PDA

View Full Version : மேனேஜர்மன்மதன்
29-10-2004, 06:09 PM
மச்சி , எனக்கு உதவி பண்ணுவியா மாட்டியா.."

"பண்றேண்டா, கண்டிப்பா பண்றேன், என்ன பண்ணனும் சொல்லு"

"மேனேஜர் போஸ்ட்ல இருக்கோங்கிற திமிறல அட்டகாசம் பண்ற ஸ்ரீராம நாம காலி பண்ணனும்.."

"அடப்பாவி, உனக்கு நல்லா ஏறிப்போச்சுன்னு நினைக்கிறேன், நான் கிளம்புறேன்"

"போடா போ, நேத்து எல்லார் முன்னாடியும் வச்சு திட்டினான்லே, அப்ப வந்து சிகரெட்ட பத்த வைச்சிகிட்டு அதால அவன் உடம்பு முழுக்க சூடு போடணும்னு சபதம் எடுத்தியே.. அதெல்லாம் சும்மா உதார்தானா?"

"ஆளை காலி பண்ற அளவுக்கு நான் யோசிக்கலைடா.. இது ரொம்ப ரிஸ்க்"

"ஆளை காலி பண்ண வேண்டாம் , வேலை மட்டும் காலி பண்ணிடுவோம்"

முரளியும், சேகரும் ரகசிய திட்டம் தீட்டி விட்டு வேலன் ஒயின்ஸிலிருந்து புறப்பட 10 மணி ஆகிவிட்டது...

மறுநாள் காலை,

ஸ்ரீராம் , அந்த இருவரையும் கூப்பிட்டு, "ஏம்பா உங்க நல்லதுக்கு சிலது செய்தா என்னையே கவுக்கலாம்னு பார்க்கிறீங்களே.. இதுவரை இரண்டு தடவை மேலிடத்திருந்து மெமொ உங்களுக்கு வந்திருக்கு. வேலையை விட்டு நீக்கவும் சொல்லிட்டாங்க.. நான் தான் உங்களை கவர் பண்றேன். ஏன் என்னையே வேலையை விட்டு தூக்க அலையறீங்க.."

"அது இல்லை ஸ்ரீராம், சும்மா மப்புல எதாவது உளறியிருப்போம், ஆமாம் யார் இதெல்லாம் உன்ட்ட போட்டு கொடுக்கிறது"

"நானே என் காதால் கேட்டேன், நேற்று அந்த பாரில் நான் உங்க பக்கத்து சீட்டலதான் உட்கார்ந்திருந்தேன். எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே"

"இனி இப்படியெல்லாம் உளறி வைக்க மாட்டோம், ப்ராமிஸ்.. "

"சரி..சரி.. வேலையை போயி பாருங்க"

சிறிது நேரம் கழித்து பியூன் வந்து முரளியை மேலிடத்தில் கூப்பிடுகிறார்கள் என்றான். ஜெனரல் மேனேஜர் கேபினுக்கு போய் வந்த முரளியின் கையில் ஒரு மெமோ இருந்தது. அதை வாங்கி பார்த்த சேகருக்கு முகம் கொஞ்சம் மாறியது. அதிலிருந்து முரளியிடம் சரியாக பேசவேயில்லை..

அன்றிரவு

சேகர் வீடு,

சேகர் மனைவி சேகரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என கேட்டாள்...

"இத்தனை நாள் என் நண்பனாக பழகிய முரளி ஒரு ஒட்டுண்ணி, என் கூட இருந்தே குழி பறிச்சுட்டான், ஸ்ரீராமை என் பக்கத்திலே வச்சுகிட்டே என் வாயை கிளறிட்டான். என்னை காட்டி கொடுத்து எனக்கு கிடைக்க இருந்த ப்ரொமொஷனை அவன் எடுத்துகிட்டான் துரோகி...

முரளி வீடு

முரளியின் முகம் சோகமா இருப்பது கண்டு ஏன் என்ற பதறிய படி அவன் மனைவி கேட்டாள்..

"பாவம் சேகர், அவனுக்கு கிடைக்க இருந்த ப்ரொமோஷன் எனக்கு கொடுத்திட்டாங்க. ஏன்னு நான் கேட்டதுக்கு , ஸ்ரீராம் வேலை மாற்றலாகி வேற பிராஞ்சு போறான், அப்ப அந்த வேலை சேகருக்கு கிடைக்கனும்னாங்க.. அதுக்கு ரொம்ப நாள் ஆகுமாம்.. அது தெரியாம நான் தான் அவன் ப்ரோமோஷனை கெடுத்திட்டேன்னு என் மேல் கோபமா இருக்கான்"

ஸ்ரீராம் வீடு

மிகவும் சந்தோஷக்களைப்பில் இருந்த ஸ்ரீராமிடம் அவள் மனைவி காரணம் கேட்டாள்...

"என்னை எப்படியாவது வேலையில் இருந்து தூக்கிடணும்னு அந்த முரளி பயலும் , சேகர் பயலும் ரொம்ப குறியா இருந்தாங்க, இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா எப்படியாவது என் வேலைக்கு ஆப்பு அடிச்சுடுவாங்க அதான் அவங்களை ஒரு ஐடியா பண்ணி பிரிச்சுட்டேன்' என்று ஒரு திருட்டு புன்னகை புரிந்தான்.................

-மன்மதன்


பி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க :D :D

thamarai
29-10-2004, 07:10 PM
இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க

நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒர் சம்பவத்தைப்பற்றி கதையாக எழுதியிருக்கிறீகள்.
வாழ்த்துக்கள்....
(புன்னகை கதைதான் எனக்குப் பிடித்திருந்தது. நகைச்சுவையோடு இருந்தது. மற்ற கதையை இன்னும் வாசிக்கவில்லை தேடி வாசிக்கின்றேன்)

thempavani
30-10-2004, 04:44 AM
பி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க


அண்ணாத்தே இன்னும் எப்புட்டு நாளுக்கு இதைச் சொல்லியே எங்க உசுரை வாங்குவீங்க :wink: :wink: ...

கவலையேபடாதீங்க.. மன்ற ஆண்டுவிழாவில் "கதை மன்னன்" பட்டம் ( பட்டம் தான்! :D ) கொடுத்துடலாம்.....

pradeepkt
31-10-2004, 05:29 PM
கலக்குங்கய்யா மம்முதா...
இந்த 3 பேரு வியூ பாயிண்டைக் கடைசி நேரத்தில போட்டு உடைச்சீகளே... அதுதான் மேட்டரு.

அன்புடன்,
பிரதீப்

இளசு
01-11-2004, 07:06 AM
ஒரு முடிச்சு.. மூன்று மனச்சிக்கல்கள்..

பிரதீப் அவர்கள் சொன்னதுபோல் கடைசியில் "போட்டு உடைச்ச" ஸ்டைல்..

கலக்கல்ஸ் மன்மதன்...

இசாக் பெருமைப்படுவார்... எங்களைப்போலவே...

மன்மதன்
01-11-2004, 08:28 AM
வாழ்த்திய தாமரை , லொள்ஸ் பண்ணிய தேம்பா , பாராட்டிய ப்ரதீப் நண்பருக்கு என் நன்றிகள்..

என்னை மேன்மேலும் எழுத தூண்டிக்கொண்டிருக்கும் இளசு அண்ணாவுக்கு நன்றிகள்..

அன்புடன்
மன்மதன்

gragavan
02-11-2004, 06:14 AM
கலக்குங்கய்யா மம்முதா...
இந்த 3 பேரு வியூ பாயிண்டைக் கடைசி நேரத்தில போட்டு உடைச்சீகளே... அதுதான் மேட்டரு.

அன்புடன்,
பிரதீப்

நல்லா எழுதீருக்கப்பா! பாராட்டுகள். இன்னும் நெறய எழுது. நானுங்கூட இந்த மும்முனை நினைப்புகளை வைத்து ஒரு கதை எழுதலாம் என்றும் இருந்தேன். பிரதீப் அவர்களுடன் கூட கதை பற்றி விவாதித்தேன். மிகவும் எச்சரிக்கையாக கையாளவேண்டிய முறை இது. நான் பிரதீப்புடன் விவாதித்தது மிகவும் கனமான கரு. நீ ஒரு சின்ன விஷயத்தை அருமையாக கையாண்டிருக்கிறாய் மம்முதா. அதனால் உன்னை கிண்டல் செய்யாமல் பாராட்டுகள் மட்டும்.

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

மன்மதன்
02-11-2004, 07:12 AM
மனசில பட்டதை பட்டென சொல்றீங்க.. ரொம்ப நன்றி..
அன்புடன்
மன்மதன்

gragavan
02-11-2004, 07:25 AM
மனசில பட்டதை பட்டென சொல்றீங்க.. ரொம்ப நன்றி..
அன்புடன்
மன்மதன் கடவுளே! மம்முதா நீ தப்பாப் புரிஞ்சிக்கிட்ட. கிண்டலு வழக்கமா நீ என்ன செஞ்சாலும் நாஞ் செய்யுறதுதானே. இந்தக் கதைய நீ நல்லா எழுதீருக்குறதுனால ஒன்ன கிண்டாம மன்னிச்சி விட்டுட்டு மாறுதலுக்குப் பாராட்டுறேன்னு சொன்னேன். விளக்கமாச் சொல்லாதது தப்பாப் போச்சு. வழக்கம் போல கிண்டலே செஞ்சிருக்கனும். தப்புப் பண்ணீட்டேன். தப்புப் பண்ணீட்டேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
02-11-2004, 07:57 AM
அதே..அதே..
அன்புடன்
மன்மதன்

பாரதி
04-11-2004, 01:34 PM
மேனேஜரின் திருட்டுப்புன்னகையுடன் கதை முடிந்திருக்கிறது. சில விசயங்கள் சிலருக்கு ஒன்றும் இருக்காது. வேறு சிலருக்கு...? உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் மன்மதன்.

மன்மதன்
04-11-2004, 07:19 PM
நன்றி பாரதி..
அன்புடன்
மன்மதன்

mythili
20-11-2004, 06:29 AM
கதை நல்லா இருக்கு....

ஆனா மதன்கிட்ட எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க சொல்லிப்புட்டேன்
:lol: :lol: :lol: :lol: :lol:

அன்புடன்,
மைதிலி

மன்மதன்
20-11-2004, 09:30 AM
கதை நல்லா இருக்கு....

ஆனா மதன்கிட்ட எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க சொல்லிப்புட்டேன்
:lol: :lol: :lol: :lol: :lol:

அன்புடன்,
மைதிலி

ஹாஹ்ஹ்ஹாஹ்.. :lol: :lol: :lol:
நன்றி மைதிலி...
அன்புடன்
மன்மதன்

Iniyan
17-12-2004, 05:37 PM
அப்படி போடு. ஜகஜ்ஜாலக் கில்லாடி - மிடில் மேனஜ்மெண்ட் வேலைக்கு தகுந்த ஆள் தான் ஸ்ரீராம். சந்தேகமே இல்லை.

aren
19-12-2004, 01:35 AM
அருமை மன்மதன் அவர்களே. இவ்வளவு திறமை வைத்திருக்கிறீர்கள். முதலில் ஒன்றும் தெரியாததுபோல் சில கதைகளை எழுதி இப்பொழுது உங்களுடைய உண்மையான திறமையை எங்களுக்கு காட்டியிருக்கிறீர்கள். அபாரம். தொடருங்கள்.

மேனேஜர் - ஒரு கல்லில் மூன்று மாங்காய்

மன்மதன்
02-01-2005, 08:20 AM
நன்றி ஆரென்..
அன்புடன்
மன்மதன்

அமரன்
28-10-2007, 09:33 PM
ஜாலியாக ஆரம்பித்து, சிக்கலை உள்நுழைத்து, நட்பை வலுவாக சொல்லி, புரிந்துணர்வின்மையை விளம்பி, தந்திரத்தை பயில்வித்து, மனேஜரை முடிச்சவுக்கி ஆக்கி, என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது கதை. எளிமையான நடையில் தரமான கதை. மகிழ்வுடன் பாராட்டுகின்றேன்.

நேசம்
29-10-2007, 10:33 AM
ஆம் விஷேசமில்லை.ஏனென்றால் நடைமுறையில் நடக்க கூடிய விசயமாக தான் எனக்கு படுகிறது.இதை எளிய நடையில் தந்த மன்மதனுக்கு வாழ்த்துக்கள்

ஓவியன்
29-10-2007, 02:36 PM
ஒரு பிரச்சினை,
ஆனால் அதற்கு மூன்று கோணங்கள்...!!!

மூன்றையும் எடுத்துக் கையாண்ட விதம் மிக அருமை மன்மி ஜி!!! :)

மன்மதன்
29-10-2007, 03:51 PM
பாராட்டுகளுக்கு நன்றி அமரன், நேசன், ஓவியன்..
யுனிகோடாக்கிய அன்புரசிகனுக்கு எனது ஸ்பெஷல் நன்றி..

ஷீ-நிசி
29-10-2007, 04:00 PM
மன்மதன்.. சூப்பர்பா.....

சும்மா 'நச்' னு முடிச்சிருக்கியே!