PDA

View Full Version : அப்பாவின் சட்டைபிரியன்
02-10-2004, 07:42 PM
அப்பாவின் சட்டை

கையோடு கைபற்றி
நடைவண்டி பயணம்....

நான் தனித்து முயன்று விழுகையில்
தடுமாறும் அவர் கண்களோர நீர்....

என் மலத்துணி கசக்கி கசக்கி
காணமல் போன அவர் ரேகைகள்.....

என் தேவை தீர்க்க
அவர் குணமுணர்ந்து
நான் நடத்திட்ட உண்ணாவிரதங்கள்.....

கோவத்தில் அடித்துவிட்டு
தோளில் எனை சுமந்து
நடந்த அந்த நீண்ட இரவு....

ஓட்டைபானை நீராய்
என் ரகசியம் சொல்லி
நனைட்திட வைத்திட்ட
நட்பு(பூ)........

அடடா ....
நான் இன்று அழகானேன்.
அணிந்திட்ட இறுக்கமான
அவர் சட்டையால்.......

thamarai
03-10-2004, 06:09 PM
கோவத்தில் அடித்துவிட்டு
தோளில் எனை சுமந்து
நடந்த அந்த நீண்ட இரவு....

தந்தையின் நினைவுகளை ஒருகணம் கண்முன் நிழலாட வைத்துவிட்டிர்கள்.
வாழ்த்துக்கள்...

பரஞ்சோதி
03-10-2004, 06:28 PM
நண்பர் பிரியன் உங்களது கவிதைகள் ஒவ்வொன்றும் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.

உறவுகளையும், உணர்வுகளையும் இணைத்து எழுதும் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடருங்கள் அருமை நண்பரே!.

பிரியன்
03-10-2004, 06:47 PM
நன்றி தாமரை,பரஞ்சோதி...

இயல்பான் மன உணர்வுகளை கவிதையில் சொல்லிட வேண்டுமென்பது என் நெடுநாள் கனவு...அதற்கு உண்டான சூழல் தற்போது அமைந்துள்ளதால் அது வெள்ப்படுகிறது.மனம் நினப்பது தற்போது எழுத்தாகி உள்ளது.

Nanban
03-10-2004, 06:58 PM
அணியக் கொடுக்க
சட்டை இல்லாத
அப்பாக்களை
எப்படி சொல்வது.....?

பரஞ்சோதி
03-10-2004, 07:19 PM
அணியக் கொடுக்க
சட்டை இல்லாத
அப்பாக்களை
எப்படி சொல்வது.....?


அப்பா உண்டு, சட்டை இல்லை. என்னைப் போன்றவருக்கு சட்டை இருக்கு அப்பா இல்லையே.

நண்பரே! வருமையின் காரணமாக சட்டை இல்லை என்றாலும் ஒரு கோவணமாவது கிடைக்கும் தானே, சட்டைக்குப் பதில் அதை உடுத்தி நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

பிரியன்
03-10-2004, 07:22 PM
அணியக் கொடுக்க
சட்டை இல்லாத
அப்பாக்களை
எப்படி சொல்வது.....?
_________________
நண்பன்

சட்டை இல்லாத அப்பாக்களின் நேசம் சற்றும் குறந்தது அல்ல...
சட்டென்று பதில் என்னிடம் இல்லை.

அவர்களின் வேர்வைக்கு அர்த்தம் செய்து சொல்லலாம்......

ஆனலும் தங்களின் கேள்வி மிக வீரியமானது...
யோசித்து விரிவாக விரைவில் பதில் தருகிறேன்....

தஞ்சை தமிழன்
04-10-2004, 05:29 AM
பிரியனின் கவிதை அருமையாக இருக்கு.
மனதில் பல நினைவுகளை ஓட விட்டது.
பாராட்டுக்கள்.

kavitha
29-11-2004, 08:15 AM
அடடா ....
நான் இன்று அழகானேன்.
அணிந்திட்ட இறுக்கமான
அவர் சட்டையால்.......[/color

எத்தனை எத்தனை தலைவர்களைக் கண்டாலும்
எந்த குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பா தான்.
அத்தகைய நேசத்தை நெகிழ்வுடன் வெளிப்படுத்திய விதம் அருமை பிரியன்.

பிரியன்
29-11-2004, 02:47 PM
நன்றி கவி.
தங்களின் கவிதையை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

கவி மன்றம் சோம்பல் கலக்க செய்யுங்கள் தங்கள் படைப்பால்

gans5001
08-12-2004, 01:46 PM
முன்பு ஒரு முறை இளசு எழுதியிருந்தார், கிட்டத்தட்ட இதே கருத்தில்.
கொடுத்து வைத்த மகன்கள்.. நெஞ்சில் நிற்கும் அப்பாக்கள்

பிரியன்
08-12-2004, 03:03 PM
அப்பா ஒரு நல்ல சினேகிதர்.
எல்லாம் பேசலாம் ....கொடுத்து வைத்தவன் நான்

gans5001
08-12-2004, 10:56 PM
வாழ்த்துக்கள் ப்ரியன்... மனம் போல அமையப்பெற்றமைக்கு

பிரியன்
14-12-2004, 04:09 PM
Originally posted by gans5001@Dec 9 2004, 03:56 AM
வாழ்த்துக்கள் ப்ரியன்... மனம் போல அமையப்பெற்றமைக்கு


நன்றி நண்பரே...
எனக்கு கிடைத்த பொக்கிசம் என் பெற்றோர்..

pradeepkt
15-12-2004, 04:48 AM
பரஞ்சோதி அண்ணன் சொன்னது போல் நண்பன் போலும் தந்தை அமைவது ... அமைந்தும் நிலைக்காது போவது ... என் மனச் சட்டைத் துணிகள்தான் ஞாபகத்தில் தினமும் ஏங்குகின்றன.
எதிரிக்கும் வரக்கூடாது இந்த நிலைமை.
நிறைய பழைய நினைவுகளை மயிலிறகைக் கொண்டே கிளறி விட்டு விட்டீர்கள், ப்ரியன்!

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
15-12-2004, 02:35 PM
Originally posted by pradeepkt@Dec 15 2004, 09:48 AM
பரஞ்சோதி அண்ணன் சொன்னது போல் நண்பன் போலும் தந்தை அமைவது ... அமைந்தும் நிலைக்காது போவது ... என் மனச் சட்டைத் துணிகள்தான் ஞாபகத்தில் தினமும் ஏங்குகின்றன.
எதிரிக்கும் வரக்கூடாது இந்த நிலைமை.
நிறைய பழைய நினைவுகளை மயிலிறகைக் கொண்டே கிளறி விட்டு விட்டீர்கள், ப்ரியன்!

அன்புடன்,
பிரதீப்அப்படியா பிரதீப் , மிக்க நன்றி

அமரன்
02-10-2007, 02:47 PM
பிரியனின் அப்பா பிரிய கவிதை.
நினைவுகளை கிளறிவிட்ட கலப்பை.

மனம் நிறைந்த பாராட்டுதலுடன்,

மீனாகுமார்
02-10-2007, 04:17 PM
அப்பாவின் சட்டை


அடடா ....
நான் இன்று அழகானேன்.
அணிந்திட்ட இறுக்கமான
அவர் சட்டையால்.......

அற்புதமய்யா... அப்பாவின் சட்டையை அணிந்து கிடைக்கும் மகிழ்சியை விட வேறென்ன நம்மை பிரம்மிப்பூட்டும். நல்லதொரு கவிதை.

இளசு
04-10-2007, 10:41 PM
அன்பு ப்ரியன்

பெற்றவருக்கு மணிவிழா நடத்தப்போனபோது
இதை அச்சடித்து வழங்கவேண்டிய
அளவிலா அன்புப்பரிசு....

உறவுகள் தழைக்க ஊற்றப்படும்
இவ்வகைக் கவிதை வெள்ளம்
இன்னும் இன்னும் நீ தரவேண்டி
அண்ணனின் அன்பு ஆணை(சை)..
முன்பு ஒரு முறை இளசு எழுதியிருந்தார், கிட்டத்தட்ட இதே கருத்தில்.
கொடுத்து வைத்த மகன்கள்.. நெஞ்சில் நிற்கும் அப்பாக்கள்

அன்பு நண்பா,
நலமா?

ஏன் வெகுநாள் மன்ற வரவு இல்லை?

எங்களைக் காணாமல் இருக்கக்கூடிய அளவுக்கு பணிப்பளுவா?
சூழல் மாற்றமா?

மீண்டும் இங்கு கண்டால் மகிழ்வேன்..

நீ குறிப்பிட்ட படைப்பின் பெயர் ''அப்பாயணம்''
(திஸ்கியில் உள்ளது)

ஷீ-நிசி
06-10-2007, 01:32 AM
என் தேவை தீர்க்க
அவர் குணமுணர்ந்து
நான் நடத்திட்ட உண்ணாவிரதங்கள்.....

நினைவுகளை பின்னோக்கி அழைத்து சென்ற வரிகள்..

(மீண்டும் நீங்கள் இங்கு வந்தால் உங்கள் கவிதைகளை தொடர்ந்து படிக்கும் ஆவல் ஈடேறும்.)