PDA

View Full Version : எதிர்பாராமல் தட்டுப்பட்டவைகள்...



rambal
16-09-2004, 03:02 PM
எதிர்பாராமல் தட்டுப்பட்டவைகள்...

புவிமிசை காண
கண்கள் இருத்தல் நன்று..
இல்லாதிருத்தல்
மிக மிக நன்று..

****

அந்தரங்கப்
புனிதம் என்பதில்லாத
போதும்
குழந்தைகள் பிறக்கின்றன
தெருவோரங்களில்..

****

அர்த்தம் இழந்த
சொற்கள் மட்டுமே
உருவாக்குகின்றன
தலைசிறந்த
கவிதையை..

****

மூளை மழுங்கடிக்கப்பட்ட
பிரதேசத்தில் மட்டுமே
புத்திசாலிகள்
தோன்றுகின்றனர்..

****

மொழிப்பிரச்சினை
வியாபாரரீதியாக
வெற்றி பெற்ற பொழுது
நாம் தோண்டியது
இடுகாடுகளில்
புதைகுழிகள்..

****

பொழுதுபோக்க
திரையரங்கு சென்று
தலையெழுத்தை
மாற்றிய பிறகு
பிறக்கின்றன
நாளைய நட்சத்திரங்கள்..

****

லிட்டர் பாலை விட
தண்ணீர் விலை
அதிகம்..
பொருளாதாரம்
இன்னும் ஏறவில்லை..

****

பலத்த பாதுகாப்புகளுக்கிடையில்
பலவந்தமாய்
ஏற்றப்படுகிறது கொடி..
ஆய பயன்?

****

அடிப்படை தேவைகள்
இல்லாத தேசத்தில்
பறக்கின்றன
தேவைக்கதிகமான கொடிகள்..

****

வாசித்ததற்கு விமர்சணம்
எழுதாதிருப்பதும்
எழுதியதற்கு விமர்சணம்
இல்லையென்று
விசனப்படுவதும்
எழுத்தாளருக்குரியது..

****

இளசு
17-09-2004, 03:47 AM
மிக பிஸியா ராம்?

எதிர்பாராத ஓர் சந்தர்ப்பம் அமைந்து
இங்கே சட்டென நீ பதித்த உணர்வுகள்..

நான் எதிர்பார்க்கிறேன்..
தொடர்ந்து இதுபோல் தட்டுப்பட வேண்டுமென..

சுதந்தரக்கொடி
பால் நீர்

அறைகிற உண்மைகள்..

ராம்பால் முத்திரைகள்..

தொடரட்டும் ..பாராட்டுகள்..

kavitha
17-09-2004, 10:57 AM
பளிச் பளார் ரக 'சிறகு' கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
17-09-2004, 11:20 PM
அருமை ராம் வழக்கம்போல். ஆழமாய், அழகாய், அறைவது போல் ஒவ்வொன்றும். ஆனால் அவையனைத்துக்கும் பதில்கள்தான் கேள்விக் குறி....

தஞ்சை தமிழன்
18-09-2004, 05:32 AM
வெளிச்சம் போட்டுக்காட்டும் வரிகள்.

அருமை. பாராட்டுக்கள். ராமுக்கு.

மன்மதன்
18-09-2004, 08:01 AM
அழகான, 'நச்'சன்ற ஆழமான வரிகள்..அசத்தல் ரகம்..
அன்புடன்
மன்மதன்

rambal
19-09-2004, 06:03 AM
இதற்கு முன் இங்கு
வந்ததில்லை..
வந்ததாகவும் தெரிகிறது..

வந்திருக்கிறேன்..
அந்தக் கல்லிற்கு
அப்பால் கொஞ்சம் புற்கள்..
எருக்கஞ்செடி..
அதில் வடியும் பாலின்
மணம்..

கொஞ்சம் கொஞ்சமாய்
தட்டுப்படுகிறது..
நான் வந்ததற்கான
நியாபகங்கள்..

இறுதியாக
என்னைப் புதைத்த பொழுது
என்று நினைக்கிறேன்..

இதற்கு முன் இங்கு
வந்ததில்லை..
வந்ததாகவும் தெரிகிறது..

இளசு
19-09-2004, 06:42 AM
þÐ×õ áÁ¢ý ¾É¢Óò¾¢¨Ã..

«ôÀʧ þ¨¾ ¦¾¡¼Ã¡ì¸×õ áõ..

karikaalan
19-09-2004, 07:08 AM
முன்பு வந்தபோது நடைப் பிணம்
இப்போது நிஜப் பிணம்

வராதது மாதிரியும் இருக்கிறது
வந்தமாதிரியும் தெரிகிறது

வாழ்த்துக்கள் ராம்பால்ஜி. சிந்தனை எங்கெங்கோ ஓடுகிறது தாங்கள் எழுதியதைப் படிக்கும்போது.

===கரிகாலன்

பாரதி
20-09-2004, 01:44 PM
சிறப்பான கவிதைகள் ராம்.

அதிலும்.....
****

பலத்த பாதுகாப்புகளுக்கிடையில்
பலவந்தமாய்
ஏற்றப்படுகிறது கொடி..
ஆய பயன்?

****

அடிப்படை தேவைகள்
இல்லாத தேசத்தில்
பறக்கின்றன
தேவைக்கதிகமான கொடிகள்..

****
இந்த இரண்டு கவிதைகளும்.....
தேசத்தின் நிலையை தெளிவாக விளக்குகின்றன...
நாட்டுப்பற்றுள்ள மக்களும் நாமும் ...உச்... கொட்டியபடி..

rambal
20-09-2004, 05:03 PM
ரயில் நிலையப் பரபரப்பு
எங்கும் உண்டு..

ரயில்கள் கடந்து சென்றதும்
காலியாய் கிடக்கும்
பிளாட்பாரங்களின்
வெறுமையும் உண்டு..

ரயில் நிற்பதற்கும்
கடந்து செல்வதற்கும்
இடையில்
அல்லாடுகிறது
வாழ்க்கை..

karikaalan
21-09-2004, 12:37 PM
ரயில் வரக்காத்திருக்கும் நேரமும் உண்டு
ரயில் கடைசிப்பெட்டி கடந்த பிறகும்
கை ஆட்டிக்கொண்டே நினைவுகளை
அசை போடுவதும் உண்டு.

வாழ்த்துக்கள் ராம்பால்Ji.

===கரிகாலன்

அறிஞர்
22-09-2004, 09:12 AM
வாழ்த்துக்கள் ராம்பால்... தொகுப்புக்கள் அனைத்தும் வெகு அருமை... விமர்சனம் பற்றி கூறிய கவியும் அருமை....

Narathar
23-09-2004, 07:36 AM
ராம்பாலின் முத்திரை கவிதைகளில்
பெயரை வாசிக்காமலேயே
சொல்லியிருப்பேந் இது ராம்பால் கவிதை என்று!

rambal
23-09-2004, 04:57 PM
கட்டியணைத்துத் தூங்கும்
தலையணைகள்
மாத்திரம் மாற்றப்படுகின்றன..

யாரும் இது வரை
வந்தமர்ந்ததில்லை
பைக் பில்லியனில்..

திரையரங்கில்
ஓர சீட்டில் அமர்ந்து
ஒரு படம் கூட பார்த்ததில்லை..

ஒரு சாவி
ஒரு வீடு
ஒரு ஆள்
அத்தனையும் தனியாய்..
இருந்தாலும் சுகமாய்..

இது
சௌகரியமா?
வேதனையா?

மன்மதன்
25-09-2004, 09:43 AM
அருமையான தனிமை.
அழகான தீட்டல்..
நல்ல கவிதை..
அன்புடன்
மன்மதன்

thamarai
25-09-2004, 04:55 PM
அருமையான தொகுப்புக்கள்...
வாழ்த்துக்கள்....

rambal
26-09-2004, 05:54 AM
நிழல்கள் சாயைகள்..
சாயை கண்டு
களிக்கும் கூட்டம்
நம்புகின்றன
நிழல்களை..

வீட்டில் ஒருவனாக
தலைவனாக
கடவுளாக
நிழல் மனிதர்கள்
உருமாற்றம் ஆகின்றார்கள்..

ஜனங்களும்
காண்கிறார்கள்
கனவுகள்..

கனவுகள் எல்லாம் சாயைகள்...

rambal
26-09-2004, 05:55 AM
நிழல்கள் சாயைகள்..
சாயை கண்டு
களிக்கும் கூட்டம்
நம்புகின்றன
நிழல்களை..

வீட்டில் ஒருவனாக
தலைவனாக
கடவுளாக
நிழல் மனிதர்கள்
உருமாற்றம் ஆகின்றார்கள்..

ஜனங்களும்
காண்கிறார்கள்
கனவுகள்..

கனவுகள் எல்லாம் சாயைகள்...

இக்பால்
26-09-2004, 08:32 AM
இணையகத்தில் இந்த மாதிரி சாயைகள் அதிகம்.

அதை நம்பி ஒரு கூட்டம் கனவுலகில் வாழும்.
(நம்மையும் அந்தக் கணக்கில் சேர்க்கலோமோ?!)

சரிதான்...

சாயை என்பதை சாயல், மாயை என எடுத்துக் கொண்டேன்.

நிழல் உருவம் எனச் சொன்னாலே போதுமே.

ஏன் இன்னும் சாயை என ஒரு வார்த்தையைச் சேர்க்கிறோம்?

உங்களுக்கு இந்தக் கவிதை பிடித்திருப்பதால் இதன் அர்த்தமும்

பிடிபட்டு இருக்க வேண்டுமே... விளக்கம் கொடுங்கள்.

-அன்புடன் அண்ணா.

rambal
04-10-2004, 05:43 PM
பாராட்டி, விமர்சித்து என்னை ஊக்கப்படுத்திய
அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல...
எனது அடுத்த தொகுப்பை ஆரம்பிக்கிறேன்..
காதலாய நமஹ...

பூமகள்
30-05-2008, 09:06 AM
நினைவில் தெறித்தன
கில்லிகள்..!!

அள்ளித் தந்த ராம்பால் அண்ணாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..!!