PDA

View Full Version : டைட்டானிக் கப்பல் இன்று மூழ்கியிருந்தால் - உலக நாடுகளின் பார்வையில்..மன்மதன்
25-07-2004, 11:26 AM
[size=18]டைட்டானிக் கப்பல் இன்று மூழ்கியிருந்தால் - உலக நாடுகளின் பார்வையில்..

அமெரிக்கா: - புஷ் ..

உலக சமாதானத்தை சிதைக்கும் வண்ணம் இந்த கப்பல் உலக தீவிரவாதிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.. நாங்கள் சும்மா இருக்கப்போவதில்லை.. அவங்களுக்கு பாடம் கற்பிப்போம்.. பின்லேடனே.. நீ ஓடி ஒளிந்து கொள்ளலாம். ஆனாலும் நாங்கள் உன்னை கண்டுபிடித்து உன் அல்-கொய்தாவை அழிப்போம்..


இங்கிலாந்து : பிளேர்..

இது பற்றி இப்பொழுதுதான் ஜார்ஜ் புஷ்ஷிடம் பேசினேன்.. நாங்கள் இருவரும் ஒரு மனதாக சதாம் உசேன் தான் இந்த தாக்குதலை பின்னாடி இருந்து பண்ணியிருக்க கூடும் என்பதை ஒத்துக்கொண்டோம்..ஈராக் உலக நாடுகளை இதன் மூலம் மிரட்டப்பார்க்கிறது. அதை எப்படி டீல் பண்ண வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்..


ஈராக் : சதாம் ..

ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹ்ஹா..


இஸ்ரேல் : ஷரோன்..

இந்த ஹமாஸ் மற்றும் மற்ற தீவிரவாதிகள் இந்த டைட்டானை மூழ்கடித்து விட்டனர். இது விபத்து அல்ல... தற்கொலைப்படையினரால் தாக்கப்பட்ட டைட்டானிக் மூழ்கிப்போனது.. பாலஸ்தீனத்தை அடித்து நொறுக்குவோம்.. அவர்களின் வீடுகளை உடைப்போம்.. அகதிகள் கேம்பை தரைமட்டமாக்குவோம்..


கனடா :

டைட்டானிக் - யாரது ??


பாகிஸ்தான் :

காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருந்த டைட்டானிக்கை கவுத்திப்புட்டாங்க.. விடக்கூடாது .. அதை திரும்ப பெற்றே ஆக வேண்டும்..


ஐ.நா (கோபி அனான்)

ச்சே.. கெட்டது நடந்து போச்சு இல்லை..


டைட்டானிக்கில் பயணம் செய்தவர்கள்..

ஐய்யோ.. காப்பாத்துங்க..யாராவது கேட்கறீங்களா.. அது ஒரு ஐஸ்பெர்க்..

சேரன்கயல்
25-07-2004, 11:28 AM
டைட்டானிக் பற்றிய திரு. ஏரியல் ஷேரோனின் கூற்று சூப்பர் மன்மதன்...

மன்மதன்
25-07-2004, 11:42 AM
நாட்டு நடப்பு இந்த ரேஞ்சிலதானே இருக்கு.. சேரன்.. உங்க டிவில கூட காட்டறீங்களே.. :D

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
25-07-2004, 11:48 AM
சமாதான விரும்பி இந்தியாவில் நிலை என்ன சொல்லவில்லையே.

மன்மதன்
25-07-2004, 12:06 PM
முந்தைய அரசாக இருந்திருந்தால் 'பழியை' பாகிஸ்தான் மீது போட்டிருக்கும்...இந்த அரசின் நிலை என்ன என்று தெரியலையே..

அன்புடன்
மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
25-07-2004, 12:14 PM
சமாதான விரும்பி இந்தியாவில் நிலை என்ன சொல்லவில்லையே.
முந்தைய அரசாக இருந்திருந்தால் 'பழியை' பாகிஸ்தான் மீது போட்டிருக்கும்...இந்த அரசின் நிலை என்ன என்று தெரியலையே..

அன்புடன்
மன்மதன்

இன்னும் இங்க கூட்டணிக்குள்ளேயே [size=18]சமாதானம் ஆகல :!: :!: :shock:

சேரன்கயல்
25-07-2004, 01:55 PM
நாட்டு நடப்பு இந்த ரேஞ்சிலதானே இருக்கு.. சேரன்.. உங்க டிவில கூட காட்டறீங்களே.. :D

அன்புடன்
மன்மதன்

ஆமா ஆமாம்...என் டி.விய சொல்லு... :cry: :(

pgk53
25-07-2004, 05:53 PM
அருமையான கற்பனை நண்பர் மன்மதன் அவர்களே.
வாழ்த்துக்கள்.

தஞ்சை தமிழன்
26-07-2004, 07:41 AM
நிதர்சனமான உண்மை.

கற்பனை என்றாலும்
மிகைப்படுத்தியதாக தோன்றவில்லை.

poo
26-07-2004, 10:24 AM
வீதியில ஆரம்பிச்சு நாடுவரைக்கும் இப்படித்தானே....

நம்ம ஊர் டி.வி.கள்கூட இப்படித்தான் செய்திகள் காட்டுகிறார்கள் என பேச்சு!?

மன்மதா இது சுட்ட பழமா...சுடாத பழமா>?!!

சேரன்கயல்
26-07-2004, 10:33 AM
மன்மதா இது சுட்ட பழமா...சுடாத பழமா>?!!
_________________
என்றென்றும் அன்புடன்
அன்பு- பூ....


முருகனிடம் ஔவைக் கேட்ட கேள்வியை இங்கே கேட்டீர்களே பூ...
உங்களுக்கு நிச்சயமா பழம் (நெல்லிக்கனி) இருக்கு...அதியமான்(யார்பா அது) தருவார்... :wink:

mania
26-07-2004, 12:59 PM
மன்மதா இது சுட்ட பழமா...சுடாத பழமா>?!!
_________________
என்றென்றும் அன்புடன்
அன்பு- பூ....


முருகனிடம் ஔவைக் கேட்ட கேள்வியை இங்கே கேட்டீர்களே பூ...
உங்களுக்கு நிச்சயமா பழம் (நெல்லிக்கனி) இருக்கு...அதியமான்(யார்பா அது) தருவார்... :wink: ....

:lol: :lol: அதிசயமான் தானே .....நம்ம மைதிதானே அது.... :lol: :lol: :lol:
அன்புடன்
மணியா..

Mano.G.
26-07-2004, 01:18 PM
காரணம் சொல்லியே வாழும் நமக்கு
இது ஜோக் மாதிரி கூறும் அறிவுறையோ

அருமை அருமை தம்பி

மனோ.ஜி

mania
26-07-2004, 01:22 PM
அருமையான கற்பனை மன்மதன். நல்லாவே ரசித்து , படித்து , சிரித்தேன்.........
அன்புடன்
மணியா

மன்மதன்
26-07-2004, 02:37 PM
வீதியில ஆரம்பிச்சு நாடுவரைக்கும் இப்படித்தானே....

நம்ம ஊர் டி.வி.கள்கூட இப்படித்தான் செய்திகள் காட்டுகிறார்கள் என பேச்சு!?

மன்மதா இது சுட்ட பழமா...சுடாத பழமா>?!!


சுட்ட பழம்தான்.. கொஞ்சம் மயோனைஸ் தடவி கொடுத்திருக்கேன்.. :D :D :D

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
27-07-2004, 05:35 AM
வித்தியாசமாக சிந்திக்கிறீர்... வாழ்த்துக்கள்.. மன்மதா

மன்மதன்
27-07-2004, 02:21 PM
நன்றி அறிஞரே.. எல்லாம் மெயில்மாயம்தான்..

அன்புடன்
மன்மதன்

அமரன்
24-09-2008, 10:14 AM
நம்ம நாரதரின் புதிய டைட்டானிக்கை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட திஸ்கிகால டைட்டானிக். விடுவோமா. ஒருங்குறியாக்கிட்டம்ல..

உலகதரிசனம் தந்த மன்மதனுக்கு சி(ற)ரிப்புப் பரிசு..

தீபன்
24-09-2008, 11:12 AM
டைட்டானிக் என்பது மட்டும்தான் இங்கு கற்பனை. மீசமெல்லாம் உண்மைதானே!

விகடன்
24-09-2008, 11:50 AM
டைட்டானிக்.
மறைந்தபின்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. பல்வேறு உருபங்களில் ...

Narathar
24-09-2008, 12:06 PM
ராஜபக்சே:

இது புலிகளின் பயங்கரவாதச்செயல் என்பது எமது உளவுத்துறை தகவல்களிலிருந்து தெரிகிறது...

வன்னிச்சுற்றிவளைப்பை முறியடிப்பதற்க்காக இவர்களது சதி வேலை இது!!!

இத்தருணத்திலாவது உலகநாடுகள் புலிகள் பயங்கரவாதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...

தீபன்
24-09-2008, 05:47 PM
சுப்பிரமணிய சுவாமி என்ன சொல்லியிருப்பார் என்று யாராவது சொல்லுங்க....?

mukilan
24-09-2008, 06:45 PM
சுப்பிரமணிய சுவாமி என்ன சொல்லியிருப்பார் என்று யாராவது சொல்லுங்க....?

இதுக்கு ஏன் கிட்ட ஆதாரம் இருக்கு. சந்திரலேகா கிட்டே ரெண்டு சி.டி கொடுத்திண்டிருக்கேன். இது எல்லாம் ____ செஞ்ச சதிதான். நான் விடப் போறதில்லை சுப்ரீம் கோட்ல வழக்கு போடுவேன். யாரும் எதிர்த்துப் பேசப்படாது:D:D

தீபன்
25-09-2008, 01:37 AM
:icon_b::icon_b::icon_b:
ஆனாலும், சுவாமியளவுக்கு சவடால் விட நீங்க இன்னும் முன்னேறணும் முகிலன்....

அன்புரசிகன்
25-09-2008, 04:50 AM
இப்படித்தான் பலர் காலம் ஓட்டுறாங்கப்பா........ அட நம்ம இலங்கை அரசு கூட..................:rolleyes:


ராஜபக்சே:

இது புலிகளின் பயங்கரவாதச்செயல் என்பது எமது உளவுத்துறை தகவல்களிலிருந்து தெரிகிறது...

வன்னிச்சுற்றிவளைப்பை முறியடிப்பதற்க்காக இவர்களது சதி வேலை இது!!!

இத்தருணத்திலாவது உலகநாடுகள் புலிகள் பயங்கரவாதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...
நான் நினைச்சுக்கொண்டே கீழ வாறன். நீங்கள் போட்டிருக்கியள்... எப்படி முடியுது??? :lachen001:

அமரன்
25-09-2008, 08:51 AM
இப்படித்தான் பலர் காலம் ஓட்டுறாங்கப்பா........ அட நம்ம இலங்கை அரசு கூட..................:rolleyes:


நான் நினைச்சுக்கொண்டே கீழ வாறன். நீங்கள் போட்டிருக்கியள்... எப்படி முடியுது??? :lachen001:

உங்கள் எண்ணத்தை கவரவா???
நாராயணா..

Honeytamil
08-09-2009, 12:47 PM
ரைற்றானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால் என்னென்ன அறிக்கைகள் கிடைக்கப்பெறும் எனப் பாருங்கள்...

அமெரிக்கா...

சுதந்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பலொன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம். பின்லேடனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். தேடி அழிப்போம். அல்-குவைதா வலையமைப்பை எங்கிருந்தாலும் தேடி அழிப்போம்.

இங்கிலாந்து...

நான் அமெரிக்க ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். மூழ்கிக் கொண்டிருக்கும் ரைற்றானிக், முஸ்லிம் தீவிரவாதிம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதை முழு உலகமும் எதிர்க்க வேண்டும்.

இஸ்ரேல்...

இது ஹமாஸ் மற்றம் பிற தீவிரவாத வலையமைப்பால் செய்யப்பட்டதென்பதற்கான ஆதாரம் உள்ளது. இது விபத்து அல்ல. ஹமாஸ் தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே இடம்பெற்றது. இப்போது நாங்கள் பலஸ்தீனர்கள் மீது ஊரடங்கை பிறப்பிப்போம், கைது செய்வோம், அடிப்போம், கொலை செய்வோம், அவர்களின் வீடுகளை தரைமட்டம் செய்வோம்.

இந்தியா...

இது பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைமையில் அந்த நாட்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கடவுச் சீட்டுக்களை கண்டெடுத்துள்ளோம். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.:icon_nono:

இலங்கை...

விடுதலைப் புலிகளை அழித்து விட்டாலும், சிலர் பதுங்கி இருக்கின்றனர். அவர்களின் சர்வதேச வலைப்பின்னலின் செயற்பாடே இது. இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிக்க சர்வதேச நாடுகள் எமக்கு உதவ வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.:innocent0002:

ஐக்கிய நாடுகள் சபை...

ஓ! இது நடந்து விட்டது. இது நடந்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம்.:062802sleep_prv:


கப்பல் பயணிகள்...

ஐயோ... காப்பாற்றுங்கோ... அது ஓர் பனிப்பாறை... காப்பாற்றுங்கோ... காப்பா.............:angel-smiley-004::angel-smiley-004:

நண்பன் கோபிகிருஷ்ணாவின் பதிவு இது

தாமரை
08-09-2009, 01:20 PM
சன் டிவி:

டைட்டானிக் கப்பல், நடுக்கடலில் மூழ்கியது. பல நூறு பேர் உயிரிழந்தனர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். துணை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைவு.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உயிர் தப்பிய தமிழர்களுக்கு தம் தாய்நாடு திரும்ப உடனடியாக தனி விமானம் அனுப்பி வைத்தார்.

ஜெயா டி.வி:

இலண்டனில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இதற்கு காரணமான மைனாரிட்டி தி.மு.க அரசு நடுக்கடலில் தவிப்போரை மீட்காமல் அஞ்சலி என கண்ணீர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

விஜய் டி.வி

குற்றம்! நடந்தது என்ன?

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற டைட்டானிக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியது.

இது மூழ்கியதற்கு காரணம் டெக்னிகல் கோளாறா? கேப்டன் மற்றும் ஊழியர்களின் அலட்சியமா அல்லது அமானுஷ்யமா என்பது பற்றி அலசல்.

டைட்டானிக் கப்பல் ஸ்காண்டிநேவியா பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட போதே சிறிய விபத்தைச் சந்தித்தது. இதைக் கெட்ட சகுனம் என பல ஆண்டுகள் அன்பவம் வாய்ந்த காப்ட்ன்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் எச்சரிக்கையயும் மீறி கப்பலைச் செலுத்தியிருக்கிறார் கேப்டன்...

இடைவேளைக்குப் பிறகு...

நடுக்கடலில் செல்லும் பொழுது தூரத்தில் வெள்ளையாய் ஒரு உருவத்தைக் கண்டிருக்கிறார் கப்பல் கோபுரக் கண்காளிப்பாளர் ஆண்ட்ரூஸ். அது என்னவென்று சொல்ல அவர் உயிருடன் இல்லை. அவருடன் பணியாற்றிய அவர் நண்பர் கில்பர்ட்டைப் பேட்டி கண்ட போது...

ஆமாங்க.. அது வெள்ளையா மசமசன்னு இருந்தது.. மெதுவா கப்பலை நோக்கி வந்தது, அப்படியே தண்ணி மேல நடந்து வந்த மாதிரிதான் இருந்தது. ஆனா அதுக்கு காலே இல்லை..

பக்கம் வர பக்கம் வர அது பெரிசா ஆக ஆரம்பிச்சது. மிகப் பெரிய பூதம் அது,, அது அப்படியே தன் கையை தூக்கி கப்பலை ஓங்கி அறைஞ்சது...

எனக்கு கிறு கிறுன்னு வந்துச்சி.. லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு கடலில் குதிச்சிட்டேன்..

முடிஞ்ச வரை நீந்தினேன்..

கப்பலில் இருந்து வந்த லைஃப் போட்ல ஒண்ணில ஏறிகிட்டேன்.. அதனால தான் தப்பிக்க முடிந்தது.

டைட்டானிக் கப்பல் கவிழக் காரணம் பூதமா? இடைவேளைக்குப் பிறகு...

இதைப் பற்றி இன்னொரு பயணியிடம் கேட்டபொழுது..

அது பூதமில்லை.. நானும் பார்த்தேன். அது மிகப் பெரிய திமிங்கிலம். வெள்ளை நிறத்தில் கடலின் அடியில் இருந்து மேல வந்தது.. அது தன் வாயால் கப்பலை இடிக்க கப்பல் ஓட்டையாயிடுச்சி..

பிறகு கப்பலை கடிச்சி இழுத்தது இதனால் கப்பல் உடைந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பிச்சது... நான் பெண் என்பதால் உடனடியாக லைஃப் போட்டில் ஏற்றி அனுப்பிட்டாங்க.. அதனால் தப்பித்தோம்..

அந்த திமிங்கிலம் கப்பலை கடித்து கடித்து மூழ்கடிச்சிருச்சி...

டைட்டானிக் கப்பல் முழ்கியது பூதத்தினாலா, திமிங்கிலத்தினாலா? இல்லை தீவிரவாதிகள் செயலா..

நாளை தொடரும்

அய்யா
08-09-2009, 02:54 PM
மணி ரத்னம் :

மூழ்கிடுச்சு.. டைட்டானிக் மூழ்கிடுச்சு.. ஒட்டுமொத்தமா மூழ்கிடுச்சு.

டி.ஆர்.

என் பேரு டைட்டானிக்கு ; கடலுக்குள்ள போயி வெயிட்டா நிக்கு(ம்).

விஜய்..

டைட்டானிக்குங்ணா.. டைவ் அடிச்சிருச்சுங்ணா..

வடிவேலு..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முதல்ல ஒழுங்காத்தான் போச்சு.. ஒரு முட்டுச்சந்துல திரும்பும்போது ..

.... மூச்சுத் தெணறத் தெணற முழுகிப்போச்சு..!

விவேக்.

இப்புடிப் போன நான், இப்புடி முழுகிட்டேன்..

arun
09-09-2009, 08:15 AM
ஆகா சூப்பருங்கோ தாமரை கலக்கல் தொடருங்கள்

விஜய் டிவியால் மட்டும் எப்படி தான் ஓவராக பில்ட் அப் கொடுக்க முடியுமோ தெரியல சாமி :icon_rollout: :icon_rollout:

பகிர்வுக்கு நன்றி லோஷன்

ஐக்கிய நாடுகள் சபை தான் சூப்பர் :D

samuthraselvam
09-09-2009, 09:46 AM
தேன் தமிழ் தான் லோஷனா?

சூப்பர் கற்பனை தேன் தமிழ்...

பக்கபலமாக தாமரை அண்ணா மற்றும் அய்யாவின் கற்பனைகளும் அசத்தல்....

நேசம்
09-09-2009, 10:12 AM
நல்ல நகைச்சுவை.அதிலும் தாமரை அண்ணா தந்த கற்பனை, முக்கியமாக விஜய் டிவியின் நடந்தது என்ன வெகு அருமை