PDA

View Full Version : மாரி மாறி.



gragavan
08-10-2004, 08:42 AM
மாரி மாறி

கடும்பசியில்
உணவு கொடுத்தார்கள்
அம்மணத்தில்
உடைகள் கொடுத்தார்கள்
தெருவில் நிற்கையில்
உறைவிடமும் கொடுத்தார்கள்
உள்ளத்திலும் உதட்டிலும்
போற்றிட வாழ்த்திட வணங்கிட
வேறொன்றையும் கொடுத்தார்கள்
வந்தோர் வழியோ
தந்தோர் வழியோ
குழம்பித் தவித்தேன்
மறுக்கவும் முயன்றேன்
நன்றி ஒருவர்க்கு வேண்டுமாம்
அதன்றி இருத்தல் ஆகாதே
வாழ்க்கையை திருத்தலும் ஆகாதே
உய்வில்லையே செய்நன்றி கொன்றவர்க்கு
பெரியோர் சொன்னதென்ன
கைம்மாறு வேண்டாத
கடப்பாட்டு மாரியை நினைத்தேன்
மாரி பொய்த்ததால் மாறிவிட்டேன்

அன்புடன்,
கோ.இராகவன்

karikaalan
10-10-2004, 08:05 AM
மாரி வருடந்தோறும் பொய்க்காது நண்பரே
மீண்டுவிடுங்கள்.

===கரிகாலன்

thamarai
23-10-2004, 07:28 PM
மாரி பொய்த்ததால் மாறிவிட்ட உங்கள் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

Narathar
23-10-2004, 11:31 PM
மாரி மழை பெய்யாதோ ராகவன் கஷ்டம் மாற?

kavitha
25-10-2004, 08:18 AM
பிரசாரக்கூட்டங்களுக்காக அழைத்துச்செல்லப்படும் இளைஞர்களின் நிலையை விளக்குவதாக
கவிதை காட்சியளிக்கிறது.

இயல்பான ஓட்டம் நின்றுபோய்விட்டால் சுழற்சி மாறுதல்கள் இயற்கையே! கவிதை அருமை அண்ணா.

இளசு
01-11-2004, 07:47 AM
மாற்றங்கள் இயற்கை..
முன்னோக்கி மட்டுமே மாற்றங்கள் இருக்கும்
என எதிர்பார்ப்பது பேராசை..

சக்கரம் சுழலும்..


பாராட்டுகள் இராகவன்....

அக்னி
01-06-2007, 01:26 AM
மாரி பொய்த்ததால் மாறிவிட்டேன்
மீண்டும் மாரி பெய்தாலும், மாற்றம் வருமோ...
அப்படியானால்,
மாற்றம் எப்போதும் இருக்குமோ...

அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்...

சிவா.ஜி
04-06-2007, 09:55 AM
இலவசங்களெல்லாம் எதை எதிர்பார்த்து கிடைக்கிறது என்று தெரிந்தே வரிசையில் நின்று வாங்கும் இந்த மாந்தர்கள் எப்போது திருந்துவார்கள்?உழைக்காமல் கிடைப்பது ஒருபோதும் நிலைக்காது. பொய்த்த மாரி,மாறிவிடும் அரசியலில் பொய்முகங்கள் என்றுமே மாறாது. இதை புரிந்துகொண்டு பொதுமக்கள்தான் மாறவேண்டும். சமுதாயக்கருத்து சொன்ன கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

விகடன்
04-06-2007, 05:39 PM
நிரந்தரத்தை நம்புங்கள்.
இலாபச் சீட்டுக்களைப்போலுள்ள வாழ்க்கைய நம்பாதீர்கள்.