PDA

View Full Version : கனவுக் கன்னி......Nanban
12-09-2004, 06:09 PM
கனவுக் கன்னி...

சூன்யத்தில் சிக்கிய
ஒரு நாளில்
பணியேதுமின்றி
கிடக்கிறது உடல்.

ஓய்வெடுக்கப் பணித்தால்
உடல் பிரிந்து
மனம்
தறிகெட்டு ஓடுகிறது -
கருப்பும் வெளுப்புமான
சிறகுகள் முளைத்த
குதிரையில்...

பறப்பதே பிறப்பாய்
காற்றைத் துளைந்து
எல்லைகள் கடந்து
கால் பதித்த இடத்தில்
ஆடைகளே சுமையாய்
ஏதோ ஒரு பெண்...

முகம்
ஏறிட்டு நோக்கினால்
வட்டம் இருக்கிறது -
கண், மூக்கு, காதின்றி.

அன்றைய தேவையாக
அவள் மட்டுமென
குனிந்து
முத்தமிட்டு முகர்கையிலே
மனம் பதிக்கிறது
கண், மூக்கு, காதுகளை
அந்த வெற்று வட்டத்தில்.

உறவை முடித்து
மீண்டும் முகம் நோக்கினால்
அதே
வெற்று வட்டம்.

தட்டி எழுப்பி
காப்பி தரும்
மனையாட்டியின்
வட்ட முகத்தில்
கண், மூக்கு, வாய்
இருக்கிறது -
மனம் வடித்த
இடங்கள் பிசகி...

திரும்ப வந்து
உடலோடு
ஒட்டிக் கொள்கிறது
மனம் -
பறந்து திரிந்த
சலிப்புடன்.

kavitha
13-09-2004, 04:04 AM
உடலுக்குப் பணியில்லாவிட்டால்
மனம் தறிகெட்டு ஓடும் என்பதை
அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
கனவுகள் முழுதும் விளங்காதவைகள் தான்.

mythili
13-09-2004, 05:43 AM
மனிதனுக்கு இது போன்ற விசித்திர கனவுகள் கூட வருமா என்ன???

எனக்கு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தான் கனவுகள் வந்துள்ளன. :(

அன்புடன்,
மைதிலி

kavitha
13-09-2004, 05:56 AM
மனிதனுக்கு இது போன்ற விசித்திர கனவுகள் கூட வருமா என்ன???

கனவுகள் மூளையில் பதிக்கப்பட்ட பதிவுகளின் விளையாட்டு என்று மருத்துவர்களின் கட்டுரையில்
படித்திருக்கிறேன் மைதிலி. கனவுகளுக்கு பலன்கள் உண்டென்றும் கேள்விப்பட்டதுண்டு.
சில சமயங்களில் விரும்பத்தகாத கனவுகளைக் கண்டு பயந்தும் இருக்கிறேன்.

மன்மதன்
13-09-2004, 08:33 AM
கனவுகளின் கவிதையில் நண்பனின் மனம் சிறகடித்து பறக்கிறது. நல்ல கவிதை

அன்புடன்
மன்மதன்

Mathu
13-09-2004, 09:33 AM
உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டாலும்,
மனம் எப்போதும் உற்சாகமாய் புதிய தேடலுடன்.
ஒன்றிருக்க இன்னொறை நாடுவது தான் மனித மனமோ..!
எண்ண ஓட்டத்தின் அழகான விளிப்பாடு நண்பா..!

Nanban
13-09-2004, 07:39 PM
கவிதை வாசித்து கருத்துச் சொன்ன கவிதா, மைதிலி, மன்மதன், மதன் - நன்றி.

மன்மதன் - மது (மதன் - இருவரும் ஒருவரோ...?)மனிதனுக்கு இது போன்ற விசித்திர கனவுகள் கூட வருமா என்ன???


அட, இதென்ன பிரமாதம் - இதை விட பிரமாதமான, அடாவடியான, பயங்கரமான கனவுகள் எல்லாம் வரும்.

ஆனால், என்ன ஒன்று - இந்த கவிதை கனவல்ல.

ஒரு நுட்பமான விஷயம் - தாம்பத்ய உறவில், ஏற்படும் சலனங்களைப் பற்றி எழுதி இருந்தேன். தலைப்பு கவர்ச்சியாக இருந்ததாலும், கனவு என்ற சொல் இருந்ததாலும் கனவு என்றே கருதி விட்டீர்கள் போலிருக்கிறது.

இதற்கு மேல் இந்த கவிதையின் பொருளை விளக்க முடியாது. அல்லது பண்பட்டவர் பகுதிக்கு மாற்ற வேண்டி இருக்கும்.....

பாரதி
14-09-2004, 01:59 PM
நண்பரே.... வீட்டில் சொல்ல வேண்டும் போல இருக்கிறதே...!

இளந்தமிழ்ச்செல்வன்
15-09-2004, 10:24 AM
நண்பரே.... வீட்டில் சொல்ல வேண்டும் போல இருக்கிறதே...!

பாவங்க விட்டுடுங்க பாரதி. அது சரி எந்த வீட்டுல....!!!!

இளந்தமிழ்ச்செல்வன்
15-09-2004, 10:33 AM
[quote][size=24][fade:583e6b6353][scroll:583e6b6353][highlight=red:583e6b6353]கனவுக் கன்னி...[/highlight:583e6b6353][/scroll:583e6b6353][/fade:583e6b6353]

சூன்யத்தில் சிக்கிய
ஒரு நாளில்
பணியேதுமின்றி
கிடக்கிறது உடல்.

ஓய்வெடுக்கப் பணித்தால்
உடல் பிரிந்து
மனம்
தறிகெட்டு ஓடுகிறது -
கருப்பும் வெளுப்புமான
சிறகுகள் முளைத்த
குதிரையில்...

பறப்பதே பிறப்பாய்
காற்றைத் துளைந்து
எல்லைகள் கடந்து
கால் பதித்த இடத்தில்
ஆடைகளே சுமையாய்
ஏதோ ஒரு பெண்...

முகம்
ஏறிட்டு நோக்கினால்
வட்டம் இருக்கிறது -
கண், மூக்கு, காதின்றி.

அன்றைய தேவையாக
அவள் மட்டுமென
குனிந்து
முத்தமிட்டு முகர்கையிலே
மனம் பதிக்கிறது
கண், மூக்கு, காதுகளை
அந்த வெற்று வட்டத்தில்.

உறவை முடித்து
மீண்டும் முகம் நோக்கினால்
அதே
வெற்று வட்டம்.


வட்டம் இருந்த இடத்தில் வேறு என்ன நண்பரே எதிர் பார்த்தீர்?

தட்டி எழுப்பி
காப்பி தரும்
மனையாட்டியின்
வட்ட முகத்தில்
கண், மூக்கு, வாய்
இருக்கிறது -
மனம் வடித்த
இடங்கள் பிசகி...

இடம் மாறினது ஒரு பிரசினையா உங்களுக்கு

திரும்ப வந்து
உடலோடு
ஒட்டிக் கொள்கிறது
மனம் -
பறந்து திரிந்த
சலிப்புடன்

கடைசியில் மிஞ்சியது அதுதானா?

மிகவும் ஏகாந்த சூழலில் இருந்து எழுதியுள்ளீர். நன்றாக இருந்தது. கொஞ்சம் குசும்பு செய்வோமே என்று தான் ஆங்காங்கே......

Nanban
15-09-2004, 06:29 PM
நண்பரே.... வீட்டில் சொல்ல வேண்டும் போல இருக்கிறதே...!

வீட்டிலே, இதெல்லாம் தெரியும்ங்க....

வீட்டிலே தெரியப் படுத்த கூடாத அளவிற்கு எந்த காரியத்திலும் ஈடுபடுவதில்லைங்க....

Nanban
15-09-2004, 06:31 PM
மிகவும் ஏகாந்த சூழலில் இருந்து எழுதியுள்ளீர். நன்றாக இருந்தது. கொஞ்சம் குசும்பு செய்வோமே என்று தான் ஆங்காங்கே......


குசும்பு நன்றாகத் தானிருக்கிறது...

இப்போதைக்கு எப்பவுமே ஏகாந்த சூழல் தான்...

நன்றி, பாரதி, இளந்தமிழ்செல்வன்....

பிரியன்
15-09-2004, 06:36 PM
பாராட்டுக்கள் நண்பரே...,அக இயல் உணர்வின் வெளிப்பாட்டை கவிதையில் கண்ணியமாய் கொண்டு வர பண்பட்டவாரால் மட்டுமே முடியும்.புரிந்தவர்கள் கண்டிப்பாய் ஒத்துகொள்வார்கள்.

மொழியின் வலிமை உணர்த்தும் இது போன்ற கவிதைகளை மன்றத்தில் காண்பது மகிழ்ச்சிக்குரியது.

Nanban
15-09-2004, 06:56 PM
அக இயல் உணர்வின் வெளிப்பாட்டை கவிதையில் கண்ணியமாய் கொண்டு வர பண்பட்டவாரால் மட்டுமே முடியும்.
புரிந்தவர்கள் கண்டிப்பாய் ஒத்துகொள்வார்கள்.

மொழியின் வலிமை உணர்த்தும் இது போன்ற கவிதைகளை மன்றத்தில் காண்பது மகிழ்ச்சிக்குரியது.

மிக்க நன்றி - பிரியன்.

இதை விட வலிமை மிக்கக் கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு. திருக்குறள் படித்துப் பாருங்கள்... இதைப் போன்ற ஆயிரம் கவிதைகளுக்கு வழி சொல்லும்....

அன்று, இவை எல்லாம் விவாதிக்கப்பட்டது. அக வாழ்க்கைக்கு அறிவுரை கூற அறிந்தவர்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. இன்றோ மருத்துவர்கள் மட்டுமே விவாதிக்கக் கூடிய அளவிற்கு ஒளிந்து கொண்டது....

Narathar
23-09-2004, 07:42 AM
நண்பா ஊருக்கு கிளம்புவது எப்போது?

thamarai
23-09-2004, 07:44 PM
கனவுக்கன்னி தந்த கற்பனை அபாரம்.
வாழ்த்துக்கள் நண்பனே...

Nanban
24-09-2004, 07:04 PM
நன்றி - நாரதர், தாமரை...

கற்பனைகள் அபாரமானவை தான். இல்லையென்றால், கவிதை எழுதுவது சிரமம் தான்....

ஊருக்குப் போவதற்கும், கவிதைக்கும் சம்பந்தமில்லை நாரதரே... துணை அருகில் இருக்கும் பொழுதே சுற்றித் திரியும் மனதைப் பற்றித் தான் பேச்சே....

நன்றி மீண்டும்....

விகடன்
28-05-2008, 11:25 AM
கவவுலக கதாபாத்திரங்கள் உண்மையிலேயே கறுப்பு வெள்ளையாகத்தான் தெரியுமா?
எத்தனையோ தடவைகள் கனவுலகில் திரிந்திருக்கிறேன். ஆனால் அந்த வர்ணத்தை மட்டும் கவனிக்க தவறிவிடுகிறேன். என்னதான் முன் திட்டம் தீட்டியிருந்தாலும் கவனிப்பதில்லை.

நண்பனின் கனவின் சுகத்தையும், அதை தவிடுபொடியாக்கும் அதிகாலை சுப்ரபாதத்தையும் மிகவும் இரசித்தேன். பாராட்டுக்கள் நண்பா...