PDA

View Full Version : பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும் - 1பரஞ்சோதி
10-10-2004, 09:57 AM
பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும்

மாலையில் வழக்கம் போல் கோழிக்கோடு நாயர் நடத்தும் மதுரை முனியாண்டி விலாஸ் முன்பு சேரன், பரம்ஸ், பூ, மன்மதன் அனைவரும் கூடினார்கள்.

ஓரமா போட்டியிருந்த பெஞ்சில் பெருசுங்க உட்கார்ந்து ஊர் வம்பு அடித்துக் கொண்டிருந்தாங்க. :idea:சிறிது நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தலை நடந்து வந்தார், முகத்தில் உற்சாகமில்லை. :cry:

தலை உற்சாகம் இல்லாமல் வந்தால் கீழ் கண்ட காரணங்களாகத் தான் இருக்கும் :!:

1) இணைய இணைப்பு கிடைக்காமல் தமிழ் மன்றம் போயிருக்க முடியாது. :cry:

2) அப்படியே போனாலும் ஆராய்ச்சி புகழ் அறிஞரும், ஸ்பெல்லிங் குயின் மைதிலியும் வந்திருக்கமாட்டாங்க. :evil:

3) கஷ்டமான புதிர் என்று போட்டதை பரம்ஸ் கும்சாவா உடனே சரியான பதில் சொன்னது. :twisted:

4) அந்த வாரம் முழுவதும் வேலை நிமித்த பயணம் ஏதுவும் இருந்திருக்காது. :oops:

பரம்ஸ்: வாங்க தலை, உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம். (மனசுக்குள்ளே அப்பாடா, டீ காசு கொடுக்க தலை வந்தாச்சு)

சேரன்: ஏம்பா நாயரே! சூடா 5 பால் டீ போடு. இம்மாம் நேரம் குந்திகின்னு இருக்கிறது. 8)

டீ கடை நாயர்: சூடா வெள்ளம், இல்லை அது கூட கிடையாது. :twisted:

தலை : ஏம்பா? :?:

டீ கடை நாயர்: சாரே! ஒரு மாசமா குடிச்ச டீ கணக்கு 498 ரூபாய் சாரே. :idea:

சேரன்: ரவுண்ட் பிகர் ஆகட்டும், அப்புறமா கொடுக்கலாம்னு இருந்தேன் தலை. :wink:

மன்மதன்: நாயரே! ஒரு போண்டா கொடு, பிகரு ரவுண்ட் ஆகிடும். :idea:

சேரன்: மவனே, உன்னை ரவுண்டு கட்டி அடிச்சா, உன் பிகரு சேப்பு மாறிடும். :twisted:

நாயர்: இ கணக்கை சரி செய்யுங்க சாரே! :x

பூ: அடப்பாவி, டீயில் கிடந்த ஈக்கு கூட கணக்கு இருக்கா? :idea:

பரமஸ்: பூ, அது ஈ கணக்கு இல்லை, இந்த கணக்கு, ஞ்நானு மலையாளம் கொரச்சு கொரச்சு :lol: சம்சாரிக்கும்.

தலை: சரி சரி! பிரச்சனையை விடுங்க. நானே ... :cry:

சேரன்: தலை, அப்போ நீங்க காசை கட்டிவிடுவீங்களா? தங்கமான மனசு, தலைன்னா தலை தான். :idea:

தலை : ??????? நானே நொந்து நூலாகி வந்திருக்கேன். :oops:

உடனே, அனைவரும் "கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி" என்ற செய்தியை கேட்டு அதிர்ந்தது போல் அதிர் ச்சி அடைந்தார்கள். :roll: :x :shock:

மன்மதன்: என்னாச்சி தலை, நீங்க ஏன் சோகமாயிட்டீங்க? :x

பூ: தலை, மாமி ஏதாச்சும் சொன்னாங்களா? :?

சேரன்: அதான் தினமும் நடக்கிற கதை தானே. :lol:

பரம்ஸ்: சும்மா இருங்கப்பா, தலை, சொல்லுங்க தலை.

தலை: அது ஒன்னும் இல்லைப்பா, கம்பெனியில் கணக்கு வழக்கு பார்க்கும் போது தான் பிரச்சனை. :?:

மன்மதன்: தலை உங்க கணக்கே தப்பா? (மனசுக்குள் குஷி, தலை, எத்தனை வாட்டி நான் சொன்ன கணக்கு விடையை தப்பு என்று சொல்லியிருக்கீங்க) :idea:

தலை: நீ கொஞ்சம் சும்மா இருக்கியா. நான் வேலையில் சேர்ந்தது முதல் இது வரை வேலை நிமித்தம் காரணமாக சென்ற நாட்கள், நான் ஆபிஸில் இருந்து வேலை செய்த நாட்களை 3 மடங்கு அதிகமாம். அரசாங்க விடுமுறை நாட்களை விட 6 மடங்கு அதிகமாம், 2 1/2 மடங்கு எங்க பாஸ் ஆபிஸ்க்கு வந்ததை விட அதிகமாம்.

பரம்ஸ்: அய் ஜாலி, தலை நான் பேப்பர், பென்சில் இல்லாம நீங்க எத்தனை நாட்கள் ஊர் சுத்தினீங்கன்னு சொல்லட்டுமா? :idea:

சேரன்: ஏலே பரம்ஸ், நீ வேற, தலை என்னது இது, உங்க புதிர் திறமையை காட்டும் நேரமா இது, என்னாச்சு சொல்லுங்க. :twisted:

தலை: அதான் சொல்லுறேன்ன, நான் சுற்று பயணத்தில் செய்த செலவு, எங்க கம்பெனி லாபத்தில் 35%, சென்ற ஆண்டு சுற்று பயண செலவை விட 11.5% மடங்கு அதிகமாம்.

பூ: சே! தலையை திருப்பவே, மன்னிக்கவும் திருத்தவே முடியாது. :shock:

தலை: எல்லாம் கூட்டி கணக்கு பார்த்து, என் கணக்கை முடித்து விட்டாங்க. :cry:

மன்மதன்: தலை செட்டில்மெண்ட் பணம் வந்திருக்குமே, ஜாலியா கோவா போவோமா. :lol:

பூ: ஆகா,என்னமா ஐடியா. டெஸ்ட் போட்டி வேற நடக்குது, 5 நாள் ஜாலியா இருந்து, பெரிய கட்டுரையே கொடுத்திடலாம். :P

பரம்ஸ்: ஏம்பா, வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க, நொந்த இதயத்தை வேலை வைத்து நோண்டி எடுக்கிறீங்க. :oops:

சேரன்: பரம்ஸ் இனிமே பழமொழியில் கூட வேலை பற்றி பேசவேண்டாம், பாவம் தலை. :oops:

தலை: அ(ட)ப்பாவிங்களா (உபயம்: இராகவன்). :twisted:

பூ: தலை அப்புறம் என்னாச்சு, மாமிக்கு தெரியுமா?

தலை: மாமிக்கு தெரியுமாவா? என் சீட்டை கிழிக்கும் முன்பே, அவளை வரச் சொல்லி, என் செட்டில்மெண்டை கொடுத்துட்டாங்க. வாங்கின கையோடு திருச்சி போயிட்டா.

டீ கொண்டு வந்த நாயர்: மாமி திருச்சி வருமா? :?:

மன்மதன்: யோவ் நாயரு, இப்போ தான் தலை திருச்சி போயிருக்காங்க, என்று சொல்லுறாரு. காது கேக்கலை. :twisted:

சேரன்: மவனே! அவர் கேட்டது மாமி திரும்பி வருவார்களா? நாயர் கவலை நாயருக்கு.

நாயர்: நானு சம்சாரிக்கதை கிண்டல் செய்ய வேண்டாம், சம்பாதித்து காசை கொடுங்க. :evil:

மன்மதன்: தலை, பெத்த அவமானம், உடனே ஒரு 100 ஆட்டோவை உங்க கம்பெனி முன்னால் போய் நிப்பாட்டட்டா? 8)

பூ: அட, ஒரு லிட்டர் டீசல் காசை கொடு, நான் காக்கா பிரியாணியாவது சாப்பிடுகிறேன், அதை விட்டு விட்டு 100 ஆட்டோவாம்.

பரம்ஸ்: சாமியே நடந்து போகும் போது, பூசாரி புல்லட் கேட்டானாம்.

பூ: ஆமாம் தலை, நீங்க மாளவிகைவை மன்னிக்கவும் மாளவிகா காரை வைத்திருந்தீங்களே அது எங்கே?

தலை: அதை ஏன் கேட்கிற? (சோகமாக)

பூ: சரி கேட்கல

தலை: அட நீ வேறப்பா, மாமி என் செட்டில்மெண்ட் எல்லாம் வாங்கி, நேரே என்கிட்ட வந்து கார் சாவி கொடுங்க, பெட்ரோல் போட்டுட்டு வாரேன்னு சொன்னா, நானும் ஆகா, செலவு மிச்சம் என்று கொடுத்தேன், அவ அந்த கார்ல தான் திருச்சி போயிருக்கா. :(

சேரன்: தலை இத்தனை அவமானத்திற்கும் காரணாமான அந்த கம்பெனியை விடக்கூடாது, வாங்க எல்லோரும் போவோம். :twisted:

தலை: அது முடியாதுப்பா. :cry:

மன்மதன்: ஏன் தலை, நான் இருக்கேன்ல. :?

தலை: கூட வாட்ச்மேனும் இருப்பானே

பூ: ஏன் தலை வாட்ச்மேனுக்கு பயப்படுறீங்க, பகல்ல தானே போகப்போறோம்.

தலை: அது இல்லப்பா, வரும் போது நாளைக்கு காசை கொடுக்கிறேன் என்று சொல்லி வாட்மேன்கிட்ட தான் கை மாத்தா 50 ரூபாய் வாங்கி வந்தேன், அதை வைத்து பஸ்ஸில் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு புட்போர்ட் அடித்தேன்.

சேரன்: அப்போ தலை, இனிமே எங்க தான் போவது, இப்போதைக்கு டீ கணக்கை எப்படி செட்டில் செய்வது.

திடிரென்று, பரம்ஸ், "அண்ணே, அண்ணே" என்று கத்த, எல்லோரும் எங்கே இளசு அல்லது இக்பால் வருகிறார்களோ என்று திரும்பி பார்த்தார்கள்.

(தொடரும்..)

(நண்பர்களே! ஏதோ எழுதிவிட்டேன், தவறு இருந்தால் இங்கே திட்டுங்க, ரொம்ப திட்டுவதாக இருந்தால் தயவு செய்து தனிமடலில் திட்டுங்க, யாருக்கும் தெரியாது தானே, அதிலும் அறிஞருக்கு தெரியாது)

மன்மதன்
10-10-2004, 10:20 AM
படிக்க படிக்க சிரிப்பு .. அசத்து நண்பா அசத்து.. வரிக்கு வரி அட்டகாசமான சிரிப்பு.. :lol: :lol: :lol: :lol: :lol:

அன்புடன்
மன்மதன்

அ(ட)ப்பாவி பரம்ஸ்.. எப்படி இருந்த தலையை இப்படி மாத்திபுட்டே.. அவர் மைக்ரோ சா�ப்டுக்கே ஸ்பான்சர் பண்றவர், போண்டா சாப்ட ஸ்பான்சர் பண்ண முடியலையா.. இதெல்லாம் ஓவர்.. அவர் நெற்றிக்கண்ணை திறக்க வைக்காதே.. :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

அறிஞர்
10-10-2004, 10:31 AM
போண்டா ஸ்பான்சர்.. போண்டியானது.. குறித்து உம் நக்கல் அருமை....

மலையாளத்தை.... அழகாய் இரசித்து..... அதை நக்கலாய் மாற்றிய விதம் அருமை.....

நன்றாக இருந்தது.. தொடருங்கள்.. நண்பா.

baranee
10-10-2004, 11:02 AM
நண்பரே .. பரமாத்ம குருவும் சீடர்களும் நன்றாகவே இருக்கிறது ...

தொடருங்கள் உங்கள் டீக் கடை பெஞ்சினை..

karikaalan
10-10-2004, 11:11 AM
சம்பாஷணை நல்லாவே இருக்குது. தொடருங்க. மணியாஜி வேறு தொழில் பார்க்கப்போகிறாரா என்ன?!

===கரிகாலன்

mania
10-10-2004, 12:24 PM
:twisted: :twisted: :twisted: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......நல்லாத்தான் இருக்கு........வரவங்களையும் நல்லா கவனி......... :roll: :roll: :lol: :lol: :wink:
அன்புடன்
மணியா...... :lol: :lol:

தஞ்சை தமிழன்
10-10-2004, 02:39 PM
பரம்ஸின் சிந்தனை சிரிக்கவைக்கிறது

gragavan
11-10-2004, 04:18 AM
தம்பி. பிரமாதம். பிரமாதம். பரமார்த்த குருவாகட்டும் காப்பியாத்துற நாயராகட்டும் உன் வாயில் விழுந்தால் சிரிப்பு வெடிதான். என்னமா எழுதுற. பிச்சுட்டடா கண்ணா! அரக்கிலோ வள்ளி பேக்கரி மக்ரூன் உனக்குப் பரிசா நான் குடுத்ததா நெனச்சுக்கோ. இப்போதைக்கு அதுதான முடியும். இதே மாதிரி அடுத்த அரக்கிலோவையும் கொடுக்கக் காத்திருக்கிறேன்.

இரகசியத் தோட்டம் கதை பற்றிப் படிக்க.....
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=90036#90036

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
11-10-2004, 09:41 AM
படிக்க படிக்க சிரிப்பு .. அசத்து நண்பா அசத்து.. வரிக்கு வரி அட்டகாசமான சிரிப்பு.. :lol: :lol: :lol: :lol: :lol:

அன்புடன்
மன்மதன்

அ(ட)ப்பாவி பரம்ஸ்.. எப்படி இருந்த தலையை இப்படி மாத்திபுட்டே.. அவர் மைக்ரோ சாப்டுக்கே ஸ்பான்சர் பண்றவர், போண்டா சாப்ட ஸ்பான்சர் பண்ண முடியலையா.. இதெல்லாம் ஓவர்.. அவர் நெற்றிக்கண்ணை திறக்க வைக்காதே.. :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

நன்றி நண்பா,

நம்ம தலைக்கு இது எல்லாம் ஐவர் அணியில் சகஜம் என்று தெரியும். மற்ற மன்ற நண்பர்களும் அப்படியே நினைப்பார்கள், காரணம் எல்லோரும் வருவாங்க தானே. :wink:

பரஞ்சோதி
11-10-2004, 09:42 AM
போண்டா ஸ்பான்சர்.. போண்டியானது.. குறித்து உம் நக்கல் அருமை....

மலையாளத்தை.... அழகாய் இரசித்து..... அதை நக்கலாய் மாற்றிய விதம் அருமை.....

நன்றாக இருந்தது.. தொடருங்கள்.. நண்பா.

நன்றி அறிஞரே!

கண்டிப்பாக தொடருவேன், உங்களுக்காகவே நான் தொடருவேன் :wink:

சேரன்கயல்
12-10-2004, 07:20 AM
ஏலா பரம்ஸ...
என்னலா...இப்படி போட்டு தாக்கியிருக்கே...
நீயும் என் மவனும் சேர்ந்து சிரிக்க வச்சுகிட்டே இருக்கீங்கல... :lol:
அட்டகாசம் பரம்ஸ்...இந்த ரேஞ்சில் போனால் அப்புறம் நானும் எழுதவேண்டிய நிலை உருவாகும் சொல்லிட்டேன்...ஆமா... :twisted: :wink:

அறிஞர்
12-10-2004, 07:48 AM

எப்ப சேரன் எழுதப்போறீங்க.. சீக்கிரன் கொடுங்க..... :roll: :roll: :roll: :roll:

உங்க தலையை.. வார இத்தனை பேரு.. ரெடியாகுறீங்க.. வாழ்த்துக்கள் :lol: :lol: :lol:

பரஞ்சோதி
12-10-2004, 08:14 AM

வேண்டாம் அறிஞரே!

சும்ம இருந்த சிங்கத்தை சீண்ட வேண்டாம், அப்புறம் உங்களுக்கு ராசி பலன் சொல்ல வேண்டிவரும்.

உங்களால் எங்கள் அணியிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர் சேரன் தான், வேண்டாம் வம்பு. :wink:

இளந்தமிழ்ச்செல்வன்
12-10-2004, 05:03 PM
ஆஹா மைதிலி இல்லாததால் கடைசியில் தலையின் தலையில் கை வைத்தாகிவிட்டதா?

சரி சரி தலை தலை ஆட்டியாச்சு, தொடருங்கள்.

கலக்கல் பரம்ஸ்.

அறிஞர்
13-10-2004, 04:51 AM
ஆஹா மைதிலி இல்லாததால் கடைசியில் தலையின் தலையில் கை வைத்தாகிவிட்டதா?
சரி சரி தலை தலை ஆட்டியாச்சு, தொடருங்கள்.
கலக்கல் பரம்ஸ்.

தலையில கைவத்தது இருக்கட்டும்.. உங்கள் பங்குக்கு இன்னும் கொஞ்சம் அவுத்துடுங்க.... :roll: :roll: :roll:

mania
13-10-2004, 05:05 AM
ஆஹா மைதிலி இல்லாததால் கடைசியில் தலையின் தலையில் கை வைத்தாகிவிட்டதா?
சரி சரி தலை தலை ஆட்டியாச்சு, தொடருங்கள்.
கலக்கல் பரம்ஸ்.

தலையில கைவத்தது இருக்கட்டும்.. உங்கள் பங்குக்கு இன்னும் கொஞ்சம் அவுத்துடுங்க....

:roll: :roll: :roll: :o :o என்ன அறிஞர் இப்படி அசிங்கமாக எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்..... :?: :roll: :roll: :lol: :lol: :wink:
சரி சரி........ வைத்தியம் ஆரம்பிக்கவேண்டியதுதான் போல..... :lol: :lol:
அன்புடன்
மணியா.... :lol:

பரஞ்சோதி
13-10-2004, 05:07 AM
உத்தரவிடுங்க தலை,

எதிரணிக்கு நாம வைத்தியமும் கொடுக்கலாம், அறிஞர் சொன்னதையும் செய்யலாம்.

Mathu
13-10-2004, 07:14 AM
என்ன பரம்ஸ் அவுஸ்ரேலியன் அணி இந்தியாவ பொட்டு வாரின மதிரி
நம்ம தலைய இந்த வாரு வரி இருக்கிங்க, பொறுங்க பொறுங்க
சென்னைல தலை பதிலடி கொடுக்காமலா விடுவார் :oops: :roll:

அருமை பரம்ஸ்.....

பரஞ்சோதி
13-10-2004, 07:37 AM
போண்டா ஸ்பான்சர்.. போண்டியானது.. குறித்து உம் நக்கல் அருமை....

மலையாளத்தை.... அழகாய் இரசித்து..... அதை நக்கலாய் மாற்றிய விதம் அருமை.....

நன்றாக இருந்தது.. தொடருங்கள்.. நண்பா.

நன்றி அறிஞரே!

விரைவில் நீங்களும் தயார் ஆக வேண்டியிருக்குது. :twisted:

என்னுடைய மலையாள நண்பர்களோடு பேசி பேசி, கிண்டல்கள் அதிகமாகி விட்டது, அதில் கொஞ்சம் விட்டேன். இப்போ எல்லாம் என் நண்பர்கள் தமிழிலில் பேசுறாங்க, நான் முழு மலையாளத்தில் பேசத் தொடங்கி விட்டேன். :lol:

பரஞ்சோதி
13-10-2004, 07:38 AM
நண்பரே .. பரமாத்ம குருவும் சீடர்களும் நன்றாகவே இருக்கிறது ...

தொடருங்கள் உங்கள் டீக் கடை பெஞ்சினை..நன்றி பரணீ.

டீக்கடை மட்டுமல்ல, பல இடங்களில் எங்கள் அணி கலக்க போகுது. :wink: :lol:

நீங்களும் தயாராக இருக்க வேண்டியிருக்கும், உங்க கப்பலில் நாங்க அடிக்க போகிற லூட்டிக்கு, உங்களால் பதில் சொல்ல முடியாது. :lol: :lol:

பரஞ்சோதி
13-10-2004, 07:39 AM
சம்பாஷணை நல்லாவே இருக்குது. தொடருங்க. மணியாஜி வேறு தொழில் பார்க்கப்போகிறாரா என்ன?!

===கரிகாலன்

நன்றி அண்ணா.

எங்க அணி டெல்லிக்கு வரயிருக்கிறது, அதுவும் பார்லிமெண்ட்-க்குள், நீங்க அருகில் இருப்பீங்க தானே. :wink: :lol:

பரஞ்சோதி
13-10-2004, 07:41 AM
:twisted: :twisted: :twisted: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......நல்லாத்தான் இருக்கு........வரவங்களையும் நல்லா கவனி......... :roll: :roll: :lol: :lol: :wink:
அன்புடன்
மணியா...... :lol: :lol:

நன்றி தலை.

அணி, அணிசேராதவர்கள், வருகிறவங்க, வராதவங்க என்று பாகுபாடு/வேறுபாடு எல்லாம் கிடையாது, எம் கடமை போட்டு வாங்குவதே. :lol:

பரஞ்சோதி
13-10-2004, 07:42 AM
பரம்ஸின் சிந்தனை சிரிக்கவைக்கிறது

நன்றி நண்பரே!

குரு, சிஷ்யர்கள் உங்களையும் சந்திக்க இருக்கிறார்கள். :lol:

பரஞ்சோதி
13-10-2004, 07:44 AM
தம்பி. பிரமாதம். பிரமாதம். பரமார்த்த குருவாகட்டும் காப்பியாத்துற நாயராகட்டும் உன் வாயில் விழுந்தால் சிரிப்பு வெடிதான். என்னமா எழுதுற. பிச்சுட்டடா கண்ணா! அரக்கிலோ வள்ளி பேக்கரி மக்ரூன் உனக்குப் பரிசா நான் குடுத்ததா நெனச்சுக்கோ. இப்போதைக்கு அதுதான முடியும். இதே மாதிரி அடுத்த அரக்கிலோவையும் கொடுக்கக் காத்திருக்கிறேன்.

இரகசியத் தோட்டம் கதை பற்றிப் படிக்க.....
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=90036#90036

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

நன்றி அண்ணா.

உங்களுடைய நகைச்சுவை தொடரை இங்கே பதிக்க முடியுமா?

அப்புறம் 1/2 கிலோ மக்ரூன் எல்லாம் பத்தாது, நம்ம மன்மதன் 5 கிலோ கூட சாப்பிடுவான்.

அப்புறம் நீங்களே வந்து வம்புலே மாட்டியாச்சே! உங்களை நன்றாக கவனிக்க இருக்கிறோம். :lol:

பரஞ்சோதி
13-10-2004, 07:45 AM
ஏலா பரம்ஸ...
என்னலா...இப்படி போட்டு தாக்கியிருக்கே...
நீயும் என் மவனும் சேர்ந்து சிரிக்க வச்சுகிட்டே இருக்கீங்கல... :lol:
அட்டகாசம் பரம்ஸ்...இந்த ரேஞ்சில் போனால் அப்புறம் நானும் எழுதவேண்டிய நிலை உருவாகும் சொல்லிட்டேன்...ஆமா... :twisted: :wink:

உங்க 3000வது பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். விரைவில் நாம் கூட்டணி அமைத்து கலக்கலாம். :wink:

பரஞ்சோதி
13-10-2004, 07:47 AM
ஆஹா மைதிலி இல்லாததால் கடைசியில் தலையின் தலையில் கை வைத்தாகிவிட்டதா?

சரி சரி தலை தலை ஆட்டியாச்சு, தொடருங்கள்.

கலக்கல் பரம்ஸ்.

நன்றி நண்பரே!

தலைன்னா தலை தான்.

நாங்க எப்போவும் கொஞ்ச விட்டு தான் பிடிப்போம். காத்திருங்க அடுத்த பாகம் வரட்டும், யார் யார் எல்லாம் மாட்டிக் கொண்டு முழிக்கிறாங்கன்னு. :lol:

பரஞ்சோதி
13-10-2004, 07:48 AM
என்ன பரம்ஸ் அவுஸ்ரேலியன் அணி இந்தியாவ பொட்டு வாரின மதிரி
நம்ம தலைய இந்த வாரு வரி இருக்கிங்க, பொறுங்க பொறுங்க
சென்னைல தலை பதிலடி கொடுக்காமலா விடுவார் :oops: :roll:

அருமை பரம்ஸ்.....

நன்றி நண்பரே!

இனிமேல் தலையின் ஆட்டம் எல்லாம் அதிரடி ஆட்டம் தான். :lol: :wink:

பௌலர் யார் தெரியுமா? அதான் ஊருக்கே தெரியுமே! :wink:

baranee
13-10-2004, 08:50 AM
நண்பரே .. பரமாத்ம குருவும் சீடர்களும் நன்றாகவே இருக்கிறது ...

தொடருங்கள் உங்கள் டீக் கடை பெஞ்சினை..நன்றி பரணீ.

டீக்கடை மட்டுமல்ல, பல இடங்களில் எங்கள் அணி கலக்க போகுது. :wink: :lol:

நீங்களும் தயாராக இருக்க வேண்டியிருக்கும், உங்க கப்பலில் நாங்க அடிக்க போகிற லூட்டிக்கு, உங்களால் பதில் சொல்ல முடியாது. :lol: :lol:

நீங்க அடிக்கப்போகிற லூட்டியில் கப்பல் தள்ளாடாமல் இருந்தால் சரி :roll: :roll:

மன்மதன்
13-10-2004, 09:40 AM
நண்பா.. அடுத்த பதிவை கொடுங்க..ஆவலுடன் இருக்கிறோம்.
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
14-10-2004, 11:13 AM
டீக்கடை மட்டுமல்ல, பல இடங்களில் எங்கள் அணி கலக்க போகுது. :wink: :lol:

நீங்களும் தயாராக இருக்க வேண்டியிருக்கும், உங்க கப்பலில் நாங்க அடிக்க போகிற லூட்டிக்கு, உங்களால் பதில் சொல்ல முடியாது. :lol: :lol:

நீங்க அடிக்கப்போகிற லூட்டியில் கப்பல் தள்ளாடாமல் இருந்தால் சரி :roll: :roll:

தள்ளாடுனா.. கவுந்துருமுன்னு சொல்ல வரீங்களா.... :roll: :roll: :roll: :roll:

பரஞ்சோதி
14-10-2004, 11:15 AM
அறிஞரே!

குரு, சிஷ்யர்கள் இரண்டாம் பாகம் பார்க்கவில்லையா?

அறிஞர்
15-10-2004, 03:38 AM
அறிஞரே!

குரு, சிஷ்யர்கள் இரண்டாம் பாகம் பார்க்கவில்லையா?

படித்தேன் பரம்ஸ்.. அடுத்த நம் தலையை உருட்ட ரெடியாகிவிட்டீர்.. என தோன்றுகிறது :roll: :roll: :roll: :roll:

இளசு
25-10-2004, 07:21 AM
தலை மணியாவையே சதாய்த்து
பரம்ஸ் எழுதிய இந்த பாகம் A1

பரம்ஸ்..
தாமதமாய் பாராட்டுவதற்கு மன்னிக்கவும்.
இப்படி எழுத எல்லாராலேயும் இயலாது.
நல்ல திறமை இது.

இனிய சேரன் சொல்வது போல் நீங்களும் மன்மதனும் சேர்ந்து
எல்லாரையும் சிரிக்கவைத்து புண்ணியம் சேர்க்கிறீர்கள்..

தொடரட்டும் இந்த ரவுசுத் தொடர்..

pgk53
27-10-2004, 01:54 AM
அன்பு மன்ற நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த ஒரு மாத இடைவெளியில் அட்டகாசமான பதிவுகள்.
எதைப் படிப்பது ,எதை விடுவது என்று புரியவில்லை.
முதலில் அனைத்து பதிவுகளையும் படித்துவிடுவதாக உள்ளேன்.
அனைவருக்கும் வணக்கங்கள்.

பரஞ்சோதி
27-10-2004, 05:02 AM
வாங்க பிஜிகே அண்ணா,

உங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

Narathar
27-10-2004, 10:19 AM
பரமாத்ம குருவும் சீடர்களும் நன்றாக இருக்கிறது நன்றி

அக்னி
22-03-2009, 01:35 PM
அட... நம்ம தலயப்போட்டு இந்த உருட்டு உருட்டியிருக்காரே பரம்ஸ் அண்ணாச்சி...
தலயோட மத்த தலைங்களையும் நல்லாத்தான் வாரியிருக்காரு...

இரண்டாம் பாகத்தையும் விரைவில் ஒருங்குறியாக்கி வெளிக்கொணர்கின்றேன்.

நாமளும் ரீமேக் பண்றதா ஒரு சின்ன நெனப்பு...

விகடன்
26-03-2009, 02:04 PM
அந்தக்காலத்தில் தலையை உருட்டியே எடுத்திருக்கிறீர்கள்...

பதிவைத் தந்த பரஞ்சோதி அண்ணாவிற்கும், படிக்க ஏதுவாக்கிய அக்னிக்கும் நன்றிகள்.