PDA

View Full Version : ஏ! ஆதி மனிதா!



kavitha
26-08-2004, 07:54 AM
ஏ! மனிதா!
இன்னும் நீ
ஆடை உடுத்திய
ஆதிமனிதன் தான்!

ஏனெனில்
உடைகளணிந்தும்கூட
உடலியல் கூறு
காண்கிறாய்!

மிருகங்கள்
உடைகள்
அணிவதுமில்லை!
அவிழ்த்து
அவமானப்படுத்துவதுமில்லை!

ஜீன்சு உடுப்புகள்
ஜீன் பரிணாமத்தை
புதுப்பிக்காதது ஏன்?

இன்னும் நீ
வேட்டையாடும்
ஆதிமனிதன் தான்!

அன்று மிருகங்களை!
இன்று மனிதர்களை!

அழிப்பாய் அன்றேல்
அழிக்கப்படுவாய்
எனும் கால்
அழிக்கப் புறப்பட்டவன் நீ!

இன்னும் நீ
உயிர் புசிக்கும்
ஆதிமனிதன் தான்!

அன்று பச்சையாய்
இன்று பக்குவமாய்

அஞ்ஞானம்
ஆடும் மட்டும்
விஞ்ஞானம்
விரிந்தென்ன பயன்?

உன் ஆதிக்க
ஆணவத்தை
அவை
வெளிச்சம்
போட்டதுதான் லாபம்!
அவை
இழந்த உயிர்களையா
திருப்பித்தரும்?

உன் மூதாதை
உரைக்குமட்டும்
உனக்குத்தெரியாது
நீ
ஆறறிவுப்பிராணி என்று!

தெரிந்து தான் என்ன?
மனிதனாகவா இருக்கிறாய்?

வயிற்றில் அடித்து
வாயை நிரப்புகிறாய்
என்றேனும் உன்
மனம் நிறைந்ததுண்டா?

மனம் இருந்தால் தான்
நீ
மனிதன்

எப்படி அறிவாய் பாவம்!
உன் கோரைப்பற்கள்
கிழித்ததெல்லாம்
இதயங்கள் தானே!

Mano.G.
26-08-2004, 08:14 AM
மனிதனின் நடைமுறை வாழ்க்கையை
அழகாக கவிதையில் சொன்ன
தங்கைக்கு வாழ்த்துக்கள்

மனோ.ஜி

thamarai
26-08-2004, 06:59 PM
மனம் இருந்தால் தான்
நீ
மனிதன்

எப்படி அறிவாய் பாவம்!
உன் கோரைப்பற்கள்
கிழித்ததெல்லாம்
இதயங்கள் தானே!

கவிதை அருமை.

இளசு
26-08-2004, 11:36 PM
மிருகம் வென்று மனிதம் நின்று நிலைக்க
நித்தம் ஆடும் பரமபத வாழ்க்கை..

நிதர்சன நிர்வாணத்தைச் சொல்லும் கவிதை..



அருமை கவீ... பாராட்டுகள்..

kavitha
27-08-2004, 03:17 AM
சமீபத்தில் ஈராக் கைதிகளை அவமானப்படுத்திய காட்சிகளை இணையத்திலிருந்து வெளியிட்ட தொலைக்காட்சி செய்தியைக் கண்டதன் பாதிப்பு இது!

எத்தனை எத்தனை அவமானங்கள்!
மனிதாபிமானமே இன்றி அவர்கள் செய்த கொடூர இம்சையும், அதைக்கண்டு நகைப்புற்ற அதிகாரிகளும் இன்னும் கண்முன்னே நிற்கிறார்கள். எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து மனித அறிவை மெச்சிக்கொண்டாலும் மனிதாபிமானம் இல்லாதபோது அவையெல்லாம் கால் தூசுக்குக் கூட மதிப்பில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Narathar
27-08-2004, 08:22 AM
அழிப்பாய் அன்றேல்
அழிக்கப்படுவாய்
எனும் கால்
அழிக்கப் புறப்பட்டவன் நீ!

இன்னும் நீ
உயிர் புசிக்கும்
ஆதிமனிதன் தான்!

அன்று பச்சையாய்
இன்று பக்குவமாய்



ஆம் நாம் இன்னும் ஆதிமனிதன் தான்!
நன்றாக இருந்தது உங்கள் கவிநயம்

தஞ்சை தமிழன்
27-08-2004, 08:42 AM
இன்னமும் டார்வின் தியரியை நாம் மறக்காமல் இருக்கிறோம் என்பதற்கு உங்கள் கவிதை ஒரு உதாரணம்.

சேரன்கயல்
28-08-2004, 04:11 AM
நீண்ட நாட்களுக்கு பின்...என் கண்களுக்கு பட்ட நல்ல ஒரு கவிதை...
மனம் நிறைவு கண்டதுண்டா என்ற கேள்வி...மிகச்சரி கவி...

இளந்தமிழ்ச்செல்வன்
30-08-2004, 08:18 AM
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டையும் கவிதையாய் படைத்தீர்கள். நியாயமான கேள்விகள், எண்ணங்கள்.

மனித உரு மிருகங்களுக்கு நல்ல சவுக்கடியும் கூட

kavitha
30-08-2004, 08:41 AM
நன்றாக இருந்தது உங்கள் கவிநயம்
_________________
அன்புடன்
நாரதர்
அபூர்வமாகக் காணக்கிடைக்கிறது நாரதரின் வருகையும் விமர்சனமும். மிக்க நன்றி!



இன்னமும் டார்வின் தியரியை நாம் மறக்காமல் இருக்கிறோம்

பல சமயங்களில் அதுதான் உண்மையும் கூட.
உங்கள் கருத்திற்கு நன்றி த. தமிழன் அண்ணா



நீண்ட நாட்களுக்கு பின்...என் கண்களுக்கு பட்ட நல்ல ஒரு கவிதை...
...
_________________
நலம் வாழ்க...
சேரன்கயல்...

இப்படி ஒரு பாராட்டைப் பெற "என்ன தவம் செய்தனை கவிதா?"
நன்றி சேரன். மனம் மகிழ்கிறது.
(சேரன் எதற்கும் எல்லா(ர்)க் கவிதைகளையும் வாசிச்சுடுங்க



உணர்ச்சிகளின் வெளிப்பாட்டையும் கவிதையாய் படைத்தீர்கள். நியாயமான கேள்விகள், எண்ணங்கள்
உங்கள் கருத்திற்கு நன்றி இ.த. செல்வன்

மன்மதன்
30-08-2004, 09:55 AM
சமீபத்தில் ஈராக் கைதிகளை அவமானப்படுத்திய காட்சிகளை இணையத்திலிருந்து வெளியிட்ட தொலைக்காட்சி செய்தியைக் கண்டதன் பாதிப்பு இது!

அருமையான கவிதை..பாராட்டுக்கள் கவி. இதே தலைப்பில் இன்னும் கொடுங்கள்..

அன்புடன்
மன்மதன்

samuthira
31-08-2004, 06:14 AM
வெகு நாட்களுக்கு பின் இங்கு வந்து படித்த முதல் கவிதை,,

கலக்குறே கவி.,



அஞ்ஞானம்
ஆடும் மட்டும்
விஞ்ஞானம்
விரிந்தென்ன பயன்?


அழுத்தமான சாடல்,,,, பாராட்டுக்கள் தோழி

இக்பால்
31-08-2004, 06:02 PM
எல்லோரையும் சென்றடைய வேண்டிய கவிதை தங்கை.

பாராட்டுகள். -அன்புடன் அண்ணா.

poo
01-09-2004, 05:13 AM
மானிடராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமென எங்கோ கேட்கிறது.....இன்னும் சில காலங்கள் கழித்து கேட்கவே கேட்காது....

உண்மை நிகழ்வுகளால் உருவெடுக்கும் கவிதைகள் என்றும் சிறப்பு... கவிக்கு பாராட்டுக்கள்!!

kavitha
01-09-2004, 07:42 AM
வெகு நாட்களுக்கு பின் இங்கு வந்து படித்த முதல் கவிதை,,

கலக்குறே கவி.,



பாராட்டுகள். -அன்புடன் அண்ணா.



கவிக்கு பாராட்டுக்கள்!!
_________________
என்றென்றும் அன்புடன்
அன்பு- பூ....


வெகு நாளைக்குப் பிறகு உங்கள் மூவரையும் இங்கு கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
நன்றிகளுடன் - கவிதா