PDA

View Full Version : என் நண்பனுக்கு..



rambal
12-04-2003, 05:30 AM
என் கணிணியின்
இயக்கங்களை சாத்தான்கள்
தின்ற சவப்பொழுதில்
நண்பனின் குருதி வழிந்தோடுகிறது..

குருதி எடுத்து
உடலெங்கும்
பூசிக்கொள்ள முடியாதபடி
என் கைகள் ரணப்பட்டு
இருப்பது கண்டு
கவலை கொள்கிறேன்..

மாடத்திலிருந்து
சவமாய் நின்று
வேடிக்கை மட்டுமே..

சாத்தான்களை
துவசம் செய்துவிட்டு
குருதி அள்ளிப் பூசுவேன்

கடிகாரம் வழியே வழிந்தோடும்
என் உயிர் உருகுவதற்குள்
திரும்பி வருவேன்..

அந்த பிண நிமிடங்கள்
கண்டு பொறுக்கவும்..

Narathar
12-04-2003, 05:44 AM
என்ன ஆச்சு ராம் வைரஸ் தொல்லையா?

Nanban
12-04-2003, 07:33 AM
ஒரே நாள் இரவில் உட்கார்ந்து எல்லாவற்றையும் post செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது -

நீங்கள் திரும்பி வரும் வரை நானும் சற்று ஓய்வெடுக்கிறேன் - எழுதுவதிலிருந்து. அதற்குள் எல்லாவற்றையும் படித்து முடித்து விடுகிறேன்.....

rambal
07-04-2004, 03:44 PM
விட்பட்ட உங்கள் கவிதைகளை
இப்போது விமர்சணம் செய்கிறேன் ஒராண்டு முடியும் தருணத்தில்..
என் வாக்குறுதியை நிறைவேற்றுகிறேன்.. மன்னிக்கவும்..

பூமகள்
01-06-2008, 09:54 AM
கணினிப் பொறியில்
பொத்தலிட வந்த
பொல்லாத பிசாசுகள்...

வலையிலிருந்து விஷம்
பரப்பும்..
அழையா விருந்தாளிகள்..

பிண நிமிடங்களென
தண்டிக்கும் நிமிடங்கள்..

பாராட்டுகள் ராம்பால் அண்ணா..!!
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொறு மாதிரி அசத்துறீங்களே...!! :)