PDA

View Full Version : டவுனு கல்லூரி



மன்மதன்
29-10-2004, 06:06 PM
நான் அப்பவே அப்பாகிட்டே சொன்னேன்.. எனக்கு டவுனிலே போயி எல்லாம் படிக்க முடியாது.. கிராமத்துலேயே வளர்ந்திட்டேன்.. பேசாம உங்க கூட ஒத்தாசையா இருந்திடறேன்.. விவசாய கணக்கு வழக்கெல்லாம் பார்த்துட்டு இங்கெனெயே இருந்திடறேனு சொன்னதை கேட்டாத்தானே.. அதெல்லாம் முடியாதுன்னு ஒத்தை வரில 'போயி படி, படிச்சுட்டு உசரதுக்கு வரணும்'ன்னு சொல்லி அனுப்பினார்..

இங்கே முதல் நாளே உசரதுக்கு வந்துட்டேன்.. ஏதோ எளவு ராக்கிங்காம்... .. இந்த காலேஜ் ரேக்கிங் எலவெல்லாம் எவனுக்கு தெரியும்.. ஏதோ நீச்சலடிக்க சொல்வானுவுளா, சிகரெட் வாங்கியாந்து கொடுக்க சொல்லுவானுவொளா? என்ற மனக்குழப்பத்தில் காலேஜில் மொதல் நாளு உள்ளே நுழஞ்சா வகுப்புக்கே உட மாட்டேன்றானுவோ.. கேள்வி மேலே கேள்வியா கேட்கறானுவோ.. அதுவும் காதலப்பத்தி..அட அதுவும் என்கிட்ட..மாணவனா சேர்ந்து கிராமத்துல வாத்யாரை கலாய்ப்பொம்.. இங்கே மாணவனே மாணவனை .. அடச்சே... சொல்றதுக்கு வெட்கமா இருக்கு..

வணக்கம் சொல்லியவுடனே ரொம்ப சின்சியாரிட்டியா கேள்விய ஆரம்பிக்கிறானுவோ.. 'யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..'

'டேய் இதெல்லாம் தெரிஞ்சு என்னதான் பண்ண போறிங்க.. அரியர்ஸ் கம்ப்ளீட் பண்ண என்னோட பதில் உதவுமா? பசங்க ரொம்பத்தான் அலையிறானுங்கப்பா..' மனதுக்குள் திட்டிகிட்டே..'பழக்கமில்லிங்க.' என்றேன்..

'ஆஹ்.. பழக்கமில்லையா.. வேற என்னதான் பழகிகிட்டே..'

'எனக்கு லவ் பண்ணின அனுபவம் இல்லீங்க..'

வரிசையா ஒண்ணாம்புல சரசுகிட்ட ஆரம்பித்த காதல் ரண்டாவது படிக்க போது துல்சிகிட்ட ஒட்டிகிச்சு.. அப்படியே ஒவ்வொரு வகுப்பா மாறி மாறி பண்ணாட பண்ணண்டாவது படிச்சாச்சி. நம்மூருல நம்ம ரவுசுதான். ஆனாலும் அசலூருக்கு அதுவும் டவுனுக்குள்ளே நுழஞ்சது நம்ம டகரு எல்லாம் பொட்டி பாம்பா அடங்கிடுச்சுல்ல.. நாமதான் அன்னலட்ச்மி, கௌரி, மீனு என்று அல்லாரையும் சுத்தி நிக்க வைச்சு, கோகுலத்தில் கிருஷ்ணன் மாதிரி சேஷ்டை பண்ணிய காலம் போயி இன்று பொண்ணுங்க கேட்குற கேள்விக்கெல்லாம் பதிலு சொல்ல முடியாம தவிக்கிறேன்.. ச்சே.. கிராமத்துலேயே காலேஜு இருந்திருந்தா எவ்ளோ சௌகரியமா இருந்திருக்கும்.. டவுனு பொண்ணுங்க வந்தா கூட கவுனு பறக்க வச்சிருப்போம்ல..

'சரி.. அப்ப நீ இங்கே படிக்க லாயக்கில்லாத ஆளு, கிளம்பு ஊர பாக்க''

'(அய்யோ, பக்கத்திலே நிற்கிற அம்சவேணியை லவ் பண்ணி என்னோட தெறமையை காண்பிக்கலாம்னா, ஊருக்கே திருப்பி அனுப்புறாவுவளே.. என்ன பண்ணலாம்..சரி கொஞ்சம் அவுத்து விடலாம்...)

நாக்கை புடிக்கிற மாதிரி கேட்கறானுவோ.. என்ன சொல்லலாம்.. ஆங்... 'நாலாவது படிக்கிறப்ப நான் நாகலட்சுமியை லவ் பண்ணினேன்'

'அவ கொத்தினாளா?' சூழ்ந்திருந்த கூட்டத்திலேர்ந்து எவளோ ஆர்ப்பரித்தாள்..

எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னது..

'என்னடா யோசிக்கிறே.. நாகலட்சிமி என்னா பண்ணினா..'

'ஒண்ணும் பண்ணலைங்க.. அப்ப நாலாவதுதான் பட்டிச்சேனா.. ஒண்ணும் தெரியாது..

'நாக லட்சுமிக்கு என்னை பார்த்தாலே வெட்கம்.. ஓடி ஒளிஞ்சுக்குவா.. எங்க ஸ்கூலூ மரத்திலே நிறைய புலிமாங்கா அவளுக்கு பறித்து தருவேன்..'

'ஆஹா, புலிமாங்கா கொடுத்து கரெக்ட் பண்ணினவனா நீ'

'இத பாருங்க, இப்படி இடையிடையிலே கேட்டா எனக்கு சொல்ல வராது, ஆமாம்'

'என்னடா ஓவரா பேசுறே, சரி..சரி.. உன்ட்ட எங்க டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.. ஒரு சல்யூட் வைச்சுட்டு போ..'

நான் சாதாரண சல்யூட் வைக்க ..

'இப்படி சாதா சல்யூட் எல்லாம் வேண்டாம், ஒரு ஸ்பெஷல் சல்யூட் வை'

'அது என்னங்க ஸ்பெஷல் சல்யூட்'

'அங்கே பொத்தி, சும்மா ஹாயா ஜம்ப் பண்ணி வையிடா, இது கூட தெரியாம உன்னை எந்த முட்டாபயடா இங்கே சேர்த்தது'

'பிரின்சிபால்தான்'

அடுத்த நாள்...

சைக்கிளில் வேகமாக மிதித்து கல்லூரிக்கு வரும் போது நேற்று கும்பலில் கலாய்த்த ஒருவன் என்னை ஓரங்கட்டினான்.. மருவாதையாய் கூப்பிட்டான்..

'பிரதர்.. கல்லூரி முதல் நாள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. கோபம் இல்லையே...'

'ஆஹா.. பொடியை தூவறானே.. தும்மிடக்கூடாது' என்று மனதுக்குள் நினைத்து 'அட பரவாயில்லிங்க.. எனக்கு தெரிஞ்ச விசயம்தானே'

'அப்பாட இப்பத்தான் நிம்மதி.. நீங்க பக்கத்து கிராமத்திலேர்ந்துதானே வர்ரிங்க..'

'ஆமாம்.. நீங்க..'

'நான் உங்கூருக்கு பக்கம்.. கல்லூரில் வரும் போது உங்க கிராமம் வழியாத்தான் வருவேன்.. '

தலையை ரொம்பவேத்தான் சொறியிறானே.. என்ன விஷயமாக இருக்கும்..

'இல்லை.. வர்ர வழியில ஒரு கோவில் இருக்கில்லையா.. அதன் பக்கத்து வீடு செண்பகம் என்னோட ஆளு, நீங்கதான் பேசி எப்படியாவது கரெக்ட் பண்ணி கொடுக்கணும்..'

'டக்'கென்று என் தலையில் இரண்டு கொம்பு முளைத்த மாதிரி இருந்தது.. நேற்று எல்லோர் மத்தியிலும் அன்னை அவமானப்படுத்திட்டு இன்று என் கிராமத்து குயிலையே நீ அமுக்கிறியா..எத்தனை பேரு கனவிலே அவ பேரை உளறுரானுவோ.. அவ்ளோ ஈசியா நீ மடக்கிடுவியா.. இரு..இரு..

'அதுக்கென்ன .. பண்ணிட்டா போச்சு..உங்க பேரு என்ன?'

'முருகேஷ்'

'நிறைய கேஷ் இருக்குமோ?'

சிரித்தான்.. ஊரிலே நாங்கதான் பண்ணையார் குடும்பம்..

(போடா வெண்ணை.. நேற்றைய சம்பவத்துக்கு நான் உன்னை பழிக்கு பழி வாங்காம விடமாட்டேன்...)

நான் வகுப்பில் அவனை எப்படி பழி தீர்ப்பது என்று சீரியஸா நினைத்துக்கொண்டிருந்த போது 'மின்னல்' ஒன்று ஒரு பல் செட்டுகளுக்கு இடையில் மின்னியது. கண்கள் கூசினாலும் என்ன அது என்று பார்த்தேன்.. அடடா.. ரம்பை நேரில் வந்த மாதிரி ஒரு அழகு.. என் வாய் மூடாமல் பார்த்து கொண்டிருந்த என்னை பக்கத்தில் இருந்தவன் உசிப்பினான்..

'டேய் அது பைனல் இயர் முருகேஷின் தங்கச்சி..பேரு மீனா..பணக்கார இடம்.. பையனும் ஒரு மாதிரி.. பார்த்துக்கோ..'

அடுத்த நாள்..

செண்பகத்திடம் கெஞ்சாத குறையாக...

'இதோ பாரு செண்பகம்.. அவன் ஒண்ணும் உன்னிடம் டைம் பாஸ் பண்ணனும்னு சொல்லலை.. ஊர் சுத்தணும்னு ஆசைப்படலை.. இங்கே இருக்கிற பசங்க எல்லாம்.. ஏன் என்னையும் சேர்த்து , உன்னிடம் வழியிறோமே.. ஆனால் முருகேஷ் ரொம்ப டீசண்ட் டைப். உன் ப்ரெண்ட்சிப் வேணும்னு ஆசைப்படறான். அவனிடம் ஒரு ஹலோ மட்டும் சொல்லிடேன்'

முதல் முறை இன்னொரு பையனுக்கு வக்காலத்து வாங்கும் என்னை ஆச்சரியமாக பார்த்தாள் செண்பகம்..

இந்த ஹலோ மட்டும் முருகேசுக்கு கிடைத்தால்.. மீனாவின் ஹலோ எனக்கு கிடைக்கும்.. அந்த முருகேஷ் பய மட்டும் இல்லை, எந்த பயலும், என்னிடம் என் காதல் அனுபவத்தை கேட்டுத்தெரிந்து கொள்ள தேவையில்லை..ஹிஹி.

----
மன்மதன்

பி.கு.. இது இரண்டாவது கதை.. கதையில் உண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுததான் கதை கதை மாதிரி வருமாம்.. இரண்டாவதுதானே..பொறுத்தருள்க..

pradeepkt
29-10-2004, 07:28 PM
மம்முதா...
சொந்தக் கதையா?
நடத்துங்க நடத்துங்க.
இதுக்கே இப்படின்னா...
விசேஷத்தோட என்னென்ன வருமோ தெரியலயே!!

அன்புடன்,
பிரதீப்

இளசு
01-11-2004, 07:15 AM
பலரின் ஆட்டோகிராபில் இப்படியும் ஒரு பக்கம் இருக்கக்கூடும்.

கதைக்கருவும் சொன்னவிதமும் சபாஷ் சொல்லவைக்கின்றன..

மன்மத வாஆஆஆஅரமா இது..!!!

பாராட்டுகள்..

அறிஞர்
01-11-2004, 07:40 AM
மன்மதா... இப்படி அப்படி... முயற்சி செய்து வருகிறாய்....

யார் உனக்கு எப்ப ஹலோ சொல்ல போறாங்க....

மன்மதன்
01-11-2004, 08:51 AM
மம்முதா...
சொந்தக் கதையா?
நடத்துங்க நடத்துங்க.
இதுக்கே இப்படின்னா...
விசேஷத்தோட என்னென்ன வருமோ தெரியலயே!!

அன்புடன்,
பிரதீப்

நன்றி ப்ரதீப்.. விஷேசம் வரும்..ரும்...ம் :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
01-11-2004, 08:55 AM
மன்மதா... இப்படி அப்படி... முயற்சி செய்து வருகிறாய்....

யார் உனக்கு எப்ப ஹலோ சொல்ல போறாங்க....

தினமும் சொல்றாங்க :wink: :wink: :wink: .. எல்லோரும் சொல்றாங்க.. :lol: :lol:
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
01-11-2004, 08:56 AM
பலரின் ஆட்டோகிராபில் இப்படியும் ஒரு பக்கம் இருக்கக்கூடும்.

கதைக்கருவும் சொன்னவிதமும் சபாஷ் சொல்லவைக்கின்றன..

மன்மத வாஆஆஆஅரமா இது..!!!

பாராட்டுகள்..

நன்றி இளசு அண்ணா..

இது கதை வாஆஆஆரம்..பம்..

அன்புடன்
மன்மதன்

gragavan
02-11-2004, 06:19 AM
நல்ல முயற்சி மம்முதா. இன்னமும் சிறப்பாக எழுது.

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

மன்மதன்
02-11-2004, 07:11 AM
நன்றி இராகவன் சார்.. நான் முயற்சிக்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

gragavan
02-11-2004, 07:31 AM
மம்முதா! இந்தக் கதையப் பத்தி நானு இன்னோன்னு சொல்ல மறந்துட்டேன். ஒங்கிட்ட நல்ல எழுத்து வளம் இருக்கு. அத இன்னமுஞ் செம்மையா பயன்படுத்தனும். குமுதம் ஒரு பக்கக் கதைகள் எழுதாத. நீ நல்லா எழுதுற. ஆனாலும் தங்கக் கரண்டில பாயாசம் பரிமாறு. புரிஞ்சதா!

அதென்ன சாரு மோருன்னுகிட்டு. இத்தன நாளு பேரச்சொல்லித்தான கூப்பிட்டுகிட்டு இருந்த. திடீர்னு என்னாச்சு?

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
02-11-2004, 07:56 AM
அது.. இல்லிங்க்.. இராகவன்.. ச்சும்மா.. சாரே..சாரே..சாம்பாரேன்னு .. சொல்றதுகுள்ளே...இப்படி..
சரி..சரி.. குமுதம் கதை எழுதலை. கொஞ்சம் வெயிட்டான சப்ஜெக்ட்டா இனி எழுதறேன். சரியா.. ஆனா அப்பப்ப குமுதம்,விகடன் ஒரு பக்க கதையும் எழுதினாத்தானே ஆசுவாசப்படுத்திக்கலாம்... உங்க சப்போர்ட் இருக்கிற வரை நான் எழுதலாம்..
அன்புடன்
மன்மதன்

Iniyan
17-12-2004, 05:39 PM
சோழியன் குடுமி சும்மாவா ஆடும்னு செண்பகத்துக்கு தெரியாம போச்சே

aren
19-12-2004, 01:29 AM
மலரும் நினைவுகளா?? அருமை!! சிறுவயதில் என் அளை கணக்கு செய்ய அவளுடைய தம்பியை முதலில் கணக்கு செய்ததை நினைவு படுத்துகிறது உங்கள் கதை.

தொடருங்கள். நன்றாக எழுதுகிறீர்கள்.

மன்மதன்
02-01-2005, 08:23 AM
நன்றி இனியன், ஆரென்.. உங்கள் மலரும் நினைவுகளை நான் கிளறிவிட்டதே இந்த கதையின் வெற்றி...
அன்புடன்
மன்மதன்

mythili
21-03-2005, 04:31 AM
கதை எப்படி போகும்னு நினைச்சிட்டு இருக்கறப்போ கதையை முடிச்சிட்டியேலே!!!!!

நல்லா எழுதி இருக்கலே... :D :D

அன்புடன்,
மைத்து

மன்மதன்
21-03-2005, 06:36 AM
Originally posted by mythili@Mar 21 2005, 10:31 AM
கதை எப்படி போகும்னு நினைச்சிட்டு இருக்கறப்போ கதையை முடிச்சிட்டியேலே!!!!!

நல்லா எழுதி இருக்கலே... :D :D

அன்புடன்,
மைத்து



நன்றி மைத்து.. உண்மையிலேயே இன்னும் எழுதியிருக்கணுமோ.. :D :D
அன்புடன்
மன்மதன்

mythili
01-04-2005, 04:12 AM
நன்றி மைத்து.. உண்மையிலேயே இன்னும் எழுதியிருக்கணுமோ.. :D :D
அன்புடன்
மன்மதன்


இதைத்தான் எதிர்பாராத திருப்பம்னு சொல்லுவாங்களோ :D :D :D

அன்புடன்,
மைத்து

அமரன்
18-08-2007, 08:35 AM
அடடா..மன்மியின் கதை சொக்க வைத்துவிட்டதே. ஆரென் அண்ணாவின் கடந்தகால(மான) நினைவுகளை மீட்க வைத்துவிட்டதே. நல்ல ஐடியாவுக்கு நன்றி சொல்ல இன்னும் எத்தனைபேர் வரப்போறாங்களோ?

அன்புரசிகன்
18-08-2007, 08:54 AM
பலரது பழய கதைகளை கிளறிவிட்டதாமே............ நன்றாக இருக்கிறது.. (கதை)

அமரன்
18-08-2007, 09:03 AM
நன்றி என்பாரென எதிர்பார்க்க நன்று என்ற அன்புக்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றேன்..

அன்புரசிகன்
18-08-2007, 09:04 AM
அமரா... வரவர நீங்க சும்மா சொல்வதும் எனக்குப்புரிய கஷ்டமாக இருக்கிறது.

ஓவியா
01-09-2007, 10:05 PM
மன்மதன் கதை பிரமாதம், அதுவும் அன்னியன் ஸ்டைலில் மனதிற்குள் பேசும் வசனம். நச்சுனு வயசு பசங்க கருவா தேடி புடிச்சு எழுதியுள்ளீர்கள், கதை அசத்தலாக இருக்கு, ரொம்பவே ரசித்தேன்.

சாரே சாம்பாரே வசனமும் ஹி ஹி ஹி.

பாராட்டுக்கள்.

மன்மதன்
20-11-2007, 05:42 PM
அடடா..மன்மியின் கதை சொக்க வைத்துவிட்டதே. ஆரென் அண்ணாவின் கடந்தகால(மான) நினைவுகளை மீட்க வைத்துவிட்டதே. நல்ல ஐடியாவுக்கு நன்றி சொல்ல இன்னும் எத்தனைபேர் வரப்போறாங்களோ?

நன்றி அமரன்..:)

மன்மதன்
20-11-2007, 05:42 PM
பலரது பழய கதைகளை கிளறிவிட்டதாமே............ நன்றாக இருக்கிறது.. (கதை)

நன்றி அன்புரசிகரே..(திரியை தூண்டிவிட்டதற்காகவும்..:))

மன்மதன்
20-11-2007, 05:43 PM
மன்மதன் கதை பிரமாதம், அதுவும் அன்னியன் ஸ்டைலில் மனதிற்குள் பேசும் வசனம். நச்சுனு வயசு பசங்க கருவா தேடி புடிச்சு எழுதியுள்ளீர்கள், கதை அசத்தலாக இருக்கு, ரொம்பவே ரசித்தேன்.

நன்றி ஓவியா..இப்பவெல்லாம் எழுத நேரமே இல்லை..;)


சாரே சாம்பாரே வசனமும் ஹி ஹி ஹி.

பாராட்டுக்கள்.

ஓவர்ர்ர்..:rolleyes:

பூமகள்
20-11-2007, 05:56 PM
டவுனு கல்லூரிக்கு போயி மன்மதன் அண்ணா...
செஞ்ச சேட்டை தான் இவையோ??

இரண்டாம் கதை என்று சொல்ல முடியாத படி... நல்ல கதையாக்கம்..
சொல்லாடல்..
சுறுசுறுப்பா தொய்வில்லாம கதை நகரும் பாங்கு அருமை.

பாராட்டுகள் மன்மதன்ஜி.

உதயா
20-11-2007, 06:09 PM
காலதாமதமான பார்வை. இருப்பினும் நல்ல ஒரு உண்மை கதை! அப்புறம் என்ன ஆச்சு?

மன்மதன்
20-11-2007, 06:39 PM
டவுனு கல்லூரிக்கு போயி மன்மதன் அண்ணா...
செஞ்ச சேட்டை தான் இவையோ??

இரண்டாம் கதை என்று சொல்ல முடியாத படி... நல்ல கதையாக்கம்..
சொல்லாடல்..
சுறுசுறுப்பா தொய்வில்லாம கதை நகரும் பாங்கு அருமை.

பாராட்டுகள் மன்மதன்ஜி.


நன்றி பூமகள்.. நான் செஞ்ச சேட்டை இல்லை இது..ச்சும்மா கற்பனைதான்.:rolleyes:

மன்மதன்
20-11-2007, 06:40 PM
காலதாமதமான பார்வை. இருப்பினும் நல்ல ஒரு உண்மை கதை! அப்புறம் என்ன ஆச்சு?

எல்லாம் செட் ஆயிடுச்சு..:icon_ush::D

உதயா
21-11-2007, 03:16 AM
எல்லாம் செட் ஆயிடுச்சு..:icon_ush::D
ஒரு வரியில் இப்படி சொன்னா பத்தாது... கல்லூரி முறைப்படி... பார்....... டிடி எல்லாம் இல்லையா?

பென்ஸ்
21-11-2007, 03:40 AM
ஹஹா மன்மதா...

என்ன இது கதை தலைப்பு தவறா???

ஆட்டோகிராப்ன்னு இருக்கனுமோ???

மன்மதன்
21-11-2007, 05:51 AM
ஒரு வரியில் இப்படி சொன்னா பத்தாது... கல்லூரி முறைப்படி... பார்....... டிடி எல்லாம் இல்லையா?

பார் போலாம்..எக்ஸர்சைஸ் பண்ண... டிடி எல்லாம் எடுத்த அனுப்ப முடியாது..:D:D

மன்மதன்
21-11-2007, 05:52 AM
ஹஹா மன்மதா...

என்ன இது கதை தலைப்பு தவறா???

ஆட்டோகிராப்ன்னு இருக்கனுமோ???

அட .. மறுபடியும் நம்ம பழைய ஆட்டோவை நியாபகப்படுத்துறீங்களே..:D

உதயா
21-11-2007, 05:18 PM
பார் போலாம்..எக்ஸர்சைஸ் பண்ண... டிடி எல்லாம் எடுத்த அனுப்ப முடியாது..:D:D
அனுப்ப கஸ்டம் எல்லாம் படவேண்டாம். கூப்பிடும் தூரத்தில் தானே இருக்கிறேன். வந்து விடுகிறேன்.

பூமகள்
21-11-2007, 06:08 PM
நான் செஞ்ச சேட்டை இல்லை இது..ச்சும்மா கற்பனைதான்.:rolleyes:
அப்போ... சேட்டை செஞ்சிருக்கீங்க?? ஆனா இங்க சொல்லலை...

சரியா மன்மதன்ஜி..??:cool::D (சும்மா லுலுவாயிக்கு கேட்டேன்,... கோவிச்சிக்காதீங்க..:frown:)

எப்படி மடக்கிட்டேன் பார்த்தீங்களா??:rolleyes: :icon_b:

மன்மதன்
21-11-2007, 06:26 PM
அனுப்ப கஸ்டம் எல்லாம் படவேண்டாம். கூப்பிடும் தூரத்தில் தானே இருக்கிறேன். வந்து விடுகிறேன்.

ஃப்ளைட் புடிக்கணுமே..பரவாயில்லையா..:D

மன்மதன்
21-11-2007, 06:30 PM
அப்போ... சேட்டை செஞ்சிருக்கீங்க?? ஆனா இங்க சொல்லலை...

சரியா மன்மதன்ஜி..??:cool::D (சும்மா லுலுவாயிக்கு கேட்டேன்,... கோவிச்சிக்காதீங்க..:frown:)

எப்படி மடக்கிட்டேன் பார்த்தீங்களா??:rolleyes: :icon_b:

லுலுவாயிக்கு கேட்டாலும் லுலுமூக்குக்கு கேட்டாலும் 'சேட்டை நிறைய செஞ்சிருக்கேன்'னுதான் சொல்வேன்.. இதுக்கு எதுக்கு கோவிக்கணும்..:D

பூமகள்
21-11-2007, 06:35 PM
லுலுவாயிக்கு கேட்டாலும் லுலுமூக்குக்கு கேட்டாலும் 'சேட்டை நிறைய செஞ்சிருக்கேன்'னுதான் சொல்வேன்.. இதுக்கு எதுக்கு கோவிக்கணும்..:D
நோட் பண்ணுங்க பா... நோட் பண்ணுங்க பா...!! :eek::sprachlos020::rolleyes:
வாக்குமூலம் கிடைச்சாச்சு...! :p:cool:
அடுத்து இதை அண்ணிக்கு அனுப்பனுமே..!:aetsch013::lachen001:

நன்றிகள் மன்மதன்ஜி..!:)

மயூ
27-11-2007, 02:57 AM
ஹா.. ஹா....~~~!!!! மலரும் முதலாமாண்டு நினைவுகள்...!!!! கிளறிவிட்டதற்கு நன்றி மன்மதன். ஆனாலும் உங்கட கதையில எத்தனை பொண்ணுங்க... வாழ்க உங்கள் அனுபவம்.

டேய் முதல் நாள் கம்பஸ் பேகேக்க காலில ரபர் செருப்புத்தான் போட்டுப் போகோணும். அதைவிட சேர்ட் போட்டு இன் பண்ணோணும் ஆனா பெல்ட் கட்டக்கூடாது.

மவனே இப்படி போகாட்டி உன்னைப் பின்னிப் பெனலெடுத்திடுவாங்கள். இவ்வாறு என் நண்பர்கள் நான் பல்கலை செல்ல முதல் பயமுறுத்தியது இன்றும் ஞாபகம் உள்ளது.

சரி போனாப் போகுது என்று சேர்ட் போட்டு இன் பண்ணி, பெல்ட்டு கட்டாமல் (ரபர் செருப்புப் போட மனம் வரேல) போயி அங்க பார்த்தா எங்களுக்கு கிரிபத் (தமிழில் பாற்சோறு என்று சொல்லலாம்) தந்து வரவேற்றாங்கள்!!! அப்புறம்தான் விசயமே தெரிஞ்சுது எங்கட பக்கல்டியில ராக்கிங்கு இல்லீயாம்!!! அட.. சீ.. எல்லாம் சப்புன்னு போயிடிச்சு!!!! (இது வரைக்கும் நிசம்)



அதுக்குப் பிறகு பச்சில இருக்கிற பெட்டைகளின்ட பெயர் தெரியவே 3 மாசமாகிட்டுது. அதில அரைவாசி செமஸ்டர் ஓடிட்டுது. இப்ப கிட்டத்தட்ட 3 ஆண்டு ஆகப்போற நிலையில அங்க இருக்கிற அழகான பொட்டையையும் யாராவது ஒருத்தன் ஓட்டிட்டு இருக்கான்.... கம்பஸ் போறதுக்கே விருப்பமில்லீங்கோ (சும்மா.. ஒரு பீலா)

மன்மதன்
27-11-2007, 07:18 AM
ஹா.. ஹா....~~~!!!! மலரும் முதலாமாண்டு நினைவுகள்...!!!! கிளறிவிட்டதற்கு நன்றி மன்மதன். ஆனாலும் உங்கட கதையில எத்தனை பொண்ணுங்க... வாழ்க உங்கள் அனுபவம்.

கதையிலே மட்டும்தான்னு சொன்னா நம்பவா போறீங்க..:D:D


அதுக்குப் பிறகு பச்சில இருக்கிற பெட்டைகளின்ட பெயர் தெரியவே 3 மாசமாகிட்டுது. அதில அரைவாசி செமஸ்டர் ஓடிட்டுது. இப்ப கிட்டத்தட்ட 3 ஆண்டு ஆகப்போற நிலையில அங்க இருக்கிற அழகான பொட்டையையும் யாராவது ஒருத்தன் ஓட்டிட்டு இருக்கான்.... கம்பஸ் போறதுக்கே விருப்பமில்லீங்கோ (சும்மா.. ஒரு பீலா)

கேட்கறவன் கேனப்பயலா இருந்தான்னா எறும்பு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொல்வாங்களாம் - நன்றி இதயம்..

மனோஜ்
10-12-2007, 05:45 PM
கதை அருமை மன்மதன்
மீதி கதையை எந்தவருசம் சொல்லலாமுனு உத்தோசம்