PDA

View Full Version : காதலாய நமஹ...rambal
04-10-2004, 05:44 PM
காதலாய நமஹ...

ஊசியாய் குத்தும்
மழைத்துளியாய்
உன் பார்வை
உரசிய கணத்தில்
நான் நனையவில்லை...

பற்றியெறிந்தேன்..

**********

பூக்கள் உன்னைச் சுட்டி
என்னிடம் கேட்டன
இந்தப் பட்டாம்பூச்சி
நடந்து செல்வது எப்படி என்று?

************

உன் பெயர் என்னவென்று
தெரிவதற்காக
உன் தெருவில் அலைந்து திரிந்து
உன் பக்கத்து வீட்டுப் பையனை
நண்பனாக்கினேன்..

உன் வீட்டில் உள்ளவர்களிடம்
நற்பெயர் எடுக்க வேண்டுமென்று
உன் எதிர்வீட்டுத் தாத்தாவை
வாக்கிங் கூட்டிக் கொண்டு போனேன்..

இப்படி ஒவ்வொருவருடனும் பழகி
உன் தெருவில் உள்ள அனைவரும்
எனக்கு நெருக்கமாயினர்..

உன்னைத் தவிர..

*************

உன் வீட்டு வாசலில்
இருக்கும் அசோகமரமாகவாவது
நான் பிறந்திருக்கலாம்..

அடிக்கடி உன்னைப் பார்ப்பதற்காகவாவது...

*************

தவமிருந்துவிட்டு
வரம் கேட்கும் உலகில்
வரம் வாங்கி விட்டு
உன்னைக் காணவேண்டுமென்று
தவமிருக்கிறேன்...

*************

உன்னைப் பற்றி நினைக்க
ஆரம்பித்த பிறகுதான்
தமிழோடு பரிச்சயமாகி..
இன்று நான்
ஒரு தமிழாசிரியனாக
இருக்கிறேன்..

*************

உன் கொலுசின் அதிர்விலேயே
பூக்கள் பூப்பெய்துவிடுகின்றன..
நான் மட்டும் எம்மாத்திரம்...

*************

அழும் குழந்தைக்கு நிலவைக்
காட்டுவது போல்
காதலில் தவிக்கும் என்
இதயத்திற்கு நான்
உன்னைத்தான் காட்டுகிறேன்..

**************

பரஞ்சோதி
04-10-2004, 07:00 PM
நண்பர் ராம்பால் அவர்களே! நீங்க இப்போ தமிழாசிரியரா?

அருமையான கவிதைகள். நீங்க சொன்னது அனைத்தும் உண்மை தான்.

என்னவளின் வீட்டு நாய்க்கு எலும்பு பிடிக்கும் என்று நினைத்து எங்க வீட்டில் கிடைத்த எலும்பை கொடுத்தேன், ஆனால் அவளை மட்டும் பிடிக்க முடியலை.

இது போன்ற நிறைய அனுபவங்கள் நினைவுக்கு வருகிறதே..

gragavan
05-10-2004, 05:39 AM
ராம்பால், அருமையோ அருமை. காதல் பார்வை என்பது மழைத்துளியா? பாஸ்பரஸா? அடடா! வரம் வாங்கியும் தாங்க வேண்டியிருக்கும் நிலை பரிதாபம்தான். எட்ட நிற்கும் நிலவுக்கு ஒப்பாய் எட்டாமல் நிற்கும் காதலியின் மனம். கையப் பிடிங்க மொதல்ல. எதுக்கா? கை குலுக்கத்தான்.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்

மன்மதன்
05-10-2004, 08:59 AM
புதுக்கவிதையின் ஆழமான வரிகள்.. இதை படிக்கும் காதலித்து பார்த்தவர்களின் உதட்டில் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு புன்னகை..அந்த ஏழு வருடங்கள்..
அன்புடன்
மன்மதன்

Narathar
05-10-2004, 10:22 AM
ராம்பால் உண்மையை சொல்லுங்கள்
என் கதையை யார் உங்களிடம் வந்து சொன்னது.........................?

rambal
05-10-2004, 04:57 PM
வாழ்க்கையின் அனைத்து
வண்ணங்களையும்
என் மேல் வாரி
இறைத்துவிட்டு
மிச்சமிருப்பவற்றில்
சாசுவதமாய் ரங்கோலி
போட்டுக் கொண்டிருக்கிறாய்...
******************
கடவுளுக்குக் கண்கள் இல்லை -
நல்லவேளை...
இல்லையென்றால்
உன்னைக் கண்ட பின்பு
பைத்தியமாகியிருப்பான்
என்னைப் போலவே...
*****************
நீ
உன் கரம் தொட்டு
பூ பறிப்பதால்தான்
உன் வீட்டு
செம்பருத்தி தினமும்
பூக்கிறது..
கொஞ்சம் பூங்கா
வரை வந்து விட்டுப் போ..
பூக்காத செடிகள்
இங்கு ஏராளமாயிருக்கின்றன...
******************
நீ குனிந்து கொண்டே
நடக்கும் பொழுது
உன் பார்வையின்
வெப்பம் தாங்காது
சாலைகள் பதுங்கு குழிக்குள்
மறைந்து பள்ளமாகிவிட்டன..
கொஞ்சம் நிமிர்ந்து பார்..
வானம் மழையாவது
பெய்யட்டும்..
********************
உன்
ஹேண்ட்பேக்கைப் போல்
உன் இதயமும்..
தேவையில்லாத குப்பைகளை
சுமந்து கொண்டு..
உன்னை முதன் முறையாக
முத்தமிட முயன்ற
தருணத்தை இன்னும்
வைத்துக் கொண்டு..
*******************

gragavan
06-10-2004, 06:12 AM
வாழ்க்கையின் அனைத்து
வண்ணங்களையும்
என் மேல் வாரி
இறைத்துவிட்டு
மிச்சமிருப்பவற்றில்
சாசுவதமாய் ரங்கோலி
போட்டுக் கொண்டிருக்கிறாய்...


ராம்பல், என்னது? இந்த கவிதைகள் காதலில் விழுந்ததால் எழுந்ததா? காதல் கவிதை எழுத காதலித்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நன்றாக இருக்கிறது. அந்த ரங்கோலக் கவிதை. அட்டகாசம்.நீ
உன் கரம் தொட்டு
பூ பறிப்பதால்தான்
உன் வீட்டு
செம்பருத்தி தினமும்
பூக்கிறது..

கொஞ்சம் பூங்கா
வரை வந்து விட்டுப் போ..
பூக்காத செடிகள்
இங்கு ஏராளமாயிருக்கின்றன...

உன் மனதைப் போல - என்று சொல்லியிருப்பீர் காதல் ஒருதலையாயின்.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்

pradeepkt
06-10-2004, 12:40 PM
நீ குனிந்து கொண்டே
நடக்கும் பொழுது
உன் பார்வையின்
வெப்பம் தாங்காது
சாலைகள் பதுங்கு குழிக்குள்
மறைந்து பள்ளமாகிவிட்டன..

கொஞ்சம் நிமிர்ந்து பார்..
வானம் மழையாவது
பெய்யட்டும்..

====================================================
பார்த்து ராம்...
அவங்க மேலே பாத்து மேகம் எல்லாம் ஆவியா போயிர போகுது.. அவங்க பார்வை வெப்பத்தில மண்ணும் கல்லுமே நடுங்குதே... அதுக்குச் சொன்னேன்...

நான் சமீப காலத்தில் படித்த சிறந்த சிறு கவிதைகளில் இவையும் கண்டிப்பாக உண்டு.
உங்கள் முயற்சி தொடரட்டும் ராம்!!!

வாழ்த்துக்களுடன்,
பிரதீப்.

பரஞ்சோதி
06-10-2004, 01:23 PM
ராம்பாலின் தொடர் கவிதைகள் அருமை. தொடருங்க நண்பரே!

karikaalan
10-10-2004, 08:13 AM
ராம்பால்ஜி

அருமையான கவிதைச் சங்கிலி. "உன் கண்ணில் நீர் வழிந்தால்..." வரிகளை நினைவூட்டுகின்றன. வாழ்த்துக்கள். மேலும் படையுங்கள்.

===கரிகாலன்

Mathu
13-10-2004, 11:44 AM
பலரின் கடந்த காலங்களை அசைபோடும் ரம்பால்..!
தொடரட்டும் உங்கள் சேவை.
அப்போதாவது கனவுலகில் களிக்கட்டும் நண்பர்கள்.

இளசு
01-11-2004, 07:46 AM
பால்ய நண்பனைப் பார்த்த மகிழ்ச்சி
ராமின் காதல்கவிதைகளைப் படித்தபோது..

அடிக்கடி காதல் தளத்திலும் உலவ ராமுக்கு என் கோரிக்கை..

அமரன்
24-04-2008, 07:01 AM
உங்"கள்"(பழைய) கதைகளையும் ஜொள்ளுங்கள்.

பூமகள்
01-06-2008, 09:03 AM
இனிமையான புல்லாங்குழல் குரல்... மெல்லிதான ஒலியலையில்... காது மடல் தொடும் சுகத்தினை... உங்களின் கவிதைகள் எனக்குள் உருவாக்குகின்றன..

இன்னும் வ(ள)ர வேண்டும்.. காதலோடு ராம்பால் அண்ணாவும்..!! :)


(யுனிகோடாக்கத்துக்கு நன்றிகள் நாட்டாமை..!! ;))

shibly591
01-06-2008, 09:11 AM
தூள் கிளப்பகிறது கவிதைகள்...சூப்பரோ சூப்பர்