PDA

View Full Version : மருத்துவம்: ஒற்றைத் தலைவலிஇளசு
13-04-2003, 07:52 AM
ஒற்றைத் தலைவலி

சில உண்மைகள்:

0

ஒரு சமயம் ஒரு பக்கம் வலிக்கும்
ஆனால், ஒருவருக்கே இடது, வலது
என மாறி மாறி வரலாம்.

0

பெயர்க்காரணம்
(உங்கள் மருத்துவருக்கே தெரியாமல் இருக்கலாம்...!)
Hemiial Headache
பாதித் தலைவலி
இதில் சில எழுத்துக்களைப் பிடுங்கி அமைத்த சொல்.
Migrainous Headache

0

ஆண்களில் 100 க்கு ஆறு பேர்
பெண்களில் 100 க்கு 15 பேர் வரை
இதனால் பாதிக்கப்படுகிறார்கள்

0

தலைவலி, குமட்டல், வாந்தி,
(நரம்பு மண்டலப் பாதிப்புகள்)
இவை வெவ்வேறு கூட்டணியில்
ஆனால் ஒரே பாணியில்
மீண்டும் மீண்டும் தாக்கும்.
(நம்ம அரசியல்வா(வியா)திகள் போலவே! )

0

தூண்டுபவை:
பசி
வெயில்/ கூசும் ஒளி
சில உணவு வகைகள் : சாக்லேட்,சைனீஸ் சமையல் உப்பு போன்ற பல
(நீங்களே சங்கர்லால் போல் துப்பறிய வேண்டும்)
மது
மாதவிலக்கு
உறக்கமில்லாமை
பெண்மை ஹார்மோன் மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜென்)
கவலை
வாசனைத் திரவியங்கள்
மனச்சோர்வான நிலை (Depression)

0

தடுப்பவை:
நல்ல உறக்கம்
மகிழ்ச்சி
கர்ப்பம்
முறையான மருந்துகள்

0

காரணங்கள் :
மரபுக் காரணங்கள் (முழுதும் அறியப்படவில்லை).
சூட்சுமம் இ செல்களிலா
என்று இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது.....

0

தீர்ப்பவை, தடுப்பவை என இருவகை மருந்துகள்
உண்டு. மருத்துவ ஆலோசனையின்படி இவை எடுத்து,
தூண்டுபவை தவிர்த்தும்
இந்தக் கொடும் வலியில் இருந்து விடுதலை பெற வாழ்த்துகள்.

aren
13-04-2003, 09:39 AM
ஒற்றைத்தலைவலி ஒரு கவிதையாய். அருமையாக உள்ளது நண்பரே. பாராட்டுக்கள்.

madhuraikumaran
13-04-2003, 09:51 AM
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி மாதிரி, ஆரெனுக்கு இளசு பத்தி பிரிச்சு எழுதறதெல்லாம் கவிதையாத் தெரியுது ! இது இளையவரின் திறமைக்குச் சான்று !!!
மிகவும் பயன்படக் கூடிய தகவல்கள் இளையவரே.. தொடரட்டும் உமது தமிழ் மருத்துவப் பணி !

poo
13-04-2003, 02:04 PM
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி மாதிரி, ஆரெனுக்கு இளசு பத்தி பிரிச்சு எழுதறதெல்லாம் கவிதையாத் தெரியுது ! இது இளையவரின் திறமைக்குச் சான்று !!!
மிகவும் பயன்படக் கூடிய தகவல்கள் இளையவரே.. தொடரட்டும் உமது தமிழ் மருத்துவப் பணி !


குசும்பா?!!...

அண்ணா உங்கள் பணி தொடரட்டும்..

madhuraikumaran
13-04-2003, 07:55 PM
குசும்பா?!!...

ஐயய்யோ... அதெல்லாம் இல்லீங்கோ ! சும்மா ஒரு தமாசுக்குச் சொன்னேன்.
ஆரேன் அண்ணாவப் போய் அப்படிச் சொல்வேனா?!!

Dinesh
15-04-2003, 12:52 PM
ஒற்றைத்தலைவலியை ஏற்படுத்தும் காரணிகளையும் குறிப்பிட்டுள்ளதால்
அதிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டியதுதான்.
விரிவாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி இளசு சார்.

தினேஷ்.

இளசு
16-04-2003, 06:59 AM
என் அன்பு நண்பர்களுக்கு/ தம்பிகளுக்கு நன்றி.
தம்பி தினேஷ், சார் என்ற வார்த்தையைத் தவிருங்களேன், அண்ணா என்று என்னை அழைப்பதில் ஆட்சேபம் இல்லையே?

karikaalan
16-04-2003, 08:15 AM
ஒற்றைத்தலைவலி எனக்கு எப்போதாவது வரும் ;
இளவலின் விளக்கங்கள் அதனை எவ்வளவு எளிமையாக்கிவிட்டது புரிந்து கொள்ள!
என்னதான் குடைந்து பார்த்தாலும், "உன் தலைல 'ஒண்ணும்' இல்லை!" என்றுதான் கூறுகிறார்கள் மருத்துவர்கள். ·பீஸையும் வாங்கிக்கொண்டு. என் தலையில் ஒண்ணும் இல்லேன்னு சொல்ல இவங்க எதுக்கு!!

நன்றிகள் இளவலே!

===கரிகாலன்

madhuraikumaran
17-04-2003, 05:16 AM
±ý ¾¨Ä¢ø ´ñÏõ þø§ÄýÛ ¦º¡øÄ þÅ*¸ ±ÐìÌ!!


¿¡Ã¾÷ þÕó¾¢Õó¾¡ '«¨¾ «Å*¸Ùõ ¦º¡øÄ¢ð¼¡*¸Ç¡?' «ôÀÊýÛ §¸ðÊÕôÀ¡÷....
±ôÀ Å¢ÎÓ¨È ÓÊïÍ ÅÕÅ¡÷Û þÕìÌ !

இளசு
17-04-2003, 07:09 AM
ஆமாம், மதுரைக்குமரா
நாரதர் இல்லாமல் கலகலப்புக்குப் பஞ்சமாய்விட்டது!

நிலா
23-04-2003, 12:25 AM
உங்களின் மருத்துவசேவை தொடர வாழ்த்துக்கள்!

samuthraselvam
21-11-2009, 04:28 AM
இளசு அண்ணாவிடம் ஒரு சந்தேகம்...

இந்த ஒற்றைத் தலைவலி எனக்கும் இருக்கிறது.... கண் புருவத்திலிருந்து கழுத்து நரம்பு வரை வழிக்கும்.....

தண்டல்காரன் மாதிரி ஷிபிட் போட்டு சரியாய் காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் வெயில் ஏற ஏற அப்படியே தலையை ஏதாவது பாறையில் போய் முட்டிக்கலாமா என்று தோன்றும்...

அடிக்கடி தும்மல் ' முகத்திற்கு பவுடர் போட்டால் தும்மல், வீடு பெருக்கும் போது தும்மல், காற்று பலமாக வீசினால் தும்மல், கடுகு தாளிக்கும் போது தும்மல், பிரசர் குக்கரை திறக்கும் போது வெளிவரும் ஆவி பட்டால் தும்மல்.......' இப்படி வாழ்க்கையில் பாதி தும்மியே கழித்துவிடுவேனோ என்று தோன்றுகிறது....

இந்தத் தலைவலிக்கும் சைனசிஸ்-கும் தொடர்பு இருக்கும் என்பது என் கருத்து...

இதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்று அக்குபஞ்சர் கற்றவர் ஒருவர் சொல்கிறார்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று கூறவும்...

இளசு
21-11-2009, 09:22 PM
லீலுமா

தும்மல் ஒவ்வாமையால் வருவது.

சோடியம் க்ரோமோக்ளைகேட் ஸ்ப்ரே - இதைக் கொஞ்சம் தடுக்கலாம்.

நல்லபடி கற்றவரென்றால் அக்யூபக்ஞ்சர் செய்துபார்க்கலாம். ( அதன் வெற்றி வீதம் பற்றி எனக்கு அறிவில்லை.) பக்க விளைவென்று பாதகமாய் ஏதுமில்லை என எண்ணுகிறேன்.

ஜனகன்
21-11-2009, 09:38 PM
இளசு அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி, இரவில் படுக்கும் போது ஒரே தலையிடி (வலப்பக்கம்) காலையில் எழுந்தால் வலப்பக்க கண் வீங்கி இருக்கும். ஆனால் கண் நோவதில்லை. இது எதற்காக? இது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? முடிந்தால் உதவுங்கள்.

இளசு
21-11-2009, 09:41 PM
அன்பு ஜனகன்

எத்தனை நாளாய்?
தினமுமா?
தூங்க முடிகிறதா?
மூக்கடைப்பு?
நாளாக நாளாக இன்னும் தீவிரம்?

வலப்பக்க Frontal sinusitis இருக்கலாம்.
நல்ல காது-மூக்கு-தொண்டை நிபுணரை உடன் ஆலோசிக்கவும்.

ஜனகன்
21-11-2009, 09:46 PM
மூன்று மாதமாக இருக்கின்றது.
தூங்குவது பிரச்சனையில்லை.
தினமும்தான்.
எனக்கு வசந்த காலத்தில் ஒவ்வாமை இருக்கின்ற படியால், தும்மல் மூக்கடைப்பு உண்டு.

குணமதி
22-11-2009, 03:03 AM
ஒவ்வாமைக்குப் படித்த நல்ல மருத்துவரைப் பாருங்கள்!

அதுவே நல்லது.