PDA

View Full Version : முதற்காதல்..........



Nanban
19-10-2004, 05:50 PM
முதற்காதல்...........

நிழல் உலகின் ஆழ் மௌனங்களில்
சுயத்தின் வடி உருவம்
திமிறிக் கொண்டு கிடந்தது -
சிறகுகள் முளைத்த தேள்கள்
தீண்டித் தரும் இன்பத்துக்காய்....

நிகழ்வதாய் நினைக்கப்பட்ட
மரணத் தூண்டல்கள்
நிகழாமலே
ஒரு இடிதாங்கியில் வடிந்து
ஆழப் புதைந்தது மண்ணடியில்.....

சுயத்தின் தூல உருவம்
சேதாரமற்று அவனிடத்திலே.

என்றாலும் வருந்துகிறான் -
பேசப்படவுமில்லை
உணரப்படவுமில்லை
தன் முதற்காதலென்று......

thamarai
19-10-2004, 08:08 PM
சிலரது வாழ்க்கையில் முதற்காதல் என்பது பேசப்படாமல் உணரப்படாமல் மனதுக்குள் மெளனமாகவே... அழிந்து போயிருக்கின்றது.
முதற்காதலின் கவிவரிகள் ஒவ்வொன்றும் மிக அற்புதமாய் அமைந்திருக்கின்றது. எந்த வரியை நிலை நிறுத்திப்பார்ப்பது... அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்...



நிகழ்வதாய் நினைக்கப்பட்ட
மரணத் தூண்டல்கள்
நிகழாமலே
ஒரு இடிதாங்கியில் வடிந்து
ஆழப் புதைந்தது மண்ணடியில்.....

அருமை...

Nanban
20-10-2004, 08:07 PM
நன்றி தாமரை.......
விரிவான பாராட்டுரைக்கு......
மிக்க நன்றி......