PDA

View Full Version : முத்து.....



Nanban
19-10-2004, 04:47 PM
அலையின் நுரைப்பூச்சுகளில்
அவசரமாய் அலைந்து
உடல் நனைத்து
கடல் கண்ட திருப்தியுடன்
வெளியேறுகையில்
நான் பிரிந்து இரண்டாகினேன்....

ஆழியின் ஆழக்கருவறையின்
மௌன வெளிகளில்
வாய்மூடிக் கிடக்கின்றன
சில முத்து சிப்பிகள்....

மூச்சடக்கி முங்கியெழுந்து
முத்துகளைத் தேடியெடுத்து வர
ஆசை தான் -
தெவங்கிப் போகையிலே
கயிற்றைப் பிடித்திழுக்க
நம்பிக்கை கொண்ட ஒரு துணை
கரை மீது காத்திருப்பதாய் இருந்தால்......

ஆட்டம் போடும்
அலையின் இரைச்சலையே
கடலென
எல்லோரும் நம்பிக்கைக் கொள்ளும் பொழுது
மீண்டும் திரும்புவேன் என்ற
நிச்சயமற்ற முங்குதலுக்கு
முயலப்போவதில்லை என்றுமே....

நானும் நானும் இணைந்து
ஒருவாறு வெளியேகுகையில்
சில முத்து சிப்பிகள்
கடலில் இருந்து எடுக்கப்படாமலே
கிடக்கின்றன -
கால எல்லைகளற்ற கர்ப்பத்தில்...

Narathar
20-10-2004, 09:21 AM
அருமையான கவிதை!
முத்துக்களின் பெருமை பேசுவதோடு நில்லாமல்
முத்துக்குளிப்பவர்களது கஷ்டங்களையும் காட்டுகின்ற கண்ணாடி உங்கள் கவிதை

jawahar
20-10-2004, 04:17 PM
நண்பரின் கவிதை அருமை..தன்னுள் போகும் அனுபவத்தை கவிதையில் பேசுகிறீர்கள்..நன்று..

Nanban
20-10-2004, 07:20 PM
நண்பரின் கவிதை அருமை..தன்னுள் போகும் அனுபவத்தை கவிதையில் பேசுகிறீர்கள்..நன்று..

அத்தி பூத்தாற் போன்று வருகிறீர்கள் நண்பரே.... வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.... அது சரி, உங்கள் கவிதைகள் ஒன்றையுமே காணவில்லையே..... விரைவில் எதிர்பார்க்கலாமா...?

thamarai
23-10-2004, 07:23 PM
அலையின் நுரைப்பூச்சுகளில்
அவசரமாய் அலைந்து
உடல் நனைத்து
கடல் கண்ட திருப்தியுடன்
வெளியேறுகையில்
நான் பிரிந்து இரண்டாகினேன்....

ஆழியின் ஆழக்கருவறையின்
மௌன வெளிகளில்
வாய்மூடிக் கிடக்கின்றன
சில முத்து சிப்பிகள்....

அருமையாக உவமித்து... வடித்திருக்கிறீர்கள் கவிதையை.
வாழ்த்துக்கள்....

இளசு
02-11-2004, 06:23 AM
பார்வை.. எண்ணம் சிப்பிகள் மீது..
இன்று அல்லது நாளை தொட்டுவிடுவோம்
என்று நம்பிக் கை நீ..ண்டபடி..

தோளணைத்து ஊக்கம் சொல்லத் துணை இருந்து..
தேடல்கள் தொடர்ந்து..


இதுதான் வாழ்க்கை..

நண்பனின் கவிதை எழுப்பும் நினைவுகள் கனமானவை..

பாராட்டுகள்..

Nanban
08-11-2004, 05:44 PM
கடலளவு ஆழத்தில் கிடக்கும் சில உண்மைகள் முத்துகளைப் போன்றவை தான். தேடினால் கிடைக்கத்தான் செய்யும். ஆனால், அதை தேடி எடுத்து வரும் அளவிற்கு மனோ திடமும், நம்பிக்கையும், துணையும் தேவை தான். இல்லையென்றால், எல்லோரையும் போல நாமும் இருந்து விட்டுப் போகலாமே என்று தோன்றி விடும். மனம் ஒரு கட்டத்தில் சமாதானமாகி, பொய்யுடன் வாழத்துணிந்து விடும்.....

நன்றி நண்பர்கள் இளசு, தாமரை....

அக்னி
01-06-2007, 01:09 AM
ஆர்ப்பரிக்கும் கடல் நடுவே...
முத்துக்குளிப்பவனின் தேடல்...
அருமையான வர்ணிப்பு...

விகடன்
07-06-2007, 08:31 PM
நல்ல கவிதை நண்பரே நண்பன்.
என்னத்தை புதிதாக் பாராட்டிடப்போகிறேன். எல்லாவற்றையுந்தான் எனது உடன்பிறவா சகோதரர்கள் பாராட்டிவிட்டனரே!
நானும் அவர்கள் வழியிலேயே உங்களைப் பாராட்டுகிறேன்.
உங்களுடைய முத்தான வரிகள் இன்னும் வேண்டும் மன்றத்திற்கு என்று...