PDA

View Full Version : ரத்தக்கண்ணீர்...



rambal
14-04-2003, 05:59 PM
லஞ்சம்...
அமுலாக்கப்படாத
சட்டமாகிவிட்டது...

விலைவாசி...
பட்டமாய்
பறக்கவிடப்பட்டது...

திறமை...
இட ஒதுக்கீட்டில்
அடிபட்டது...

கல்வி...
நல்ல வருமானமுள்ள
தொழிலாக்கப்பட்டது...

ஜாதி...
இது இல்லாமல்
அரசியல் கஷ்டம்...

நேற்றைய ரவுடி...
இன்றைய MLA
நாளைய மந்திரி...

தேர்தல்...
ஜனநாயகமே
இல்லாமல்...

வாக்குச்சாவடி...
கள்ளஓட்டுகளின்
பள்ளியறையாக...

கடவுள்...
துப்பாக்கி
பாதுகாப்போடு...

ரவுடியிசம்...
ஆளுங்கட்சிக்கு
போலிஸ்..

எதிர்க்கட்சிக்கு
குண்டர்கள்
துணையோடு...

ஆகஸ்ட் 15...
சாட்டிலைட் சானல்களின்
சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளாக...

தியாகி...
தீக்குளித்த
தொண்டன்....

நீதிமன்றங்கள்...
குற்றவாளிகளை
நிரபராதியாக்கும் இடமாக...

மக்கள்...
வழக்கம் போல் வேடிக்கை பார்க்கும்
நல்ல பார்வையாளர்களாக...

நான்...
இதை எல்லாம் சொன்னதால்
பைத்தியமாக அல்லது தீவிரவாதியாக....

இளசு
14-04-2003, 09:16 PM
இதை எல்லாம் சொன்னதால்
பைத்தியமாக அல்லது தீவிரவாதியாக....

இல்லை கவிஞனே
ஒரு ஆழ்ந்த பார்வையாளனாக
அதை பதிப்பவனாக
படிப்பவரை பாதிப்பவனாக
அதன் மூலம் சாதிப்பவனாக....

gankrish
15-04-2003, 05:41 AM
ராம் நீ ஒரு இந்தியன்.

karikaalan
15-04-2003, 12:15 PM
ராம்பால்ஜி!

தெளிவான வரிகள். படிக்கவேண்டியவர்களைப் படிக்கச் செய்யவேண்டும். இதனை நகலெடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனுப்பவேண்டும்!

===கரிகாலன்

poo
15-04-2003, 01:27 PM
ராம்பால்ஜி!

தெளிவான வரிகள். படிக்கவேண்டியவர்களைப் படிக்கச் செய்யவேண்டும். இதனை நகலெடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனுப்பவேண்டும்!

===கரிகாலன்

நீங்கள்தான் செய்ய வேண்டும்...(அடுத்த தெருவில்தானே அவர்கள் இருக்கிறார்கள்?!!!)

-ராம் உன் சிந்தனை அபாரம்!!!

kaathalan
15-04-2003, 03:12 PM
ஒரு கலைஞன்(கவிஞனும் தான்) என்பவன் தன்னுடைய சமூகத்தின் மேல் பற்றுக்கொண்டவனாகவும் அதன் மேல் அக்கறை கொண்டவனாகவும் இருத்தல் வேண்டும் என்பார்கள்.......
முன்பு நான் உங்களுடைய கவிதைகளை ஆரம்பத்தில் வாசிக்கும் போது நீங்கள் கற்பனையில் மட்டுமே வாழ்கிறீர்கள் என்று, பின்னர் அதை எப்போதோ திருத்திக்கொண்டேன். மன்னிக்கவும்.

என்னைப்பொருத்தவரை சமூகத்தின் மேல் அக்கறையில்லாமல் இருக்கும் கலைஞனை விட, தன் சமூகத்தின் மேல் அக்கறையுள்ள கலைஞன் பைத்தியக்காரனாகவோ அல்லது திவிரவாதியாகவோ இருந்தால் அது எவ்வளவோ உயர்வானது என்பது என் கருத்து.

நீங்கள் வாழும் சமூகத்தின் மேல் அக்கறையுள்ள கலைஞன்!

rambal
15-04-2003, 06:23 PM
இப்பொழுதாவது என்னை புரிந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்..


அது என்னவோ
எல்லாப் பறவைகளும்
மீனைக் கொத்தித் தின்க
எனக்கு மட்டும் பெயர்
மீன்கொத்திப் பறவை என்று..


இளசு, பூ, நண்பன்
இவர்கள் அளவிற்கு
கற்பனை வளமோ,
தமிழ் வளமோ,
காதல் பலமோ என்னிடம் இல்லை..
இப்படி ஒரு பட்டாளமே இருக்க எனக்கு மட்டும் இந்தப் பெயர்.
என்ன செய்ய என் ராசி அப்படி..
முன்னொரு சமயம் என் நண்பர் வந்து கூறும் வரை எல்லோரும்
என்னை காதல் கவிஞன் என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார்கள்..

poo
16-04-2003, 06:00 PM
அய்யா... சாமி இதன் பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியா?!!! (என்னையெல்லாம் பெரியவங்க லிஸ்ட்ல சேர்க்கறீயே நியாயமா?!!.. உன்னை நினைக்கையில், உன் கவிதைகளை படிக்கையில் உள்ளத்துள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆச்சர்யம் வரும் எனக்கு!!)

kavitha
17-03-2004, 07:04 AM
இப்போதைக்கு படித்து யோசிக்கவேண்டிய கவிதை.
பாராட்டுக்கள் ராம். ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் ஒரு கவிதை எழுதுங்களேன்.

thamarai
17-03-2004, 07:24 AM
அத்தனையும் நடைமுறைவாழ்க்கையின் நிஜங்கள்...

வாழ்த்துக்கள்....

மூர்த்தி
18-03-2004, 03:53 AM
நண்பர் ராம் அவர்களின் சமூகப்பார்வைக் கவிதை நன்று.தற்போதைய உலகத்தை கண்முன்னால் நிறுத்திய அவருக்கு நன்றி.

habib
25-03-2004, 09:05 AM
இந்தியன் என்று சொல்லடா இதுதான் பாரத மண்ணடானு ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கரு நம்ப ராம் அவர்கள்,இந்திய குடி மக்களே நம்ப இந்திய தற்சமயம் இப்படி தான் இருக்குனு ரொமப தெளிவவே சொல்லிருகின்க ரொம்ப ரொம்ப நன்றி.

habib
25-03-2004, 09:07 AM
இந்தியன் என்று சொல்லடா இதுதான் பாரத மண்ணடானு ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கரு நம்ப ராம் அவர்கள்ரொம்ப ரொம்ப நன்றி.