PDA

View Full Version : படித்தவை : மாவீரன்..



இளசு
04-07-2004, 10:05 PM
படித்தவை : மாவீரன்..
_____________________________________________
நள்ளிரவு..
தீடீர்னு முழிப்பு வந்த அம்மா திடுக்கிட்டாள். பக்கத்தில் படுத்திருந்த
மகனைக் காணவில்லை...

படபடக்க எழுந்து தேடினாள்.. வீட்டின் பின்பக்கம் இருக்கும் காடு வரை ஓடினாள்.
குளம்.. பௌர்ணமி.. துள்ளிப் பளபளக்கும் மீன்கள்..

குந்தி ரசித்தபடி மகன்...
அள்ளினாள்.. அணைத்தபடி கேட்டாள்.
"இந்த இரவு நேரத்தில் தனியாய்..இங்கே காட்டில்..

பயமாய் இல்லியா மகனே?"
மகன் முகத்தில் சிரிப்பு தவழக் கேட்டான்:

"பயம்னா என்னம்மா?"

மகனின் பேர் - நெப்போலியன்.

kavitha
05-07-2004, 09:20 AM
குளம்.. பௌர்ணமி.. துள்ளிப் பளபளக்கும் மீன்கள்..

குந்தி ரசித்தபடி மகன்...


அருமை!
நெப்போலியனைப்பற்றி மேலும் தெரிந்தவற்றை கூறுங்களேன்..

அறிஞர்
05-07-2004, 09:21 AM
வாழ்த்துக்கள்.. இளசு...
இளம் கன்று பயமில்லாமல்... வளர்ந்து.... பெயரை நாட்டியுள்ளது

பரஞ்சோதி
05-07-2004, 03:24 PM
நன்றி இளசு அண்ணா. புதிய விசயம் தெரிந்துக் கொண்டேன்.

நம்ம ஊர் நெப்போலியன் என்றால் அம்மா மற்றும் பாட்டி அவர்கள் புளிய மரத்தில் முனி இருக்குது, முருங்கை மரத்தில் பேய் இருக்குது, ராத்திரியில் மோகினி வெள்ளைச் சேலை கட்டி வருது என்று சொல்லி பயம் காட்டியிருப்பார்கள்.

thamarai
05-07-2004, 07:04 PM
அருமை இளசு.... மேலும் தொடருங்கள்..

pgk53
06-07-2004, 02:04 AM
அருமை.....இளசு அவர்களே இதே தலைப்பில் இன்னும் நிறையக் கொடுங்கள்.

gankrish
06-07-2004, 06:18 AM
நண்பா இதை படித்தவுடன் இந்த வரிகள தான் ஞாபகம் வருது:

"வேப்ப மர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுது என்று
விளையாட போகும் போது சொல்லி வைப்பாஙக ...
நீ எள்ளளவும் பயம் கொண்டு நடுங்காதேடா...."

தஞ்சை தமிழன்
06-07-2004, 09:27 AM
இளம் நெப்போலியனின்
இளமை கால நிகழ்வுகளை
தந்த நம்
இளசுவுக்கு

நன்றி.

சேரன்கயல்
07-07-2004, 04:10 AM
பயமறியா அந்த இளங்கன்று...இன்று வரையும் மாவீரனாய் போற்றப்படுகிறது...

அழகாய் சொன்ன இனிய இளசுவுக்கு நன்றிகள்...

இளந்தமிழ்ச்செல்வன்
29-08-2004, 09:13 AM
நல்ல தகவல் நண்பரே. நன்றி.

அன்புரசிகன்
17-01-2009, 08:34 AM
இப்பெல்லாம் நெப்போலியன்னா வேற நினைவுதான் வருது. கடுகுக் கதை. படித்து மகிழுங்கள்.