PDA

View Full Version : எப்போது வரும்?



kavitha
21-06-2004, 05:45 AM
எப்போது வரும்?

அலரும் அலாரத்தை
அமட்டிய பின்னும்
அலுக்காத மஞ்சம்!

பல் துலக்காமல்
படுக்கைக் காபி!

மெத்தை விரிப்பில்
நாளிதழ் கொறிப்பு!

அன்னையின் கைவரிசையில்
நல்லெண்ணெய் முழுக்கு!

"சோம்பேறிக்கழுதை" தூபத்துடன்
சாம்பிராணிப்புகை தலை வாரல்!

உதவிசெய்யும் தோரணையில்
வறுக்காத முந்திரியும்
துருவிய தேங்காயும்..

உப்புப்பார்க்கும் சாக்கில்
ஒத்திகை சாப்பாடு!

பார்க்காத தோழிகளிடம்
தொலைபேசி அரட்டை!

நையாண்டிக்காகவே
தொலைக்காட்சித் தொடர்கள்!

ஆறுநாள் அனாதை
'மொட்டை'மாடிக்கு
வார இறுதியில்
வாண்டுகளுடன்
வட்ட மேசை
'கூந்தல்' அலங்காரம்!

கூடடைந்த குருவியும்
குனிந்து வாங்கும்
உருண்டைப்பிடி
நிலாச்சோறு!

தூங்கிய பின்னும்
நெஞ்சின் மீது
மூச்சு வாங்கும்
புத்தக பக்கங்கள்..

படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?

இக்பால்
21-06-2004, 05:56 AM
திருமணம் ஆகுமுன் அம்மா எல்லா வேலையும் செய்ய...

சோம்பேறியாய் நாம் அனுபவித்த சுகங்களை இங்கே

அழகாக கொடுத்த தங்கைக்கு பாராட்டுகள்.

-அன்புடன் அண்ணா.

mythili
21-06-2004, 06:19 AM
நல்ல கவிதை கவி.
என்ன சொந்த அனுபவமா இதுவும்

என் பள்ளிப் பருவம் நியாபகம் வருது கவி...
"நியாபகம் வருதே நியாபகம் வருதே,,,,,,,"

அன்புடன்,
மைதிலி

mythili
21-06-2004, 06:24 AM
திருமணம் ஆகுமுன் அம்மா எல்லா வேலையும் செய்ய...

சோம்பேறியாய் நாம் அனுபவித்த சுகங்களை இங்கே

அழகாக கொடுத்த தங்கைக்கு பாராட்டுகள்.

-அன்புடன் அண்ணா.

நீங்களும் அப்படித்தானா?
அண்ணனைப் போல் தங்கை.

அன்புடன்,
மைதிலி

kavitha
21-06-2004, 06:45 AM
நிழலின் அருமை.. வெயிலில்தானே தெரிகிறது!

அண்ணாவிற்கும், மைதிலிக்கும் என் நன்றிகள்...

சாகரன்
21-06-2004, 07:40 AM
நிழலின் அருமை.. வெயிலில் தானே தெரிகிறது!


உண்மைதான்... நல்ல கவிதை..

கவிதை எளிமையாக இனிமையாக இருக்கிறது படிக்கும் போது...



படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?


கேட்டது காற்றாடியா அல்லது மனசா? மனசுதான் இங்கு காற்றாடி !?!

அறிஞர்
21-06-2004, 09:05 AM
நல்ல கவிதை.. கவி... வாழ்த்துக்கள்....

இப்படி அனுபவிக்க... உமக்கு..... கொடுத்து வைத்துள்ளது...

எனக்கும் எல்லா நாளே ஒன்றே....

ஞாயிறு ஆலயப்பணி அதிகம்.........

அறிஞர்
21-06-2004, 09:11 AM
;) ;)
எப்போது வரும்?

"சோம்பேறிக்கழுதை" தூபத்துடன்
சாம்பிராணிப்புகை தலை வாரல்!


சிரிக்க வைத்த வரிகள்:icon_dance: :icon_dance: :icon_dance:

kavitha
21-06-2004, 10:15 AM
கேட்டது காற்றாடியா அல்லது மனசா? மனசுதான் இங்கு காற்றாடி !?!


இரண்டும்தான்; நன்றி சாகரன்..
எனக்கு காற்றாடியைச் சுழலவிடும்போதெல்லாம்
படபடக்கும் நாட்காட்டியைப்பார்த்தால் இரண்டும் பேசிக்கொள்வதாகவே தோன்றும்.. மற்றசமயங்களில் நாட்காட்டி ஊமை! அது இப்போது இந்தக்கவிதைக்கு சிறு ஊடகம்.


நல்ல கவிதை.. கவி... வாழ்த்துக்கள்....

இப்படி அனுபவிக்க... உமக்கு..... கொடுத்து வைத்துள்ளது...

எனக்கும் எல்லா நாளே ஒன்றே....

ஞாயிறு ஆலயபணி அதிகம்.........

"எப்போது வரும்?

"சோம்பேறிக்கழுதை" தூபத்துடன்
சாம்பிராணிப்புகை தலை வாரல்! "

சிரிக்க வைத்த வரிகள்
கிண்டலா அறிஞரே!
ஞாயிறை ஓய்வு நாளாகத்தானே சொல்லி இருக்கிறார்கள்... யூதர்களின் கேள்வியைப்போலவே இருக்கிறதா?
அனுபவித்துச்செய்யும் எதுவுமே அலுக்காது!
தினமும் ஞாயிறாக இருந்தாலும் இப்படி என்னால் ரசிக்கமுடியுமோ என்னவோ?
உங்கள் பாராட்டுகளுக்கு எனது நன்றிகள்.

பரஞ்சோதி
21-06-2004, 10:23 AM
நல்ல கவிதை சகோதரி.

இங்கே வெள்ளிக்கிழமை எப்பொழுது வரும் என்று காத்திருக்கிறேன்.

தினமும் என்னைக் கவனியுங்கள் பகுதியில் நீங்கள் கொடுத்த சுட்டியை வைத்து தான் இந்த கவிதையை கண்டேன், நன்றி சகோதரி. தொடர்ந்து அதில் சுட்டி கொடுங்கள். எல்லோரும் பயன் பெறலாம்.

அறிஞர்
21-06-2004, 10:45 AM
அனுபவித்துச்செய்யும் எதுவுமே அலுக்காது!
தினமும் ஞாயிறாக இருந்தாலும் இப்படி என்னால் ரசிக்கமுடியுமோ என்னவோ? .

அதான் சொன்னேன்..எல்லா நாளும் ஒன்றே....... வேலைமுதல் அனைத்தையும் ரசித்து செய்கிறேன்.. அலுப்பில்லை...

இளசு
21-06-2004, 09:52 PM
படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?


வெனவு தெரிஞ்ச நாள் மொதலா
வெளஞ்சி நின்ன கேள்வி தாயீ...
நறுவிசா கேட்ட விதம் நறுக்..
ஞாயந்தான்..
ஆனா ஏழில் ஒண்ணா இருந்தாத்தான்
ஏக்கம் சரி...
என்ன கிழமன்னு தெரியாத வேலையில்லா
காலம் நினவில் இருந்தா சரி..

kavitha
22-06-2004, 04:58 AM
என்ன கிழமன்னு தெரியாத வேலையில்லா
காலம் நினவில் இருந்தா சரி..
அடக்கடவுளே! அவர்களுக்கும் ஒரு கவிதை எழுதி விடவேண்டியது தான்... டிப்ஸ் க்கு நன்றி அண்ணா

Nanban
22-06-2004, 06:37 PM
தூங்கிய பின்னும்
நெஞ்சின் மீது
மூச்சு வாங்கும்
புத்தக பக்கங்கள்..


அருமையான வரிகள்.... அழகான வடிவம்.... இனிமையான கற்பனைகள்.... புதுக்கவிதையின் மணம் முழுவீச்சில் பரவுகிறது, கவிதா.....

வாழ்த்துகளும், பாராட்டுகளும் - மனம் நிறைந்த சந்தோஷத்துடன்....

thamarai
22-06-2004, 07:12 PM
படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?

எப்போது வரும் எனக் கேட்கும் கவிதாவுக்கு வாழ்த்துக்கள்........
கவிதா வடித்த கவி அருமை....

இளசு
22-06-2004, 11:08 PM
கவீ.. எசப்பாட்டு பாடியதில் கவியழகைப் பாராட்டாமல்...

நண்பன் சொன்ன நெஞ்சுப் புத்தகமும்
நண்பர்கள் சொன்ன நாட்காட்டி படபடப்பும்..

அவ்வளவு அருமை கவீ.. அண்ணனின் பாராட்டுகள் பலப்பல...

kavitha
23-06-2004, 03:41 AM
புதுக்கவிதையின் மணம் முழுவீச்சில் பரவுகிறது, கவிதா.....

வாழ்த்துகளும், பாராட்டுகளும் - மனம் நிறைந்த சந்தோஷத்துடன்....
_________________

காலையிலேயே "மனசெல்லாம் மார்கழி"
நன்றி நண்பரே!



இங்கே வெள்ளிக்கிழமை எப்பொழுது வரும் என்று காத்திருக்கிறேன்.

பரம்ஸ் அண்ணாவிற்கு வெள்ளிமட்டும்தான் விடுமுறையா?



கவிதா வடித்த கவி அருமை....
_________________
நட்புடன்
தாமரை.
நன்றி தாமரை



அண்ணனின் பாராட்டுகள் பலப்பல...

எசப்பாட்டுப்பாடியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி, நன்றி அண்ணா

இ.இசாக்
05-08-2004, 05:59 PM
எப்போது வரும்?

அலரும் அலாரத்தை
அமட்டிய பின்னும்
அலுக்காத மஞ்சம்!

பல் துலக்காமல்
படுக்கைக் காபி!

மெத்தை விரிப்பில்
நாளிதழ் கொறிப்பு!

அன்னையின் கைவரிசையில்
நல்லெண்ணெய் முழுக்கு!

"சோம்பேறிக்கழுதை" தூபத்துடன்
சாம்பிராணிப்புகை தலை வாரல்!

உதவிசெய்யும் தோரணையில்
வறுக்காத முந்திரியும்
துருவிய தேங்காயும்..

உப்புப்பார்க்கும் சாக்கில்
ஒத்திகை சாப்பாடு!

பார்க்காத தோழிகளிடம்
தொலைபேசி அரட்டை!

நையாண்டிக்காகவே
தொலைக்காட்சித் தொடர்கள்!

ஆறுநாள் அனாதை
'மொட்டை'மாடிக்கு
வார இறுதியில்
வாண்டுகளுடன்
வட்ட மேசை
'கூந்தல்' அலங்காரம்!

கூடடைந்த குருவியும்
குனிந்து வாங்கும்
உருண்டைப்பிடி
நிலாச்சோறு!

தூங்கிய பின்னும்
நெஞ்சின் மீது
மூச்சு வாங்கும்
புத்தக பக்கங்கள்..

படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?

இத்தனைக்குபின்னும்
புத்தகமா..
பாராட்டுக்கள் தோழி
இந்த பழக்கம் ஒன்றே
உம்மை சிறந்த கவிதை படைக்க செய்யும்
தொடரட்டும்
கவிதையில்
பெண்ணிய படைப்பாளிகளின் பங்கு
கூடுதலாக தேவைப்படுகிறது
வருக.. வருக

kavitha
06-08-2004, 07:42 AM
:) நன்றி இசாக் அண்ணா

mythili
06-08-2004, 08:35 AM
:)நன்றி இசாக் அண்ணா

என்ன கவி, இப்போது கவியிடமிருந்து வரும் கவிதைகள் குறைந்து விட்டதே

அன்புடன்,
மைதிலி

Mathu
06-08-2004, 08:53 AM
எப்போது வரும்?

அலரும் அலாரத்தை
அமட்டிய பின்னும்
அலுக்காத மஞ்சம்!

பல் துலக்காமல்
படுக்கைக் காபி!

மெத்தை விரிப்பில்
நாளிதழ் கொறிப்பு!

அன்னையின் கைவரிசையில்
நல்லெண்ணெய் முழுக்கு!

சோம்பேறிக்கழுதை" தூபத்துடன்
சாம்பிராணிப்புகை தலை வாரல்!

உதவிசெய்யும் தோரணையில்
வறுக்காத முந்திரியும்
துருவிய தேங்காயும்..

உப்புப்பார்க்கும் சாக்கில்
ஒத்திகை சாப்பாடு!

பார்க்காத தோழிகளிடம்
தொலைபேசி அரட்டை!

நையாண்டிக்காகவே
தொலைக்காட்சித் தொடர்கள்!

ஆறுநாள் அனாதை
'மொட்டை'மாடிக்கு
வார இறுதியில்
வாண்டுகளுடன்
வட்ட மேசை
'கூந்தல்' அலங்காரம்!

கூடடைந்த குருவியும்
குனிந்து வாங்கும்
உருண்டைப்பிடி
நிலாச்சோறு!

தூங்கிய பின்னும்
நெஞ்சின் மீது
மூச்சு வாங்கும்
புத்தக பக்கங்கள்..

படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?

அங்கங்கே விட்டுவிட்டால் அத்தனையும் அனைவருக்கும் ஒத்துப்போக
நீ கேட்பதோ எப்போது வரும் அடுத்த ஞாயிறு..?
நாம் கேட்பதோ எப்போது வரும் அந்த நாள்.

அழகான கவிதை கவி.

பிரியன்
12-08-2004, 05:09 PM
இயல்பாய் இருக்கிறது உங்கள் கவிதை.
எனக்கு என் தங்கையின் நினைப்பு வருகிறது.
நன்றி.

kavitha
14-08-2004, 09:20 AM
அழகான கவிதை கவி.
_________________
அன்புடன்..
மதன்
நன்றி மதன்


எனக்கு என் தங்கையின் நினைப்பு வருகிறது.
நன்றி.
_________________
இதயத்திலிருந்து வரவேண்டும் எண்ணங்கள்.
உதட்டிலிருந்து அல்ல.


இது உங்கள் இதயத்திலிருந்து வந்ததால் மிக்க மகிழ்ச்சி சகோதரரே!

ஆதவா
09-08-2007, 12:16 PM
கவிதை மிக அருமை கவிதா அவர்களே!.

எதற்குத்தான் ஞாயிறு வருகிறது என்று என்னை நானே கேட்கும் சூழ்நிலை இங்கே....

இலக்கியன்
09-08-2007, 12:28 PM
அழகான நியங்கள்
தமிழ் விளையாடுகின்றது. வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
09-08-2007, 02:41 PM
பியூட்டிஃபுல்.....

சின்ன சின்ன நிகழ்வுகள்..... சொன்ன விதம் மிக கலக்கல்...



ஆறுநாள் அனாதை
'மொட்டை'மாடிக்கு
வார இறுதியில்
வாண்டுகளுடன்
வட்ட மேசை
'கூந்தல்' அலங்காரம்!



தூங்கிய பின்னும்
நெஞ்சின் மீது
மூச்சு வாங்கும்
புத்தக பக்கங்கள்..


மிக மிக ரசித்தேன் கவி.....

வாழ்த்துக்கள்!

அமரன்
10-08-2007, 01:08 PM
ஆஹா கவினான கவிதை. கவிதாக்காவின் கை வண்ணத்தில். சின்ன சின்ன செயல்களில் கவிநயம் கண்டு சொல்நயம்கொண்டு படைத்த கவிதை மனதில் சொல்மிஷம் மன்னிக்கவும் சில்மிஷம் செய்கின்றது...

kalaianpan
11-08-2007, 08:09 AM
கவிதா.....
கவி தந்து விட்டீர்கள்....
இப்போதும் இப்படித்தானா.....
வீட்டு ஞாபகம் வருகிறது.....

சிவா.ஜி
11-08-2007, 08:19 AM
ஹீம்..அது ஒரு காலம் என்று அசை போட வைத்தது மட்டுமல்லாமல்,இப்போதைய இருப்பை கொஞ்சம் அசைத்துப்பார்த்து விட்டது இந்த கவிதை. பணம் எல்லாவற்றையும் கொடுக்குமா....?
அந்த வசந்த காலங்கள்,இன்று கலைந்த கோலங்கள் இப்படி ஏதாவது எழுதித்தான் மனதை ஆற்றிக்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் கவிதா.

தளபதி
11-08-2007, 10:26 AM
படிக்கும்போது பக்கத்துவீட்டுப் பெண் அடித்த லூட்டி ஞாபகம் வருகிறது.....

ஆண்பிள்ளைகள் ஏனோ தெரியவில்லை?? வயது வளர விலகுகிறார்கள்?? அன்னையிடமிருந்து.
பெண்பிள்ளைகள் வயது வளர நிறைய நெருங்குகிறார்கள் அன்னையிடம்.
சில நேரம் நானும் ஏங்கியிருக்கிறேன்!!! "பெண்ணாய் பிறந்து இருக்கலாமோ???"

aren
11-08-2007, 11:44 AM
திருமணத்திற்கு முன் அம்மாவின் அன்பில் நடக்கும் பல விஷயங்கள் பின்னர் வெறும் நினைப்பாய் மட்டும் போய்விடுகிறது.

அருமையான கவிதையை இங்கே அளித்த கவிதா அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்