PDA

View Full Version : என்ன வேண்டுமெனக்கு?



இளசு
25-08-2004, 05:59 AM
என்ன வேண்டுமெனக்கு?


காணி நிலம் வேண்டும்..
சொந்தமான நிலத்தின் காற்றை
சுத்தமாய் சுவாசிக்க வேண்டும்..

கன்று குடித்த மீதி
கறந்து நான் பருக வேண்டும்..

வியர்வையில் வளர்த்த
கீரை, காய் சமைக்க வேண்டும்..

நாள், வாரம், மாதம் எல்லாம்
நாட்காட்டி இன்றி நழுவ வேண்டும்..

படிக்க சில நூல்கள் வேண்டும்..
படுக்க கோரைப்பாயும் வேண்டும்..

படுத்த உடனே உறக்கம் வேண்டும்..
வெளுக்கும் முன்னே விழிப்பு வேண்டும்..

உடலில் உறுதி வேண்டும்..
மனதில் அமைதி வேண்டும்..



இப்படி ஒரு வாழ்வு வேண்டும்..
இது மாறுமுன்னே முடிவு வேண்டும்..

யாரும் காணாத மரணம் வேண்டும்..
யாரும் அழாத இறுதி வேண்டும்...

இங்கு - எனும் அடையாளக் கல் இல்லாத
எங்கோ ஓர் இடத்தில் புதைய வேண்டும்..

kavitha
25-08-2004, 07:38 AM
இப்படி ஒரு வாழ்வு வேண்டும்..
இது மாறுமுன்னே முடிவு வேண்டும்..
அருமை அண்ணா

தஞ்சை தமிழன்
25-08-2004, 07:42 AM
வேண்டுமெனக்கு
இளசுவின்

இது போன்ற கவிதைகள்

பரஞ்சோதி
25-08-2004, 07:03 PM
அற்புதமான கவிதை அண்ணா.

எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. என் மனதிலும் என் துணைவியாரின் மனதிலும் எதிர்கால திட்டமாக இருக்கும் எண்ணங்கள்.

அவர் தான் படித்து, பாராட்டி என்னை படிக்கச் சொன்னார்.

இது போன்ற கவிதைகள் பல உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றி அண்ணா.

நீங்க சொன்ன வாழ்க்கையை நான் ஒரு கட்டுரையாக எழுதும் எண்ணமும் இருக்கிறது.

அறிஞர்
26-08-2004, 02:14 AM
காணி நிலம் வேண்டும்..
சொந்தமான நிலத்தின் காற்றை
சுத்தமாய் சுவாசிக்க வேண்டும்....

இதை தொலைத்து இருப்போர்.. நம்மில் பலர்...

அழகான கவிதை......

வாழ்த்துக்கள்.. இளசு

thamarai
26-08-2004, 06:29 PM
அருமையான கவிதை.

ஆசைகள் பலவாய் உருமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.... மனதின் ஆசை நிம்மதியும் அமைதியுமாய் வேண்டி வேண்டும் வேண்டும் என்று எழுதிய கவி வரிகள் உண்மையில் மனதைத் தொட்டுச் செல்கிறது.

வாழ்த்துக்கள்...

samuthira
31-08-2004, 06:31 AM
அழகிய ஆசை... அழமான சிந்தனை சொல்லும் முடிவு....

பாராட்டுக்கள் நண்பரே...

gankrish
02-09-2004, 06:59 AM
இளசு ... உங்களுக்கு வேண்டும் என்றது எல்லாம் கிடைக்க வேண்டும்.. ஆனால் ... முதலில் நமக்கு இருக்கும் பொறுப்புகளில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும்.. கிடைக்குமா ?

பாரதி
02-09-2004, 03:55 PM
எப்போதும் பிரியாத நண்பன் வேண்டும்

பகையையும் நேசிக்கும் பண்பு வேண்டும்

பிணியில்லா வாழ்வு வேண்டும்

பசியில்லா நோன்பு வேண்டும்

உலகே அனைவருக்கும் சொந்தமாக வேண்டும்

உயிர்கள் அனைத்தும் உறவாக வேண்டும்

உண்மையை அறிய வேண்டும்

உள்ளே அமைதி வேண்டும்

உணர்வை இழக்க வேண்டும்


இப்படியே இன்னும் நிறைய எண்ண வேண்டும் ..........

பரஞ்சோதி
02-09-2004, 06:24 PM
எப்போதும் பிரியாத நண்பன் வேண்டும்

பகையையும் நேசிக்கும் பண்பு வேண்டும்

பிணியில்லா வாழ்வு வேண்டும்

பசியில்லா நோன்பு வேண்டும்

உலகே அனைவருக்கும் சொந்தமாக வேண்டும்

உயிர்கள் அனைத்தும் உறவாக வேண்டும்

உண்மையை அறிய வேண்டும்

உள்ளே அமைதி வேண்டும்

உணர்வை இழக்க வேண்டும்


இப்படியே இன்னும் நிறைய எண்ண வேண்டும் ..........

நன்றி பாரதி அண்ணாச்சி,

அப்படியே மற்றவர்களும் தங்களுக்கு வேண்டும் என்று நினைப்பதை கொடுக்கலாமே..

Nanban
02-09-2004, 07:44 PM
படுத்த உடனே உறக்கம் வேண்டும்..
வெளுக்கும் முன்னே விழிப்பு வேண்டும்..


எத்தனைத் தேடியும் கிடைக்காத சங்கதி ஆச்சே.... வேண்டும், வேண்டும் என்று நீங்கள் கேட்டதெல்லாம், எங்களுக்கும் வேண்டும், வேண்டும்....



எப்போதும் பிரியாத நண்பன் வேண்டும்


நன்றி பாரதி, எப்போ திரும்பி வரப்போறீங்க? ஒரு தனிமடல் அனுப்புங்க, சீக்கிரமா....

அக்னி
23-09-2007, 11:35 PM
இளசு அண்ணாவின் அழுத்த வரிகள்...
மன்ற முன்னோடிகளின் அசத்தல் வரிகள்...

இருந்தவையெல்லாம்
இழந்தவையான பின்...
தளர்ந்த மனதின்,
ஒருவரி உறுதிமொழி...
வேண்டும்...



இங்கு - எனும் அடையாளக் கல் இல்லாத
எங்கோ ஓர் இடத்தில் புதைய வேண்டும்..
இந்த வரிகள் எம் மனதில் பதியவேண்டும்...

ஆன்மா பறந்ததும்,
நாறும் உடலுக்கு,
இன்று மாளிகை கட்டி
ஆளுதல் தகுமோ..?

பாராட்ட தகுதி இல்லாவிடினும், பாராட்டாமல் இருக்கமுடியவில்லை...
பாராட்டுக்கள்...

aren
23-09-2007, 11:44 PM
அருமை இளசு அவர்களே. இந்தமாதிரியெல்லாம் கிடைத்தால் போட்டி போட்டு பெருவதற்கு பலர் வரிசையில் நிற்பார்கள். நான் முதல் ஆளாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்வேன்.

நல்ல கவிதை.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
24-09-2007, 04:41 AM
ஒவ்வொரு வரிகளும் செதுக்கபட்டுள்ளது.. கவிதை எழுதுபவர்கள் எப்படி வார்த்தைகளை எளிமையாய் எழுத வேண்டும் என்று சொல்லும் வகையில்..


கன்று குடித்த மீதி
கறந்து நான் பருக வேண்டும்..

நாள், வாரம், மாதம் எல்லாம்
நாட்காட்டி இன்றி நழுவ வேண்டும்..

எல்லாமும் கிடைக்க வாழ்த்துக்கள்! இளசு அவர்களே!

பூமகள்
24-09-2007, 06:05 AM
இப்படி ஒரு வாழ்வு வேண்டும்..
இது மாறுமுன்னே முடிவு வேண்டும்..

யாரும் காணாத மரணம் வேண்டும்..
யாரும் அழாத இறுதி வேண்டும்...
உண்மையில் எல்லோரின் ஏக்கமும் இதுவே இளசு அண்ணா.
அற்புதமான வரிகள்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்..!!

kavitha
24-09-2007, 09:51 AM
யாரும் அழாத இறுதி வேண்டும்...
அடிக்கடி நானும் சொல்லும் வரி இது.
(கடன்காரர்களுக்கு இது வாய்க்குமோ?!! சும்மா லொள்ளுக்குப்பா.. )
தாம் இறக்கும் தருணத்திலும் எவரும் மனம் நோகக்கூடாது எனும் இனிய உள்ளம்!

இளசு அண்ணாவின் அழகிய படைப்புகளை, மீண்டும் மேலெழுப்பி படிக்கச்செய்தமைக்கு நன்றி

அமரன்
24-09-2007, 12:00 PM
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? ஊரே அப்படியென்றால் வீடு, தோட்டம், துறவு போன்றன பற்றிச் சொல்லவா வேண்டும்..
பாய்ச்சல் முறையில் பதப்பதபட்ட பால்களையும்போலியாக கன்று காட்டி கறந்த பால்கலையும்பருகி ஆரோக்கியம் பெறுவதை விடகன்று குடித்த மிச்சப் பாலை குடிப்பது சுகமானது...(என் எச்சப்பாலைக் குடித்து வளர்ந்த பயல் என்று கன்று வையாது)..நேரடியாக அர்த்தப்ப்டுத்தினாலும் வரிகளின் மறைவில் தாய்மை தெரிகிறது...
உழைப்புத்தந்த வேதனத்தில் உழைப்புக்கு முதலிடும் ஆரோக்கியமானஅற்புதம் காட்டுகின்றது..
சோம்பல் களை..அறிவை பெருக்கு..எளிமை பேண்..உடலினை உறுதி செய்...உள அமைதி காத்திடு..மன யௌவனம் கவனி...விடிய முன் விழி..முடிய முன் முடிவு...நிறைவில் நிறைவு....அடையாளமாக நீ மட்டும் இரு......

தனக்கு வேண்டும் என்று சொல்லி எப்படி இருக்க வேண்டும் என்ற பாடம் சொன்ன அண்ணாவுக்கு நன்றி..