PDA

View Full Version : நிமிர்ந்து பறந்திடு!



kavitha
14-08-2004, 12:13 PM
http://img.123greetings.com/thumbs/eaug_indindependenceday/8365-001-01-1064.gif

நிமிர்ந்து பறந்திடு!

ஆணிவேர்கள் நாங்கள் என்றே
கொடிமரமே நீ
நிமிர்ந்து நின்றிடு!

உழைப்பால் நாங்கள்
கயிறுகள் தருவோம்
உயரத்தில் நீ
நிமிர்ந்து நின்றிடு!

கக்கும் தீக் காவிக்கு
காவு ஆனாலும்

வெள்ளம் எங்களுக்கு
வெள்ளை அடித்தாலும்

பிச்சை அளிக்கும் மழை
பச்சை தந்தாலும்

எங்கள் நெஞ்சுறுதி
ஏந்தி நீ
நிமிர்ந்து நின்றிடு!

ஏ!
அசோக சக்கரமே,
உன் காலுக்கு
வலியெடுத்தால்
எங்கள்
கண் மணி
பொருத்திடுவோம்!

வேலை தேடும்
எங்கள்
இளைஞர்களின்
முயற்சியைப் போல்
நீ
ஓயாது சுழன்றிடு!

வாழ்க்கை முழுதும்
எங்களின் தேடல் போல
ஓயாது சுழன்றிடு!

எங்கள் சுதந்திரத்தின் உடையே!
வல்லரசு ஆவோம்
என்ற நம்பிக்கை
இசையை
காற்றுக்குச் சொல்லி
ஆனந்தமாய் பறந்திடு!

பரஞ்சோதி
14-08-2004, 02:04 PM
சகோதரி உங்களுடைய சுதந்திர தினக்கவிதையால் எங்கள் மனதில் புத்துணர்ச்சி உண்டாகிறது.

பட்டொளி வீசி பறக்கும் மூவர்ணக் கொடிக்கு என் வணக்கங்கள்.

மன்மதன்
14-08-2004, 02:28 PM
சுதந்திர தின சிறப்பு கவிதை அருமை கவி.. வாழ்த்துக்கள்..

அன்புடன்
மன்மதன்

Nanban
14-08-2004, 07:43 PM
எங்கள் சுதந்திரத்தின் உடையே!
வல்லரசு ஆவோம்
என்ற நம்பிக்கை
இசையை
காற்றுக்குச் சொல்லி
ஆனந்தமாய் பறந்திடு!


அருமை. இந்தியா ஒரு வல்லரசு ஆக வேண்டும். பெரியண்ணன் போல அல்ல. ஒரு இனிய நண்பனைப் போல. இப்பொழுதே, நம்மை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றன - நம் அண்டை நாடுகள். அதைக் களைய வேண்டும். நல்லுறவிற்கு இன்னும் மெனக்கெட வேண்டும்.

கவிதையினுள் அப்படியே கும்பகோண துயரத்தைப் புகுத்தியது இன்னமும் அருமை. தொடர்க.

அன்புடன்,

இளசு
15-08-2004, 08:16 AM
அசோக சக்கரம் - கண்மணி..

புதிய கோணத்தில் உருவகம்..

பாராட்டுகள் கவீ..


உற்சாகம் தரும் கவிதைக்கு வந்தனமும் நன்றியும்..

karikaalan
15-08-2004, 02:06 PM
கவிதாஜி

தாய்நாட்டின் தற்போதைய நிலை அவ்வளவாக திருப்தி தருவதில்லையாயினும், மலையுயர நம்பிக்கை, மலை போன்ற நம்பிக்கை உண்டாக்குகிறது தங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

kavitha
16-08-2004, 04:53 AM
சகோதரி உங்களுடைய சுதந்திர தினக்கவிதையால் எங்கள் மனதில் புத்துணர்ச்சி உண்டாகிறது.

இக்கவிதையின் நோக்கமே அது தான் அண்ணா.. மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி!
-----------------------------------------------------------------------------------------------------------


சுதந்திர தின சிறப்பு கவிதை அருமை கவி.. வாழ்த்துக்கள்..

அன்புடன்
மன்மதன்

நன்றி மன்மதன். அப்படியே நீங்களும் ஒன்று தந்திருக்கலாமே!
-----------------------------------------------------------------------------------------------------------


பெரியண்ணன் போல அல்ல. ஒரு இனிய நண்பனைப் போல. இப்பொழுதே, நம்மை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றன - நம் அண்டை நாடுகள். அதைக் களைய வேண்டும். நல்லுறவிற்கு இன்னும் மெனக்கெட வேண்டும்.

கவிதையினுள் அப்படியே கும்பகோண துயரத்தைப் புகுத்தியது இன்னமும் அருமை. தொடர்க.

ஆமாம் நண்பரே! இயற்கை செய்யும் சதியை நினைத்தால் நமக்கே சில சமயம் நம்பிக்கை போய் விடுகிறது! அதைக்களைய வேண்டுமாயின் இப்படியான ஊக்கக்கவிதைகள் மிக அவசியம் அல்லவா?

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------


அசோக சக்கரம் - கண்மணி..

புதிய கோணத்தில் உருவகம்..

பாராட்டுகள் கவீ..


உற்சாகம் தரும் கவிதைக்கு வந்தனமும் நன்றியும்..

உற்சாகம் - இது இல்லையென்றால் இயக்கம் இல்லை!

அத்தகைய பாராட்டுகளை அளிக்கும் அண்ணாவிற்கு எனது நன்றிகள் எப்போதும் உரித்தாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------


தாய்நாட்டின் தற்போதைய நிலை அவ்வளவாக திருப்தி தருவதில்லையாயினும், மலையுயர நம்பிக்கை, மலை போன்ற நம்பிக்கை உண்டாக்குகிறது தங்கள் கவிதை.

புல்லே முளைக்காது என்ற போதும் நம்பிக்கையை விதைத்து செயற்கை வைரத்தை முதன்முதலில் விண்வெளியில் உருவாக்கவில்லையா ஜப்பானியர்கள்?
ஒரு வாசல் அடைத்து மறுவாசல் திறப்பான் இறைவன்.
நம்பிக்கையும் உழைப்பும் என்றும் வீண்போகாது. :)

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

mythili
16-08-2004, 06:21 AM
நானே உன்னிடம் கேட்கலாம் என்று இருந்தேன் கவி, சுதந்திர தினைத்தை ஒட்டி ஒரு கவிதை கொடு என்று...அருமை கவி.

அன்புடன்,
மைதிலி

kavitha
16-08-2004, 07:50 AM
நன்றி மைதிலி :)

அறிஞர்
16-08-2004, 08:13 AM
எங்கள் சுதந்திரத்தின் உடையே!
வல்லரசு ஆவோம்
என்ற நம்பிக்கை
இசையை
காற்றுக்குச் சொல்லி
ஆனந்தமாய் பறந்திடு!


ஆனந்தமாய்
சொல்லும்
வார்த்தைகள்...
என் மனதில்
நம்பிக்கையை
அதிகரிக்கிறது....
நன்றி கவி....

kavitha
16-08-2004, 09:13 AM
மகிழ்ச்சியாக உள்ளது அறிஞரே! நன்றி!

சாம்பவி
31-10-2007, 10:07 PM
நிமிர்ந்து பறந்திடு!
ஏ!
அசோக சக்கரமே,
உன் காலுக்கு
வலியெடுத்தால்
எங்கள்
கண் மணி
பொருத்திடுவோம்!

!

வாவ்.... !
கண்ணப்பரையும்
கலங்கடிக்கும் வரிகள்... !

கண்மணி என்ன தாயே....
கண நேரத்தில்
உயிரையும் கொடுத்திடுவோம்... !

நேசம்
01-11-2007, 03:48 AM
நம்பிக்கை கொள்வோம்.இந்தியா வல்லரசு ஆகும்.நாட்டு பற்றை உணர்த்தும் கவிதை படைத்த கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்