PDA

View Full Version : படித்தவை : பெரிய இடத்துப் பிள்ளை.இளசு
27-07-2004, 10:07 PM
படித்தவை : பெரிய இடத்துப் பிள்ளை

__________________________________________________________
அது கர்நாடக மாநிலத்தின் பிரம்மாண்ட
விருந்தினர் மாளிகை..

நேரம் இரவு 11 மணி..

மாநில உளவுத்துறைத் தலைவரும் மாநில முதல்வரும்
விருந்தினராய் வந்திருக்கும் அந்த இளைஞரின் பயணத்திட்டத்தில்
சில மாறுதல்களைச் சொல்வதற்காக..
அந்த இளைஞரின் அறைக்கதவைத் தட்டுகிறார்கள்..

" உள்ளே வாருங்கள்" -- இளைஞரின் குரல்..

இருவரும் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைய ----
அங்கே படுக்கை மீது அவர் அமர்ந்து ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறார்.
குளித்தபின் துவட்டும் பெரிய துண்டு மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு.!

முதல்வர் : " யோகாசனம் செய்தீர்களா?"

இளைஞர் : " இல்லையே... வரும்போது இரண்டு செட் உடைகள் எடுத்து வந்தேன்.
பிதார் நகர் வரவேற்பில் மாலை, ஆரத்தி என ஒரு செட் கறையாகிவிட்டது.
இன்றைய மாலை குல்பர்கா பொதுக்கூட்டத்திலும், அங்கிருந்து வந்த பயணத்திலும்
இன்னொன்றும் கசங்கி விட்டது. ஆகையால், இரண்டு செட் குர்த்தா- பைஜாமாவையும்
நாளைக்கு வேண்டி இந்த இரவே துவைத்து விட்டேன்."

முதல்வர் : " எங்களிடம் சொல்லியிருக்கக்கூடாதா? துவைக்க ஆள் அனுப்பி இருப்போமே!
இல்லை, இரவே புது குர்த்தா- பைஜாமா தைக்க ஏற்பாடு செய்திருப்போமே!"

இளைஞர் : " பரவாயில்லை.. இப்ப ஓக்கே.! ஒருத்தங்க துணியை அவங்களே துவைக்கிறது
அப்படி ஒண்ணும் சிரமம் இல்லை.."

முதல்வரும், உளவுத்துறைத் தலைவரும் அடுத்த அறைக்குத் திரும்பினர்.

முதல்வர் கடுப்பாய் " இந்த ராத்திரி வேளையில் இந்த இளைஞர் எதுக்கு துணி துவைப்பதில்
அவர் நேரத்தை வீணடிக்கிறார்? வரும்போதே கூட டிரஸ் எடுத்து வந்திருக்கலாம்.. இல்லையா
ஆளிடம் துவைக்கச் சொல்லி இருக்கலாம் அல்லது புது உடை கேட்டிருக்கலாம். "

உளவுத்துறைத் தலைவர் : " அப்படி இல்லை சார்.. அவ்வளவு செல்வாக்கான குடும்பத்துப் பிள்ளை
அப்பவும் இப்பவும் பதவியில் இருக்கிற குடும்பத்தின் வாரிசு - இப்படி அடக்கத்துடன் தன் துணியை
தானே துவைச்சுக்கிறதும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு நினைக்கிறதும்
பாராட்டப்படவேண்டிய குணங்கள்தானே!"

முதல்வர் : " ம்ம்ம்... உங்களுக்கு இப்படிப்பட்ட குணங்கள்தான் பிடிக்கும்.. ஆனா பிராக்டிகலா
யோசிக்க மாட்டீங்க!!"

முதல்வர் - குண்டுராவ்
உளவுத்துறைத் தலைவர் : D.R. கார்த்திகேயன்
இளைஞர் : ராஜீவ் காந்தி

(D.R. கார்த்திகேயன் எழுதிய "Triumph of Truth" - [b]வாய்மையின் வெற்றி நூலில் இருந்து..)

பரஞ்சோதி
28-07-2004, 07:56 AM
இளசு அண்ணா, அருமையான தகவல்.

இப்படிப்பட்ட தலைவர்கள் இன்றைக்கு கிடைப்பார்களா என்பது சந்தேகம் தான்.

புதிய இந்தியாவிற்கு வழி காட்டிய தலைவர் ராஜீவ்காந்தியை இழந்தது நமக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை.

kavitha
28-07-2004, 11:18 AM
குர்த்தா என்றதுமே யூகித்தேன்.. ராஜீவ்காந்தியைப்பற்றி மேலும் தகவல்கள் இருந்தால் தாருங்கள் அண்ணா.. அவர் அமைதியாக இருந்தாதலோ என்னவோ நிறையத்தெரியவரவில்லை.
தமிழ் நாட்டில் அவர் வலம் வந்த போது "இடியாப்பம்" விரும்பிச்சாப்பிட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

சாகரன்
28-07-2004, 11:29 AM
நல்ல சம்பவம்... இதுவரை கேள்விப்பட்டதில்லை. ராஜிவ் காந்தியின் மீது உள்ள மதிப்பு இதை படிக்கும் போது இன்னமும் அதிகரிக்கிறது.

தஞ்சை தமிழன்
28-07-2004, 12:01 PM
ராஜிவ் பற்றிய தகவல்களை அவ்வளவாக யாரும் சொல்லவில்லை.

அவரை பற்றிய தகவல் அழகாக உள்ளது.

நன்றி.

இளந்தமிழ்ச்செல்வன்
28-07-2004, 05:58 PM
இராஜீவ் காந்தியை பற்றிய அரிய தகவல். இராகுலும் அவரைப் போல் தான் என்று நினைக்கிறேன்.

karikaalan
29-07-2004, 01:35 PM
என்ன இருந்து என்ன பயன்.... தனக்கு நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு சிக்கனம் காட்டவில்லையே ராசீவ் காந்தி. நண்பர்கள் என்று வேடமிட்டவர்களாலேயே கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டவர்.

===கரிகாலன்

மன்மதன்
29-07-2004, 02:01 PM
நல்ல தகவல்.. நன்றி அண்ணா.

அன்புடன்
மன்மதன்

விகடன்
20-08-2008, 11:04 AM
இளைஞனின் குணம் பாராட்டத்தக்கது.
இப்படிப்பட்ட குண்ணத்தை அனைவரும் வளர்த்துக்கொண்டாலே நாட்டில் பாதிப்பிரச்சினை தோன்றாது போய்விடும்.

mukilan
20-08-2008, 02:08 PM
ராகுலும் இதே போல எளிமையானவரா?

ஆனால் தேர்தல் சமயத்தில் ஏழை மக்களின் குடிசையில் தங்கி உணவு உண்டதாக நாளேடுகள் தெரிவித்திருந்தன. அது தந்தையின் குணமா இல்லை அரசியல் வேடமா எனத் தெரியவில்லை.

இவ்வளவு செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தும் எளிமையாக இருந்த அந்த பெரிய இடத்துப் பிள்ளை பெரிய இடத்து பிள்ளைதான்.

நன்றிகள் இளசு அண்ணாவிற்கும், மேலெழுப்பிய விராடனுக்கும்.

arun
20-08-2008, 07:14 PM
ராஜீவ் காந்தியை போல ஒரு தலைவரை இழந்தது நமது நாட்டுக்கு பேரிழப்பு தான்

ராகுல் காந்தியும் அவரை போல வருவார் என்பதில் ஐயமில்லை ஆனால் பிரதமர் வேட்பாளருக்கு நிற்பாரா என்று தெரியவில்லை