PDA

View Full Version : பாலகுமாரன் கவிதைகள்..



இளசு
05-07-2004, 10:13 PM
நன்றி -திரு.க.இராமச்சந்திரன் -- பேராசிரியர், திறனாய்வாளர்..
___________________________________________________

படித்தவை -- பாலகுமாரன் கவிதைகள்..

ஈகோ... ஈகோதான் கவிதைகளுக்கு அடிப்படை..
நாலு பேர் என்னைக் குறைந்தபட்சம் 'கவிஞர்' என்று கூப்பிடவேண்டும்
என்கிற ஆசை என்னை எழுதவைத்தது"

-- பாலகுமாரன் முன்னுரையில்)
பாலா...

இந்தப் பெயர் அறியாதவர் இன்று தமிழுலகில் இல்லை..
சிறுகதைகள்...
மன அலசல்கள், அவஸ்தைகள், தேடல்கள் மற்றும் ஆன்மீகம், ஞானம் தேடும்
களங்களைக் கொண்ட பன்முக நாவல்கள்...
வாழ்வியலை தோளில் கைபோட்டு சொல்லிக்கொடுக்கும் சிநேகிதனாய்
அள்ளி வழங்கும் கட்டுரைகள் (சிநேகிதி இதழில் இப்போது வந்தபடி..)
இன்னும் கோயில் , புராண, வரலாற்றுப் படிவங்கள்..
திரைத்துறை....
இப்படி பன்முகம், பல்சுவை கொண்டவர் பாலா..
நம் எல்லாருக்கும் இத்தனை அறிமுகமான பாலா..
எழுதும் நாவலையும் கவிதை போல் அழகுற செதுக்கும் பாலா..
தனியே கவிதை எழுதியிருக்கிறாரா?
இருக்கிறார்.. அடையாளம் சொல்ல இருக்கிறது..
"விட்டில் பூச்சிகள்" தொகுப்பு...
இந்தத் தஞ்சைக்காரரின் மனக்குழைவு - இவரின் தாய் தந்தது..
கதை எழுதும் ஆர்வம் சீரங்கத்துக்காரரால் வந்தது..
கவிதை?

"தவித்துக்கிடந்த என்னை வழிப்படுத்தியது நா.முத்துசாமி..
என்னுள் குருவாகி நான் வணங்குவது -- ஞானக்கூத்தன்..
குருவே தோழனாகி சொல்லித்தந்தவை ஏராளம்.."
--- பாலா ..)

ஆனாலும் பாலா எழுத்துகளில் யாருடைய பாதிப்பும் இல்லை..
இவர் நடையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் உண்டு..
ஊக்கம், உந்துதல், குருஸ்நானம் அங்கங்கே பெற்று..
யார் போலவும் இல்லாமல் ..தமக்கே உரிய தனித்த நடையில்..
ஊடாய் பரவி நிற்கும் மனிதநேயம் கலந்து இவர் படைக்கும்
பாலா படைக்கும் எழுத்து விருந்துக்கு
பசியோடு காத்திருக்கும் இதழ்கள்.. வாசக மனங்கள் பலப்பல..
வர்த்தகரீதியாய் மிக உச்ச வெற்றி பெற்றாலும்..
பாலா எழுத்துகள் வியாபார உத்திகள் முதன்மையாய்க் கொண்டு
செதுக்கப்படுபவை அல்ல..

"எந்தக்கலையும் பொழுதைப் போக்குவதற்கு இல்லை..
பொழுதை அர்த்தமுள்ளதாக்குவதுதான் கலைகளின் இலட்சியம்.. இயல்பு".

சொன்னதை இன்றுவரை செய்பவர் பாலா..
கணையாழி, கசடதபற போன்ற இதழ்களின் முலம் இலக்கிய உலகத்தில்
பிரவேசம் ஆனவர் பாலா..
புதுப்பரிமாணக்கவிஞர்களை ஊக்குவித்த கணையாழி தந்த
உந்துதலே இவரின் கவிதாமுயற்சிக்கு வித்து..
முதல் கவிதையான "டெலிபோன் துடைப்பவள்" வெளியானதும்
கணையாழியில்தான்..
ஆனாலும் எடுத்த எடுப்பில் கவிதை எழுத வந்துவிடவில்லை பாலா..
பேராசிரியர் இராமச்சந்திரன் (திறனாய்வாளர்) சொல்கிறார் ---

"பட்டுப்புழுக்கள் வயிறு நிறைய நிறைய இலைகளைத் தின்றுவிட்டுப்
பின்னர் நிதானமாக பட்டு இழைகளைத் தருவதுபோல...-
சங்க இலக்கியங்களை அசைபோட்டு அசைபோட்டு மனதிற்குள்
தக்கவைத்துக்கொண்டார். அதற்குப் பின்னர் கவிதை எழுதும் வெறி
பாசுரங்களால் ஏற்பட்டிருக்கிறது.."

கவிதையைப் பற்றி பாலாவின் கருத்து -

"ஒரு கவிதையில் அதன் மையம் தாண்டி----
கட்டுக்கோப்பு,இழைவு, குளுமை, ஓசைநயம்
என்று பல வேண்டியிருக்கிறது.."
பாலா
கருத்து -

"ஆகாயகங்கை, அமிர்தவாஷினி, ரத்தசிம்மாசனம் என்றெல்லாம்
புவியீர்ப்பை நிராகரித்து இறக்கை கட்டிய புதுக்கவிஞர்களின்
புதுக்கவிதைகளுக்கு மத்தியில்..-
எளிமையாய், வெட்கப்படாமல் தரையில் கால்பரவியவர் பாலா"


புதுமை விரும்பி..பாலா ரசிகன் கமல் சொல்வது உண்மையா?
பாலா கவிதைகளையே கேட்போம்...
இனி பாலா தொகுப்பு பேசட்டும்...

______________________________________________________
பெண் வேறு..கவிதை வேறா?
பாலாவின் முதல் கவிதையும் பெண்மை பற்றியதுதான்..
ஆண்கள் மட்டும் வேலைபார்க்கும் அலுவலகம் அது..
செவ்வாய் தோறும் வரும் தொலைபேசி துடைக்கும் பணிப்பெண்..
அத்தனை ஆண் நெஞ்சிலும் ஒரு நாள் தென்றல்..குளிர்..சுகந்தம்..
ஆண்பார்வையில் அது..
பெண் பார்வையில்?
வேலைக்குப்போகும் இடத்தில் மொய்க்கும் பார்வை ஊறும்
அவலம் சொல்லும் இது ---
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

டெலிபோன் துடைப்பவள்..
இன்றைக்குச் செவ்வாய்க்கிழமை
நிலா பகலிலே வரும்
ஆகவே லேசாய்க் குளிரும்
மௌனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
மாறவே இமைகள் பேசும்
திரும்பிய நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
"என்றைக்குச் செவ்வாய்க்கிழமை?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_____________________________________________________________
படிப்பு முடிந்துவிட்டது.. காலம் கரைந்தோடியபடியே..
வரன் ஒன்றும் குதிரவில்லை..
காத்திருக்கிறாள் வீட்டில் அந்த ராஜகுமாரி..
வருவான் ஒருவன் குதிரையில் என்றபடியே...
"என் பேத்திக்கென்ன.. தங்கக்கிளி.. கொத்திகிட்டு போயிடுவான்ல" -- பாட்டி..
"மடியில நெருப்பைக் கட்டிகிட்டு இருக்காப்ல" --- அம்மா
"எங்காவது வேலை தேடு.. பொழுதை வீணாக்காமல் " -- அப்பா
"பிரகதீஸ்வரர் ஆலய நந்தினி(நீ) - விலகு.. எனக்கு வழி பிறக்கும்" - அண்ணா...
வேலை தேடத் தெருவில் இறங்கினால்...
ஈயாய் அடைமொய்க்க எத்தனை ஜோடிக் கண்கள்..
ஆமாம், அவள் வீட்டினுள் இருக்கும்போது 'பார்க்க'
இதில் ஒருத்தனும் வரக்காணுமே???!!!
நடுத்தர வர்க்கச்சிக்கலில் ஒரு பெண்..
மொய்க்கப்படுகையில் நரகலாய் தன்னை உணர்ந்து அருவருக்கும் பெண்..
பல இடர்ப்பாடு, கட்டுப்பாடுகள் இடையில் வாழும் இடையினம் அவள்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இடையினங்கள்
கொத்திக்கொண்டு போவதற்கு
ஜாதகபக்ஷி வரவில்லை
வெட்டிப்பொழுதின் விடிவுக்கும்
வேளை வரலை இதுநாளாய்..
வேலை தேடிக் கால் தேய
வெளியே நடக்கத் தலைப்பட்டால்
ஈயாய் கண்கள் பலமொய்க்க
என்னை உணர்ந்தேன் தெருமலமாய்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_______________________________________________________________________
காதலுக்காக சில கவிதைகள்..
அவளுக்கு அவனும் இன்னபிறவும் முக்கியம்..
அவனுக்கோ அவள் மட்டுமே..
ஏன்.. அது அந்த வயதின்..உணர்வின் பலம்..
வேறொன்றும் வேண்டாமென்று அர்ச்சுனன் மனமாய் குறிபார்க்கும் பருவம்..
அதுவே காதல் தவம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதல் தவம்
உனக்கென்ன
சாமி பூதம் கோயில் குளம்
ஆயிரமாயிரம் ஜாலியாய்
பொழுது போகும்...
வலப்பக்க கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன..
அடியே.. நாளையேனும்
மறக்காமல் வா..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_________________________________________________
வடுவாய் தங்கிவிட்ட வலிகள்..
மனிதத்துக்கு வலிக்கும்..
மரத்துக்கு?
உணர்வுகளைப் பூட்டிவைக்கும் காதலிக்கு கண்டனம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வடு
அம்மா இழுத்த சூடும்
அப்பா இறைத்த வசவும்
இன்னுமிருக்கின்றன
என்னில் பசுமையாய்..
நடுமரத்தில் நம் பெயரை
நீ செதுக்கின வடு மாதிரி..
நீயோ ------
மரம் மாதிரி..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதல் பிரிவு...ஓ..எத்தனை உன்னத வலி அது!
அந்த ஒரு சூழலில் மட்டுமே உணரக்கூடிய தனித்துவ வலி அது..
அது என்னவென்று அறிவதற்காவாவது
எல்லாரும் ஒரு முறையேனும் நிஜக்காதலின் வசப்படவேண்டும்..
அதுவும் தோல்வியில் முடியவேண்டும்..
இரவு நேரம்..
இருவர் விழித்திருக்கின்றனர்..
ஆனால் காரணங்கள் வேறு வேறு..
தென்னை முற்றல் ஒன்று இரவுக்காற்றில் பிடிப்பு பெயர்ந்து
சொத்தென்று தோட்டத்தில் விழ விழித்தவர் - முதியவர்.
எதிரே இருட்டில் உறங்காமல் புரளும் இளையவனைப் பார்த்துக் கேட்கின்றார்--
"தூங்கலையா?"
கையறு நிலையைக் கண்முன் காட்டும் பதில் இக்கவிதையின் உச்சம்..
பறவைச்சத்தம் கேட்கும்வரைக்கும் பாவனை காட்டி காட்டி விலகும் உறக்கம்..
இரவோடும் நிலவோடும் மல்லுக்கட்டி தோற்ற அனுபவம் உங்களுக்கும் உண்டுதானே?
"என் காதலியை நினைவுபடுத்தும் ஒவ்வொரு பொருளும்
என் இருதயத்தில் இறங்கும் ஈட்டிக்குச் சமம்" என கீட்ஸ் சொன்னது நிஜந்தானே?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முற்றல் நெஞ்சு
...................................
........................................
"தூங்கலையோ?"
" நெற்றுத் தென்னை கழன்றதற்கே
தூக்கம் போச்சே உங்களுக்கு..
நெஞ்சு கழன்று வீழ்ந்து கிடக்க
தூக்கம் எங்கே சொல்லுங்க..?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_______________________________________________________
காதல் பிணக்கு..
உணவில் உப்பு போல் இந்த ஊடல்தான்
உறவின் சுவையை எத்தனை மடங்கு கூட்டிவிடுகிறது..
வள்ளுவனைக் கேட்டால் வகைவகையாய்ச் சொல்லுவான்..
பாலா என்ன சொல்கிறாராம்?
ஓர் இனிமையான இறுக்கத்தில் முடிந்திருக்கவேண்டிய
நெருக்க நெருப்பை மரபு வழி வந்த நாண நீர் ஊற்றிப்
பாதியில் அ¨ணைத்த பாதகி அவள்..!!???
அவளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியாகவேண்டும்..
அந்த பழிகாரிக்கு என்ன மாதிரி வாழ்த்து அனுப்ப?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வாழ்த்துகள்
............................................
....................................................
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப்போய்
மரபைக்காட்டி
கொண்ட ஒரு கனவையும் குலைத்துவிட்ட
உனக்கென்ன அனுப்ப..???
அட்டைக்கருப்பில்
நீல மசி தோய்த்து
'நீங்காத நினைவோடே'
என்றெழுதி அனுப்புகிறேன்
தேடிப்புரிந்து கொள்..!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

காமத்துக்கும் சில கவிதைகள் உண்டு.. அதைத் தவிர்த்து மேலே செல்வோம்..


இவற்றை நான் கவிதைகள் என்று சொல்வது ஒரு அடையாளத்தின் பொருட்டே..
தகுதியைக் கொண்டல்ல"
-- பாலாவின் தன்னடக்கக்கூற்று இது..
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாலா கவிதைகள் பற்றி..?
இன்று புதுக்கவிஞர்கள் வெகுவாய்க் கையாளும் முரண் என்னும் உத்தியைப் பயன்படுத்தி
நாட்டு நிலைமை இருப்பதற்கும், தன் விருப்பத்துக்கும் உள்ள இடைவெளியை
நையாண்டியாய்ச் சாடி, ஆனால் படிப்பவர் மனதில் கோபம் மூட்டி..
எழுபதுகளிலேயே பாலா படைத்த கவிதை...
காந்தியின் அத்தனை கொள்கைகளையும் கொன்றுவிட்டு
காந்தி ஜெயந்தியைக் கொண்டாடும் தேசம் பற்றி பாலா...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பாரதத்தில் கொண்டாட்டம்
சத்யமேவ -- தமிழில் மாற்றிக்கொண்டாடுவோம்
சேலை உருவிப் பிறன் மனைவியைப் பெண்டாளுவோம்
கத்தி தீட்டி மாட்டினையே துண்டாடுவோம்
கள்ளுக்கடை வாசலிலே சாய்ந்தாடுவோம்
அரிஜனத்தை நெருப்பிலிட்டுப் பந்தாடுவோம்
ஆலைகட்ட கடனை வாங்கித் திண்டாடுவோம்
அடுத்தவனை அரிசி கேட்டு மன்றாடுவோம்
ஆனவரை காந்தியையும் கொண்டாடுவோம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
______________________________________________________
பாலா தந்த காட்சிப்பாக்கள் (ஹைகூக்கள்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விட்டில் பூச்சிகள்
முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன
நீலக்குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உள்ளே
மழைக்குப் பயந்து அறைக்குள்
ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விடலைகள்
துள்ளித் துவண்டு தென்றல் நடக்க
விசில் அடித்தன
மூங்கில் மரங்கள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்னும் குதிரை வேதமும் இத்தொகுதியில் உண்டு..
அவை ஏற்கனவே மன்றத்தில் தரப்பட்டதாக நினைவு..
பாலா கவிதை நினைவுகளில் உங்களை மூழ்கவிட்டு
நான் ஒதுங்கிக்கொள்கிறேன்..
நன்றி..

சாகரன்
06-07-2004, 08:58 AM
அருமையான பதிவு இளசு..

மிகவும் ரசித்தேன்... பாலாவின் இன்னொரு பரிமாணத்தில் கூட அவருடைய எழுத்துக்களின் வீச்சு குறைவில்லாமல்....
விட்டில் பூச்சிகள் தொகுப்பு பற்றி கேள்விப்பட்டதில்லை.. விரைவில் தேடிப் படிக்க வேண்டும்..

ஆங்காங்கே அவ்வப்போது பாசுரங்களையும், கவிதைகளைத்தூவும் பாலாவின் வேறு சில ரசித்த கவிதைகள் ஞாபகம் வருகின்றன... முக்கியமாக, எட்டயபுரத்து பாரதியின் தாக்கத்தில் குயில்தோப்பில் கதாநாயகன் எழுதுவதாக வரும் ஒரு கவிதை.... விரைவில் தர முயற்சிக்கிறேன்.

நன்றி... இளசு...

இளசு
11-07-2004, 05:35 AM
இனிய நண்பர் சாகரனுக்கு நன்றி..

நேரம் அமைந்தால் நாம் அனைவரும் ஏனைய கவிதைகளை இங்கே தொகுத்து
முழுமையாக்குவோம்..

இளசு
27-07-2004, 09:57 PM
பாலாவின் குதிரை வேதம்..
1)
குதிரைகள் கடவுள் ஜாதி
கும்பிடுதல் உலக நீதி
புணர்ந்தபின் குதிரைகள்
ஒருநாளும் தூங்கியதில்லை
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்கா பணிந்து போகும்?
2)
குளம்படி ஓசை - கவிதை
குதிரையின் கனைப்பு - கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு

3)
கூட்டமாய்ப் பறவை போல
குதிரைகள் பயணம் செய்யா..!
இலக்குகள் குதிரைக்கில்லை..
முன் பின்னால் அலைவதைத் தவிர..!
இலக்கில்லா மனிதர் பெரியோர்..
உள்ளவர் அலைய மாட்டார்..!
4)
நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப்பக்கம் அழுத்த
குதிரைகள் தூங்குவதில்லை..
ஏனைய உயிர்கள் போல..!
*************************
5)
நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர்குணம் அறியமாட்டார்!
வேறொன்று குடிக்கும்போது
நான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி.!!
6)
விருப்புடன் பிறந்த குதிரை
கொம்பில்லை; விஷமுமில்லை..!
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவார்?
7)
குரங்குகள் மனிதர் போல
வளர்ந்தது உண்மையாயின்
குதிரைகள் மாறும் ஒருநாள்
குரங்குகள் மடியும் அன்று..
8)
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தைக் குதிரை அறியும்.

பரஞ்சோதி
28-07-2004, 05:40 AM
நன்றி இளசு அண்ணா.

இப்பதிவை கண்டு மகிழ்ந்தேன். பாலகுமாரனின் கவிதைக்தொகுப்பு அருமை.

நமக்கு பாலகுமாரன் பற்றி ஒன்றும் தெரியலையே..

mythili
28-07-2004, 09:55 AM
கவிதை தொகுப்பு நன்றாக உள்ளது இளசு அண்ணா:-)

எங்கோ பாலகுமாரன் கவிதைகள் பற்றி படித்து இருக்கிறேன். எனக்கும் பாலகுமாரன் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது :(

தொடர்ந்து கொடுங்கள் அண்ணா :-)

அன்புடன்,
மைதிலி

kavitha
28-07-2004, 11:02 AM
இவரது நாவல்கள் எனக்கு மிகப்பிடித்தவை.. கவிதைகளும் எழுதியிருக்கிறாரா? இன்று தான் தெரிந்து கொண்டேன்... நன்றி இளசு அண்ணா.

kavitha
28-07-2004, 11:20 AM
மறுபதிவானாதால் நீக்கிவிட்டேன். மன்னிக்க!

சாகரன்
28-07-2004, 11:39 AM
பாலாவின் குதிரை வேதம்..

குதிரையின் மீது கொஞ்சம் அலாதியான் காதல் அவருக்கு ... பாலாவின் இரும்புக்குதிரைகள்... கதாநாயகியும் முடிவும் அழுத்தமானவை.

தொடருங்கள் இளசு. வேலை பளு அழுத்துவதால் நான் உங்களுடன் இணைய முடியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

kavitha
29-07-2004, 07:05 AM
அவருடைய நாவலின் 'துளசி' கதாபாத்திரம் எனக்கு மிகப்பிடித்தவள்... என்றும் மறக்க முடியாதவள்.

இ.இசாக்
05-08-2004, 06:05 PM
இளசு அண்ணாவின்
ரசனையே.. ரசனை.

இளசு
16-08-2004, 11:39 PM
நன்றிகள்..
இளவல் பரம்ஸ்..
தங்கை கவீ
தங்கை மைதிலி..
நண்பர் சாகரன்..
இளவல் இசாக்..
____________________________
ஸ்நேகிதம்
---------------------------------------

நேற்று நீ மறந்து போனாய்
போகையில் முத்தம் கொடுக்க
மறுபடி மறுபடி நெஞ்சில்
இக்குறை வந்து தாக்க
பூக்களை முத்தமிட்டேன்
புற்களை முத்தமிட்டேன்
மூக்கொழுகி நிற்கும் அண்டைப்
பிள்ளைகளை முத்தமிட்டேன்.
காகிதம் பேனா பென்சில்
கடக்கின்ற காற்று கைவிரல்
ஒவ்வொன்றாய் முத்தமிட்டேன்
நேற்று நீ மறந்துபோனாய்
ஊர் முழுக்க ஸ்நேகிதமாச்சு.
திடுமென்று நினைவு மின்னி
மறுபடி எனை பார்க்க வந்தாய்
உன் பக்க கணக்கு முழுதும்
வெட்கமின்றி சொல்லுவாயோ?

பரஞ்சோதி
17-08-2004, 10:08 AM
இன்றைய பாலாவின் கவிதைக்கு நன்றி அண்ணா.

அசனின் முத்தத்தில் மூழ்கிய என்னை, மேலும் மூச்சு முட்ட வைக்கும் பாலாவின் முத்தங்கள்.

இளசு
19-08-2004, 10:48 PM
நன்றி பரஞ்சோதி..
_______________________
இன்னொரு பாலா கவிதை..
எனக்குள்ளேயும் எப்போதாவது
இடி இடித்து மழை பெய்யும்
மண் நனைந்து மணம் வீசும்
பூமலரும் நாற்றங்கால் தலைசிலுப்பும்
வண்ணத்துப்பூச்சி படபடக்கும்
மண்புழு நகர்ந்து நகர்ந்து
உயிர் கிளறும்
இது வசந்தம்தான்
இயற்கைதான்
வரவேற்றுப் பாடத்தான் கவியில்லை.
கவிஞனுக்காய் வசந்தம் காத்திருக்குமா...?
காற்று மெல்ல வசந்தத்தைக்
கடத்திக் கொண்டு போகும்,
சருகுகள் தரையிறங்கி
பூமி வெடிப்பில் சிக்கி கொண்ட
மண்புழுவை மெல்ல மெல்ல மூடும்.
__________________

poo
20-08-2004, 10:07 AM
ஸ்நேகிதம்...
அடடா... செம அசத்தல்..........
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா!

poo
20-08-2004, 10:14 AM
இருமுறைப்பதிவு.-நீக்கிவிடவும்!

poo
20-08-2004, 10:17 AM
இன்றுதான் முதலில் இருந்து படித்தேன்... மெய்சிலிர்க்கவைக்கும் சிலரில் பாலாவும் ஒருவர்...
கமலின் கூற்று எத்தனை நிஜமென நினைக்கவைக்கும் படைப்புகள்...

ஆக்கப்பூர்வமான பதிவு.. பகிர்தலில் சுகம்காணும் அண்ணாவிற்கு நன்றிகள்!

இளசு
08-09-2004, 11:00 PM
நன்றி பூ..
________________________________
சப்பாணி

இடுப்பை விட்டு எங்கானாலும்
இறங்க மாட்டேன் என்கிறதாய்
அடங்கல் செய்யுது மனக்குழந்தை!
தெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்தி
பறவைகள் போகுது பாரென்றால்
கண்ணை விரித்து கணங்கள் தயங்கி
மீண்டும் தாவுது அவளுக்காய்
அதட்டிப் பார்த்து அன்பாய் சொல்லி
அசிங்கம் என்பினும் பயனில்லை
இறுக்கி அவளை இடுக்கிக் கொண்டு
ஜொள்ளை உரியுது மனக்குழந்தை !

பரஞ்சோதி
09-09-2004, 05:33 AM
மனக்குரங்கை மனகுழந்தையாக்கியது அருமை.
நன்றி அண்ணா.

இளசு
19-09-2004, 06:35 AM
நன்றி பரஞ்சோதி..
____________________

மாமிசம் தேடல்..

சைக்கிளின் பின்னே மாமிசம் போக
காக்கை அதனை துரத்திக் கொத்த
சேலையை பார்த்ததும்
பார்வையில் துரத்தினேன்
காக்கைக்கும் எனக்கும்
வேறென்ன வேலை.

அன்புரசிகன்
17-01-2009, 08:35 AM
அருமையான படைப்பு. மனக்கருவூலத்தில் பத்திரப்படுத்தி அப்பப்போ படையல் செய்யவேண்டிய பதிப்பு.

இளசு
17-01-2009, 12:11 PM
ஒருங்குறியாக்கும் அரும்பணியாற்றும்
அன்பு விரல்களுக்கு அண்ணனின் முத்தம்!

கா.ரமேஷ்
19-01-2009, 09:23 AM
நல்ல தொகுப்பு...
பாலகுமரின் கவிதைகளை முடிந்தால் முழுவதுமாக பதிவேற்றவும்..

umakarthick
19-01-2009, 09:49 AM
உள்ளே
மழைக்குப் பயந்து அறைக்குள்
ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்..//

இது ஹைக்கூ ரகம்??

nandabalan
18-04-2009, 04:22 PM
ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை படித்திருக்கிறீர்களா தோழர்களே? அதில் அம்மாவின் பொய்கள் என்ற தலைப்பில் எழுதியிருப்பார் பாருங்கள் அருமையாக இருக்கும்.

gans5001
05-05-2009, 10:19 AM
சுஜாதாவிற்கு பிறகு பாலகுமாரன், சா.கந்தசாமி போன்ற வெகு சிலரின் கதை, சிறுகதைத் தொகுப்புகளில் மட்டுமே நான் மனதை பறி கொடுத்திருக்கிறேன். அவற்றை தேடித்தேடி படித்தும் இருக்கிறேன். எத்தனை முறை படித்தாலும் திகட்டாதது பாலாவின் இரும்புக்குதிரைகள் (அதில் வரும் கவிதைகளும்). பாலாவின் கவிதைத் தொகுப்பையும் அப்படித்தான் விரட்டிப் பி(ப)டித்தேன்.

மீண்டும் ஒருமுறை படிக்க ஏதுவாக்கும் இளசுவிற்கு தனி நன்றி!

இளசு
10-02-2010, 07:24 PM
கருத்தூக்கம் அளித்த
கா ரமேஷ்
உமாகார்த்திக்
நந்தபாலன்
நண்பன் கண்ஸ்


அனைவருக்கும் நன்றி..

யவனிகா
10-02-2010, 07:39 PM
ஒத்த கருத்துள்ளவர்களைப்பார்க்கும் போதும்,படிக்கும் போதும் கிடைக்கும் பரவசமே தனி, என்னை பாதித்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பாலா.ஒரு புத்தகம் கூட விட்டு வைத்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.போன விடுமுறையில் கூட உடையார் கிடைத்தது.கைக்கு கிட்டியது வாய்க்கு கிட்டவில்லை என்பது போல முதல் தொகுதி கிடைக்காமல் போய்விட்டது.
மூச்சை வெறும் காற்றாகவே பார்த்துக்கொண்டிருந்த என்னை,அதை நானாக மாற்றுவது எப்படி என்று கற்றுத்தந்தது பாலா. கற்றுத்தருபவன் தகப்பன் என்றால் பாலா எனக்கும் அப்படியே.பாலாவைப் படிக்கவில்லை என்றால் நிறையவே இழந்திருப்பேன்.என் முதல் குரு வணக்கம் எப்போதும் அவருக்குத்தான்.

பாலாவைப்பற்றி இன்னும் அறிந்து கொள்ள http://balakumaranpesukirar.blogspot.com என்ற சுட்டியைச் சுட்டுங்கள்.

சாலைஜெயராமன்
12-02-2010, 04:58 PM
அன்பு திரு இளசு அவர்கள்,

மிக மிக நல்ல முயற்சி. சாதனையாளர்கள் பல்வேறு காலங்களில் தாங்கள் வெளிப்படுத்தும் தம் எண்ணங்களை கூடிய வரை அவர்களே மறந்து போய்விடுவார்கள் . பாரதியின் பெருமையை அவர்கள் மறைந்ததன் பின் தான் பல்வேறு தொகுப்புக்கள் மூலம், அவருடைய வீரியம் நிறைந்த பல பதிவுகள் வெளிஉலகிற்குத் தெரிய வந்தது. கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் தாண்டி எழுதிய பல்வேறு கவிதைத் தொகுப்புக்கள் அவருடைய உதவியாளர்கள் மூலம் விடுபடாது உலகிற்குச் சென்றடைந்தது.

அந்த வகையில் தங்களின் புது முயற்சி மிகமிகச் சிறப்பு வாய்ந்ததும் பாராட்டுக்குரியதும் ஆகும். முதலில் அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனெனில்பாலா என்ற பன் முக எழுத்தாளரைப் பற்றி இளைய தலைமுறைமக்களுக்கு அவ்வளவாகத் தெரிய வாய்ப்பில்லை. ஆன்மீகம் கடைச்சரக்காகவும், பிழைப்புக்கேதுவான ஒரு தொழிலாகவும் ஆகியிருந்த காலகட்டத்தில் நிஜத் தேடலான ஆன்மீகத்தின் பக்கம் தன் எழுத்தின் வலிமையைத் திருப்பி ஒரு எழுத்துலகப் புரட்சி செய்த மாபெரும் எழுத்தாளர் அவர். ஜனரஞ்சகப் போர்வையிலிருந்து விலகி பெண்ணினத்தை தன் தோழமையாக்கி அவர் கொட்டிய உணர்வுகள் அப்பப்பா வார்த்தைக்கு எட்டாதது. அன்னையிலிருந்து ஆரம்பித்து கைக்குழந்தை வரை உள்ள பெண்ணினத்திற்கு அவர் தந்த மரியாதை இனி யாரும் செய்ய முடியாது.

வாசகர்களின் வக்கிரத்திற்கு தீனி போடும் எழுத்தாள உலகித்தில் மிகவித்தியாசமாக பெண்மையைச் சித்தரித்த மாபெரும் மனிதர். பாரதியின் புதுமைப் பெண் கனவுகளில் மேலோட்டச் சிந்தனை தாண்டி தன் கதைக் கருக்களில் பெண்மையை முன்னிறுத்தி அவர் எழுதிய பல சிறு குறு நாவல்களில் மிக நெகிழ வைத்த ஒரு நாவல் "பச்சை வெளி மனிதர்கள்" . பின்னாளில் அது நாடகமாக்கப்பட்டது. அதில் வரும் அனைத்து மகளிர் பெருமக்களும் பெண்ணினத்திற்கு பாரதி கனாக் கண்ட சிறப்புக்களையும் உள்ளடக்கிய நபர்கள். நிஜ வாழ்க்கையில் தான் கண்ட தன் அன்னை, தன் மனைவி, விரசம் தாண்டிய தன் பெண்ணினத் தோழிகள் அனைவரையும் அழகாக அறிமுகப்படுத்தியிருப்பார்.

பல காலகட்டங்களில் அவருடைய எழுத்துக்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று வெளி வந்தாலும், "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்ற கட்டுரைத் தொகுப்பில் தன்னுடைய திரைஉலக வாழ்க்கையின் கீழான அனுபவங்களை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பார். அவருடைய எழுத்துலக சகாப்தத்தின் இருளான காலகட்டமாகவே நான் இன்றளவும் எண்ணி வருகிறேன். அந்தக் காலகட்டத்தில் அவர் தன்னுடைய இயல்பான எழுத்துப்பணியை செவ்வனே செய்ய முடியாது தவித்து வந்ததை, அவருடைய நட்பு சார்ந்த துணைகள் தொகுத்துத் தந்து இட்டு நிரப்பியது.

பல சிறப்பான அவருடைய கவிதை வரிகளை அந்தக் காலகட்டத்தில் நான் படித்து இன்புற்றிருந்தது போலவே, தாங்களும் நல்ல பல கவிதைகளைத் தொகுக்கும் பணியைத் தொடங்கியுள்ளீர்கள். மிகச் சிறந்த பணி. அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பது பலருக்குத் தெரியாது, தங்களின் இச்சீரிய பணியால் நம் மன்றத்து தமிழ் உறவுகள் ஒரு புதிய கவிதை அனுபவத்தை அனுபவிப்பார்கள் என நிச்சயம் நம்புகிறேன்.

திரு பாலா கவிதைத் தொகுப்பை வெளியிட்ட முதல் நிகழ்ச்சி மதுரையில்தான் நடந்தது என நினைக்கிறேன். மதுரையில் உள்ள வாசகர் வட்டத்தில் அவர் கவிதைத் தொகுப்பைத் தர இருப்பதாக வந்த செய்தியைக் கேட்டவுடன், அதைச் சிறப்பிக்கும் முகத்தான் அக்காலகட்டத்தில் நான் அவருக்கு அர்ப்பணித்த ஒரு கவிதையை இங்கே நம்மன்றத்தின் முன் வைக்க விரும்புகிறேன். பொதுவாக பெண்ணினத்தை முன்னிறுத்தியே பலகவிதைகளைத் தந்தார், அதைச் சார்ந்தே நானும் அப்போது எழுதியிருந்தேன். இதைப் படித்திருப்பாரா எனத் தெரியாது. அவரைச் சென்றடையாமலும் இருந்திருக்கலாம். இருந்தாலும் நம் மன்றத்தில் பகிர்ந்து கொள்ள நல்ல ஒரு மேடை தாங்கள் அமைத்துத் தந்திருக்கிறீர்கள். உங்கள் அனுமதியோடு பாலாவிற்கு இக்கவிதையை அர்ப்பணிக்கிறேன்.

மங்கை நல்லாள் /( பாலா கூறுவதைப் போல் அமைத்திருந்தேன்)

மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்
மாணப் பெரிதான இம் மந்திரச் சொல்லுக்கு
மங்கையராய்ப் பிறந்து நாம் மங்காப் புகழ் சேர்த்தோம்
மங்கையென்றும் மடந்தையென்றும் மாற்றுப் பெயர் தந்து
உண்மை உணரா உன்மத்தரால் ஒடுக்கப்பட்டு
உழன்றுவந்தோம் உரிமைகள் மறுக்கப்பட்டோம்
பெண்ணின் பெருமையை பெண்மையே உணரா
இருள் உலக வாழ்க்கையும் இன்னலும் தான்
இனிய பெண்ணினத்தின் இயல்பான வாழ்க்கையென
இந்நாள் வரை இருந்து வந்த இழிவினை
எழுச்சியுடன் எழ வைத்த ஏந்தல்கள் நம்மினம்
ஒளைவை என்பதும், ஜான்சி என்பதும் சரித்திரம் கண்ட
பெண்ணினச் சிங்கங்களின் பரிணாமப் படிவங்கள்
மாசற்ற அறிவு நிலைக்கு மங்காப் புகழ் சேர்த்த
மறை பொருள் மாணிக்கங்கள் இம்மங்கையர்கள்
சரித்திர வரலாறுகளில் சான்றோர்கள் அனைவருக்கும்
துணை நின்ற தூண்களிலே தூரிகையர் வரலாறு
தூலச் சான்றினுக்கு எக்காலமும் துணை நிற்கும்
கற்காலம் தொட்டு இக்காலம் வரை
காலத்தை வென்ற பல கதைகளுக்கு
காரணியாய் நின்றவள் காரிகையர்கள்
அன்பென்ற சொல்லுக்கு அடையாளம்
காட்ட வேண்டுமென்றால்
அன்னையென்ற பெண்ணுக்குத்தான்
அலங்கார மேடையுண்டு
அழகென்ற அனைத்துக் குணங்களுக்கும்
அணங்குகள்தான் அவதாரச் செல்வங்கள்
சென்றகாலச் சிறப்பினுக்கு செழுமை சேர்த்த
செவ்விய சாட்சியங்களை கணக்கிட்டுச்
சொல்ல வென்றால் கடிதங்கள் காணாமல் போகும்
அன்பென்ற சொல்லுக்கு அடையாளம் தந்தவள் அன்னை தெரசா
வைரம் கொண்ட உறுதிக்கு வடிவமாய் நிற்பவள்
வரலாறு கண்ட அன்னை இந்திரா
களம் கண்ட காரிகையர் வரலாறில் காவியமாய்
நிற்பவர்கள் இக்காலம் கண்ட கண்மணிகள்
ஏற்றமிகு இவர்கள் வாழ்வு எதிர்கால
பெண்ணினச் சந்த்தியின் சரித்திரச் சான்று
அறிவோம் பெண்ணின் பெருமை
அடைவோம் எந்நாளும் உயர்வை

நன்றியுடன்

சிவா.ஜி
13-02-2010, 12:40 PM
பெண்ணினத்தை மேன்மைப் படுத்தும் மேலான கவிதை. அழகான தமிழில் அவர்கள் நிலை சொன்ன அருமையான கவிதை. இங்கே பகிர்ந்து எங்களுக்கும், இந்த நல்ல கவிதையை வாசிக்க வாய்பளித்தமைக்கு நன்றி ஜெயராமன் அவர்களே.

இளசு
16-02-2010, 08:38 PM
அன்பு யவனிக்கு

மீள்வருகையிலும் கவிச்சமர், கலாய்ப்புகளிலும்
அண்ணனுக்கு மிக மகிழ்ச்சி..

அதையே இத்திரி மூலம் திருப்பி அளிக்க முடிந்ததில் திருப்தி..


------------------

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சாலையாருக்கு

உங்கள் பதிவால் மிக மகிழ்ந்தேன்.


மங்கையர் பெருமை சொல்லும் நற்றமிழ்க் கவிதை அருந்தித் திளைத்தேன்.

உங்கள் கவிதையை இங்கு பதித்து பெருமை ஈந்தமைக்கு நன்றி சாலையாரே!