PDA

View Full Version : அழகியே.....!



Nanban
15-09-2004, 06:59 PM
உன்
அலங்காரங்கள்
அழகாய்த் தானிருக்கின்றன -
அதற்காக
தூரத்தே,
வெகுதூரத்தே
ஒரு புனுகுப் பூனையோ
ஒரு கஸ்தூரி மானோ
உயிர் விடாதிருக்கும் வரையில்.......


....

பரஞ்சோதி
16-09-2004, 07:16 AM
இயற்கையே அழகு.
நன்றி நண்பனே!
ரொம்ப பிஸி என்று நினைக்கிறேன், அதான் குறைவான உவமைகளோடு கவிதைகள் வருகிறது.

இளசு
17-09-2004, 03:52 AM
சின்ன கவிதை..
நிறைய்ய்ய்ய்ய்ய்ய யோசிக்கவைத்தது..

அஹிம்சா பட்டுப்புடவை ( இந்தவார விகடனில்(?) குட்டிக்கதை,)
அழகிய மயிலை சமைத்த அழகிய சகோதரிகள் (சுஜாதாவின் சிறுகதை)
என பல நினைவுகளை கிளப்பி விட்டது..

நண்பன்..
இது அழகிய சிறுவெடி கவிதை....
வேட்டுச்சத்தம் அதிகம்..

பாராட்டுகள்

இளந்தமிழ்ச்செல்வன்
17-09-2004, 11:12 AM
சைவக் கவிதை சமைத்ததற்கு நன்றி "நண்பன்" அவர்களே. ஆழமான கருத்துக்கள்.

rambal
17-09-2004, 04:49 PM
எல்லாம் தனக்கென்று உரிமை கொண்டாடும் மனோபாவம்
வளர்ந்துவிட்டதால் தாம் செய்வது தப்பு என்று கூட
யோசிக்கவிடாத அளவிற்கு மூளை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.
நாமும் அதற்குப் பழகிவிட்டோம். மிகப்பெரிய மூளைச் சலவை
நம்மை அறியாமலேயே நடந்துவிட்டது.
சீக்கிரம் விழித்துக் கொண்டால் நலம்..

சமூகத்தின் மீது அக்கறை இருக்கும் உங்களைப் போன்றவர்களால்தான்
அடுத்தவரை யோசிக்க வைக்க முடியும்..


தொடரட்டும்....

Nanban
21-09-2004, 07:56 PM
நன்றி - பரஞ்சோதி, இளசு, இளந்தமிழ்ச்செல்வன், ராம்பால் அவர்களுக்கு.



சைவ கவிதை சமைத்ததற்கு நன்றி "நண்பன்" அவர்களே. ஆழமான கருத்துக்கள்.


அதென்ன, சைவம், அசைவம்...?

தஞ்சை தமிழன்
22-09-2004, 05:14 AM
இயற்கையின் மேன்மையை இதமாக கூறும் நண்பணின் கவிதை அருமை.

பாராட்டுக்கள்.

அறிஞர்
22-09-2004, 09:09 AM
அழகாய் கவிதை மூலம் படம்பிடித்து கூறிய விதம் அருமை....

Narathar
23-09-2004, 07:39 AM
ரொம்ப பிஸி என்று நினைக்கிறேன், அதான் குறைவான உவமைகளோடு கவிதைகள் வருகிறது.

குறைவான உவமையென்றாலும்
நிறைவான கருத்துக்கள்!
நண்பனின் வரிகள்
நச்சென்று இருக்கிறது
வாழ்த்துக்கள்

Nanban
24-09-2004, 07:08 PM
நன்றி நண்பர்களே.....

எல்லோருமே குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறீர்கள் - கவிதை சிறியதாக இருக்கின்றதென்று...

எல்லா வடிவங்களையும் செய்து பார்க்கலாமே என்ற ஆவல் தான் இம்முயற்சி....

மன்மதன்
25-09-2004, 09:45 AM
கடுகு குறைந்தாலும் காரம் குறையவில்லை.. இளசு அண்ணா சொன்னது மாதிரி



இது அழகிய சிறுவெடி கவிதை..
வேட்டுச்சத்தம் அதிகம்..

அன்புடன்
மன்மதன்

Nanban
26-09-2004, 06:49 PM
நன்றி மன்மதன்....

அப்புறம் வெள்ளிக்கிழமை வரவே இல்லை...?

மன்மதன்
28-09-2004, 09:14 AM
நன்றி மன்மதன்....

அப்புறம் வெள்ளிக்கிழமை வரவே இல்லை...?

வெள்ளி ??
கொர்..கொர்ர்ர்.
அன்புடன்
மன்மதன்

அமரன்
28-09-2007, 08:29 AM
அறியாமல் அறிந்துசெய்யும்
தவறுகளுக்கு உடந்தையாக
எத்தனைபேர் காசினியில்...!

கொஞ்சும் சாட்டையில்
பஞ்சமில்லா சுளீர் ....!