PDA

View Full Version : நவம்பர் 14...



rambal
13-04-2003, 01:14 PM
அடுத்தவர் எச்சில்
டம்ளரை கழுவி
வயிறு கழுவும் கூத்துக்கள்
நடக்கும்..

தீப்பெட்டி தொழிற்சாலையின்
கந்தகங்களை
சுவாசித்து
பாழாய்ப்போன நுரையீரலுக்கு
சொந்தக்காரனாயும்

பள்ளி சென்று கணக்கு
படிக்கும் வயதில்
அடுத்தவர் குடிக்கும்
சாராய பாட்டில்களின்
கணக்கை எண்ணியும்...

பேனா பிடிக்கும் வயதில்
கையெல்லாம் கிரீஸாகி
ஸ்பேனரும் பிடிக்கும்..

நோட்டுப் புத்தகங்கள்
சுமக்கும் வயதில்
பொட்டலம் மடித்தும்...

இன்னும் பலவும் உண்டு..
எல்லாம் சுகப்பட்டதல்ல..

ஒன்றுக்குமேல் தேச குற்றம்
என்று அறிவியுங்கள்
அல்லது
குழந்தைகள் தினம் கொண்டாடுவதை
நிறுத்துங்கள்...

aren
13-04-2003, 01:20 PM
நன்றாகச் சொன்னீர்கள். அருமை.

poo
13-04-2003, 01:23 PM
நல்லதொரு அறைகூவல்....
செவிசாய்க்க வாய்ப்பில்லை.. - எல்லோர்
செவிகளிலும் செல்போன்...(செல்லுடப்பேசி!?)

-பாராட்டுக்கள் ராம்!!!

இளசு
13-04-2003, 01:44 PM
ராம் அருமை
நம்ம திருவாளர் பொதுஜனம் சொல்றார்:

நாம என்ன பண்றது சார், இதெல்லாம் விதி, முன் ஜென்ம பாவம் சார்.
பணக்கார முதலாளிகளே ஒண்ணும் கண்டுக்கறதில்லே...
செல்லாடர் சட்டை பண்ணா
செல்லரிக்கும் பிரச்னை
இந்த சிவகாசிப் பாவம்
எந்த காசியில் போகும்

தன்னைப் போல் பிறரை எண்ணும்
முற்போக்கு கவிஞர் சொல்கிறார்:

பானை நிறைய சோறு
பள்ளிக்குப் போக துணி
கொடுக்க முடிஞ்சவன் மட்டுமே
கோவணம் அவிழ்க்க வேண்டும்

இன்னொரு புதுக்கவிஞர்:
கல் சுமக்கும் சிறுவன்
இளமையில் கல்

எல்லாம் சரி..!

ஊருக்கு ஊர் புரையோடிப் போன இதை
வேரோடு சாய்க்க என்ன வழி?
நான் பிறந்த ஊரில் சிலரைப் படிக்க வைக்க உதவுகிறேன்.
யானைப்பசிக்கு சோளப்பொறி...????

poo
13-04-2003, 03:20 PM
உங்களின் சோளப்பொறி.... (உங்களுக்கு புண்ணியமாப் போகும் சாமி...)

குமரன்
13-04-2003, 04:45 PM
நிதர்சனமான உண்மை...

செயலற்ற நிலையில் நாம்...
நம்மால் என்ன செ*ய்ய *இயலும்
என யோசித்து செயல்பட முடிந்தால்...
இளசுவின் சோளப்பொறியை
அக்கினிகுஞ்சாக மாற்றலாம்....


-குமரன்.

karikaalan
14-04-2003, 11:34 AM
குழந்தைச்செல்வம் என்பர்; அதன் பொருள் இதுதானோ!

இளவலே!

நீர் சொல்லியிருப்பதில் சிறிது திருத்தம் வேண்டியிருக்கிறது. சிவகாசியில் தற்போது குழந்தைகள் வேலையில் அமர்த்தப்படுவது இல்லை என்று அங்குள்ள தொழிலதிபர்கள் அடித்துக்கூறுகிறார்கள். அடியேன் அங்கு சென்றதில்லை; ஆனால் நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலமாகவும் இது போலவே அறிகிறேன். ஆகவே சிவகாசியைக் குற்றம் கூறுவதை நாம் நிறுத்த வேண்டும்.

===கரிகாலன்