வீழ்த்தி விடும். படைத்தவரே எல்லாம் பார்த்துக் கொள்வார்.

***************************
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்,

93458நம்பிக்கைகளுக்கு வாழ்த்துகள் .....

மலையை சாய்க்க மலை அளவான ஆயுதம் தேவை இல்லை ,,,சின்ன உளி போதும்.............

பாலின் தன்மை மாற ஒரு துளி விசம் போதும்...

அது போலத்தான் சங்கராச்சாரியார் மீது சுமத்தபட்டுள்ளவற்றில் சிறு துளியாவது நிரூபிக்கபட்டால்......

ரமணர்,கிருபானந்த வாரியார்,பரமாச்சாரியர்கள் நல்ல வேளை இல்லை

aren
20-12-2004, 01:45 AM
தமிழக அரசாங்கம் இந்த அளவு இந்த கேஸில் தீவிரம் காட்டுவது எதற்கு என்று தெரியவில்லை. அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இதில் முழு மனைப்பாக இருக்கின்றனர். இந்த அளவு மற்ற கேஸ்களிலும் காட்டினால் தமிழக அரசு எந்த விதமான பேதமும் காட்டுவதில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் வேறு ஏதோ உள் காரணம் இருக்கிறது. அது வெளிவந்தால் இந்த கேஸின் உண்மைக்காரணம் புரியும். அதுவரை அனைவரும் பொருமையுடன் இருப்போம்.

சட்டம் அதன் வேலையை செய்யட்டும்.

gragavan
20-12-2004, 05:41 AM
Originally posted by சகுனி@Dec 17 2004, 02:35 AM
ஆமாம். இது காலம் கடந்து எடுத்த முடிவாகவே தோன்றுகிறது. என்று கடவுள் ஒருவன் மற்றுமே என முடிவு செய்து வழிபடுகிறார்களோ அன்றுவரை இதுபோன்ற செயல்க்ளுக்கு ஆதரவு இருக்கத்தான் செய்யும்.

93400

இல்லை சகுனி. ஒன்று என்று முடிவெடுக்க நினைத்தால் இதுதான் நன்று என்று சண்டையும் வரும். ஒன்று என்று சொல்கிறவர்களும் இந்த விடயத்தில் குறை வைத்ததாகத் தெரியவில்லை. ஒரு சிறுவன் மேல் நடந்த பாலியல் பலாத்காரம் பற்றியும் செய்திகள் வருகின்றனவே. வேதனையாக இருக்கிறது.

பிரச்சனை ஒன்றா பலவா என்பதல்ல. மூட நம்பிக்கை ஒழிய வேண்டும். அதுதான் இந்த மாதிரி குற்றங்களுக்கெல்லாம் முடிவு கட்டும். உள்ளத்திலும் நல்ல பண்பிலும் இருக்கும் இறைவனை அடைய நல்ல நெறிமுறைகள் உண்டு. அவற்றை பின்பற்ற வேண்டும். மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம் பழித்தது ஒழித்து விடின் என்ற குறள் நினைவிற்கு வருகிறது.

அன்புடன்,
கோ.இராகவன்

சகுனி
31-12-2004, 11:17 AM
விரைவில் நடிகைகள் சொர்ணமால்யா, சுகன்யா ஆகியோர் தனியே நடத்திய லீலைகள் முழுவிபரங்களுடன் அம்பலமாகும் என பத்திரிக்கைகள் பரபரப்புடன் தெரிவிக்கின்றன. அதுவரை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

karikaalan
01-01-2005, 06:58 AM
இளையவர் நாளை ஞாயிற்றுக்கிழமை (2.1.2005) பிற்பகலில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதற்கான மு`தீபுகள் நடந்து வருகின்றனவாம்.

===கரிகாலன்

பாரதி
01-01-2005, 08:16 AM
ஆ... செய்திப்பத்திரிக்கைகளுக்கும் முன்பே தகவல் தந்த அண்ணலுக்கு மிக்க நன்றி.

Peruyir
09-01-2005, 06:25 PM
[கடந்த டிசம்பர் 29ம் திகதி புதன்கிழமையன்று அரசுத்துறை வாகனம் ஒன்று வேலூர் சிறைக்குள் நுழைந்தது நேராக ஜெயேந்திரர் இருக்கும் அறைப் ப்க்கமாக நிறுத்தப்பட்ட அந்தக் காரிலிருந்து இறங்கினர் சில போலீஸ் உயர்திகாரிக்ள். அவரகளுடன் மாத்தூர் சுவாமிகளும் வந்திருந்தார். மாத்தூர் சுவாமிகளை ஜெயேந்திர்ரிடம் அழைத்துச் சென்ற அந்த அதிகாரிகள்,அவரிடம், சாமி நீங்க சொல்லுங்க விஜயேந்திரர் தீடீர்னு கைது செய்யப்பட்டால் மடதின் பூஜை மற்றும் பிற விசயங்க்ளை இவரைக் கவனிதுக் கொள்ளச் சொல்லுங்கள். என்று கேட்டுக் கொண்டன்ராம். இதற்கு ஜெயேந்தரர் முழுச் சம்மதம் தெரிவித்தாலும் கூட அப்பொழுதும் அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டுத் திரும்பி விட்டாராம் மாத்தூர் சுவாமிகள்.
இப்படி காஞ்சி மடத்தில் பூஜை செய்வ்த்ற்கு அர்சே ள் தேடிக் கொண்டிருப்பது மடத்தின் தர்வளர்களை கோப்த்தின் உச்சிக்கே கொண்டு போயிருக்கிறது. அதுனட்டுமின்றி மடத்தில் பூஜை செய்வதற்கு யாரவது ஒருவரை நியமித்துவிட்டு காஞ்சிமடத்தின் டிர்ஸ்டியாக தனக்கு வேண்டிய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டால் மடத்தையே தனது கண்ரோலில் கொண்டு வந்து விடலாம் என்ப்தும் தமிழக அரசின் என்று கூறுகிறனர் காஞ்சிமட பக்த்ர்கள்.
இதற்கிடையில் விஜயேந்திர்ரை விசாரணைக்கு அழைத்த போலீஸார்,அவரிடம் கடிகாஸ்ரமம் டிரஸ்ட் ப்ற்றியும் கேட்டிருக்கிறார்கள்.அந்த ட்ர்ஸ்டமடத்துக்குச் தான் அதைப்பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார் விஜ்யேந்திரர். அந்த் ட்ர்ஸ்ட்டின் நிர்வாகிகளில் ஒருவரான நாகராஜ அய்யரிடம் போலீஸார் விசாரித்த போதும் இதே பதிலைத்தாம் கூறியிருக்கிறார் அவர். விஜயேந்திரரின் ப்திலைக் கேட்ட போலீஸார், என்ன சாமி கடிகாஸ்ரமம் டிரஸ்ட் பற்றி உங்களுக்கும் தெரிய்ல், உங்க் தம்பி ரகுவுக்கும்தெரியல்ல, அந்த டிர்ஸ்டின் டிர்ஸ்டி நாகராஜ அய்யருக்கும் தெரியலை அப்படீன்னா அந்த டிர்ஸ்டில் இருக்கிற இருபது கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்துடலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.
விசார்ணை முடிந்து வெளியில் வந்த விஜயேந்திரர் இதை மடத்தின் வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறார். கொதித்துப் போன அவர்கள், இவா என்ன கொலை வழக்கை விசாரிக்கிறாளா அல்லது முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பணம் சேர்க்கிறிள? என்று குமுறியிருக்கிறார்கள். குமுதம் ரிப்போட்டர்]

பார்த்தீர்களா உண்மைத்தீயின் சுவாலை மெதுவே வெளி வருகிறது. மடதின் மடியில் தான் மாடம் அவர்களுக்கு கண்.
.................................................................
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்

karikaalan
15-01-2005, 08:16 AM
காஞ்சிமடத்தை அரசுடைமை ஆக்கும் ஆவணம் சனாதிபதி கலாம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்போம் காங்கிரசாட்சி என்ன சொல்கிறது என்று.

===கரிகாலன்

aren
18-01-2005, 12:36 AM
ஆண்மீகம் இருக்கும் இடத்தில் அரசு இருக்ககூடாது என்பது என்னுடைய கருத்து.

pradeepkt
18-01-2005, 03:13 AM
ஆன்மீகம் மட்டுமே இருக்கும் இடத்தில் அரசு இருக்கக்க்கூடாது என்பது என்னுடைய கருத்து.

gragavan
18-01-2005, 04:31 AM
அரசு வழக்கைக் கொண்டு செல்லும் முறை அத்துணை சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து. ஆரம்ப சூரத்தனம் இப்பொழுது பேரத்தனமாக மாறிவருகிறது. வழக்கு எங்கெங்கோ செல்வது நன்றல்ல. செயேந்திரர் தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். விசயேந்திரர் செய்திருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இரண்டுமே நடக்கின்ற வழியைக் காணோம். மடத்தில் அரசு கைவைப்பது சரியல்ல என்றே தோன்றுகின்றது. இது அரசு நடவடிக்கையின் நம்பகத்தன்மையையே குலைக்கிறது.

அன்புடன்,
கோ.இராகவன்

முதன்முதலில் ஒளியும் ஒலியும்..............................
http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=94831& (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=105&p=94831&)

பரஞ்சோதி
18-01-2005, 05:43 AM
Originally posted by gragavan@Jan 18 2005, 08:31 AM
அரசு வழக்கைக் கொண்டு செல்லும் முறை அத்துணை சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து. ஆரம்ப சூரத்தனம் இப்பொழுது பேரத்தனமாக மாறிவருகிறது. வழக்கு எங்கெங்கோ செல்வது நன்றல்ல. செயேந்திரர் தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். விசயேந்திரர் செய்திருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இரண்டுமே நடக்கின்ற வழியைக் காணோம். மடத்தில் அரசு கைவைப்பது சரியல்ல என்றே தோன்றுகின்றது. இது அரசு நடவடிக்கையின் நம்பகத்தன்மையையே குலைக்கிறது.

அன்புடன்,
கோ.இராகவன்

முதன்முதலில் ஒளியும் ஒலியும்..............................
http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=94831& (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=105&p=94831&)

94835என்னுடைய கருத்தும் இதுவே தான்.

poo
18-01-2005, 08:33 AM
அரசு அகலக்கால் வைப்பதாக மிரள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பிரச்சினையை செப்டம்பர்வரை இழுத்து தேர்தல் ஆதாயம் காண தயாராகிவிட்டனர் என்பது நிதர்சனம்.

Peruyir
19-01-2005, 04:40 PM
ஸ்ரீரங்கதில் கணேஷய்யர் என்பவர் தனது பெயரை பால் கணேஷ் அய்யர் என்று மாற்றிக் கொண்டு, சென்னையில் ஆர்ச் பிஷ்ப் அருளப்பா என்பவரைச் சந்தித்தார். ''திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதுமட்டுமல்ல, மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் ஒரு காலத்தில் சர்ச்சாக் இருந்தது. இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது'' என்றார்.
ஆர்ச் பிஷ்ப் அருளப்பா இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த்ர். பால் கணேஷ் அய்யர் இது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகக் கேட்ட பல லட்சம் ரூபாய் பணத்தையும் அவருக்குக் கொடுத்தார். பால கணேஷ் அய்யர்
ஆராச்ச என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றினார். அதற்கான செலவையும் ஆர்ச்பிஷப் அருளப்பா
வே ஏற்றுக் கொண்டார்.
இறுதியில், தானே செப்புத் தகட்டில் எழுதி தனது வீட்டிலேயே மண்ணில் புதைத்து எடுக்கப்பட்ட தகடுகளை ஆதாரமாகக் காட்டினார். அதனால் பால் கணேஷ் அய்யர் மோசடி அம்பலமானது. இந்த சம்பவத்தில் இரண்டு வழக்குகள் நீதி மன்றத்திற்குச் சென்ற்ன.
ஆர்ச் பிஷப் அருளப்பா , பால் கணேஷ் அய்யர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்ததை அடுத்து
பால் கணேஷ் அய்யர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
ஆர்ச் பிஷப் அருளப்பா மீது ஒரு மோசடி பேர் வழியை நம்பி சர்ச் பணத்தைக் கையாடல் செய்ததாக ஒரு வழக்கினை சர்ச் ஊழியர்கள் இருவர் தொடுத்தனர்.
[COLOR=blue]இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது ஆர்ச் பிஷப் சார்பில் வாதாடிய வழக்கறிஞ்ர்''ஆர்ச் பிஷப்பை நீதி மன்றம் விசாரிக்க முடியாது. அவர் இந்த நாட்டின் குடிமகன் அல்ல. அவர் போப்பாண்டவர அரசாளும் வாடிகனின் குடிமகன். அவர்மீது வாடிகன் நீதி மன்றம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். இதற்கு இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது'' என்று வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி சத்தியதேவன் அதிர்ச்சி அடைந்த்தார். சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்த நீதிபதி, இந்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுமாறு மத்திய அரசை வ்லியுறுத்தி தீர்ப்பு வழங்கினார்.[COLOR=blue]
[COLOR=red]ஆர்ச் பிஷப் மீது இந்திய அர்சாங்கம் அவ்ர் கொலை செய்தால்கூட நடவடிகை எடுக்க முடியாது என்ற உண்மை அன்றுதான் வெளியே வந்தது.[COLOR=red]
இப்போது சட்டம் எல்லோருக்கும் சமம் என்று கூறுபவர்கள், ஆர்ச் பிஷப் விஷயத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்? எந்த் நாட்டில் ஆர்ச் பிஷப்புக்கு ஒரு சட்டம், இந்து சன்னியாசிக்கு ஒரு சட்டம். இந்த்த லட்சணத்தில் சட்டம் எல்லொருக்கும் சமம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.''
_ஆர்.பி.வி. எஸ்.மணியன் (மாநில துணைத் தலைவர் வி.ஹெச்.பி)
_'விஜய பாரதம்' 10.12.04 இதழ்
ஒம் சக்தி ஜனவரி 2005
_________________________________
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

gragavan
20-01-2005, 04:40 AM
இதென்ன புதுக்கதை. இது உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சியா என்ன? அப்படி நடந்திருந்தால் ஆர்ச் பிசப்பின் மீது கண்டிப்பாக இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுதான் முறை. அப்படி எடுக்காமல் விட்டது தவறு. அன்றைக்கு நடந்த தவறு இன்றைக்கு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அன்றைக்கு அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் இன்றைக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கூடாது.

அன்புடன்,
கோ.இராகவன்

aren
20-01-2005, 05:54 AM
Originally posted by gragavan@Jan 20 2005, 01:40 PM
இதென்ன புதுக்கதை. இது உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சியா என்ன? அப்படி நடந்திருந்தால் ஆர்ச் பிசப்பின் மீது கண்டிப்பாக இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுதான் முறை. அப்படி எடுக்காமல் விட்டது தவறு. அன்றைக்கு நடந்த தவறு இன்றைக்கு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அன்றைக்கு அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் இன்றைக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கூடாது.

அன்புடன்,
கோ.இராகவன்

94881


ராகவன்,

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!! அப்படியென்று யார் உங்களிடம் சொன்னது. அது ஆட்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக்கொண்டேயிருக்கும். நம் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் வெளியே இருக்க தகுதியுடையவர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் சாதகமாக இருக்கிறதே.

Peruyir
20-01-2005, 03:48 PM
இராகவன் அவர்களே,
ஒம் சக்தியில் 35வது பக்கத்தில் பாருங்கள், அவர்களும் இது உண்மையா? என்றே
பிரசரித்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆக்கிய சட்டம் அவர்கள் மததினருக்கு ஆதரவாகத்தானே
இருக்கும். ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.


http://www.omsakthionline.com/download.asp


________________________________________
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

gragavan
21-01-2005, 05:42 AM
Originally posted by aren@Jan 20 2005, 11:54 AM

ராகவன்,

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!! அப்படியென்று யார் உங்களிடம் சொன்னது. அது ஆட்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக்கொண்டேயிருக்கும். நம் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் வெளியே இருக்க தகுதியுடையவர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் சாதகமாக இருக்கிறதே.

94898

அது உண்மைதான் ஆரேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஏட்டிலுள்ள சட்டப்படி அனைவரும் ஒன்றுதானே! என்ன செய்வது? வல்லான் வகுத்ததே வாய்க்கால்! :-(

வேதனையுடன்,
கோ.இராகவன்

gragavan
21-01-2005, 05:51 AM
Originally posted by Peruyir@Jan 20 2005, 09:48 PM
இராகவன் அவர்களே,
ஒம் சக்தியில் 35வது பக்கத்தில் பாருங்கள், அவர்களும் இது உண்மையா? என்றே
பிரசரித்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆக்கிய சட்டம் அவர்கள் மததினருக்கு ஆதரவாகத்தானே
இருக்கும். ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.


http://www.omsakthionline.com/download.asp
________________________________________
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

94939

பேருயிர், அன்றைய்ய ஆங்கிலெயர் ஆட்சியில் அப்படி இருந்திருக்குமானால் அதை நாமொன்றும் சொல்ல முடியாது. ஆனால் இன்றைக்கும் அதே சட்டங்களும் விதிமுறைகளும் தொடருமானால், அது தவறு என்பதே என் கருத்து. அனைத்து மதத்தினரையும் சமமாக அரவணைத்துச் செல்வதே உண்மையான செக்யூலரிசம். அதைப் பின்பன்றுகின்றவர்கள் யாரையும் காணோம்.

இந்திய எல்லைக்குள் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தண்டைக்கு உரியவராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதற்கேற்ற மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Peruyir
22-01-2005, 02:00 PM
பாருங்கள் ராகவன்,

இன்றைய நிலையில் சட்டத்தை மாற்றச் சொல்லி யார் சொல்வது, யாரிடம் சொல்வது. இது எல்லாம் நடக்கும் காரியமா? எம்மால் முடிந்தது, ''தர்மம் தலைசாய்ந்து, அதர்மம் ஓங்கும் போது அதர்மத்தை
அழிக்கவும், தர்மத்தைக் காக்கவும் வருவேன்'' என்று சொல்லிச் சென்ற கிருஷ்ணரை வாருங்கள்,
வாருங்கள் என்று அழைப்பது தான். வாழ்க வையகம் வழமுடன் வாழ்க!


_________________________________
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

pradeepkt
24-01-2005, 04:08 AM
அதெல்லாம் சரிதான்...
ஆர்ச் பிஷப்பாயிருந்தாலென்ன ஆனந்தபுரம் குருக்களாயிருந்தாலென்ன?
சட்டத்தின் முன் அனைவருமே சமமாகத்தான் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அதை அன்றைய அரசுகள் சமமாக்கி இருக்க வேண்டும்.
அது சரி, இந்த நிகழ்ச்சி நடந்தது எப்போது?
பிஜேபி ஆட்சிக்கு வருமுன்னா வந்தபின்னா வந்து சென்றபின்னா?
முதலிரண்டு சமயங்களிலெனில் மத்திய அரசு என்ன தூங்கிக் கொண்டா இருந்தது?
மதத் தலைவர்கள் அவரவர் ஆலயங்களை விட்டு வெளியே வந்ததுதான் கேடு.
எல்லாம் நம் தலை எழுத்து.

அன்புடன்,
பிரதீப்

Peruyir
24-01-2005, 02:55 PM
நீங்கள் டென்சன் ஆகாதீர்கள் பிரதீப்,
எது எது எங்கே எங்கே எப்ப எப்ப எப்படி எப்படி நடக்க வேணுமோ,
அது அது அங்க அங்க அப்ப அப்ப அப்படி அப்படி நடக்கும்.


-------------------------------------
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

பரஞ்சோதி
25-01-2005, 03:24 AM
Originally posted by Peruyir@Jan 24 2005, 06:55 PM
நீங்கள் டென்சன் ஆகாதீர்கள் பிரதீப்,
எது எது எங்கே எங்கே எப்ப எப்ப எப்படி எப்படி நடக்க வேணுமோ,
அது அது அங்க அங்க அப்ப அப்ப அப்படி அப்படி நடக்கும்.


-------------------------------------
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

95036இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்று முடிவாகும்.

pradeepkt
25-01-2005, 04:29 AM
அண்ணா, நானும் எல்லாம் வல்ல அந்த இறைவனை அப்படித்தான் வேண்டிக் கொள்கிறேன்.

நேற்றுக் கூடப் போலீசாரின் மெத்தனத்தை நீதிபதி "அடுத்து சாட்சி சொல்ல சாட்சாத் அந்த வரதராஜப் பெருமாளும் காஞ்சி காமாட்சி அம்மனும் வர வேண்டுமென்பீர்கள் போலும். உங்கள் நடவடிக்கையில் சந்தேகமுள்ளது" என்று நாக்கைப் (யாருடைய?) பிடுங்கிக் கொள்வது போல் கேட்டிருக்கிறார்.

அன்புடன்,
பிரதீப்

gragavan
25-01-2005, 04:59 AM
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப் படும்.
- வள்ளுவர்

காடாகொன்றோ நாடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
-ஔவையார்

நன்னெறி நல்குதல் வேந்தர்க்குக் கடனே
-புறநானூறு

அன்புடன்,
கோ.இராகவன்

மூன்று மலங்கள் எவையெவை?
http://www.tamilmantram.com/new/index.php?...043&#entry95043 (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=120&p=95043&#entry95043)