PDA

View Full Version : பிரிவு .. .. ..



Nanban
09-08-2004, 06:49 PM
நித்தம் நித்தம்
மனதில் உறுதி பிறக்கும் -
இன்று இரவு
சீக்கிரம்
படுத்துறங்க வேண்டுமென்று.

நித்தமும் படுக்கையில்
விழுந்த பின்னே தான்
விழித்துக் கொள்ளும்
பக்கத்தில் கிடக்கும்
உன் நினைவுகள்.

இன்று மட்டுமென்று
இரவுத் தூக்கம் தொலைத்து
உறவாடுகிறேன்
உன் நினைவுகளோடு.

சீக்கிரம்
உறங்கிக் கொள்ளலாம்
நாளை.

பரஞ்சோதி
10-08-2004, 12:55 PM
நாளை வரும் நாளை எதிர்பார்க்கும் நண்பனே!

உங்களின் தூக்கமில்லாத இரவுகளில் எங்களுக்கு கிடைக்கும் கவிதைகள் தான் எத்தனை?

இனிமேல் பகலில் உறக்கம் கொள்ளுங்களேன்.

மன்மதன்
10-08-2004, 01:39 PM
காதலில் விழுந்தவர்களின் புலம்பல் கவிதை வடிவத்தில்..
அருமையான கவிதை..

அன்புடன்
மன்மதன்

thamarai
10-08-2004, 07:57 PM
உங்களின் தூக்கமில்லாத இரவுகளில் எங்களுக்கு கிடைக்கும் கவிதைகள் தான் எத்தனை?

இனிமேல் பகலில் உறக்கம் கொள்ளுங்களேன்.
:D:D:D

பாலமுருகன்
11-08-2004, 06:34 PM
நாளை வரும் நாளை எதிர்பார்க்கும் நண்பனே!

உங்களின் தூக்கமில்லாத இரவுகளில் எங்களுக்கு கிடைக்கும் கவிதைகள் தான் எத்தனை?

இனிமேல் பகலில் உறக்கம் கொள்ளுங்களேன்.

பரம்ஸ் இது ஓவர்..!!!! உங்களுக்கு கவிதை வேண்டுமென்பதற்காக அவரை பகலிலும் உறங்க சொல்வது நியாயம் இல்லை...

நன்றி
பாலா

Nanban
12-08-2004, 07:26 PM
நன்றிகள் - நண்பர்கள் பரஞ்சோதி, மன்மதன், தாமரை, பாலமுருகன் அவர்களுக்கு.

பகலில் தூங்குவேன் - வெள்ளியன்று. உலகம் என்னவாயிற்று என்ற கவலையே இல்லாமல்.

இளசு
13-08-2004, 05:43 AM
பக்கத்தில் கிடக்கும் நினைவுகள்..
படுக்கையில் விழுந்தபின்னே
விழித்துக்கொள்ளும் நினைவுகள்..

படிக்கும் எவரையும் சொந்த அனுபவத்தை எண்ணிட வைக்கும் வரிகள்..

மதுவுக்கு அன்று கண்ணதாசன் சொன்னான்_
"நாளை முதல் குடிக்கமாட்டேன்..
சத்தியமடி தங்கம்..
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்"..

இன்று மட்டும், இன்று மட்டும் என்று
எத்தனை எத்தனை நித்திய நிகழ்வுகள்..

வாழ்க்கை விள்ளல். வழங்கிய நண்பனுக்கு பாராட்டுகள்.

Mano.G.
13-08-2004, 10:42 AM
நாளை என்ற நாள்
என்று வருகிரதோ
அதுவரை நாமும்
காத்திருப்போம்
அந்த நாளை நாளுக்கு


அருமை நண்பனே
வாழ்த்துக்கள்


மனோ.ஜி

பாரதி
14-08-2004, 01:28 AM
நிழலின் அருமை வெயிலில்
நிம்மதியின் அருமை பிரிவில்...

பாராட்டுக்கள் நண்பரே...

kavitha
14-08-2004, 08:01 AM
பிரிவு தான் உள்ளத்தை பதம் பார்க்கும்; பதப்படுத்தும்.
கவிதை அருமை நண்பரே..

எப்போதும் என் நினைவில் நீ
என்றாலும்
எழுகையிலும்
விழுகையிலும்
உனக்காக பிரார்த்திப்பேன்
இறைவனிடம்!
எப்போதாவது நாம் சந்திப்போம்
என்ற நம்பிக்கையுடன்...