PDA

View Full Version : கற்பு நிலைநாட்டிய காதை.. (ஆயிரமாவது பதிப்பு)rambal
16-07-2004, 07:29 PM
ற்பு நிலைநாட்டிய காதை..

"இப்ப நீங்க ரிலாக்ஸ்டா இருக்க வேண்டிய நேரம்.."
"ரிலாக்ஸ்"
"ரிலாக்ஸ்"
"உங்க பேர் என்ன?"
"ஐயாம் கோவலன்.."
"சொல்லுங்க.. மிஸ்டர் கோவலன்"
"சொல்ல என்ன இருக்கு?"
"எவ்வளவோ இருக்கு.. எதாவது சொல்லுங்க?"
"அவளை என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.."
"யாரை சொல்றீங்க?"
"சலம் புணர் கொள்கைச் சலதி"
"யாரு மாதவியா?"
"ஆமாம்.. அவளுக்கு அகங்காரம்.."
"என்ன ஆச்சு?"
"நேற்று பூம்புகாரில் கடலாட சென்ற போது நான் ஏதோ ஒன்று சொல்ல அவள் பதிலுக்குப் பேச.."
"உங்களுக்குள் என்ன பிரச்சினை?"
"அவள் வேறொரு நபருடன் பழகுகிறாள்.. அதை என்னால் தாங்க இயலவில்லை.."
"அப்படியானால் கண்ணகிக்கும் அப்படித்தானே இருக்கும்?"
"இப்போது ஏன் அவளைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தீர்கள்?"
"ஏன் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி கண்ணகி மேல்?"
"அவள் கற்பு பற்றி அதிகம் சிந்திப்பதற்காகவே படைக்கப்பட்ட சிம்பல்.."
"எதை வைத்து இதைச் சொல்கிறீர்கள்?"
"போதிலார் திருவினாள் புகழுடை என்றும்
.....................
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலார் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்..
இப்படியாகத்தான் அவளை அவன் அறிமுகப்படுத்துகிறான்..
எனக்கு முன்னமே அவளைப் பற்றித் தெரிந்திருந்தால் இந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கவே மாட்டேன்..
அவள் அருந்ததியைப் போல் கற்பு நெறிகளில் இருக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய 'அப்ஸெஸன்'.
அவள் ஒரு இயந்திரம்.. எல்லாவற்றையும் விட 'கற்பு' அவளுக்கு முக்கியம்.."
"அப்படியானால் நீங்கள் அவளைக் காதலிக்கவில்லையா?"
"காதலா? கற்பு என்னாவது? கண்ணகியைப் பொறுத்தவரை கற்புதான் முக்கியம்.. வடநாட்டுக் காவியத்தை தமிழில் கொண்டு வந்த போது
கம்பன் கூட கல்யாணத்திற்கு முன் காதல் என்று வைத்தான்.. இவனோ.. அதெல்லாம் தெரியாத துறவி.. இவனுக்கு அதைப் பற்றி எப்படித் தெரியும்?
அப்படி ஒன்றிருந்தால் நான் கண்ணகியைக் காதலித்திருக்கவே மாட்டேன்.. அவள் ஒரு கற்பு இயந்திரம்.."
"இளங்கோவைப்பற்றியா சொல்கிறீர்கள்?"
"ஆமாம் அவனைப் பற்றித்தான்.."
"உங்களுக்காக மறு பேச்சில்லாமல் மதுரைக்கு வரத்துணிந்தாளே கண்ணகி.. அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?"
"என்ன சொல்வது? சாதாரண பெண்கள் என்றால் கணவன் இன்னொரு பெண்ணுடன் வைத்திருக்கும் சகவாசத்திற்காகக் கோபப்படவேண்டும்..
அந்த சராசரிக் கோபம் கூட அவளிடம் இல்லை.. அதே சமயம் அந்த சிலம்பை எடுத்துக் கொண்டு மறுபடியும் மாதவியிடம்
சென்றால் கூட தனக்குக் கோபம் இல்லை என்பது போல் தான் அவள் பேசினாள்.. அதனால்தான் சொல்கிறேன்..
அவளுக்கு எல்லாவற்றையும் விட தன்னுடைய கற்பு முக்கியம்.. 'இட் இஸ் எ மேக்னிபிகேசன் அப்ஸெஸன்'.. தமிழ் படங்களில் வருகின்ற
ஹீரோயினைக் காட்டும் காமிராக்களைப் போல.."
"அப்படியானால் கண்ணகிக்கு உங்கள் மேல் அன்பு இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?"
"புறஞ்சேரி இறுத்த காதையில் மாதவியிடம் இருந்து ஓலை வருகிறது.. அதில் அவளுடைய கூந்தல் மணம் வீசுகிறது..
இருந்தாலும் கண்ணகியை ஊரை விட்டு கூட்டி வந்து விட்ட காரணத்தினால் எனக்கு மாதவி மீது ஏற்பட்ட காதலை கண்ணகியின்பால் செலுத்த
முற்படுகையில் அவள் என்னைக் கடவுளாக்கி அவள் ஒரு கற்பு தெய்வமாக நின்று ஒதுங்கிவிட்டாள்.. அதன் விளைவாகத்தான்
அந்தப் பக்கமாக வந்த பாணர்களிடம் இருந்த யாழை வாங்கி எவரும் வியக்கும் படியான இசையை மீட்டேன்..
அது மாதவி மீது அல்ல.. கண்ணகி மீதும் அல்ல... எனது ஆதி மனிதனுக்குள் இருந்த மிருகம் மனிதனாய் மாறிய தருணத்தில்
எந்தவிதமான மனநிலை கொண்டிருக்குமோ.. அதை அந்த கணம் அனுபவித்தேன்.. அதன் விளைவே அந்த இசை.. இது பற்றி
மாதவிக்குத் தெரிந்தால் அவள் மகிழ்ச்சிக்கூத்தாடியிருப்பாள்.. கண்ணகி என்ன செய்தாள்?"
"மாதவி மற்றவர்களுடன் பழகுவது உங்களுக்குப் பிடிக்காததுபோல் கண்ணகிக்கும் மனதிற்குள் இருக்கலாம் இல்லையா?"
"இல்லை.. அவளுக்கு நான் மாதவியுடன் வாழச் சென்றது தனது கற்பை உலகுக்கு பறைசாற்றக் கிடைத்த வாய்ப்பு.. திரும்பி அவளிடம்
போனதும் ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் என்னை ஏற்றுக் கொண்டது கூட அவளுடைய கற்பு உலகெலாம் தெரியவேண்டும்
எனும் காரணத்திற்காகத்தான்.."
"சரி கோவலன்.. கொஞ்சம் ரிலாக்ஸ்"
"ரிலாக்ஸ்"
"ரிலாக்ஸ்..."
"ம்ம்.. சொல்லுங்கள்.. நீங்கள் யார்?"
"நான் சந்திரசேகர்.."
"என்ன பிரச்சினை உங்களுக்கு?"
"எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை.. கண்ணகி போல் மனைவி கிடைத்தால் என்ன செய்வான் கணவன்?"
"மாலதியோடு உங்களுக்கு என்னவிதமான உறவு?"
"அவளுடைய ரசனைகளும் என்னுடைய ரசனைகளும் ஒத்துப் போயின.. அவ்வளவே.."
"சரி.. அப்புறம் ஏன் மாலதியை விட்டு வந்தீர்கள்?"
"அவளுக்கு வேறு ஒரு பாய் பிரெண்ட் இருக்கிறான்.. எனக்கு அது பிடிக்கவில்லை.."
"உங்கள் மனைவிக்கும் இதே நிலைதானே?"
"இல்லை.. அவளுக்கு அவளுடைய கற்பை நிலைநாட்டிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்.."
"ஏன் சாண்டோக்ய உபநிசதம் எழுதிய முனிவரின் மனைவியாக இருந்தால்? அது ஒரு வகை புனிதம்தானே?"
"அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.. எல்லாம் முகமூடிகள்.."
"அப்படிப்பார்த்தால் உங்கள் மனைவி அந்த வகையில் கிடையாதே.."
"இல்லை அவளும் அந்த வகைதான்.. முகமூடி மாத்திரம் மாறுகிறது.. கற்பெனும் முகமூடி.."
"அதைக் கணவனிடமே காட்ட வேண்டிய அவசியம் என்ன?"
"அவள் அவ்வாறாக படைக்கப்பட்டவள்.. அவளுக்கும் இது வரை நடந்தவைகளுக்கும் சம்பந்தம் ஒன்றும் இல்லை.."
"அப்படியானால்.. நடந்த அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?"
"நானும் காரணமில்லை.."
"பின் விதியா?"
"இல்லை.."
"பின் என்னதான் காரணம்.."
"அவன்.. அவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம்.."
"யார்?"
"இளங்கோவடிகள்.. அவன் தான் கண்ணகியை அப்படி படைத்தான்.. ஒரு பெண்ணை இரண்டே வரிகளில் வர்ணித்துவிட்டு
அவளுடைய கற்பு நெறிகளைப் பற்றி பக்கம் பக்கமாக வர்ணித்தவன் அவன் ஒருவன் தான்.. அவன் செய்த பிழை..
கண்ணகி.."
"மாலதிக்கும் உங்களுக்குமுண்டான உறவு?"
"சலம் புணர் கொள்கைச் சலதி"
"சரி.. அப்புறம் ஏன் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.."
"நான் மரணிக்க விரும்பவில்லை.. கொலைக்களக்காதை வரை எனக்கும் அவளுக்குமுண்டான உறவை நீட்டிக்க
விரும்பவில்லை.."
"அதெப்படி சாத்தியமாகும்? நீங்கள் இப்போது இருப்பது எந்த நூற்றாண்டு தெரியுமா? நீங்கள் கோவலன் இல்லை..
சந்திரசேகர்.. இந்த நகரத்தின் மிகப் பெரிய தொழிலதிபர்.."
"இருக்கலாம்.. ஆனால், அவள் கண்ணகிதான்.."
"ஓ.கே... ரிலாக்ஸ் மிஸ்டர் சந்திரசேகர்.."
"ரிலாக்ஸ்"
"ரிலாக்ஸ்"
படுக்கையிலிருந்து அவன் கண்விழிக்கிறான்.
"என்ன ஆச்சு டாக்டர்.. ரொம்ப பேசிட்டேனோ?"
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. இது லேசான அப்ஸெஸன்.. ஸ்பிலிட் கேரக்டரிசம் மாதிரி தெரியுது.. உங்க மனைவியோடு
டிஸ்கஸ் பண்ணப்புறம்தான் தெரியும்.. ப்ளீஸ்..கொஞ்ச நேரம் வெளியில் இருங்க.. நான் உங்க மிஸிஸ் கூடப் பேசணும்.."
"ஆல் ரைட்.. நான் என் கார்ல போய் வெய்ட் பண்றேன்.."
"எஸ்.. நீங்க மிஸிஸ் சந்திரசேகர்.." அந்த மனநல மருத்துவர் விளித்த அந்தப் பெண் தழையத் தழையப் புடவையும் தலையில் மல்லிகையும்
ஒரு ரூபாய் அளவிற்கு குங்குமமும் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
"எஸ் ஸார்.."
"அவரு எந்த மாதிரியா பிஹேவ் பண்றாரு..
"அப்படி ஒண்ணும் நான் கவனிக்கலை... நிறையப் படிக்கிறாரு.."
"என்ன மாதிரியா படிக்கிறார்னு சொல்ல முடியுமா?"
"சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி.."
"வெறும் படிக்கிறதோட மட்டுமா?"
"இல்லை.. அதப் படிச்சு முடிச்சவுடனே மாலதி கூட ரெண்டு மணி நேரமாவது போன்லேயே விவாதம்.."
"நீங்க ஒன்னும் சொல்லலையா?"
"அவங்க ஏதோ லிபி மாதிரி படிச்சுட்டு ஏதோ பேசுறாங்கண்ணு விட்டுடுவேன்.. அதுல நாம எதுக்கு தலையிடணும்னு
ஒதுங்கிருவேன்.."
"ஓ.. அதான் அவங்க நெருங்கி பழகுறதுக்கு வாய்ப்பா அமைஞ்சிருச்சா?"
"இருக்கலாம்.."
"சரி அவர் தான் இப்ப திரும்பி வந்துட்டாரே.. அப்புறம் என்ன பிரச்சினை?"
"பம்பாய்க்குப் போய் அங்கேயே செட்டிலாயிடலாம்னு சொன்னால்.. டைவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு
வந்து நிக்கிறார்.."
"இதன் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிச்சீங்களா?"
"யோசிக்கலை.. அதான் அவர் மனசுல என்ன இருக்குண்ணு தெரிஞ்சுக்கத்தான் உங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன்.."
"நீங்க இன்னும் அவரைப் பத்தி கேக்கவே இல்லையே.."
"நீங்களா சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.."
"நீங்க நினைக்கிற அளவுக்கு அவருக்கு எந்த விதமான மெண்டல் டிஸார்டரும் இல்லை.. வெறும் அப்ஸெஸன் தான்.. சரி பண்ணிடலாம்.."
"ஓ.கே.. தாங்க்யூ டாக்டர்.."
"பைதிவே மிஸிஸ்.சந்திரசேகர்.. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"
"மை நேம் இஸ் கண்ணகி.."

பரஞ்சோதி
17-07-2004, 04:31 AM
நண்பா ராம்பால், உங்கள் கதை மிகவும் அருமை, பாராட்டுகள்.

mythili
17-07-2004, 05:57 AM
வித்தியாசமான சிந்தனை.
கதை எழுதியுள்ள விதம் அருமை.
மிகவும் ரசித்தேன். நன்றி ராம்பால்.

அன்புடன்,
மைதிலி

manjusundar
18-07-2004, 04:03 AM
வித்தியாசமான சிந்தனை. கதை மிகவும் அருமை.

மஞ்சு.

இளசு
18-07-2004, 06:01 AM
ராம்..

மிகவும் ரசித்துப்படித்தேன்..

உன் சிந்தனையின் கூர்மை, பார்வையின் வித்தியாசம், படைப்பில் புதுமை ..


ஆயிரமாவது பதிவுக்குமாய் சேர்த்து, சிறப்பு வாழ்த்துகள்..

இளந்தமிழ்ச்செல்வன்
18-07-2004, 06:56 AM
முதலில் உங்கள் கதைக்கு பாராட்டுக்கள். வித்தியாசமான சிந்தனை, சிக்கலின்றி சிக்கலான ஒன்றை கூறியுள்ளீர்கள்.


உங்கள் 1000 பதிவுகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

rambal
18-07-2004, 09:58 AM
பாராட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள் பல..

மன்மதன்
18-07-2004, 11:00 AM
·பைனல் டச் கொடுப்பதில் கை தேர்ந்த ராம்.. அற்புதமான கதை.. கொஞ்சம் சுருக்கி இருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
19-07-2004, 04:22 AM
வித்தியாசமான சிந்தனைகளை.. அள்ளித்தரும் நண்பரே வாழ்த்துக்கள்

rambal
19-07-2004, 03:33 PM
நண்பர் மன்மதனுக்கு,

கதையை சுருக்கமுடியாத அளவிற்கு சில விஷயங்கள் தடுத்துவிட்டன..
எல்லாக் கதைகளையும் விரிவாய் எழுதிவிட்டு சுருக்கிக் கொடுத்திருக்கிறேன்.
இதில் அப்படி செய்ய இயலவில்லை. ஏனெனில், இது ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சிலப்பதிகாரத்தை
கிரிட்டிசைஸ் செய்து எழுத வேண்டியிருப்பதால் அதற்கு தக்க விளக்கம் கொடுக்கவேண்டியிருந்தது.
அப்படி எழுதாவிட்டால், பல தப்பான காரணங்களை பலர் மனதில் விதைத்திருக்கும்.
கண்ணகி எனும் பெண்ணை கற்பின் சிம்பலாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் மாற்றிவிட்டு
அரசியலாக்கிவிட்டார்கள். அவளைப் பற்றி எழுதும் பொழுது பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது.
சிலப்பதிகாரம் நிறைய படிக்கவேண்டியிருந்தது. அதில் இருந்து சில மேற்கோள்கள் மட்டுமே
கொடுத்திருக்கிறேன்.. இல்லையென்றால் இது ஒரு ஆய்வுக்கட்டுரையாக மாறிவிடும்.

இந்தக் கதையில் வரும் நாயகன் தன்னைக் கோவலனாக எண்ணுவதற்கு தகுந்த காரணங்கள் வேண்டும்.
ஸ்பிலிட் கேரக்டரிசம், அப்ஸெஸன், இது போன்று இருக்கும் ஒருவனால்தான் இன்றைய சூழ்நிலையில்
இப்படி எண்ண முடியும். அதற்கு ஏற்றாற்போல் அவன் மனைவி, அவன் காதலி மாலதி..
இதற்கிடையில் அவன் படித்த சிலப்பதிகாரம் வேறு அவனை கோவலனாக வருவித்துக் கொள்ள
ஏதுவாகிறது.. முடிவை படிப்பவரின் கையில் விட்டு விட்டேன். அது கோவலன் கண்ணகி மீண்டெழுந்து
திரும்பி நடக்கவும் நடக்கலாம்.. நடக்காமலும் போகலாம்.. அது படிப்பவரின் மனதைப் பொறுத்தது.

ஒன்றை கிரிட்டிசைஸ் பண்ணும் பொழுது நிறைய படித்து மேற்கோள் காட்டவேண்டியிருப்பதால்தான்
இது பெரிய கதையாகிவிட்டது. அடுத்த தடவை கொஞ்சம் சுருக்கிக் கொள்கிறேன்..

தங்களது வெளிப்படையான விமர்சணத்திற்கு நன்றி..

மேலும், இந்தக் கதையைப் படித்து விமர்சித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல..

poo
20-07-2004, 08:37 AM
ராமின் திறமைக்கு இன்னொரு உதாரணம்...

கதையை மேலோட்டமாய் படித்தால் அவ்வளவாய் புரியாதுபோல... ஆழ்ந்து படிக்கவைப்பதே ஒரு திறமைதானே...

வாழ்த்துக்கள் ராம்.. தொடரட்டும் உன் வெற்றிப்பயணம்!

பாரதி
24-07-2004, 03:52 PM
வழக்கம் போலவே வித்தியாசமான கோணத்தில் மேலும் ஒரு கதை..! ஆழ்ந்த்து சிந்திக்க வைக்கிறது... தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.

kavitha
13-09-2004, 09:22 AM
"நீங்க நினைக்கிற அளவுக்கு அவருக்கு எந்த விதமான மெண்டல் டிஸார்டரும் இல்லை.. வெறும் அப்ஸெஸன் தான்.. சரி பண்ணிடலாம்.."
....

"பைதிவே மிஸிஸ்.சந்திரசேகர்.. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"
"மை நேம் இஸ் கண்ணகி.."

:)

மிக மிக ரசித்துப் படித்தேன் ராம். அருமையான, எதார்த்தத்தை சற்றே நீட்டித்த கதை.
பொதுவாக பழைய கதைகளுக்கு புதிய முலாம் பூசுவார்கள்.
நீங்கள் புதிய கதைக்கு பழைய விளக்கம் தந்திருக்கிறீர்கள்.
படித்து முடித்ததும் கதா நாயகனை விட டாக்டரின் மேல் தான் அதிக பரிதாபம் வந்தது :D.

சச்சிதானந்த சுவாமிகளின் ஒரு சிந்தனை நினைவுக்கு வருகிறது.
"காதலர்கள் தத்தம்மில் யார் யாரை மகிழ்வப்பது என்று காத்திருப்பராம்.
தம்பதியர் தத்தம்மில் அவரவர் மகிழவைக்கட்டும் என்று காத்திருப்பராம். "

எனவே மன மகிழ்ச்சியை தேடாதே, கொடு என்பது அவரது சிந்தனை.

ஆனால் பெரும்பாலானோர் வாழ்வில் நிகழ்வது இது தான். எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களை
அளிக்கின்றன. சின்ன சின்ன விசயங்களை கூட பாராட்ட வாய்ப்பிருந்தும் பாராமுகம்
காட்டிவிடுகிறோம். அந்த ஏமாற்றமே கதா நாயகனை "கொலைக்காதை" வரை கற்பனை
செய்ய வைத்திருக்கிறது.

சிறுகதையாக முழு வடிவாக இருப்பினும் மையக்கரு ஏதோ தொங்கு நிலையில் இருப்பதாகவே
படுகிறது.

ஆயிரமாவது படைப்பு மேலும் பல ஆயிரங்களாகப் பெருக வாழ்த்துகள்.:)

மன்மதன்
13-09-2004, 09:37 AM
இப்பொழுது புரிகிறது ராம்... கதை எழுதுவது சுலபம் அல்ல.. விரிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.. மறுபடி படித்தேன்.. கதை விறுவிறுப்பாகத்தான் தெரிந்தது..

அன்புடன்
மன்மதன்

gragavan
13-09-2004, 10:05 AM
ராம்பால்........................எனக்கு பேச்சே வரவில்லை. கடவுளே! என்ன அருமையான கதை. அடடா! நீர் எழுத்தாளன். இந்த ஒரு கதை போதும் உங்களுக்கு. அடடா! எப்படிப் பாராட்டுவது. எனக்குத் தெரியவில்லை. உங்களை நான் பாராட்டியதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

Nanban
29-09-2004, 07:37 PM
ராம்பால், உங்கள் சிந்திக்கும் திறன், கதை சொல்லும் நேர்த்தி, முடிக்கும் உத்தி எல்லாம் பிரமிக்க வைக்கிறது.

இந்த கற்பு பற்றி நிறைய பேசலாம் - அது இந்தியாவில் படும் பாட்டை நினைத்து.

பெண்மையை அடக்கி ஆள, ஆண்கள் படைத்த விஷயமே - கற்பு.

இந்தக் கற்பு - இரண்டு வகைப்படும் - ஒன்று - உயிரியியல் (biological) சார்ந்தது.

மற்றது, மனநிலையில் எழும், (உணர்வியல்) pschycological நிலை.

காலப் போக்கில் இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டு, மொத்தமாக பெண்களை அடிமைப்படுத்தி விட்டால், தங்கள் தேவை எது என்று நியாயப் படுத்தும் தர்மசங்கடத்தை தவிர்க்கலாமே என்று தான் இந்த கற்பு விஷயத்தையே உண்டாக்கி வைத்தார்கள்.

மிருகத்தின் பரிணாம வளர்ச்சியாக மனிதன் வளர்ந்த பொழுது, பல அடிப்படை உணர்வுகள் அவன் மரபணுக்களில் தங்கி விட, இன்றளவும், அந்த மரபணுக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட அவன் போராடுவது தான் அவனுடைய ஆத்ம தேடுதல்களாக, ஆன்மீகத் தேடுதல்களாக இருந்து வருகிறது.

அந்த மிருக மரபணுக்களில் ஒன்று தான் - பெண்மையை வெல்லுதல், இனப்பெருக்கத்திற்கென, தான் தேர்ந்தெடுக்கும் பெண்மையை மற்ற ஆண் விலங்குகளுடன் போட்டியிட்டு, அதில் வென்றே மிருகங்கள் இணைகின்றது. வெற்றி பெற்ற போட்டியாளருடன் இணைவது தான் அந்தப் பெண் விலங்கின் கடமையாக இருக்கிறது.

இதுவே மனிதனை ஆட்டிப் படைக்கிறது. ஆதியில், சமூகமாக மனிதன் மாறுகின்ற வேளையில், இந்த இய்ற்கைப் போராட்டத்தினைக் கண்டு அஞ்சினான். தன் பெண்துணையை தன்னை விட வலிமை மிக்க மற்றொரு ஆண்துணை பறித்துச் செல்லக் கூடாதே என்ற எண்ணம் தோன்றிய பொழுது தான், தன் பெண்மையை எப்படி தன்னிடமே தக்க வைத்துக் கொள்வது என்ற சிந்தனை எழுந்தது. இந்தப் புள்ளியில் ஆரம்பித்தது பெண் அடிமைத்தனம்.

இன்னும் தொடரும்.....

இளந்தமிழ்ச்செல்வன்
30-09-2004, 06:41 AM
நண்பனின் விளக்கம் அருமை.

rambal
03-10-2004, 12:22 PM
அருமை நண்பன் அவர்களே..

இது வேறு சூழலில் ஆரம்பித்து எழுதி முடிக்கப்பட்ட கதை.
உங்களிடம் இருந்து ஒரு வித்யாசமான கோணத்தில் விளக்கம் ஆரம்பமாகி இருக்கிறது.. தொடருங்கள்.. உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்..