PDA

View Full Version : பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும் - 2பரஞ்சோதி
13-10-2004, 12:32 PM
அத்தியாயம் - 2 இராகவ தரிசனம்


பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும் - 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4456)

நண்பர்களே! முதல் பகுதியை படித்து வரவேற்ற மற்றும் மனதுக்குள் திட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள். மேலும் மன்றத்தில் யாரையும் போட்டு வாங்கலாம் என்ற ரைட்ஸ் வழங்கிய (போட்டு வாங்கப்பட உள்ள) அனைவருக்கும் எனது நன்றிகள். உங்கள் கருத்துகள் எனக்கு தொடர்ந்து தேவை.தங்களை டீக்கடை நாயர் ஆபத்தில் இருந்து காப்பாற்ற வரும் நாயகன் யார் என்று ஆச்சரியமாக திரும்பி பார்த்தால், நம்ம இராகவன். ஓ பரம்ஸ் அவரையும் அண்ணா என்று தானே அழைப்பார் என்று மற்றவர்கள் மனதில் நினைத்துக் கொண்டார்கள். சேரன் மட்டும் கடுகடு என்று இருந்தார். ரோஸ்பவுடர் பூசி, ஜம்முன்னு இராகவன் தன்னுடைய பைக்கில் இருந்து இறங்கி, அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.

பரம்ஸ்: வாங்க அண்ணன், எங்கே, இந்த பக்கம்.

இராகவன்: நான் எங்கேல இங்கன வந்தேன், நீ தாம்லே சவுண்டு போட்டு கூப்பிட்ட. :twisted:

பரம்ஸ்: அண்ணே, எப்போ ஊருக்கு போறிய.

இராகவன்: அதாம்லே ரோசனை செய்றேன், பொரட்டாசி முடிஞ்சாப்லே போரோமுல்ல. :lol:

பூ: உங்க ஊரு பாஷையால இம்சையா போச்சுலே, ஏம்லே நம்ம தமிழ்ல கொஞ்சம் பேசும்லே. :evil:

பரம்ஸ் பூ முறைக்க, தலை உடனே, :twisted:

தலை: ராகவா, மேக்கப் எல்லாம் போட்டு எங்கே அவசரமாக போகிறாய்? :wink:

இராகவன்: அதுவா அண்ணா, நங்கநல்லூர் அனுமார் கோயிலுக்கு பழம்பெறும் நடிகை சரோஜாதேவி சாமி கும்பிட வந்திருக்காங்களாம், நானும் அங்கே போய் சாமி கும்பிட்டு, தொன்னையில் கொடுக்கும் புளியோதரையை சாப்பிட்டு, அதே தொன்னையில் சரோஜாதேவிக்கிட்ட ஆட்டோகிராப் வாங்கலாம் என்று போகிறேன்.

பரம்ஸ்: அதுகிடக்கட்டும் அண்ணே, டீ சாப்பிடுங்கண்ணே. அப்படியே பஜ்ஜி, முட்டை போண்டா சொல்லட்டா?

மன்மதன், அடப்பாவி, நான் கேட்டா போண்டா கிடையாது, இராகவன் கேட்டா பஜ்ஜி, சொஜ்ஜி, அண்டா போண்டா :twisted: :evil: மனதுக்குள் கருவ, தலை பாக்கெட்டில் இருக்கும் மீதி 40 ரூபாய்க்கு இன்றைக்கு வேட்டு தான், வீட்டிற்கு நடந்து போக வேண்டும் என்று நினைக்க, பூவிற்கு பஜ்ஜி பற்றி பலவிதமாக கனவுகள் வர, சேரன் கடு கடு தான். :twisted: :twisted:

இராகவன்: தம்பி, முட்டை போண்டா என்றதும் எனக்கு அவ்வையார் சொன்ன ஒரு பாடல் நினைவு வருது. ஒரு நாள் அவ்வையார் எம்பெருமான் முருகனை பார்க்க சென்ற போது..

உடனே தலை இராகவன் பேச்சை இடைமறித்து,

தலை: யாரப்பா அது, சீக்கிரம் டீ கொண்டு வா, அப்புறம் இராகவன் என்ன விசேஷம், வீட்டில் எல்லோரும் நலம் தானே.

இராகவன்: நம்ம வீட்டிலே விசேஷம் ஒன்றும் இல்லை, எல்லோரும் ஒன்றாக கூடி இருக்கீங்களே ஏதாவது விசேஷம்?

தலை ஒன்றும் இல்லையப்பா என்று சொல்ல வர, உடனே பூ, "ஏன் இல்லை, தலைக்கு வேலை போயே போச்", உடனே சேரன் பூவின் காலில் மிதிக்க, பூ வாயை மூடுகிறார். :oops: :cry:

இராகவன்: பூ, என்ன சொன்னீங்க, தலை, வெலை, இல்லை ஏதோ எதுகை மோனையாக இருக்குது. ஏதாவது புதுக்கவிதை எழுதுறீங்களா?

மன்மதன்: பூ எல்லாம் இப்போ கவிதை எழுதுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறார், தலைக்கும் எங்களுக்கும் ஒரு வேளை, வேலை கிடைத்தால் எழுதுவாராம்.

இராகவன்: என்ன தலைக்கு வேலை இல்லையா? உங்கள் எல்லோருக்கும் வேலை இல்லையா? எல்லோருக்கும் சேர்த்து ஒரே வேலையா? என்ன பரம்ஸ் இது? :?: :?: :?: :?: :?: :?:

தலை: யப்பா ராகவா, நானே புதிர் பகுதியில் இத்தனை கேள்விகள் கேட்டது கிடையாது? நீ ஒரே நேரத்தில் இத்தனை கேள்வியா? :!:

பரம்ஸ்: அண்ணே! நம்ம தலை வேலையை ராஜினாமா செய்து விட்டார் (தலையை பார்த்து கண்ணடித்து), அடிக்கடி சுற்று பயணம் செய்வதால் உடம்புக்கு ஒத்துவரலையாம். மேலும் சாட்டிலைட் வசதி கொண்ட லாப்டாப் கேட்டாராம், இருந்த டெக்ஸ்டாப்பையும் புடுங்கி விட்டார்களாம், அதான் வேலையை விட்டுவிட்டார்.

தலை பரிதாபமாக தலையை ஆட்டுகிறார். :oops: :cry:

இராகவன்: என்ன சேரன், என்ன யோசிக்கிறீங்க, ஒன்றுமே பேசமாட்டேங்குறீங்க. :shock:

சேரன்: ஒன்றும் இல்லை ராகவன், நான் ஏதாவது சொல்ல, நீங்க உடனே பாடத் தொடங்கிவிடுவீங்களோ என்று பயமாக இருக்குது. :evil:

இராகவன்: அது எல்லாம் ஒன்றும் இல்லை, இரண்டாவது இப்போ மூடு இல்லை, மூன்றாவது டீக்கடையில் எல்லாம் பாட வராது, நாலாவது..

பரம்ஸ்: அய்யோ அண்ணா, இதுக்கு பயந்து தான் சேரன் பம்மி போய் இருந்தார்.

தலை: ஏம்பா, நம்ம சிஷ்யர்கள் வேலை இல்லாம வெட்டியா என் வீட்டு குட்டி சுவரை தேய்கிறாங்க, ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யேன், உன் கம்பெனியில் சொல்லக் கூடாதா?

இராகவன்: ஆமாம் அண்ணா, இப்போ தான் நினைவுக்கு வருது எங்க கம்பெனியில் அலுவலக பணியாளராக ஒரு ஆள் தேவைப்படுகிறார், விளம்பரம் கொடுத்தோமே, நாளை இண்டர்வியூ, பேப்பரை பார்க்கவில்லையா? :idea:

மன்மதன்: பேப்பரையா? நாங்களா? ஏதோ பொழுது போகவில்லை என்றால் போண்டா சுற்றிக் கொடுக்க நாயர் கிழித்து வைத்திருக்கும் கிழிந்து போன தந்தியை படிப்போம், நாலு வரி இருக்கும், பின்னர் 8ம் பக்கத்தை திருப்ப என்று இருக்கும், எங்கே போய் திருப்புறது, நாயர் எங்க கழுத்தை திருக்கி விடுவார்.

நாயர்: எந்தா எண்ட பேரை யாரு விளிச்சது? சேட்டனை எங்கே காணாம்பட்டுல்லோ?

இராகவன்: ஒன்னும் இல்லை மாசே, கொரச்சு பணி ஜாஸ்தியாகி.

மன்மதன், கொரச்சு என்றால் குறைவு தானே, ஒரே முரண்பாடா இருக்கே. என்று தலையை சொறிய, :idea: :?: :!:

தலை: ஏம்பா ராகவா, நீ இங்கே எல்லாம் வருவாயா?

இராகவன்: ஆமாம் தலை, எப்போவாவது வயிறு சிக்கல் ஏற்பட்டால் இங்கே டீ குடித்தால் எல்லாம் சரியாகி விடும், நல்ல கைராசியான நாயர்.

சேரன்: அடப்பாவி நாயர், இப்படி கூட பெயர் வாங்கி இருக்கியா? :twisted:

நாயர்: நிங்கள் எந்தா பறையுது?

பூ: பறை அடித்து சொன்னால் தான் கொடுப்பாயா, டீ சொல்லி எவ்வளவு நேரமாச்சு?

நாயர்: எங்கன டீ கொடுக்கும் சாரே!, காசை கொடு சாரே!

பரம்ஸ்: நம்ம இராகவன் அண்ணன் வந்திருக்காங்க, அவரை நல்லா கவனிக்கனுமே, சரி நானே காசை கொடுக்கிறேன்.

எல்லோரும் காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம் என்று சொல்லும் முஷ்ரப்பை பார்ப்பது போல் ஆச்சரியமாக பார்க்க, பையில் கையை விட்டு துலாவிய பின்பு,

பரம்ஸ்: அய்யோ பர்ஸை வீட்டிலேயே விட்டு விட்டு வந்து விட்டேனே, சரி பரவாயில்லை அண்ணனுக்காக நான் கடன் சொல்கிறேன். :roll:

இராகவன்: தம்பி, அன்புக்கு கடன் படலாம், ஆனால் டீக்கு எல்லாம் கடன் படக்கூடாது, இதை தான் கம்பர் கடன் பட்டான் நெஞ்சை..

உடனே சேரன் மன்மதன் காலை மிதிக்க, மன்மதன் அய்யோ என்று அலற, பேச்சு திசை மாறியது.

இராகவன்: தம்பி நானே கொடுக்கிறேன், என்று பர்ஸை திறக்க அதில் ஒரு 500 ரூபாய் நோட்டு எட்டிப் பார்த்தது, படக்கென்று அதை எடுத்த சேரன், "யோவ் நாயரு இந்தாயா உன் கணக்கு தீர்ந்தது" என்று கூற நாயரும் விட்டால் கிடைக்காது என்று லபக் என்று வாங்கிக் கொண்டார். :lol: :lol: :lol:

ஒரு முறை தன்னை கருமி, இருமி தருமி என்று சொன்ன இராகவனை பழிவாங்கி, தன் கணக்கும் தீர்ந்தது போல் சேரன் புன்னகை செய்தார். :twisted: :P

இராகவன் உடனே பரம்ஸ் பார்த்து, கண்ணால் அடப்பாவி, இதுக்கு தான் ஊர்க்காரன்களோடு சேராதே என்று என் அப்பா சொல்லியிருக்கார், அவர் என்னை விட நல்ல அனுபவசாலி போல் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். :evil: :evil: :evil:

மன்மதன்: இப்போவாவது எனக்கு போண்டா வாங்கிக் கொடுக்கக்கூடாதா? இரண்டு ரூபாய் மீதி இருக்க்கே. :idea:

பூ: மன்மதன் கொஞ்சம் சும்மா இரு, ராகவன் நீங்க சொன்ன வேலை விசயம் என்னாச்சு?

பரம்ஸ்: பாயிண்டை புடிச்சுப்புட்டே பூ. :wink:

இராகவன்: நன்றி பூ, எங்க கம்பெனியில் நாளை இண்டர்வியூ, இதுவரை 126பேர் தங்களுடைய பயோடேட்டா கொடுத்திருக்கார்கள், உங்கள் நாலு பேருடைய பயோடேட்டாவையும் நான் உள்ளே வைத்து விடுகிறேன். ஆனால் இருப்பது ஒரெ ஒரு வேலை. நினைவில் இருக்கட்டும்.

சேரன்: ஒரு வேலைக்கு இத்தனை பேரா? தலை எப்படியும் நம்ம அணிக்கு தான் வேலை கிடைக்க வேண்டும் என்ன செய்யலாம்.

உடனே தலை ரொம்ப யோசிக்க, :idea: :idea:

பரம்ஸ்: என்ன தலை, மைதிலியின் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கை கண்டுபிடிக்க கூட இவ்வளவு நேரம் எடுக்க மாட்டீங்க. சரி எனக்கு ஒரு ஐடியா கிடைச்சாச்சு. 8) :lol:

மன்மதன்: என்ன ஐடியா பரம்ஸ். (மனசுக்குள், பரம்ஸ்க்கு பெரிய ஐடியாண்டி என்று நினைப்பு) :lol: :twisted:

கொஞ்சம் இருங்க என்று கூறி, நேரா நாயர் கடையில் இருக்கும் ஸ்வீட் பாக்ஸ் பக்கம் போய், அங்கே ஈக்கள் மொத்தமாக வாடகை இல்லாமல் குடித்தனம் நடத்த குத்தகை எடுத்திருக்கும் ஜாங்கிரி ஸ்வீட் ஒன்றை எடுத்து கையில் கொண்டு வர, சார்ஸ் கொண்ட எலியை கண்டு ஓடும் பூனை போல் ஒவ்வொருவராக விலகி நின்றார்கள், இராகவனோ இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொல்லி தப்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.

தலை: ஏம்பா பரம்ஸ், சூசைட் செய்ய உனக்கு வேறு ஏதும் கிடைக்கவில்லையா?

பரம்ஸ்: தலை இது தான் நம்ம அணிக்கு வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறது. :idea:

சேரன்: எப்படி பரம்ஸ், இண்டர்வியூ செய்கிறவருக்கு கொடுக்க போகிறாயா? :lol:

தலை: சபாஷ் சேரா, ஆமாம் இராகவா உன் கம்பெனியில் யார் யார் இண்டர்வியூ செய்வார்கள்? :?:

இராகவன்: தலை, எங்க மனிதவள மேம்பாட்டு மேனேஜர் தான் இண்டர்வியூ செய்வார்.

தலை: அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லேம்பா? எதாச்சும் ஐடியா ஐடியா கிடைக்கும். :!:

இராகவன்: எங்க மேஜேனர் ரொம்பவும் கரார் பார்ட்டி, யாருமே பதில் சொல்லமுடியாத அளவுக்கு கேள்விகள் கேட்பார்.
எப்போவும் ஏதோ நினைவில் இருப்பார், ஏதோ ஒன்றை செய்வது போல் இருப்பார். :idea:

இராகவன் சொன்னதை கேட்டதும் சந்திரமதி பட பூஜையில் ராமதாஸ் என்ற செய்த கேட்ட மாதிரி எல்லோரும் ஷாக் அடித்து திடுக்கிட்டு நின்றார்கள். உடனே

பரம்ஸ்: அவரது பெயர் என்னண்ணா?


இராகவன் சொன்ன பெயரைக் கேட்டு நாயர் கடை 10 ஜாங்கிரியை ஒரே நேரத்தில் சாப்பிட்டது போல் அதிர்ச்சியடைந்தார்கள்.

நண்பர்களே! யார் அந்த மேனேஜர், ஐவர் அணியினர் இண்டர்வியூவில் கலந்துக் கொண்டார்களா? வேலை கிடைத்ததா? எல்லாம் அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

[B](போட்டி எண் : 1 யார் அந்த மேனேஜர் என்று சரியாக சொல்பவர்களுக்கு நாயர் கடை ஜாங்கிரியில் 5, தனிமடலில் அட்டாச் செய்து அனுப்பப்படும்.)

gragavan
13-10-2004, 01:01 PM
தம்பி. உன்னுடைய எழுத்தும் பிரமாதம். நடையும் பிரமாதம். எல்லாம் பிரமாதம் போ! மொத்தத்துல எனக்கு வெச்ச ஐநூறு ரூவாச் செலவும் பிரமாதாம்.

என்னோட ஐநூறு ரூபாய்க்கு வேட்டு வெச்ச சேரா! ஒனக்கு நாளைக்கே அறம் பாடிர்ரேன். இப்பிடித்தான் ஒருவாட்டி கைலாசத்துல பெருமாளு.............
(எல்லோரும் ஓடுகிறார்கள்..........)

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
13-10-2004, 01:31 PM
அடடா.. என்ன அருமையா எழுதறப்பு... இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா.. நம்மகிட்ட அறிஞர்தானே இண்டர்வியூவில் மாட்டப்போறார்..
அன்புடன்
மன்மதன்

சேரன்கயல்
14-10-2004, 04:46 AM
சம்பந்தி பரம்ஸ...
கலக்கிட்டீக போங்க...சரளமா வருதே லொள்ளு கலந்த காமெடி...
மன்மதனும், தலையும் ,நீங்களும் சேர்ந்து பேசாம காமெடி படத்துக்கு வசனம் எழுதப் போகலாம்...
போதாக் குறைக்கு நம்ம ராகவனும் வந்து லொள்ளடிச்சுகிட்டுருக்கார்...
பேஷ் பேஷ் ரொம்ப ந(க)ன்னாயிருக்கு... :wink:

karikaalan
14-10-2004, 12:54 PM
பரஞ்சோதிஜி

கதாகாலட்சேபம் நல்லாவே பண்றீங்க... வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

Mathu
14-10-2004, 04:17 PM
பரம்ஸ் என்னமா போட்டு வாங்குறீங்க(வாருறீங்க)...!
பாவம் ஊர்காரர் கிட்ட 500/= லபக்கிடீங்களே.......!
இப்பதான் மனுசன் கைக்கெட்டினது வாய்க்கெட்டாம அவஸ்தைபடுறார்.. :P :wink:
தொடரட்டும் லொல்ஸ்.....
அது சரி அந்த மனேஜர் நம்ம அறிஞார் தானே..! :roll:

அறிஞர்
15-10-2004, 04:30 AM
ஏதோ நீங்க சேர்ந்து லொள்ளு பண்ணுகிறீர்கள்.. என்றல்லவா நினைத்தேன்.. இப்ப நம்ம தலையையும் சேர்து உருட்ட போறீங்களா.. சமாய்ங்க...

இன்னும் பல சிரிப்புத்தொடர்களை கொடுக்க வாழ்த்துக்கள்..

யாராவது புதுசா இந்த பக்கம் வந்தா தலையை பிச்சுக்குவாங்க....

பரஞ்சோதி
18-10-2004, 05:59 AM
தம்பி. உன்னுடைய எழுத்தும் பிரமாதம். நடையும் பிரமாதம். எல்லாம் பிரமாதம் போ! மொத்தத்துல எனக்கு வெச்ச ஐநூறு ரூவாச் செலவும் பிரமாதாம்.

என்னோட ஐநூறு ரூபாய்க்கு வேட்டு வெச்ச சேரா! ஒனக்கு நாளைக்கே அறம் பாடிர்ரேன். இப்பிடித்தான் ஒருவாட்டி கைலாசத்துல பெருமாளு.............
(எல்லோரும் ஓடுகிறார்கள்..........)

அன்புடன்,
கோ.இராகவன்

நன்றி அண்ணா,

கவலை வேண்டாம், விட்ட ஐநூறை வேற யார்கிட்டாயாவது மீண்டும் வாங்கி விடலாம். இனிமேல் யாரையாவது ஓட்ட வேண்டும் என்றால் உங்களை அழைத்தால் போதும் என்று சொல்லுறீங்க தானே. :lol:

பரஞ்சோதி
18-10-2004, 06:01 AM
அடடா.. என்ன அருமையா எழுதறப்பு... இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா.. நம்மகிட்ட அறிஞர்தானே இண்டர்வியூவில் மாட்டப்போறார்..
அன்புடன்
மன்மதன்

இண்டர்வியூ செய்ய இருப்பவர் அறிஞர் என்று கண்டுபிடித்ததால், போண்டாவுக்கு பதில் உனக்கு ஜாங்கிரி கொடுக்கிறேன். மிகவும் சரியான பதில், பாராட்டுகள். :lol:

gragavan
18-10-2004, 06:19 AM
இனிமேல் யாரையாவது ஓட்ட வேண்டும் என்றால் உங்களை அழைத்தால் போதும் என்று சொல்லுறீங்க தானே. :lol:என்ன செய்ய தம்பி.

சொல்லெடுத்து நான் பாடுங்கால்
பிடறியில் இடறும் பின்னங்கால்
என்று எல்லோரும் கொள்வர் ஓடுங்கால்
இதனை நினைத்து நான் வாடுங்கால்
அதையே நீ சிரிப்பாகப் போடுங்கால்
எல்லோடுங் கொள்வர் நாடுங்கால்

கால்களுடன்,
கோ.இராகவன்

சேரன்கயல்
18-10-2004, 08:33 AM
என்னோட ஐநூறு ரூபாய்க்கு வேட்டு வெச்ச சேரா! ஒனக்கு நாளைக்கே அறம் பாடிர்ரேன். இப்பிடித்தான் ஒருவாட்டி கைலாசத்துல பெருமாளு.............
(எல்லோரும் ஓடுகிறார்கள்..........)

அன்புடன்,
கோ.இராகவன்

ராகவன்ஜி...நீங்க அறம் பாடுவதைக் கேட்டு புற முதுகு காட்டி ஓடிடுவேன்னு பார்க்குறீங்களா...அதான் இல்லை...
முதுகு காட்டாம உங்களை பார்த்துகிட்டே ரிவர்ஸ் கியர்... :wink: :lol:

pradeepkt
18-10-2004, 12:21 PM
அடடா... ஆனானப்பட்ட ராகவனையே ஏச்சுப்பிட்டியளே சேரன்... இந்த வருச ஏச்சகர் விருது உங்களுக்குத்தான். ராகவா! நீங்க அறம் பாடினாலும், பாடாட்டாலும் நீங்க செஞ்ச அறம் (500 ரூவா) உங்களைக் காக்கும்.

கதை சூடு புடிச்சிருச்சி. நேர்()காணல் செய்யவிருக்கும் அறிஞர் நம்ம தலை வாழ்க்கையை நேராக்கப் போறாரோ? கோணலாக்கப் போறாரோ?

ஆர்வத்துடன்,
பிரதீப்

மன்மதன்
18-10-2004, 12:25 PM
அடடா.. என்ன அருமையா எழுதறப்பு... இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா.. நம்மகிட்ட அறிஞர்தானே இண்டர்வியூவில் மாட்டப்போறார்..
அன்புடன்
மன்மதன்

இண்டர்வியூ செய்ய இருப்பவர் அறிஞர் என்று கண்டுபிடித்ததால், போண்டாவுக்கு பதில் உனக்கு ஜாங்கிரி கொடுக்கிறேன். மிகவும் சரியான பதில், பாராட்டுகள். :lol:

உட்டாலக்கடி வடகறி.. எனக்கு கிடைத்தது ஜாங்கிரி. :lol: :lol: :lol: . வயித்த கலக்காதுல்ல :roll: :roll: :roll: ..நாயர் கடை ஜாங்கிரில்ல அதான் :lol: :lol: :lol:
அன்புடன்
மன்மதன்

gragavan
18-10-2004, 01:45 PM
என்னோட ஐநூறு ரூபாய்க்கு வேட்டு வெச்ச சேரா! ஒனக்கு நாளைக்கே அறம் பாடிர்ரேன். இப்பிடித்தான் ஒருவாட்டி கைலாசத்துல பெருமாளு.............
(எல்லோரும் ஓடுகிறார்கள்..........)

அன்புடன்,
கோ.இராகவன்

ராகவன்ஜி...நீங்க அறம் பாடுவதைக் கேட்டு புற முதுகு காட்டி ஓடிடுவேன்னு பார்க்குறீங்களா...அதான் இல்லை...
முதுகு காட்டாம உங்களை பார்த்துகிட்டே ரிவர்ஸ் கியர்... :wink: :lol:சேரா! நான் யார் முதுகிலும் குத்தேன் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறாய். என் புகழைப் பரப்ப நீ எடுக்கும் முயற்சி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இருந்தாலும் நீ ரிவர்ஸ் கியரு எடுக்கிறது மக்களுக்கு வசதியாயிருக்கும். அப்பத்தான தரும அடிய வசமா வச்சி இறுக்கலாம். ஹா ஹா

அன்புடன்,
கோ.இராகவன்

உப்பும் மரத்தூளும் என்னாச்சி. இங்க போட்டாச்சி......
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=90702#90702

gragavan
18-10-2004, 01:49 PM
அடடா... ஆனானப்பட்ட ராகவனையே ஏச்சுப்பிட்டியளே சேரன்... இந்த வருச ஏச்சகர் விருது உங்களுக்குத்தான். ராகவா! நீங்க அறம் பாடினாலும், பாடாட்டாலும் நீங்க செஞ்ச அறம் (500 ரூவா) உங்களைக் காக்கும்.
ஆர்வத்துடன்,
பிரதீப் அதென்னவோ உண்மதான். கெழவி கூட அறஞ் செய விரும்புன்னுதான பாடியிருக்கா? எதுக்காக செய்யின்னு சொல்லலைலன்னு இன்னிக்கி வம்பு சொல்லிக்கிட்டு திரியாருனுகளே, ஏன் விரும்பச் சொன்னாருன்னு தெரியுமா? ஏன் அறம் செய விரும்புன்னு சொல்லீட்டு ஆறுவது சினம்னு சொன்னா கிழவி? யாருக்காவது தோணுதா.

ஆனாலும் அந்த ஐநூறு ரூவாய்க்கி நான் வஞ்சம் வெக்காம விட மாட்டேன். சேரா....உன்ன நாரா...............

நறநறவென,
கோ.இராகவன்

உப்பும் மரத்தூளும் என்னாச்சி. இங்க போட்டாச்சி......
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=90702#90702

mania
19-10-2004, 05:55 AM
:lol: :lol: :lol: இப்போத்தான் படித்தேன்........நன்றாக இருக்கு பரம்ஸ்... :lol: :lol: .ஆமாம்........நம்ம ஹீரோவை காணோமே இன்னும்.... :roll: :roll: :lol: :wink:
அன்புடன்
மணியா..... :lol:

அறிஞர்
19-10-2004, 08:01 AM
:lol: :lol: :lol: இப்போத்தான் படித்தேன்........நன்றாக இருக்கு பரம்ஸ்... :lol: :lol: .ஆமாம்........நம்ம ஹீரோவை காணோமே இன்னும்.... :roll: :roll: :lol: :wink:
அன்புடன் மணியா..... :lol:

யாரு மணியாவின் ஹீரோ... :wink: :wink: :wink: :wink:

mania
19-10-2004, 08:08 AM
:lol: :lol: :lol: இப்போத்தான் படித்தேன்........நன்றாக இருக்கு பரம்ஸ்... :lol: :lol: .ஆமாம்........நம்ம ஹீரோவை காணோமே இன்னும்.... :roll: :roll: :lol: :wink:
அன்புடன் மணியா..... :lol:

யாரு மணியாவின் ஹீரோ... :wink: :wink: :wink: :wink:

:lol: :lol: :lol: தோடா..........இதானே வேண்டாங்கறது....... :lol: :lol: :lol: :wink:
அன்புடன்
மணியா........... :lol:

சேரன்கயல்
20-10-2004, 07:55 AM
சேரா! நான் யார் முதுகிலும் குத்தேன் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறாய். என் புகழைப் பரப்ப நீ எடுக்கும் முயற்சி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இருந்தாலும் நீ ரிவர்ஸ் கியரு எடுக்கிறது மக்களுக்கு வசதியாயிருக்கும். அப்பத்தான தரும அடிய வசமா வச்சி இறுக்கலாம். ஹா ஹா


அடப்பாவி மனுஷா...இப்படி வஞ்சகமான திட்டம் வைத்துக்கொண்டு உலவுவது நல்லதா...இது தகுமோ, இது முறையோ, இது தர்மம்தானோ...???ஆனாலும் அந்த ஐநூறு ரூவாய்க்கி நான் வஞ்சம் வெக்காம விட மாட்டேன். சேரா....உன்ன நாரா...............

நறநறவென,
கோ.இராகவன்


சேரா, உன்னை நாரா...???
ஓ ஹோ நாராயணனிடம் வத்தி வைக்கப்போறேன்னு சொல்றீங்களா...சொல்லுங்க சொல்லுங்க...
:lol: நாராயணா...நாராயணா... :wink:

gragavan
20-10-2004, 10:52 AM
சேரா! நான் யார் முதுகிலும் குத்தேன் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறாய். என் புகழைப் பரப்ப நீ எடுக்கும் முயற்சி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இருந்தாலும் நீ ரிவர்ஸ் கியரு எடுக்கிறது மக்களுக்கு வசதியாயிருக்கும். அப்பத்தான தரும அடிய வசமா வச்சி இறுக்கலாம். ஹா ஹா


அடப்பாவி மனுஷா...இப்படி வஞ்சகமான திட்டம் வைத்துக்கொண்டு உலவுவது நல்லதா...இது தகுமோ, இது முறையோ, இது தர்மம்தானோ...???என்னைப் பார் சேரா!
எண்ணிப் பார் சேரா!
நல்வழிக்குத் திரும்பிப் பார் சேரா!
எல்லோரும் உன்னை மன்னிப்பார் சேரா!
இல்லையென்றால் முதுகில் வீங்க வீங்க கவனிப்பார் சேரா!

gragavan
20-10-2004, 10:54 AM
ஆனாலும் அந்த ஐநூறு ரூவாய்க்கி நான் வஞ்சம் வெக்காம விட மாட்டேன். சேரா....உன்ன நாரா...............

நறநறவென,
கோ.இராகவன்


சேரா, உன்னை நாரா...???
ஓ ஹோ நாராயணனிடம் வத்தி வைக்கப்போறேன்னு சொல்றீங்களா...சொல்லுங்க சொல்லுங்க...
:lol: நாராயணா...நாராயணா... :wink:நாராயணா நமோ நாராயணா!
நாராயினான் சேரன் நாராயினான்!
எல்லோரும் இங்கெ போட்டு வாங்க வாங்க
நூறாயினான் சுக்கு நூறாயினான்!

சேரன்கயல்
20-10-2004, 01:40 PM
என்னைப் பார் சேரா!
எண்ணிப் பார் சேரா!
நல்வழிக்குத் திரும்பிப் பார் சேரா!
எல்லோரும் உன்னை மன்னிப்பார் சேரா!
இல்லையென்றால் முதுகில் வீங்க வீங்க கவனிப்பார் சேரா!


நல்வழியே எம் வழி
மன்னிப்பே எம் மொழி
அன்பே எம் கொள்கை...
அகமும் புறமும் வீங்கி நிற்பதே எம் வாழ்க்கை...
(எல்லாம் அன்பு உள்ளங்கள் ஆரத்தழுவியதால் ஏற்பட்ட வீக்கம்தான்) :wink:

இளசு
25-10-2004, 08:40 AM
இந்த பாகமும் கலக்கல்..

தலை, பரம்ஸ், பூ, இராகவன், சேரன், மன்மதன் எல்லாரையும்
நேரில் டீக்கடையில் பார்த்ததுபோல் ஒரு மெய்நிகர் உணர்வு..

கலக்கல் தொடரட்டும் பரம்ஸ்..

(அடுத்து எண்ட்ரி யாரு?)

kavitha
25-10-2004, 10:05 AM
(அடுத்து எண்ட்ரி யாரு?)
_________________
லேட்டஸ்ட் எண்ட் ரி நீங்கதானே அண்ணா! :lol:

mania
25-10-2004, 10:12 AM
(அடுத்து எண்ட்ரி யாரு?)
_________________
லேட்டஸ்ட் எண்ட் ரி நீங்கதானே அண்ணா! :lol:

:lol: :lol: :roll: அடுத்தது நோ எண்ட்ரி அறிஞர் தான்...... :roll: :lol: நீ இந்த மாதிரி எழுதுயிருக்கன்னு தெரிஞ்சாலே கோபம் வந்திடும் அவருக்கு....... :roll: :roll: :lol: :lol:
அன்புடன்
மணியா..... :lol: :wink:

kavitha
25-10-2004, 11:07 AM
அடுத்தது நோ எண்ட்ரி அறிஞர் தான்...... நீ இந்த மாதிரி எழுதுயிருக்கன்னு தெரிஞ்சாலே கோபம் வந்திடும் அவருக்கு.......
அன்புடன்
மணியா.....
நோ எண்ட்ரி -னா என்ன எ.தலை?? நாங்க இல்லாத சமயத்துல அவர ஏதும் கலாய்ச்சீங்களா?

mania
25-10-2004, 11:30 AM
அடுத்தது நோ எண்ட்ரி அறிஞர் தான்...... நீ இந்த மாதிரி எழுதுயிருக்கன்னு தெரிஞ்சாலே கோபம் வந்திடும் அவருக்கு.......
அன்புடன்
மணியா.....
நோ எண்ட்ரி -னா என்ன எ.தலை?? நாங்க இல்லாத சமயத்துல அவர ஏதும் கலாய்ச்சீங்களா?

:lol: :lol: :lol: இல்லை கவி......எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நோ எண்ட்ரின்னா.......ஒரு வழிக்கும் வராதவர் ன்னு அர்த்தம்....... :roll: :roll: :lol: :lol: . ஏற்கனவே இரண்டு அத்தியாயத்திலும் அவர் வரலைன்னு பரம்ஸ�க்கு தனிமடல் அனுப்பி....".எதிர் கச்சி தலைவரை இப்படித்தான் ட்ரீட் பண்ணுவதா...... :roll: :roll: :lol:" ன்னு கேட்டிருந்தாராம்........அதுக்காக கதையையே மாத்தி அறிஞருக்கு எண்ட்ரி கொடுக்கப்போறார் பரம்ஸ்...... :roll: :lol: :lol: :lol:
அன்புடன்
மணியா..... :lol: :lol:
(அவரை எங்கே கலாய்ச்சரது நீங்கல்லாம் இல்லைன்னு அவர் இந்த பக்கமே தலை காட்டறதில்லையே...... :roll: :roll: :lol: :lol: ....)

சேரன்கயல்
26-10-2004, 08:07 AM
(அவரை எங்கே கலாய்ச்சரது நீங்கல்லாம் இல்லைன்னு அவர் இந்த பக்கமே தலை காட்டறதில்லையே...... ....)


ஹா ஹா ஹா...
சூப்பரா சொன்னீங்க தலை...

கவி...நீண்ட நாட்களுக்குப் பின் மன்றத்தில் காண்பதில் மகிழ்ச்சி...

அறிஞர்
26-10-2004, 08:27 AM
அடுத்தது நோ எண்ட்ரி அறிஞர் தான்...... நீ இந்த மாதிரி எழுதுயிருக்கன்னு தெரிஞ்சாலே கோபம் வந்திடும் அவருக்கு.......
அன்புடன்
மணியா.....
நோ எண்ட்ரி -னா என்ன எ.தலை?? நாங்க இல்லாத சமயத்துல அவர ஏதும் கலாய்ச்சீங்களா?

:lol: :lol: :lol: இல்லை கவி......எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நோ எண்ட்ரின்னா.......ஒரு வழிக்கும் வராதவர் ன்னு அர்த்தம்....... :roll: :roll: :lol: :lol: . ஏற்கனவே இரண்டு அத்தியாயத்திலும் அவர் வரலைன்னு பரம்ஸக்கு தனிமடல் அனுப்பி....".எதிர் கச்சி தலைவரை இப்படித்தான் ட்ரீட் பண்ணுவதா...... :roll: :roll: :lol:" ன்னு கேட்டிருந்தாராம்........அதுக்காக கதையையே மாத்தி அறிஞருக்கு எண்ட்ரி கொடுக்கப்போறார் பரம்ஸ்...... :roll: :lol: :lol: :lol:
அன்புடன்
மணியா..... :lol: :lol:
(அவரை எங்கே கலாய்ச்சரது நீங்கல்லாம் இல்லைன்னு அவர் இந்த பக்கமே தலை காட்டறதில்லையே...... :roll: :roll: :lol: :lol: ....)

சூப்பரா.. கதை சுத்தி இருக்கீங்க மக்கா... :lol: :lol: :roll: :roll:

எதற்கும் அஞ்சா நெஞ்சன்.. நானாக்கும்..... :lol: :lol: :lol: :lol: :lol:

அய்வரணியை கண்டா பயப்படப்போகிறேன்... வேலை இருந்ததால் வர இயலவில்லை.... அதுக்குள்ள.. எல்லார் காதுலையும் பூ சுத்த ஆரம்பிச்சுட்டிங்க....... :P :P :P :P :P

மன்மதன்
06-11-2004, 12:31 PM
அடுத்த பாகம் எப்போ நண்பா?? அறிஞரை செமத்தியா நாலு கேள்வி கேட்கணும் இண்டர்வியூவிலே..
அன்புடன்
மன்மதன்

அக்னி
22-03-2009, 04:25 PM
எல்லாரையுமே பாகுபாடு பார்க்காம கலாய்ச்சிருக்காரு ஐடியாண்டி...

இன்டர்வியூ நடந்திச்சா... யாரு தேர்வாகினாங்க...
என்பதை அடுத்த பாகத்தில தெரிஞ்சுக்கிறேன்.

இளசு அண்ணாச்சியோட பதிவைப் பார்த்தால்,
தன்னை ஆட்டத்துல சேர்த்துக்கலையே அப்படீங்கற பீலிங்ஸ் தெரியறது...

பயப்படாத மாதிரியே, நெஞ்சை நிமிர்த்திப் பதிவு போடறது எப்படீன்னு
நமக்கும் சொல்லித் தாங்க அறிஞரே...

இராகவன், சேரன்கயல் ஆகியோரின் பாட்டும் எசப்பாட்டும் சூப்பருங்கோ...