PDA

View Full Version : பக்தி என்பது என்ன



rajeshkrv
28-07-2004, 12:07 PM
இப்பொழுதெல்லாம் கோயிலுக்கு செல்லும் இளைஞர்கள்/இளைஞிகள் கூட்டம் குறைந்து வருகிறது இதற்கு காரணம் என்ன..

பக்தி குறைந்து வருகிறதா
தெய்வ நம்பிக்கை குறைந்து வருகிறதா

வேறென்ன தான் காரணம்?

இதை பற்றி பேசலாமே

சாகரன்
28-07-2004, 12:15 PM
இதை எப்படிச் சொல்கிறீர்கள் நண்பரே?

அதிகமாகியிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அதுவும் தவிர கோவிலுக்குச் செல்பவரகளுக்குதான் பக்தியும் தெய்வ நம்பிக்கையும் இருப்பதாக கருதுவதுகூட சரியா தெரியவில்லை.

சரி... பக்தி, தெய்வ நம்பிக்கை குறைந்துவருகிறதா என்பது பற்றி பேசலாம்.. ந்ல்ல தலைப்புதான்!

இல்லை யென்றே நான் நினைக்கிறேன். இன்றைக்கு தமிழில் வெளிவரும் ஆன்மீக பத்திரிக்கைகளின் எண்ணிக்கையையும், ஆன்மீகத் த்லங்களுக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்றும் கேள்விப்படும் போது இல்லை என்றே தோன்றுகிறது.

ஆனால், இளைய தலைமுறை என்று நீங்கள் சொல்வதால் கொஞ்சம் யோசிக்க வேண்டி வருகிறது.. இளைய தலைமுறை என்றால் யாரைச் சொல்கிறீர்கள்? கல்லூரி பள்ளிகளில் படிப்பவர்களையா?

எனக்கு அவர்கள் பற்றி இன்னும் எந்த கருத்தும் இல்லை என்பதால் பின்னர் விவாதப் போக்கு கண்டு கலந்துகொள்கிறேன்.

இளந்தமிழ்ச்செல்வன்
30-07-2004, 07:52 PM
நண்பர் ராஜேஸ் அவர்களே,

தலைப்பு ஒன்றாய், ஆனால் உங்கள் கேள்வி ஒன்றாயும் உள்ளதே? ஆனால் விரிவாக பேச வேண்டிய விசயம். நிதானமாக வருவோம்

tgs9
06-10-2004, 09:35 AM
காட்டப்பட வேண்டிய நன்றியே எந்த பலனையும் எதிர்பார்க்காத ஒன்று,ஆகையால் அதன் மேன்மை அதிகம்.

தஞ்சை தமிழன்
06-10-2004, 12:31 PM
பக்தி குறைந்து போய்விட்டதாக தோன்றவில்லை.

இடைக்காலத்தில் பக்தி என்பது ஏதோ தவறானதாக போதிக்கப்பட்டதால் அந்த நிலை இருந்தது. ஆனால் இப்போது பக்தி என்பது பற்றி நல்ல தெளிவுள்ளவர்களாகவே மக்கள் இருக்கிறார்கள். ஆனால் மூடநம்பிக்கை என்பது கொஞ்சம் இருக்கிறது.

தமிழ்குமரன்
04-11-2004, 05:16 AM
இப்பொழுதெல்லாம் கோயிலுக்கு செல்லும் இளைஞர்கள்/இளைஞிகள் கூட்டம் குறைந்து வருகிறது இதற்கு காரணம் என்ன..

பக்தி குறைந்து வருகிறதா
தெய்வ நம்பிக்கை குறைந்து வருகிறதா

வேறென்ன தான் காரணம்?

இதை பற்றி பேசலாமே
இல்லை கூட்டம் அதிகமாக வருகின்றனர்.
பிரதோசம் போன்ற காலங்களில் கோவிலில் பாருங்கள்.