PDA

View Full Version : அரசியல்

Mathu
16-07-2004, 10:38 AM
அரசியல்

மகன் தன் தகப்பனை பார்த்து " அப்பா அரசியல் என்றால் என்ன? "

தந்தை :-
இங்கே பார் நான் வீட்டுக்கு வரும் போது பணம் கொண்டு வருகிறேன். அப்போ நான் "முதலாளி."

உன் அம்மா அதை தேவைக்கேற்ப செலவு செய்கிறா, அவர் "அரசாங்கம்"

தாத்தா எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவநிக்கிறார் "பாதுகாப்பு துறை"

நம்ம வீட்டு வேலைக்கார பொண்ணு " தொளிலாளர் "

இப்படி எல்லோருமே ஏதாவதொன்றில் பங்கேற்க, உன்னை போல் மிகுதி இருப்பவர்கள் "குடிமக்கள்",
இவை எலாம் சேர்ந்து அரசியல்.

என்ன புரிஞ்சுதா? இப்போ நீ சொல்லு பார்க்கலாம்..!

இன்னும் சரியா புரியல கொஞ்சம் ஜோசிக்கணும் நாளை சொல்கிறேன் "மகன்"

இரவு தூக்கத்தி ஏதோ துர்நாற்றம் வர நித்திரை குளம்பி எளுந்த மகன் தொட்டிலில் தன் தம்பி அசுத்தம் செய்திருப்பதை கண்டு பெற்றோரின் படுக்கை அறைக்கு செல்கிறான் அங்கே தந்தையை காணவில்லை, தாய் ஆழ்ந்த தூக்கத்தில் இவன் எழுப்பி பார்க்கிறான் முடியவில்லை.
விட்டுவிட்டு வேலைக்கார பெண்ணின் அறைக்கு செல்கிறன் அங்கே தந்தை அவளுடன் சல்லாபத்தில் இருக்க, அதை யன்னலினூடாக பார்த்துக்கொண்டு தாத்தா.
எல்லோரும் ஏதாவதொன்றில் கவனமாக இருக்க, எதுவும் செய்ய முடியாத நிலையில் மீண்டும் வந்து படுத்துவிடுகிறான் இவன்.

காலையில் தந்தை இவனை பார்த்து என்ன அரசியல் புரிஞ்சுதா என்று கேட்க

இவன் ஆம், ஆம்..!

முதலாளிகள் தொளிலாளரை துஷ்பிரயோகம் செய்ய,
அதை கண்டும் காணாமல் பாதுகாப்பு துறை,
அரசாங்கமோ ஆழ்ந்த தூக்கத்தில்,
குடிமக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,
எதிர்காலமோ சாக்கடையில்.

இது தான் அரசியல்

தந்தை :roll: :roll: :roll:

மன்மதன்
17-07-2004, 09:59 AM
ஹ்ஹாஹ்ஹாஹ்ஹ்.. நிகழ்கால சம்பவம் சிரிப்பின் வடிவில்.. அசத்துங்க மதன்...

அன்புடன்
மன்மதன்

ஜீவா
17-07-2004, 11:49 AM
உண்மையிலே, சிந்திக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிக அழகாக
சொன்னிர்கள்..

Mathu, ரொம்ப அருமை

பரஞ்சோதி
17-07-2004, 02:00 PM
நாட்டு நடப்பை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் மதனுக்கு பாராட்டுக்கள்.

pgk53
17-07-2004, 02:06 PM
பாராட்டுக்கள் , மதன். நன்றாக உள்ளது.

Mathu
17-07-2004, 09:01 PM
நன்றி மன்மதன், அழகுராசா, பரஞ்சோதி,pgk.
எங்கேயோ கேட்டது மனதில் நின்றுவிட்டது.

அறிஞர்
19-07-2004, 03:07 AM
மது வாழ்த்துக்கள்.. படித்தேன் ரசித்தேன்.. அருமை.

Mathu
02-08-2004, 10:11 AM
மது வாழ்த்துக்கள்.. படித்தேன் ரசித்தேன்.. அருமை. நன்றி அறிஞர்...! இந்த துறையில் நீங்கள் ஆராட்சி செய்யவில்லையோ...!

அறிஞர்
03-08-2004, 03:57 AM
இத்துறைக்கு நமக்கு ரொம்ப தூரம்... :lol: :lol: வெளியிலிருந்து.. சாதாரண இரசிகன் நான்... :wink: :wink: :wink:

poo
03-08-2004, 06:09 AM
இத்துறைக்கு நமக்கு ரொம்ப தூரம்... :lol: :lol: வெளியிலிருந்து.. சாதாரண இரசிகன் நான்...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ???!!

ரசிகனா?!!

இளசு
03-08-2004, 06:13 AM
பாராட்டுகள் மது..

Mathu
04-08-2004, 09:00 AM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ???!!

ரசிகனா?!!

இபோ புரியுது எதுக்கு நடிகர்கள் இந்த பக்கமா படை எடுக்குறாங்க என்பது.

kavitha
04-08-2004, 10:59 AM
சிரிக்கமுடியவில்லை; வருத்தமாக உள்ளது..
மதன் நல்ல சிரிப்புகளாகத் தரவும்

Mathu
04-08-2004, 11:23 AM
சிரிக்கமுடியவில்லை; வருத்தமாக உள்ளது..
மதன் நல்ல சிரிப்புகளாகத் தரவும்

மன்னிக்கவும் இது யாரையும் புண் படுத்துவதற்காக எழுதப்படவில்லை...
சிரிக்க வைப்பது சிலருக்கே உரித்தான கலை, முயன்று பார்க்கலாம்...

இளந்தமிழ்ச்செல்வன்
29-08-2004, 08:56 AM
மதன் எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சுருக்கமா, தற்போதைய நிலையை விளக்கியுள்ளீர். பாராட்டுக்கள்

உமாமீனா
15-02-2011, 09:20 AM
:smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra::lachen001::lachen001::lachen001: