PDA

View Full Version : தமிழ்த் திரை இசை தோற்றமும் வளர்ச்சியும்



rajeshkrv
07-07-2004, 10:36 AM
[b][size=18]தமிழ்த் திரை இசை தோற்றமும் வளர்ச்சியும்

வசனமே இல்லாத படங்கள் வந்து பின் பேசும் படங்கள் வந்து
பின் படங்களில் வசனங்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் பாடல்கள் வந்தது.

முதலில் வந்த பேசும் படம் ஆலம் ஆரா
தமிழில் முதலில் வந்த பேசும் படம்கவி காளிதாஸ்
டி.பி.ராஜலெட்சுமி தமிழில் பேச கதாநாயகன் தெலுங்கில் பேச துணை நடிகர்கள் ஹிந்தியில் பேசி நடித்தனர்!

தமிழில் முதல் பாடலாசிரியர் மதுரை பாஸ்கரதாஸ்.

1931- 1950 வரை கர்நாடக இசையின் ஆதிக்கம் திரையில் இருந்தது.
புராணப்படங்கள் நிறைய வந்தன. படங்களில் பாடல்கள் முக்கிய அம்சமாயின. நிறையப் பாடல்கள் இடம்பெற்றன.

கர்நாடக இசை வல்லுநர்களே இசையமைப்பாளராக பணியாற்றினர்.
ஆம்.. எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களைக் குறிப்பிடலாம்

நாடகங்களுக்கு பாடல்கள் எழுதிய சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை பாஸ்கரதாஸ், பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி ஆகியோரின் பாடல்கள் இடம்பெற்றன.

நடிகர் நடிகையே பாடி நடித்தனர். எம்.கே.ராதா, பி.யு.சின்னப்பா,
எம்.கே.தியாகராஜபாகவதர், தண்டபானி தேசிகர், பி.எஸ்.கோவிந்தம், ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.ஆர்.மகாலிங்கம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, என்.சி.வசந்தகோகிலம், யு.ஆர்.ஜீவரத்னம்,கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்கள் பாடி நடித்து புகழ்பெற்றனர்.

பாடல்களின் இனிமைக்காகவே படங்கள் 60 - 70 வாரங்கள் ஓடின.
1944'ல் வெளியான ஹரிதாஸ் படம் பாடல்களுக்காகவே சென்னையில் பிராட்வேயில் 110 வாரங்கள் ஓடியது.

பாடல் பதிவு என்பது அப்பொழுது இல்லை. பாடல்காட்சிக்கேற்ப பாடலாசிரியர் பாடல் இயற்ற நடிகர் நடிகையுடன் இசையமைப்பாளர் பல முறை ஒத்திகை பார்த்து பின் பாடி நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

பின் பாடல் இயற்றி, முறைப்படி மெட்டமைத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அசோக்குமார் (1941) படத்திலிருந்துதான் இந்த முறை பின்பற்றப்பட்டது.

பின்னணி பாடும் முறை எவ்வாறு வந்தது என்பதை நாளை பார்ப்போம்

ராஜ்

தஞ்சை தமிழன்
07-07-2004, 11:53 AM
மன்றத்து பதிவுகளிலேயே சேமித்து வைக்க கூடிய பல அரிய தகவல்களை தரும் ராஜ் அவர்களின் பணி சிறப்புக்குறியது.

அவருக்கு எனது பாராட்டுக்கள்.

பரஞ்சோதி
07-07-2004, 02:22 PM
சினிமா பகுதியில் முடிசூடா மன்னராக விளங்கும் ராஜேஷ் அண்ணாவின் இந்தப் பதிவு எல்லோரையும் கவரும், மற்ற தலைப்புகளையும் போல் வரவேற்பு பெறும். தெரியாத விசயங்களை தெரிந்துக் கொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம். நன்றி அண்ணா.

பாரதி
07-07-2004, 07:40 PM
சுவையான தகவல்களை அள்ளி வழங்கும் ராஜேஷக்கு என் மனமார்ந்த நன்றி.

thamarai
07-07-2004, 07:53 PM
சுவையான தகவல்களை அள்ளி வழங்கும் ராஜேஷக்கு என் மனமார்ந்த நன்றி.

எனது நன்றிகளும் ....

rajeshkrv
08-07-2004, 11:08 AM
1937'ல் சிந்தாமணி படத்தில் எம்.கே.டி. அசுவத்தம்மா இணைந்து நடித்தனர். இருவரும் சேர்ந்து பாடவேண்டிய கட்டத்தில் எம்.கே.டியுடன் பாட அசுவத்தம்மா மறுத்தார். ஆகவே கர்நாடக இசையுலகின் ஜாம்பவானாக இருந்த வித்வான் ராஜகோபால சர்மாவை எம்.கே.டிக்கு பாடவைத்து பாடலை பதிவு செய்தனர்.
ஆக ராஜகோபால சர்மா தான் பின்னணிப்பாடுவதில் முன்னோடி!

அதேபோல் சாந்தாசக்குபாய்(1939) படத்தில் நடிக்கும் போது அசுவத்தம்மா உடல் நலம் குன்றியதால் அவர் பாட வேண்டிய பாடலை வி.ஆர். தனம் பாடினார்.

தமிழ்த்திரையுலகின் முதல் பின்னணிப்பாடகர் திரு.திருச்சி லோகநாதன் அவர்கள்; முதல் பின்னணிப்பாடகி பி.ஏ.பெரியநாயகி.

1945'ல் ஏ.வி.எம். தயாரித்த ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் முதலில் ருக்மணியே பாடினார். படத்தை திரையில் பார்த்த செட்டியார் மகாலிங்கத்தின் உச்சஸ்தாயிற்கு இணையாக ருக்மணியின் குரல் அமையவில்லை என நினைத்தார். மேடைக்கச்சேரிகளில் புகழ் பெற்ற பி.ஏ.பெரியநாயகியை பாட வைத்து படத்தில் சேர்த்தார்

1943 முதல் 1950 வரை கர்நாடக சங்கீதத்தின் ஆதிக்கம் குறைந்து மெல்லிசையின் ஆதிக்கம் தொடங்கியது. இயல்பான தமிமும், எளிமையான வார்த்தைகளும் இடம்பெறத்தொடங்கின. மெல்லிசைக்கேற்ப பாடல்கள் எழுதத்தொடங்கியர் உடுமலை நாராயணகவி அவர்கள்.
மருதகாசி, தஞ்சை ராமய்யாதாஸ், கொத்தமங்கலம் சுப்பு, டி.கே.சுந்தரவாத்தியார், கே.டி.சந்தானம், கே.பி.காமாட்சி, கம்பதாசன் அக்கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க பாடலாசிரியர்கள்.

1949 - ல் கன்னியின் காதலி மூலம் கண்ணதாசன் அறிமுகமானார்.
பாரதியாரின் பாடல்கள் திரையில் இடம்பெற்றன; காரணம் சுதந்திரப் போராட்ட காலம் என்பதால்.அதை செய்தவர் ஏ.வி.எம்.செட்டியார்.

இசையமைப்பாளர்களின் நிலை மேலோங்கியதும் இந்த கட்டத்தில் தான்.

பாடலுக்கு மெட்டு என்பதிலிருந்து மெட்டுக்குப்பாட்டு என மாறியதும் இந்த காலகட்டத்தில் தான். ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்புராமன், எஸ்.எம்.எஸ்,ஆர்.சுதர்ஸனம், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா ஆகியோர் பெரும் பங்கு வகித்தனர்

பொற்காலம்.
1951-1975 குடும்ப, சமூக படங்களே அதிகம். இயல்பான காதல், சோகம்,சமுதாய வளர்ச்சி போன்றவற்றை மையமாக வைத்து படங்கள் வந்தன. இந்த கதைகள் மெல்லிசை சேர்ப்புக்கு பெரிதும் உதவின. மெல்லிசை மேலோங்கி வளர்ந்தது. இதற்கு வித்திட்டவர் ஆர்.சுதர்ஸனம் அவர்கள். விஸ்வ நாதன் - ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், பாப்பா, வி.குமார் போன்றவர்கள் இந்த மெல்லிசை வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகித்தவர்கள்.

இவ்வாறு வளர்ந்த தமிழ்த்திரையிசையில் பங்கு வகித்தவர்கள் பற்றி பார்ப்போம். இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,பாடகர் பாடகியர் ஆகியோரைப்பற்றி ஒரு அலசு அலசுவோம்.

விடுமுறையில் செல்வதால் செவ்வாய் அன்று தொடர்கிறேன்.

மன்ற நண்பர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.

ராஜ்

பாரதி
08-07-2004, 12:58 PM
கேள்விப்படாத தகவல்களை எல்லாம் ஒரு சேர திரட்டி சிறப்பாக வழங்கி வரும் உங்களுக்கு என் நன்றி. உங்கள் விடுமுறையும் இனிதாக அமையட்டும்.

பரஞ்சோதி
08-07-2004, 04:24 PM
ராஜேஷ் அண்ணாவின் பதிவு என்றாலே ஓடி வந்து பார்க்கும் வழக்கத்தை கொண்டவன் நான், நீங்கள் தான் தெரியாதவற்றை சொல்பவர், அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் ஆதரவு தான் எங்களுக்கு வேண்டும். நன்றி.

இளசு
12-07-2004, 10:19 PM
பொற்களஞ்சியப் பதிவுகள் தருவதில் இருவர் மன்றத்தில் முதலிடத்தில்..
ஒருவர் பிஜிகே.. இன்னொருவர் குருகுரு ராஜ்..

பிரமிக்கிறேன்.. அருமையான இத்தொடர் தொடரட்டும்..

மன்மதன்
13-07-2004, 09:37 AM
அனைத்தும் அறிய தகவல்கள.. பல புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதை இங்கே எளிய முறையில் கொடுத்த ராஜேஷ்க்கு என் நன்றிகள்..

அன்புடன்
மன்மதன்

rajeshkrv
14-07-2004, 10:37 AM
முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

தென்னிந்தியா இசையிலும் சரி, பண்பாட்டிலும் சரி முதன்மை வகித்தது. குறிப்பாக தஞ்சை மாவட்டம். நெற்களஞ்சியத்திற்கு மட்டுமல்லாமல் கலைகளுக்கும் தான்.

எம்.கே.டி பிறந்த ஊர்: மாயவரம்
பிறந்த தேதி - 1.3.1910.
தந்தை ஒரு பொற்கொல்லர்.
பின்னர் அந்த குடும்பர் திருச்சிக்கு இடம் பெயர்ந்தது.
தியாகராஜனுக்கோ படிப்பில் ஆர்வம் இல்லாமல் இசைக்கேட்பதிலேயே ஆர்வம் அதிகம் இருந்தது.

சிறு வயதில் மேடை நாடகங்களும் எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாடல்களும் அவரை கவர்ந்தன. இவரது இசை ஆர்வம் தந்தைக்கு படிக்கவில்லை.ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் கடப்பாவில் இருப்பதை கேள்விப்பட்டு இவரது தந்தை அங்கு செல்ல அங்கே தன் மகனுக்கு கிடைத்த பாராட்டை பார்த்து மெய் மறந்தார். மகனை திருப்பதிக்கு அழைத்து சென்றார்.
பின்னர் திருச்சியில் நடந்த பஜன்கள் அனைத்திலும் தியாகராஜன் இடம்பெற்றான். இந்த சிறுவனின் இசைஞானம் காட்டுத்தீ போல் பரவியது. இந்த பரப்பலில் சேர்ந்து கொண்டவர் திரு.F.G. நடேச ஐயர் . இவர் ஒரு ரயில்வே ஊழியர், திருச்சி ரசிக ரஞ்சனி நாடக குழு நடத்தி வந்தார். தனது ஹரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாஸா வேடத்திற்கு ஒரு சிறுவனை தேடி வந்தார். தியாகராஜனின் தந்தையை அனுகி சம்மதம் பெற்றார்.
ஹரிச்சந்திரா தான் முதல் நாடகம். அதிலேயே புகழ் பெற்றார்
அந்த நாடகத்தில் தியாகராஜன் பாடி நடித்தார். இவரது பாடும் திறமையை பார்த்த மதுரை பொன்னு அய்யங்கார் - வயலின்
வித்வான் தானே அவனுக்கு சொல்லிக்கொடுக்க முன் வந்தார்.

ஆறு வருட கடின உழைப்பிற்கு பின் திருச்சி கமலா தெருவில் உள்ள
காளியம்மன் கோவிலில் முதல் அரங்கேற்றம் நிகழ்ந்தது.

பவளக்கொடி -1926 இது தான் தியாகராஜர் நாயகனாக
நடித்த முதல் மேடை நாடகம். டி.பி.ராமகிருஷ்னன் நாயகி வேடமேற்றார்.
பின்னர் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி நாயகி வேடமேற்றார். இந்த ஜோடி சரித்திரம் படைத்தது. எஸ்.ஜி.கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் ஜோடிக்கு இணையாக பேசப்பட்டது.

தேவுடு ஐயர் ஹார்மோனியம் வித்வான் இவரது நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார்.
பின் ஜி.ராமனாதன் இசையமைத்தார்.
எம்.கே.டி - ஜி.ராமனாதன் ஜோடி சரித்திரம் படைக்க இணைந்தது.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் கர்னாடக இசை வல்லுனர்களான ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், வித்வான் ஸ்ரீனிவாஸ ஐயர், நடேச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பி,சடகோபன், எம்.எம்.தண்டபானி தேசிகர், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, என்.சி வசந்தகோகிலம், எம்.கே.டி என எல்லோரும் கொடி கட்டி பறந்தனர்.
பலர் சீக்கிரம் திரையிலிருந்து மறைந்தனர்.ஆனால் எம்.கே.டியின் குரல் அவரை நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க உதவியது.

பவளக்கொடி நாடகம் 1934'ல் திரை வடிவம் பெற்றது.. அது தான் இவர் நடித்த முதல் படம். அதன் பின் 10 ஆண்டுகள் முடி சூட மன்னனாக விளங்கினார். 9 படங்களில் நடித்ததுமே மாபெரும் புகழ் பெற்ற நடிகர் இவரே..

எம்.கே.டி நடிப்புத்திறமையை நம்பவில்லை . அப்படி ஒன்றும் அவருக்கு திறமை இருக்கவும் இல்லை. தன் குரலையே நம்பினார். அப்பொழுது நடிகர்கள் பாடகர்களாக இருந்தனர். மக்களும் அவர்களது இசையையே விரும்பினர்.
நடிகராக இவரது பங்கு சிறிது என்றாலும் பாடகராக இவரது பங்கு அளப்பறியது.

பவளக்கொடி-1934 இயக்கம் கே.சுப்பிரமணியம்
எம்.கே.டி - எஸ்.டி.எஸ் ஜோடி
50 பாடலக்ள் இடம்பெற்றன -
எம்.கே.டி 22 பாடல்களை பாடினார்.
இந்த படத்தின் மூலம் தான் பாபனாசம் சிவன் திரையில் நுழைந்தார்.

சோம சேகரா , கண்ணா கரிய முகில் வண்ணா,
முன்னம் ஒரு சன்னியாசி என பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன.

நவீன சாரங்கதாரா - 1936 இயக்கம் கே.சுப்பிரமணியம்
எம்.கே.டி - எஸ்.டி.எஸ் ஜோடி
ஞான குமாரி, அபராதம் செய்தறியேன்,சிவபெருமான் கிருபை வேண்டும் புகழ்பெற்றன.
இன்றும் சிவபெருமான் அதே சரணத்தில் தான் பாடப்படுகிறது.

சிந்தாமனி - 1937 இயக்கம் -ஒய்.வி.ராவ்
எம்.கே.டி- அசுவத்தம்மா ஜோடி.
அசுவத்தம்மா அறிமுகம் இந்த படத்தில் தான்
அவர் கன்னட நாடக நடிகை.
இவர் 1939'ல் மறைந்தார். இவர் நடித்த இன்னொரு படம்
சாந்தா சக்குபாய்.

ராதே உனக்கு கோபம், பஜனை செய்வோம் கண்ணன் நாமம்,ஞானக்கண் ஒன்று என அனைத்துப்பாடல்களும் அருமை.

சத்யசீலன் -1938எம்.கே.டியின் சொந்த தயாரிப்பு
எம்.கே.டி- தேவசேனா ஜோடி
தேவசேனா பின்னர் தண்டபானி தேசிகரை மணந்தார்.

தாமதமேன் சுவாமி, உதயோகபட்டமெல்லாம், ராஜயோக ஞானகுருவே , சொல்லுப்பாப்பா பாடல்கள் புகழ்பெற்றன.

அம்பிகாபதி -1938 இயக்கம் - எல்லீஸ்.ஆர்.டங்கன்
எம்.கே.டி- எம்.ஆர்.சந்தானலக்ஷ்மி ஜோடி.
படம் மாபெரும் வெற்றி.
காதல் காட்சிகள் மிக நெருக்கமாக படமாக்கப்பட்டன.
இளங்கோவனின் வசனங்களும் அருமை
பாகவதர்-சிவன் - இளங்கோவன் கூட்டணி வெற்றிக்கூட்டணி ஆனது.

உலகினில் இன்பம், இனி எவ்வாறு , சந்திர சூரியர்,மானே நான் உன்னை அடைய, பதி பாதம் பணிவது ,பஜனை செய்வாய் மனமே என அனைத்துப்பாடல்களும் புகழ்பெற்றன
இந்த படத்திற்கு பின் இவரது படம் எல்லா இடங்களிலும் அலங்கரித்தன.

நாளை கீழ் கண்ட படங்கள் பற்றி பார்ப்போம்.

திருநீலகண்டர் - 1939
அசோக்குமார்-1940
சிவகவி-1942
ஹரிதாஸ் -1944
ராஜமுக்தி -1948
அமரகவி-1952
சியாமளா -1953
புதுவாழ்வு-1957
சிவகாமி -1959


ராஜ்

rajeshkrv
14-07-2004, 10:55 AM
மேலும் சில படங்கள்

rajeshkrv
14-07-2004, 11:04 AM
இந்த படத்தை வெளியிட்டவர்கள் ஆர்.எத்திராஜ் அண்ட் சன்ஸ் மதராஸ் - இது இடம்பெற்ற படம் அம்பிகாபதி

பரஞ்சோதி
14-07-2004, 11:20 AM
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் பற்றிய கட்டுரை அற்புதம், படங்களோடு கொடுத்த விதம் அருமை அண்ணா.

முன்பு ஒருமுறை குமுதம் ஜங்சனில் தொடர்ந்து படிக்க முடியாத நிலை. இங்கே அது நிறைவேறி விட்டது. பாராட்டுக்கள்.

rajeshkrv
15-07-2004, 11:58 AM
திருநீலகண்டர் - 1939 இயக்கம்: ராஜா சாண்டோ
எம்.கே.டி- திருநெல்வேலி பாப்பா ஜோடி
எஸ்.எஸ்.ராஜாமணி தேவதாஸி வேடமேற்றார்

உன்னழகை, பவளமாலை,சிதம்பரநாதா,ஒரு நாள் ஒரு பொழுது,
நீலகண்டா நீலகண்டா,தீன கருணாகரனே நடராஜா ,
சகல புவன நாயகா என்று பாடல்கள் அனைத்தும் இனிமையாக அமைந்தன

அசோக்குமார்-1940படம் மாபெரும் வெற்றி
இயக்கம்: ராஜா சந்திரசேகர்
இசை: ஜி.ராமனாதன்
என்.கே.டி- டி.வி.குமுதினி ஜோடி.
கண்ணாம்பா அறிமுகம் இந்த படத்தில் தான்.
தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் அழுத்தமான வசன உச்சரிப்பால் எல்லோரையும் கவர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மகேந்திரன் என்ற சிறிய பாத்திரத்தில் தோன்றினார்.

மாநில வாழ்வு, தியானமே எனது,உன்னை கண்டு, வன் பசி பினி,மனமே நீ, பூமியில் மானிட, உள்ளம் கவரும் என பாடல்கள் ஒவ்வொன்றும் முத்தாய் அமைந்தன.

உள்ளம் கவரும் என்ற டூயட் பாடல் ஹிந்தி பாடலான பியா
மிலன் கியை தழுவி இசையமைக்கப்பட்டது.

சிவகவி-1942சிவகவி - பொய்யாமொழிப்புலவர் என்ற தலைப்பும் உண்டு.
இயக்கம் - ஸ்ரீராமலு நாயுடு
எம்.கே.டி - எஸ்.ஜெயலக்ஷ்மி ஜோடி.

வதனமே சந்திர பிம்பமோ, மனம் கனிந்தே, அம்பா மனம்
கனிந்து,எல்லாம் சிவன் செயல்,குளிர்ந்த முகமும்,சொப்பன வாழ்வில் மகிழ்ந்து என்று பாடல்கள் அனைத்தும் அருமை.

இந்த படத்தின் போது தான் தமிழ் இசை சங்கத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பங்களித்தார்.


இந்த படத்தில் பாடல் எழுதும் போது சிவன் எழுதியது
"முகமது சந்திர பிம்பமோ"
பாட வந்த எம்.கே.டி முகமது என்று வருகிறது என்று கூற
பின் வதனமே என்று மாற்றப்பட்டது.
முகம் + அது = முகமது

Narathar
15-07-2004, 12:48 PM
இது ஒரு களஞ்சியப்படுத்தப்பட வேண்டிய தலைப்பு.

rajeshkrv
16-07-2004, 08:00 AM
ஹரிதாஸ் -1944
ஹரிதாஸ் - இது ஒரு சாதணை படைத்த படம்
இயக்கம்: சுந்தர் ராவ் நாதர்கனி

மூன்று வருடங்களுக்கு மேல் ஓடிய படம்.
சென்னை பிராட்வே தியேட்டரில் தொடர்ந்து மூன்று தீபாவளிக்கும் ஓடிய படம் இது.

என்.சி.வசந்த கோகிலம் (எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு நிகராக விளங்கியவர்) நாயகி வேடம் செய்திருந்தார்.


முதல் காட்சியில் வரும் குதிரை எம்.கே.டியின் சொந்த
குதிரை. வாழ்விலோர் திருநாள் பாடல் அது.
அதில் எம்.கே.டி தூக்கி செல்லும் பெண் (பண்டரிபாய்)

சாருகேசியில் அமைந்த "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற பாடல் அந்த ராகத்தில் வந்த சிறந்த பாடல்.
இன்றும் காளையரை மயக்கும் பாடல் அது.
நடுவில் வரும் ரம்பா , சுவாமி வசனங்களும் புகழ்பெற்றன.

கிருஷ்ணா முகுந்தா முராரே, அன்னையும் தந்தையும், கதிரவன் உதயம்,எனதுயிர் நாதர், தொட்டதெற்கெல்லாம், என்னாளும் இந்த என அனைத்துப்பாடல்களும் அருமையாக அமைந்தன.

இந்த படத்திற்கு பின் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகராக எம்.கே.டி உருவானார்.

இந்த படத்திற்கு பின் பல படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அப்பொழுது தான் அவர்
லக்ஷ்மினாதன் கொலை வழக்கிலும் மாட்டினார்.

ராஜமுக்தி -1948

விடுதலை ஆன உடன் நடித்த படம்
இந்த படம் இந்திய விடுதலையின் போது வந்தது.
எல்லா பெரிய பாடகர்களும் தேசபக்தி பாடல்களை ரெக்கார்டுகளில் பாடி வந்தனர்.
எம்.கே.டியும் காந்தியை போல், கைமாறு செய்வதுண்டோ, பாருக்குள்ளே நல்ல நாடு, சுதந்திர கொடி என பாடல்களை பாடினார்.

சிறைவாசத்திற்கு பின் சென்னையில் படப்பிடிப்பு நடத்த எம்.கே.டி தயங்கினார்.
ஆகையால் பூனாவில் நடத்த திட்டமிட்டார். அங்கே ஒரு
பெரிய பங்களாவை வாடகைக்கு பிடித்து படப்பிடிப்பு
நடத்தினார்.

இதில் இவரைத்தவிர செருகுளத்தூர் சாமா, பி.பானுமதி(பாவரும்மா பானுமதி),வி.என்.ஜானகி நடித்திருந்தனர்.
வி.என்.ஜானகி பாபனாசம் சிவனின் சகோதரர் ஸ்ரீ ராஜகோபால ஐயரின் மகள்.
எம்.ஜி.ஆர்,எம்.ஜி.சக்கிரபாணி,பி.எஸ்.வீரப்பா(இது தான் முதல் படம்),பி.ஜி.வெங்கடேசன்,சி.டி.ராஜகாந்தம் நடிந்திருந்தனர்.

இந்த படத்தின் மூலம் தான் எம்.எல்.வி திரையிசைக்கு அறிமுகமானார்.
மனம் நினைந்தேங்கினேனே ,என்னானந்தம் ,உன்னை அல்லால், நீ பள்ளி எழுந்தால், பொங்கும் அன்பர், இங்கும் அங்கும் என பாடலகள் இனிமையாக அமைந்தன.

புதுமைப்பித்தன் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
படம் சுமாராக ஓடியது.


அமரகவி-1952
எம்.கே.டி - 2 லட்சம் சம்பளம் வாங்கிய படம் இது.
தங்கவேலு அறிமுகமானது இந்த படத்தில்

சுரதா கவிஞராக அறிமுகமானதும் இந்த படத்தில் தான்.
தாழ்பனிந்து, உயிர்களெல்லாம் இன்பமே, விண்போல நீல நிறம்,சேவை செய்தலே, செடி மறைவிலே, கொஞ்சி பேசும், புதிய வாழ்வு பெறுவோம் என பாடல்கள் பிரபலமடைந்தன.

சியாமளா -1953
முதன் முதலில் மீசையுடன் நடித்த படம் இது.
ஜோடி எஸ்.வரலக்ஷ்மி

ஆனந்தமான ராகம், ஆரனங்கே, சியாமளா ஜீவப்பிரியா, தாயே சங்கரி, அம்பா அடி பராசக்தி பாடல்கள் இனிமையாக அமைந்தும் படம் படு தோல்வி.

புதுவாழ்வு-1957
எம்.கே.டியின் சொந்த தயாரிப்பு.
இவரைத்தவிர, என்.எஸ்.கே, மாதுரிதேவி, லலிதா, பத்மினி, தங்கவேலு நடித்திருந்தனர்.

தானம் அவசியம், அப்பா நான், உண்மை ஒன்று பேசும், சுட்டும் விழி, வஞ்சகர் செய்கை ம் தென் குயில் போலே என நல்ல பாடல்கள் இருந்தும் படம் படு தோல்வி.

சிவகாமி -1959

எம்.கே.டியின் கடைசி படம்.
அவரது மறைவிற்கு பின் வெளியிடப்பட்ட படம்.
இதில் இவரைத்தவிர, ஜக்கய்யா, ஜி.வரலக்ஷ்மி நடித்திருந்தனர்.

அற்புத லீலைகளை, ஞான சபையில், ஆனந்த நடன வினோதா
பாடல்கள் அருமை

அற்புத லீலைகளை, சொற்றுணை வேதியன் பாடல்கள் படமாக்கப்பட்டிருந்த விதம் அவரது பாடல்களுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கை காட்டின.

இன்றுன் பாகதவர் பாடல்களுக்கு ரசிகர் உள்ளனர் என்றால் அவரது குரலும் பாடும் பாங்குமே சான்று.

rajeshkrv
16-07-2004, 08:06 AM
மேலும் சில படங்கள்

rajeshkrv
16-07-2004, 08:41 AM
மீசை வைத்த எம்.கே.டி.

rajeshkrv
22-07-2004, 12:15 PM
எம்.கே.டி பற்றி அலசினோம்
அவருக்கு இணையான இன்னொருவரைப் பற்றியும் பார்ப்போம்

ஆம் அவர் தான் பி.யூ.சின்னப்பா
பாகவதர் முழுக்க முழுக்க குரலை மட்டுமே நம்பினார்
ஆனால் சின்னப்பாவோ சகலகலா வல்லவராக திகழ்ந்தார்.

புதுக்கோட்டை உலகநாதம் பிள்ளை என்ற நடிகரின் மகன் இவர். தந்தையை பின்பற்றி பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். மகரக்கட்டிற்கு பின் வாய்ப்புகள் குறைய
தேகப்பயிற்சி, வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டார்.
பின் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அது தமிழ் சினிமாவின் தயாரிப்பின் எண்ணிக்கை பெருகி வந்த காலம்.
மேடை நாடகமான கே.ஆர்.ரங்கராஜுவின் <span style='color:blue'>" சந்திரகாந்தா" </span>ஜுபிடரின் மூலம் 1936'ல் திரைக்கு வந்தது.
நாடகத்திலும் , திரையிலும் சுண்டூர் இளவரசன் வேடமேற்றார்.

சந்திரகாந்தாவிற்கு பிறகு நேஷனல் மூவிடோன் தயாரித்த சில படங்களில் தோன்றினார். ஆனால் அவை அவருக்கு புகழ் சேர்க்கவில்லை.
அப்படி தோன்றிய படங்கள் யயாதி(1938), ராஜ்மோஹன்(1937), பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண்.
மாத்ருபூமி(1939) கொஞ்சம் புகழ் சேர்த்தது.

தனக்கு எல்லா திறமைகள் இருந்தும் தக்க வாய்ப்புகள் வரவில்லை என எண்ணி வைராக்கியத்தில் மெளனவிரதம் மேற்கொண்டார்.
இந்த விரதம் அவருக்கு பலன் அளித்தது. சேலம் மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் திரு. டி.ஆர்.சுந்தரம் சின்னப்பாவின் வீடு தேடி வந்து <span style='color:green'>"உத்தமபுத்திரன்" </span>படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.
இது தான் இவரது புகழுக்கு மகுடம் சேர்த்தது.
நல்ல அண்ணன் பாத்திரத்திலும், தீய தம்பி வேடத்திலும் நடித்து அசத்தினார்.
பாரதியாரின் செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடலை கம்பீரமாக பாடி சுதந்திர தாகத்தை வளர்த்தார்.
பின் வந்த படங்கள் தோல்வியடைந்தன.
தர்மவீரன்(1941),தயாளன்(1941)
பின் பத்து மாறுபட்ட வேடங்களில் அவர் நடித்த 'ஆர்யமாலா(1941)" மூலம் மீண்டும் புகழடைந்தார்.
ஆனந்த ரூபிணியே ஆரியமாலா என்ற பாடலும், சிவகிருபையால் என்ற பாடலும் பிரசித்தமானவை

1942'ல் ஜூபிடரின் "கண்ணகி" பெரும் புகழடைந்தது. எஸ்.வி.வெங்கட் ராமனின் இசையும், உடுமலை நாராயணகவியின் கவி நயமும் இரட்டிப்பு தித்திப்பு..

<span style='color:brown'>"அன்பி; விளைந்த அமுதமே" , தேவமகள் இவள் யார்" என்ற </span>பாடல்கள் அருமை அதுவும் சின்னப்பாவின் குரலில் கேட்பது இனிமை.
இதில் ஜோடி கண்ணாம்பா
இந்த படத்தில் சந்திரோதயம் இதிலே என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடல்
1942'ல் இன்னொரு படம் பிருதிவிராஜ்
இதில் நாயகியாக நடித்த சகுந்தலாவையே நிஜ வாழ்வில் மனைவியாக்கி கொண்டார்.

லார்டு லிட்டன் என்ற ஆங்கிலேயர் எழுதிய "ரகசிய வழி " என்ற கதையை மார்டன் தியேட்டர்ஸ் "மனோன்மயம் (1942)
" என்ற பெயரில் தயாரித்தது. இதில் சின்னப்பா - டி.ஆர்.ராஜகுமாரி ஜோடி

இருவரும் மூன்று அருமையான பாடல்களை பாடினர்.
கண்டேன் கண்டேன் என் காதல் கனியைக் கண்டேன் என்று சின்னப்பா பாட நன்றே நன்றே நாயனாம்ருத ரூபன் இவன் என்று ராஜகுமாரி பாட பாடல் அருமை
மோகன மாமதனா என்ற புன்னகவராளியில் அமைந்த பாடலும் அருமை.

உன்றனுக்கோ இணையாவார் என்ற பாடலும் இனிமை
இதை தவிர சின்னப்பா பாடிய 2 பாடல்கள் பிரபலாமானவை.

வானமுதே மான் விழியே
மோகனாங்கி வதனி என்ற பாடல் விரகதாபத்தை வெளிப்படுத்தும் பாடல் கானடா ராகத்தில் அமைந்த பாடல்.

நாளை அடுத்த பகுதி.
ராஜ்

இளசு
25-07-2004, 09:55 PM
இது ஒரு பொக்கிஷம்..

குருகுருவின் ஈடுபாடு, பொறுமை, உழைப்பு..

பாராட்ட வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை..

பாகவதரின் பாடல்களில் பலவற்றுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு..

நாட்டியக்கலையே, சொப்பன வாழ்வில், கிருஷ்ணாமுகுந்தா,
மன்மதலீலையை...

காலத்தால் அழியாப் பாடல்கள்..

எனக்கு அந்த அளவுக்கு பியூசி பாடல்கள் பரிச்சயமில்லை..

பிரம்மாண்டக் களஞ்சியப் பதிவு இனிதே தொடர வாழ்த்துகள்..

rajeshkrv
27-07-2004, 09:23 AM
1943- குபேரகுசேலாகுன்னக்குடி வெங்கட் ராம அய்யரின் இசையில் சின்னப்பா பல அருமையான பாடல்களை பாடிய படம்.
பாடலாசிரியரும் இசைமேதையுமான பாபநாசம் சிவன் தான் குசேலர் வேடமேற்றிருந்தார்.
காயகல்பத்தை சாப்பிட்டு குபேரன் ஆகும் போது
ஒல்லியான சிவன் வாட்ட சாட்டமான சின்னப்பாவாக
மாறிவிடுவார்.
செல்வமே சுக ஜீவாதாரம் பாடல் பணத்தின் மகிமையை
சொல்லும் விதமாக அமைந்தது.
பின் காதலால் டி.ஆர்.ராஜகுமாரியை தொடரும் போது
நடை அலங்காரம் கண்டேன் என உருகி உருகி பாடுவார்.

1944- பட்சிராஜாவின் ஜெகதலப்பிரதாபன்

தேவலோகத்தில் ஜெகதலப்பிராதபன் தன் இசைத்திறமையை காட்டிப் பாடுவதாக அமைந்த பாடல்
தாயைப் பணிவேன் இந்த பாட்லைல் ஸ்வரம்,ஜதி என அசத்தியிருப்பார்.
ஒரே காட்சியில் 5 சின்னப்பாக்கள் தோன்றி
பாட்டு,ஜதி,வயலின்,மிருதங்கம்,கஞ்சிரா என இசைத்து
பிரமிப்பில் ஆழ்த்தினார்.

ஜோடி ஜீவரத்தினம்.
அவருடன் ஒரு அருமையான பாடல்
கேள்வி பதில் சாயலில் பாடலை அமைத்திருந்தார் பாபநாசன் சிவன்.
கேள்வி முறை இல்லாமல் உள்ளே நுழைந்தது யாரைய்யா?
கேளும் அய்யா உந்தன் மாமன் மகள் தானய்யா

1944 - ஹரிச்சந்திரா
இதுவே புண்ணிய பூமி,
காசிநாதா கங்காதராஎன பக்தி ததும்பும் பாடல்கள் கொண்ட படம்

1945- மகாமாயா
படம் படு தோல்வி
மாயா மதன் நோயால் என்ற பாடல் பிரபலம்.

1947- துளசி ஜலந்தர்
இதில் அரக்கன் வேடமேற்றார்

1948- கிருஷ்ணபக்தி
சாரஸம், வசீகர கண்கள் சீர்தரும் முகம் சந்திரபிம்பம் உடுமலை நாராயண கவியின் பாடல் அருமை

1949-மங்கையர்கரசி
கம்பதாசனின் கதையமைப்பில் வந்த படம்.
மூன்று வேடங்களில் நடித்தார்
அப்பா - மகன் - பேரன்
கம்பதாசன் கவிஞர் வித்யாபதி வேடத்தில் நடித்தார்
காதல் கனிரசமே
பார்த்தால் பசி தீரும்

1949- ரத்னகுமார்
ஜோடி - பானுமதி
கேலி மிகச்செய்வாள் என்ற பாடல் பிரபலம்.

1951- வனசுந்தரி
1951- சுதர்ஸன்
இவை தான் சின்னப்பவின் கடைசிப்படங்கள்
சுதர்ஸனில்
உன்னடியில் அன்பு வைத்தேன்,
என்ன செய்தாய்

வன சுந்தரியில்
சின்னப்பாவும் டி.ஆர்.ராஜகுமாரியும் பாடும் நமஸ்தே நமஸ்தே பாடல் மெல்லிசை பாணி.

தமிழ் நாட்டின் தவ நடிக பூபதி என்ற புகழ்பெற்ற இவர்
1951 மரணமடைந்தார்.
இவரது பாடல்கள் இன்றும் புகழுடன் இருக்கின்றன காரணம் இவரது குரலில் இருந்த பாவம்.

நாளை வேறு ஒரு கலைஞருடன் சந்திக்கிறேன்

ராஜ்

பரஞ்சோதி
27-07-2004, 10:59 AM
அருமையான பதிவு அண்ணா.

இளசு அண்ணா சொன்னது போல் பொக்கிஷமாகமான தகவல்கள். எந்த காலத்திற்கும் உதவும்.

சினிமா வினாவிடைகளுக்கு உங்கள் பதிவுகள் படித்தாலே போதும் போல் இருக்கிறது. பாராட்டுக்கள்.

rajeshkrv
10-08-2004, 11:09 AM
ஜி.ராமனாதன்.
கர்நாடக இசை திரையை ஆக்ரமித்திருந்த அந்த காலகட்டத்தின் கடைசி இசையமைப்பாளர்
கர்நாடக இசைக்கும் மெல்லிசைக்கும் பாலமாக இருந்தவர்

பாகவதர், சின்னப்பா படங்களுக்கு இசையமைத்தவர்.

இசையமைப்பாளர்களின் வரிசையில் நாம் முதலில் பார்க்க போவது இவரைப்பற்றி தான்.
இவர் இசையமைத்த சில படங்கள்
அம்பிகாபதி
அரசிளங்குமரி
சக்ரவர்த்தி திருமகள்
தெய்வத்தின் தெய்வம்
தேவகி
எங்கள் குடும்பம் பெரிசு
கோமதியின் காதலன்
ஹரிதாஸ்
இன்பவல்லி
ஜகதலப்பிரதாபன்
கடவுளின் குழந்தை
கப்பலோட்டிய தமிழன்
காவேரி
கிருஷ்ண பக்தி
மதுரை வீரன்
மணமகள் தேவை
மந்திரிகுமாரி
மங்கையர்கரசி
நான் பெற்ற செல்வம்
நான் சொல்லும் ரகசியம்
நல்ல தங்கை
நாட்டிய தாரா
பட்டினத்தார்
புதுமைப்பித்தன்
ராஜமுக்தி
சதாரம்
சாரங்கதாரா
சிவகவி
சுதர்ஸன்
தூக்கு தூக்கி
உத்தம புத்திரன்
வணங்காமுடி
வீர பாண்டிய கட்டபொம்மன்

I) மதுரை வீரன்
நடிப்பு : எம்.ஜி.ஆர், பானுமதி, பத்மினி
1) ஆடல் காணீரோ - எம்.எல்.வசந்தகுமாரி பாடிய அருமையான பாடல்
படம்: மதுரை வீரன்
பாடல் : கண்ணதாசன்

நாட்டிய பேரொளி பத்மினியின் அபி நயமும்
வசந்தகுமாரியின் குரலும் இன்றும் நம்மை மயக்கி கொண்டிருக்கின்றன
அருமையான இசையமைப்பு ராமனாதனுடையது

2. நாடகமெல்லாம் கண்டேன்
டி.எம்.எஸ் - ஜிக்கி குரல்களில் தெவிட்டாத
பாடல்
வரிகள் : கண்ணதாசன்

II) அரசிளங்குமரி

3. சின்னப்பயலே சின்னப் பயலே
சின்னக்குழந்தைக்கு சொல்வது போல் மக்களுக்கு புத்தி சொன்ன பாடல்
வரிகளுக்கு சொந்தக்காரர் பட்டுக்கோட்டையார்
பாடியவர்: சிம்மக்குரலோன் டி.எம்.எஸ்

இன்றும் மனதில் நிற்கும் பாடல்
வேப்ப மர உச்சியிலே பேயொன்னு ஆடுதுன்னு என்ற வரிகள் மூட
நம்பிக்கையை காட்டும் வரி

அடுத்த பகுதி நாளை

இளசு
11-08-2004, 05:12 AM
எத்தனை இரவுகள்.. எத்தனை தனிமைகள்..வெறுமைகள்..
எத்தனை கூடல்கள்..குதூகலம்.. நட்புகள்..உறவுகள்..

இரு துருவங்களிலும் ஒளியூட்டும் நட்சத்திரம் இசை..
நினைவு தெரிந்த நாள்முதலாய்
வாழ்வை வண்ணமாக்கும் கலைகளில் இசைக்கே முதல் இடம்..

சுசீலா, ஜிஆர், விச்சு`-ராமு, கவியரசு, ராஜா, ரஹ்மான்.._
இவர்கள் பிறந்து வளர்ந்து வடித்த- வடிக்கும் கலையெல்லாம்
எனக்காக என ஒரு பிரமை மனதில்..

அந்த சாதனையாளர்களை நேர்த்தியாய் நினவுகூர்ந்து பதிந்து
ஒரு சாதனையை சத்தமின்றி நிகழ்த்திக்கொண்டிருக்கும்
என் குருகுரு , இனிய நண்பர் ராஜ்-க்கு
என் எட்டாயிரமாவது பதிவு அர்ப்பணம்..

rajeshkrv
11-08-2004, 07:02 AM
இளசு அவர்களே எட்டாயிரம் பதிவு என்பது சாதாரனம் இல்லை
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சாதனை

rajeshkrv
11-08-2004, 12:22 PM
III) எங்கள் குடும்பம் பெரிசு:

4. ராதா மாதவா வினோதா
சுசீலா, டி.எம்.எஸ் குரல்களில்
இனிமையான பாடல்
டி.எம்.எஸ் - சுசீலா இணையின் ஆரம்ப கால டூயட் பாடல்களின் இதுவும் ஒன்று.

IV) சதாரம்

5. நினைந்து நினைந்து நெஞ்சம்
- டி.எம்.எஸ் குரலில் இன்றும் நம்மை மயக்கும் கீதம்.

டி.எம்.எஸ் அவர்களின் குரலை கம்பீரமாக பயன்படுத்தியவர் ராமனாதன்

V) தூக்கு தூக்கி

சிவாஜி - பத்மினி நடித்த படம்

டி.எம்.எஸ் அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கிய படம் இது.

6. கண் வழி புகுந்து
டி.எம்.எஸ், ஜிக்கி குரல்களின் இனிமையான
பாடல்

7. பெண்களை நம்பாதே - டி.எம்.எஸ் குரலில் பிரபலமான பாடல்

பரஞ்சோதி
12-08-2004, 04:38 AM
நன்றி ராஜேஷ் அண்ணா, தொடர்ந்து கொடுங்கள்.

தெரியாத விசயங்கள் எத்தனையோ இருக்கு என்பதை உங்கள் பதிவு சொல்கிறது.

mythili
12-08-2004, 04:43 AM
பழைய பாடல்களையும், படங்களையும் பற்றிய அரிய தொகுப்பு.
தொடர்ந்து கொடுங்கள் ராஜேஷ்,

அன்புடன்,
மைதிலி

poo
12-08-2004, 08:50 AM
அண்ணா.. உங்களது எட்டாயிரமாவது பதிவைத்தான் தேடி வந்தேன்...

ராஜ் அவர்களுக்கு அர்பணிப்பத்து அர்த்தமுள்ள பதிவாக அதை மாற்றியமைக்கு நன்றிகள் அண்ணா...

வாழ்த்துக்கள் ராஜ்!!!

rajeshkrv
12-08-2004, 11:30 AM
VI) அம்பிகாபதி

சிவாஜி - பானுமதி இணை

பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்

8. மாசிலா நிலவே நம் -
டி.எம்.எஸ் - பி.பானுமதி குரலில் முகாரி ராகத்தில் அமைந்த அற்புத பாடல்

கே.டி.சந்தானத்தின் வரிகள் அற்புதம்

9. கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே

பானுமதியின் குரலும் அதற்கு ராஜசுலோசனாவின் அபிநயமும் அற்புதம்

10. சிந்தனை செய் மனமே
டி.எம்.எஸ்ஸின் கம்பீர குரலில் நல்ல பாடல்

VII) சாரங்கதாரா

11. கண்களால் காதல் காவியம்

டி.எம்.எஸ் - ஜிக்கி குரல்களில் மயக்கும் காதல் கீதம்

12. வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே

டி.எம்.எஸ் குரலில் பிரசித்தி பெற்ற பாடல்

VIII) காத்தவராயன்
சிவாஜி - சாவித்திரி இணை

13. வா கலாப மயிலே
வரிகள் : தஞ்சை ராமய்யா தாஸ்
குரல்: டி.எம்.எஸ்

அற்புதமான பாடல்

14. நித்திரை இல்லையடி -
லீலாவின் குரலில் அழகான பாடல்

அடுத்த பகுதி நாளை

இளசு
17-08-2004, 06:23 AM
மயங்குகிறேன் இப்பதிவைக்கண்டு..

ஜிக்கியின் இரு பாடல்களை - கண்வழி புகுந்து, கண்களால்..
மறக்க முடியுமா?

தூக்கு தூக்கிக்கு முன்பு வரை சி.எஸ்.ஜெ.
அதன் பின் சிவாஜிக்கு டிஎம் எஸ்..
ஆம் , இந்த படப்பாட்டுக்களால் ஸ்டார் ஆனார் டிஎம் எஸ்..

சதாரம் - நினைந்து நினைந்தும்..
சாரங்கதாரா வசந்தமுல்லையும்..
அப்பா.. என்ன உச்ச ஸ்தாயி பாட்டுகள்..
(பாகவதர் பாதிப்பு???)

அம்பிகாபதி பாட்டை பலமுறை பானுமதி அவர்கள் தப்பாய் பாட
ஏறத்தாழ 40 முறை பதிவானதாம்..
(அப்போது கணினி இல்லையே..)

கடைசியாய் ஒரு முறை அவர் சரியாய்ப் பாட, அம்முறை டி.எம்.எஸ். தவறாய்ப் பாட.. ஏக ரகளையாம்.. படித்திருக்கிறேன்..

பின்னர் பாடகியை சமாதனப்படுத்தி, இம்முறை எல்லாமே ஒழுங்காய் அமைய..
அடடா.. மாசிலா நிலவில் அவர் அன்பே என இவர் எங்கே என..
சூப்பர் டூப்பர் ஹிட்..

குருகுருவுக்கு என் வந்தனம்....

பரஞ்சோதி
17-08-2004, 09:42 AM
அருமையான பழைய பாடல்களை நினைவுபடுத்திய ராஜேஷ் அண்ணாவுக்கும், பானுமதி, டி,எம்.எஸ் அவர்கள் பாடிய கலாட்டா பாடல் தகவல்களை கொடுத்த இளசு அண்ணாவுக்கும் நன்றி.

rajeshkrv
26-08-2004, 11:35 AM
IX) கடவுளின் குழந்தை

15. சின்ன சின்னப் பூவே
பி.பீ.ஸ்ரீனிவாஸ் - சுசீலா குரல்களில் இனிமையான பாடல்

X) மணமகள் தேவை

16. பம்பர கண்ணாலே காதல் சங்கதி - ஜே.பி.சந்திரபாபுவின் குரலில் வந்த பாடல் இன்றும் துள்ளல் பாடல்களின் முன்னோடி ..
வெஸ்டர்ன் பாணியை கையாண்ட பாடல் இது.

XII) மந்திரிகுமாரி

17. வாராய் நீ வாராய் - திருச்சி லோகனாதனும் - ஜிக்கியும் பாடிய அமர ஜீவித பாடல் .. அன்றும் இன்றும் என்றும் பாடப்படும் பாடல்.

18. உலவும் தென்றல் காற்றினிலே - திருச்சி லோகனாதனும் - ஜிக்கியும்
பாடிய அழகான பாடல்

19. ஆஹாஹா வாழ்விலே - எம்.எல்.வியின் கம்பீர குரலில்
கேட்க கேட்க இன்பம்.

ராமனாதனின் இசையில் மந்திரிகுமாரி ஒரு மைல்கல்

XIII) ராஜா தேசிங்கு

20. காதலின் பிம்பம் எந்தன் என சுசீலாவின் குரலில் இன்றும் தேனாக பாயும் பாடல்.

சுசீலாவிற்கு நல்ல கர்நாடக இசை, ஸ்வரங்களுடன் பாடல்கள் கொடுத்தவர் ராமனாதன்.

அடுத்த பகுதி நாளை

rajeshkrv
01-09-2004, 06:29 AM
XIV) வணங்காமுடி

ராமனாதனின் இசையின் பரிமாணங்களை நமக்கு காட்டிய படம்

சுசீலா எப்பொழுதும் சொல்வது இது தான்
கனமான தோடி ராகத்தில் தனக்கு பாடல் கொடுத்து அதை உன்னால் பாட முடியும் என ஊக்கம் கொடுத்தவர் ராமானாதன் என்று
ஆம்
என்னைப் போல் பெண்ணல்லவோ தேவி நீ என்னைப் போல் பெண்ணல்லவோ ..

வரிகளை ஏற்கனவே சினிமா பாடல் வரியில் ரசித்தவை பகுதியில்
கொடுத்துள்ளேன்

வரிகளுக்கு சொந்தக்காரர் தஞ்சை ராமய்யாதாஸ்

21. என்னைப் போல் பெண்ணல்லவோ - சுசீலாவின் குரலில்
சாவித்திரியின் நடிப்பில் அருமையான பாடல்

22. மோகன புன்னகை - டி.எம்.எஸ் - சுசீலா குரல்களில் நல்ல காதல் பாடல்

23. ராஜயோகமே - சீர்காழியார் - சுசீலா குரல்களில் இனிக்கும் பாடல்

24. வா வா வா - வளர்மதியே வா - எம்.எல்.வியின் குரலில் மிகவும் அருமையான பாடல்

ராமனாதனின் காதல் பாடல்களில் மோகன புன்னகைக்கு தனி இடமுண்டு
இந்த பாடல் போலவே அன்னையின் ஆணையில் எஸ்.எம்.எஸ் போட்ட
கனவின் மாயா லோகத்திலே அமைந்ததோ என்னவோ..

மொத்தத்தில் வணங்காமுடி அருமையான பாடல்களை கொண்ட படம்
உபயம் திரு.ஜி.ராமனாதன்



அடுத்த பகுதி நாளை

gragavan
01-09-2004, 08:40 AM
ராஜேஷ், சிறப்பான தகவல்களுடன் எங்களை திகைப்பில் ஆழ்த்துகின்றீர்கள். உங்கள் பழைய படைப்புகளை படிக்கையில் நினைவிற்கு வந்ததை இங்கே இடுகிறேன்.

விஸ்வநாதன்-இராமமூர்த்தி பிரிவிற்கு பின், எம்.எஸ்.வி தனித்து இசையமைத்த முதல் படம் கலங்கரை விளக்கம். எம்.ஜி.ஆர் நடித்தது. பிரிவுக்குப் பிறகு எம்.எஸ்.வி இசையமைத்த முதல் சிவாஜி படம் ஊட்டி வரை உறவு.

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
01-09-2004, 09:04 PM
மிக அருமையாய்ப் போய்க்கொண்டிருக்கிறது குருகுருவின் இசைப்பயணம்..

பம்பரக்கண்ணாலே -- என்ன ஒரு பப்பிசைத்துள்ளல்..
வாராய் -- காலத்தால் அழியாத கிளாஸிக்..

வணங்காமுடியில் கலையே உன் நிலை காண வாராய் என சீர்காழியின் குரலில் சிவாஜி பாடும் பாட்டு ஒன்று நினைவில்..


நினைவுப்பாதையில் பின்னோக்கி நடைபயில வைக்கும் குருகுருவுக்கு வந்தனம்..

rajeshkrv
14-10-2004, 07:35 AM
XV) இல்லற ஜோதி..
என்ன அருமையான படம்
அதுவும் அந்த சிவாஜி - பத்மினி மேடை நாடகமும் சரி
அதற்கு கலைஞரின் வசனமும் சரி பிரமாதம்
பாடல்கள் உபயம் ராமனாதன்

25) கேட்பதெல்லாம் காதல் கீதங்களே லீலாவின் குரலில் இனிமையான பாடல்

XVI) கப்பலோட்டிய தமிழன்..

மறக்க முடியாத பாடல்களை கொண்ட படம்
ஜி.ராமனாதன் ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா என்ற அந்த கருத்தை மாற்றியமைத்தார்
ஆம் ஜெமினிக்கு பீ.பி.ஸ்ரீனிவாஸை பாட வைத்தார்

26) காற்று வெளியிடை கண்ணம்மா .. சுசீலாவும் ஸ்ரீனிவாஸம் கொஞ்சியிருப்பார்கள் பாடலில்
அவ்வளவு இனிமை -- பாரதியாரின் வரிகளுக்கு உயிரூட்டியிருப்பார் ராமனாதன்

27)
வெள்ளிப்பனி மலையில் - சீர்காழியும், லோகனாதனும் அழகாக பாடியிருப்பார்கள்
சிவாஜியும், சுப்பைய்யாவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்

28) ஓடி விளையாடு பாப்பா - சீர்காழியின் குரலில் மற்றுமொரு கீதம்

29) சின்னஞ்சிரு குழந்தைகள் போல் - சுசீலாவின் குரலில் இனிய பாடல்

30) என்று தனியும் இந்த சுதந்திர தாகம் - லோகனாதனும், லீலாவும் பாடும் அழகுப் பாடல்

31) நெஞ்சில் உறமின்றி - சீர்காழியாரின் குரலில் கம்பீரப் பாடல்

கப்பலோட்டிய தமிழன் என்றும் நம் மனதில் நீங்கா இடம் பெறும்
பல காரணங்கள் அதில் ஒன்று ராமனாதன்

பரஞ்சோதி
14-10-2004, 10:58 AM
இசை மேதைகளின் கான மழையில் தினமும் நனைபவன் நான். இங்கே கிடைத்த தகவல்கள் அனைத்தும் அருமை. தொடருங்கள் ராஜேஷ் அவர்களே!.

rajeshkrv
17-11-2004, 07:21 AM
XVII) வீரபாண்டிய கட்டபொம்மன்

பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் மாபெரும் வெற்றிப்படம்
அதற்கு இசையமைத்த பெருமை ஜி.ராமானாதனுக்கு உண்டு..

சிவாஜி அந்த கட்டபொம்மன் பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார்
உடன் ஜெமினி, எஸ்.வரலக்ஷ்மி, பத்மினி, ஓ.ஏ.கே.தேவர், ராகினி,
ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலக்ஷ்மி என ஒரு பட்டாளமே நடித்திருந்த படம்

இன்றும் இந்த படத்தின் பாடல்கள் நம்மை கிறங்கடிக்கும்

32) அஞ்சாத சிங்கம் என் காளை என சுசீலா பாடும் பாடல் காளையின் வீரம் சொல்லும் பாடல்

33) இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - பி.பி.ஸ்ரீனிவாஸ் - சுசீலா குரல்களில் தெவிட்டாத தெள்ளமுது.

34) டக் டக்ன்னு - என்று சுசீலா, வரலக்ஷ்மி, கோமளா பாடும் பாடல் இனிமை..

35) சிங்கார கண்ணே - எஸ்.வரலக்ஷ்மி பாடுவது அழகு

36) போகாதே போகாதே - ரத்னமாலாவின் குரலில் சோகம் கொஞ்சும் பாடல்

37) ஆத்துக்குள்ளே - ஜமுனாராணி,ரத்னமால, திருச்சி லோகனாதன் பாடும் நகைச்சுவை பாடல்

38) மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு - டி.எம்.எஸ் - டி.வி.ரத்தினம் பாடும் பாடலும் இனிமை.

வீரபாண்டிய கட்டபொம்மனில் வீரம் இருந்த அளவிற்கு இசையும் இருந்தது என்று சொன்னால் மிகையில்லை

ராஜ்

பரஞ்சோதி
17-11-2004, 10:03 AM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - நெஞ்சில் நிலைத்திருக்கும் பாடல்.

pradeepkt
17-11-2004, 01:00 PM
என்ன ஆச்சரியம், சிவாஜி நடித்த படத்தில் பெரும்பாலான பாடல்கள் அவர் பாடுவதுபோல் அமையவில்லையே...
எப்படிப் பார்த்தாலும் கிராமத்துப் பின்னணியிலேயே இத்தனை வகைகளைக் காட்டிய ஜி.ராமநாதனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அன்புடன்,
பிரதீப்

gragavan
18-11-2004, 03:40 AM
என்ன ஆச்சரியம், சிவாஜி நடித்த படத்தில் பெரும்பாலான பாடல்கள் அவர் பாடுவதுபோல் அமையவில்லையே...
எப்படிப் பார்த்தாலும் கிராமத்துப் பின்னணியிலேயே இத்தனை வகைகளைக் காட்டிய ஜி.ராமநாதனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அன்புடன்,
பிரதீப் உண்மைதான் பிரதீப். மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு என்ற பாடல் ஒன்றுதான் அவர் பாடுவது போல வரும். நடிகர் திலகம் பொதுவாகவே சக தொழிலாளியின் உரிமையில் தலையிடமாட்டார் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஒரு இயக்குநருடைய வேலையிலோ இசையமைப்பாளரின் வேலையிலோ அவர் குறுக்கிட்டதாக ஒரு நிகழ்வுகூட சொல்ல முடியாது. தொழிலை அந்த அளவுக்கு மதித்தவர். அதனால் மக்களின் மனதில் தனது அழியாத முத்திரையைப் பதித்தவர்.

கட்டபொம்மன் பாடல் பட்டியலில் விடுபட்டுப்போன மற்றொரு பாட்டு "மனம் கனிந்தருள் வேல்முருகா". வரலட்சுமி பாடுவது. படத்தின் தொடக்கத்தில் வரும். பக்தியோடு தொடங்கி வீரத்தோடும் சோகத்தோடும் முடிந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன். ஜி.ராமநாதனின் இசையும் அந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்றால் மிகையாகாது. எனக்குத் தெரிந்து அதுதான் சிவாஜிக்கு ஜி.ராமநாதன் இசையமைத்த கடைசித் திரைப்படம் என்று நினைக்கிறேன்.

கட்டபொம்மன் திரைப்படம் முதலில் நாடகமாக வந்தது. அதில் சிவாஜியே கட்டபொம்மனாக நடித்தார். அப்பொழுது சிவாஜியின் உடலில் மெல்லிய அதிர்வு இருந்து கொண்டே இருக்குமாம். வேடத்தைக் கலைத்ததும் அந்த அதிர்வு போய்விடுமாம். வேடம் புனைந்ததுமே நடிகர் திலகம் மறைந்து கட்டபொம்மன் வந்து விடுவாராம். கட்டபொம்மனின் அருள் அவர் மேல் ஏறியது என்று நம்புகிறவர்களும் உண்டு. பெரியார் வியந்து பாராட்டிய நடிப்பு அந்த நாடகம். பல முறை நாடகம் முடியும் வேளைகளில் சிவாஜியின் வாயில் இரத்தம் வந்திருக்கும் என்றும் படித்திருக்கிறேன். கட்டபொம்மனின் அருள் வந்ததாலோ என்னவோ, அந்த நாடகம் திரைப்படமாகி கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகன் என்ற பெயர் பெற்றுத் தந்தது. மிகச் சிறந்த நடிகர் அவர். அவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சிலரே.

அன்புடன்,
கோ.இராகவன்

அரைமூடித் தேங்காய்ச் சாமியாருக்கு மாரப்பன் முக்தி கொடுத்தது எப்படி? இதோ இப்படி!
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=92224#92224

rajeshkrv
19-11-2004, 11:17 AM
XVIII) உத்தமபுத்திரன்

இதை மறக்க முடியுமா..

இரு வேடங்களில் சிவாஜி நடித்த படம்
ஒரு வேடம் நல்லவர் வேடம்
மற்றொன்று வில்லன் வேடம்

இணை பத்மினி

என்ன அருமையான பாடல்களை தந்திருப்பார் ராமனாதன் அவர்கள்

39) முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே -
சுசீலா,டி.எம்.எஸ் குரல்களில் இன்றும் நமக்கு இசை விருந்து
வரிகளுக்கு சொந்தக்காரர் அ.மருதகாசி

கர் நாடக பாணியில் அமைந்த மெட்டு அருமை

40) உன்னழகை கன்னியர்கள் சொன்னதனாலே - சுசீலாவின் குரலில்
வேகமான பாடல்.. வில்லனை மயக்கி அவனிடமிருந்து சாவியை கைப்பற்ற பத்மினி பாடும் பாடல்.

41) அன்பே அமுதே - மற்றுமொரு சுசீலா,டி.எம்.எஸ் பாடல் .. சொல்லவும் வேண்டுமோ அதன் இனிமை

44) காத்திருப்பான் கமலக் கண்ணன் - டி.கே.சுந்தரவாத்தியார் இயற்றி பி.லீலா பாடிய பாடல்

45) மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறியதாலே - சுசீலா, ஜிக்கி குரல்களில் குதிரை சவாரி பாடல்

46) ஆம் யாரடி நீ மோகினி - ஹெலன் ஆட்டமும், டி.எம்.எஸ், ஜிக்கி, கோமளா குரல்களும்
பாடலை இன்றும் பிரபலமாக வைத்திருக்கிறது

ராஜ்

rajeshkrv
10-01-2005, 03:37 AM
xIX) தெய்வத்தின் தெய்வம்

ஜி.ராமனாதனின் கடைசிப்படம்
தெய்வத்தின் தெய்வம்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம்
எஸ்.எஸ்.ஆர்,விஜயகுமாரி,கீதாஞ்சலி ஆகியோர் நடித்தது..
படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போல் பாடல்கள் அமைந்தது ..

ஜி.ராமனாதனின் இசை அருமை

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை - சுசீலாவின் குரலில் இன்றும் நம்மை கவரும் பாடல்

கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் கண்டு வர வேண்டுமடி தங்கமே தங்கம் - பாரதியாரின் பாடலுக்கு அற்புத நடனம் - கீதாஞ்சலியுடையது, குரல் ஜானகியுடையது.

பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ - சுசீலாவின் குரலில் சோக கானம்

அன்னமே சொர்னமே - சுசீலா, ஜானகி குரல்களில் அருமை..

ஜி.ராமனாதனின் மறைவு தமிழ்த்திரையிசைக்கு இழப்பே...