PDA

View Full Version : என் தமிழ்...



rambal
13-04-2003, 06:07 PM
என் கவிதைகளுக்கு
வார்த்தை சிக்கல்
ஏற்படுத்திக் கொடுப்பதில்
நீ ஒரு கசடதபற..

குழைத்த வார்த்தைகளை
பரவாயில்லை என
அள்ளி வீசும் பொழுது
நீ ஒரு ஙஞனநமண...

குறியீடுகள் அள்ளிக்
கொடுத்து இந்தா
விளையாடு என் சொல்லும் பொழுது
நீ ஒரு யரலவழள...

'நீரின்றி அமையா உலகு'
நீ இன்றி அமையா என் கவிதை...

வாழ்க நீ பல்லாண்டு..

இளசு
13-04-2003, 06:10 PM
அழகு அழகு ராம்
வாழ்த்துகள்.

குமரன்
13-04-2003, 07:48 PM
புத்தாண்டு சிறப்பாக
தமிழுக்கு
மற்றுமொரு புகழ்மாலை....

சூட்டிய ராமிற்கு பாராட்டுக்கள்.


-குமரன்.

karikaalan
14-04-2003, 12:27 PM
அனைத்தையும் ஒருங்கே பெற்றதுதான் தமிழ். ராம்பால்ஜி, வாழ்த்துக்கள்.

aren
14-04-2003, 02:06 PM
நன்றாக உள்ளது ராம். தொடருங்கள்.

poo
14-04-2003, 02:25 PM
அழகு ராம்...

Mano.G.
15-04-2003, 01:24 AM
தமிழின்பம் என்பது இது தானோ
மெல்லினம் . வல்லினம், இடையினம்
இந்த மூன்றையும் ஒருங்கே
கொடுத்த ராம்பால்ஜிக்கு
சுபமான சுபானு வருடத்தில்
ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுவோமே


மனோ.ஜி

gankrish
15-04-2003, 06:35 AM
ராம் அற்புதம். மூன்று இனத்தையும் (வல்லினம், மெல்லினம், இடையினம்) வேறு யாரலும் இப்படி கூற முடியாது