PDA

View Full Version : கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை துவக்கrajeshkrv
19-10-2004, 12:14 PM
கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை துவக்கம்
சென்னையில் 17 அக்டோபர் அன்று திரு.எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களால் நிறுவப்பட்டது.

முதல் சொற்பொழிவு ஆற்றியவர் கவிஞர் வாலி அவர்கள்

மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சாதனையாளர்கள் -
ஆம் - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கவி மார்க்கண்டேயர் வாலி, திரு.ஏ.வி.எம்.சரவணன், நல்லி குப்புசாமி,எஸ்.பி.முத்துராமன், மனோரமா, திரு.முரளி(ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்) ஆகியோர்.

துவக்க உரையாற்றியவர் எம்.ஏ.எம் அவர்கள். அவருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த தொடர்பு பற்றி கூறினார்.

பின்னர் நல்லி பேசினார்.

மனோரமா தான் இன்று இப்படி இருப்பதற்கு காரணம் கண்ணதாசன் என்று கூறினார்.

அடுத்த கட்டம் முக்கிய கட்டம்...ஆம் வாலி பேசினார்
கரவொலி தான் அரங்கமெங்கும்..
"கண்ணதாசனும் விஸ்வனாதனும் அன்று இணைந்தது ஆண்டவன் கட்டளை....
இன்று இணைந்தது அறக்கட்டளை... இவை இரண்டுமே அந்த ஆண்டவன் கட்டளை" என்று தொடங்கும் கவிதை ஒன்றை வாசித்தார். அவருக்கும் கவிஞருக்கும் இருந்த நட்பை பற்றி பேசினார்.

பின்னர் இசை நிகழ்ச்சி(எம்.எஸ்.வி -டி.கே.ஆர்)

பி.சுசிலாவை அழைக்க முதல் பாடலாக வணக்கம் வணக்கம் வணக்கம் பல முறை சொன்னேன்.

சுசீலாவின் குரலில் கான மழை

பின் மாதவி பொன் மயிலாள்
பின் எஸ்.பி.பாலா பாட வந்தார்
வான் நிலா நிலா அல்ல
எங்கேயும் எப்போதும்
கம்பன் ஏமாந்தான்
மற்றும் இனிமை நிறைந்த உலகம் இருக்கு (எல்.ஆர்.ஈஸ்வரியுடன்)

ஈஸ்வரி தனித்து
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
பட்டத்து ராணி பாடினார்

அறக்கட்டளை ஓங்கி வளர எல்லோரும் வாழ்த்தினார்கள்.

இதை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...

ராஜ்

thamarai
19-10-2004, 07:22 PM
இதை அறியத்தந்த தங்களுக்கும் நன்றிகள்...

சேரன்கயல்
20-10-2004, 06:50 AM
அறக்கட்டளை அமைத்தமை பாராட்டுக்குரியது...
கண்ணதாசனின் பாடல்கள் என்றாலே ஒரு பரவசம் நெஞ்சில் பரவத்தொடங்கிவிடுகிறது...
செய்தியை இங்கே பதித்த ராகேஷ் அவர்களுக்கு நன்றிகள்...

mania
20-10-2004, 07:15 AM
எனக்கும் ஏதாவது முன் தகவல் தெரிந்திருந்தால் ஒருவேளை நானும் கலந்து கொண்டிருப்பேன் ராஜ்.......
அன்புடன்
மணியா.....

gragavan
20-10-2004, 07:29 AM
ராஜேஷ். அருமையான விவரிப்பு. நேரில் சென்று பார்த்த உணர்வு. இத்தனை பிரபலங்களை நேரில் சந்தித்து, அவர்கள் வாயால் நேரிலேயே பாடக் கேட்டு.....அற்புதம். விசுவநாதனின் நாதமும் கண்ணதாசனின் தமிழும் கணவன் மனைவியாகக் குடித்தனம் நடத்தின என்றால் மிகையாகாது. அவர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளை. நன்று. நன்று.

அன்புடன்,
கோ.இராகவன்

வீணா புத்தகம் எழுதினாளா? என்ன கதை? இங்கே பாருங்கள்
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=90793#90793

மன்மதன்
20-10-2004, 07:59 AM
அருமையா விவரிப்பு ராஜேஷ்.. எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..
அன்புடன்
மன்மதன்

பாரதி
21-10-2004, 04:58 AM
நல்ல நிகழ்வை எங்களுடன் சிறப்பாக சொல்லி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ராஜேஷ்.

தஞ்சை தமிழன்
21-10-2004, 08:30 AM
ராஜ் கண்ட விழாவை எங்களுக்கு நேரில் விவரித்தமை சிறப்பாக உள்ளது.

aren
24-10-2004, 06:49 AM
செய்திக்கு நன்றி ராஜேஷ். இந்த அறக்கட்டளையின் சார்பாக என்னென்ன நல்ல காரியங்கள் செய்ய உள்ளனர். புதிய இசைக்களைஞர்களை வருவாக்குவார்களா? புதிதாக ஒரு இசைப்பள்ளி ஆரம்பித்து புதிய களைஞர்களை ஊக்குவிப்பார்களா?

இத்தனை ஜாம்பவான்கள் வந்திருந்ததிலிருந்து இது நிச்சயம் சாத்தியம் என்று தெரிகிறது.

அறக்கட்டளையின் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இளசு
24-10-2004, 10:13 AM
மீண்டும் ஒரு நல்ல செய்தி குருகுரு ராஜிடம் இருந்து..

நன்றியும் பாராட்டுகளும்.

அன்பின் ஆரென் சொல்வதுபோல் நல்ல சாதனைகள் இதனால் நிகழட்டும்.

எங்கள் வாழ்த்தும் ஆதரவும் எப்போதும் இருக்கும்.

இதையொட்டி புதிய நிகழ்வுகள், தேவைகள் இவற்றை அவ்வப்போது
இங்கே தாருங்கள் குருகுருவே.. நன்றி..


(அடுத்த தபா கலாய்ச்சிடலாம் மணியா.. சரீய்யா?/)

rajeshkrv
03-11-2004, 09:44 AM
http://www.hinduonnet.com/thehindu/thscrip.../10/22/&prd=fr&

இளசு
04-11-2004, 05:28 AM
குருகுருவுக்கு

சுட்டிக்கு மிக்க நன்றி..


மாலதி ரங்கராஜனின் கட்டுரை நேரில் பார்த்த நிறைவைக் கொடுத்தது.

வணக்கம் பலமுறை சொன்ன சுசீலாம்மாவின் குரல் அப்படியே இருப்பது அறிந்து மகிழ்ச்சி..

லால்லால்ல்லா... வான் நிலா - செய்தி சுவை!

காவேரிமைந்தன் யார்? அவரை உங்களுக்குத் தெரியுமா குருகுருவே?

rajeshkrv
04-11-2004, 05:35 AM
அவர் தான் கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்
தெரியும்.. சுசீலாம்மாவின் இணையதளத் திறப்புவிழாவிற்கு வந்திருந்தார்
கண்ணதாசனுக்கும் இதுபோல் செய்ய வேண்டும் என்றார்

தமிழ்குமரன்
06-11-2004, 03:40 PM
அற்புதம்...