PDA

View Full Version : வர்றார் வீர்சிங்...



poo
30-07-2004, 05:50 AM
வீர்சிங் ஒருநாள் தன்னோட கர்ப்பிணி மனைவிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்.. சிறிது நேரத்தில் மனுஷர் பயங்கரமா டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார்..

என்ன விஷயமென கேட்க... டான்ஸ் ஆடிக்கொண்டே செல்போனை நீட்டினார்... அதில் "DELIVERED" என ரிப்போர்ட் வந்திருந்தது!!

:shock: :( :lol:

பரஞ்சோதி
30-07-2004, 06:28 AM
ஆகா, நம்ம நண்பர் வீர் சிங்கை காணவில்லை என்று நினைத்தேன், இங்கே தான் இருக்கிறாரா?

கலக்குங்க பூ.

karikaalan
30-07-2004, 10:57 AM
பாவமே ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் குதிப்பாரோ வீர்சிங்!!

இளந்தமிழ்ச்செல்வன்
30-07-2004, 06:43 PM
பாவமே ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் குதிப்பாரோ வீர்சிங்!!

பட்டுன்னு சரியா கேட்டீங்க.

தஞ்சை தமிழன்
31-07-2004, 05:14 AM
அடுத்த செய்தி அனுப்பிவிட்டு,
வீர் சிங் அதுக்கும் குதிப்பார்.

இரட்டை குழந்தை என்று.

மன்மதன்
31-07-2004, 05:42 AM
ரொம்ப நாள் ஆச்சு வீர்சிங் பார்த்து.. ஒவ்வொருத்தர் அடிக்கும் கமெண்ட் பார்த்தால் நம்ம ஒவ்வொருத்துக்குள்ளும் ஒரு வீர்சிங் இருக்கான் :D :D

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
02-08-2004, 07:21 AM
அருமையான சிரிப்பு..... மன்மதனிடன் டியூசன் போனபிறகு.. வீர்சிங் ரொம்ப மோசமாயிட்டார்....

kavitha
02-08-2004, 07:52 AM
முதலில் படிக்கையில்," மாசமாயிட்டார்"னு வீர்சிங் மாதிரி படிச்சுத்தொலைச்சேன்! :lol: :lol:

விகடன்
20-07-2008, 11:01 AM
வீர்சிங்கின் டிலிவேர்ட் நகைச்சுவை கலக்கல்.
தொடருங்கள் அண்ணா...